Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Romans - 052 (God Selects whom He has Mercy on)
This page in: -- Afrikaans -- Arabic -- Armenian -- Azeri -- Bengali -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- French -- Georgian -- Greek -- Hausa -- Hebrew -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Malayalam -- Polish -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Turkish -- Urdu? -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

ரோமர் - கர்த்தரே நம்முடைய நீதி
ரோமருக்கு பவுல் எழுதின நிரூபத்திலிருந்து வேதபாடங்கள்
பகுதி 2 - இறைவனால் தெரிந்துகொள்ளப்பட்ட, யாக்கோபின் புத்திரர் கடினப்பட்டுபோன பின்பும் இறைவனின் நீதி நிலையானதாக இருக்கிறது (ரோமர் 9:1-11:36)

3. இஸ்ரேலின் பெரும்பான்மையானோர் அவருக்கு எதிராக இருந்தும் இறைவன் நீதியில் நிலைத்திருந்தார் (ரோமர் 9:6-29)

ஆ) இறைவன் எவர் மீது இரக்கம் கொள்கிறாரோ அவர்களை தெரிந்தெடுக்கிறார், எவர்களை கடினப்படுத்த சித்தமாயிருக்கிறாரோ அவர்களை கடினப்படுத்துகிறார் (ரோமர் 9:14-18)


ரோமர் 9:14-18
14 ஆகையால் நாம் என்ன சொல்லுவோம்? தேவனிடத்திலே அநீதி உண்டென்று சொல்லலாமா? சொல்லக்கூடாதே. 15 அவர் மோசேயை நோக்கி: எவன்மேல் இரக்கமாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ அவன்மேல் இரக்கமாயிருப்பேன், எவன்மேல் உருக்கமாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ அவன்மேல் உருக்கமாயிருப்பேன் என்றார். 16 ஆகையால் விரும்புகிறவனாலும் அல்ல, ஓடுகிறவனாலும் அல்ல, இரங்குகிற தேவனாலேயாம். 17 மேலும் என்னுடைய வல்லமையை உன்னிடத்தில் காண்பிக்கும் படியாகவும், என்னுடைய நாமம் பூமியில் எங்கும் பிரஸ்தாபமாகும் படியாகவும், உன்னை நிலைநிறுத்தினேன் என்று பார்வோனுடனே சொன்னதாக வேதத்தில் சொல்லியிருக்கிறது . 18 ஆதலால் எவன்மேல் இரக்கமாயிருக்கச் சித்தமாயிருக்கிறாரோ அவன்மேல் இரக்கமாயிருக்கிறார், எவனைக் கடினப்படுத்தச் சித்தமாயிருக்கிறாரோ அவனைக் கடினப்படுத்துகிறார்.

யாத்திராகமம் 33:19-ல் மோசேக்கு ஆண்டவருடைய வெளிப்பாட்டின் மூலம், ஒரு குறிப்பிட்ட நபர் மீது இரக்கம் வைக்கவும், அந்த நபர் பாவம் செய்தாலும் சரி, செய்யாவிட்டாலும் சரி, அந்த இரக்கத்தில் தொடர்ந்திருப்பதற்கு இறைவன் அதிகாரம் உடையவராக இருக்கிறார். இறைவனுடைய தெரிந்தெடுப்பு என்பது மனித செயல்களைச் சார்ந்தது அல்ல. அது சர்வ வல்லமையுள்ளவரின் இரக்கத்தை சார்ந்தது ஆகும். இறைவனுடைய அளவற்ற கிருபையினால் மனிதன் எந்தவொரு தகுதியுமின்றி நீதிமானாக்கப்படுகிறான் என்பதை இரட்சிப்பு காண்பிக்கிறது.

இந்த கருத்தை நாம் யாத்திராகமம் 9:16-லும் வாசிக்கிறோம். பரிசுத்தமான ஆண்டவர் எகிப்திய ஆவிகளால் நிறைந்திருந்த பார்வோனிடம் இவ்விதம் கூறினார் “ ஆதலால் எவன்மேல் இரக்கமாயிருக்கச் சித்தமாயிருக்கிறாரோ அவன்மேல் இரக்கமாயிருக்கிறார், எவனைக் கடினப்படுத்தச் சித்தமாயிருக்கிறாரோ அவனைக் கடினப்படுத்துகிறார்” (ரோமர் 9:18).

இறைவனுடைய பரிசுத்தத்திற்கு இது சரியாய் இருக்கிறது. இறைவன் சர்வாதிகாரி அல்ல. அவர் எல்லாரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும் விருப்பமுள்ளவராய் இருக்கிறார். (ரோமர் 11:32; 1தீமோத்தேயு 2:4; 2பேதுரு 3:9) யாரேனும் ஒருவர் இறைவனுக்கு எதிரான ஆவிகளுக்கு தனது இருதயத்தை திறந்துகொடுத்தால் அல்லது இயேசுவுக்கு எதிரான சிந்தனைகளால் நிறைந்துள்ள ஒரு குடும்பம், சமூகம் அல்லது மக்கள் மத்தியில் இருந்து வந்தால் நாம் புரிந்து கொள்ள வேண்டிய காரியம் ஒன்றுண்டு. இறைவன் தனது கட்டளைகளை வெளிப்படையாக எதிர்க்கிற கடினமான தலைவனை அனுமதித்திருக்கிறார். அதே சமயத்தில் அந்த எதிர்த்து நிற்கிறவன் மூலம் இறைவன் தமது நித்திய வல்லமையை நிரூபிக்கவும் செய்கிறார்.

பவுல் தனது நிரூபத்தில் இவ்விதமாகக் குறிப்பிடுகிற வசனங்களைக் கொண்டு சிலர் இவ்விதம் சொல்கிறார்கள். இறைவன் தான் விரும்புகிற ஒருவனை தவறாக வழிநடத்தக் கூடும் என்ற கருத்தை முன் வைக்கிறார்கள். ஒருவரும் நீதிமான் இல்லை. எனவே இறைவன் அவரது பரிசுத்தத்தில் எல்லா மனிதரையும் தவறாக நடத்த உரிமை உள்ளவராக இருக்கிறார் என்று கூறுகிறார்கள். ஆனால் மற்ற மதங்கள் குறிப்பிடுவது போல இறைவன் இவ்விதம் செயல்படுவதில்லை. அவர் ஒவ்வொருவர் மீது இரக்கம் பாராட்டுகிறார். கிறிஸ்துவை ஏற்றுக்கொள்கிற ஒருவன் அவருடைய தெரிந்துகொள்ளுதலில் பங்கெடுக்கிறான். கிறிஸ்து மட்டுமே ஒருபோதும் பாவம் செய்யாதவராக இருக்கிறார்.

பொய்களின் பிதாவாகிய பிசாசிற்கு கட்டுப்பட்ட ஒருவன், இறைவனை விட பணத்தை அதிகமாக நேசிக்கும் ஒருவன் இதைக் குறித்து ஆச்சரியப்படத் தேவையில்லை. அவன் முற்றிலும் வீழ்ந்துபோகும்படி பரிசுத்தமானவர் அனுமதிக்கிறார். அவன் இறைவனுடைய வார்த்தையை புரிந்துகொள்ள முடியாதவனாக இருக்கிறான். இயேசு நற்செய்தியில் கூறுவதை யோவான் நற்செய்தியாளர் குறிப்பிடுகிறார். (யோவான் 8:43-45). இறைவன் இப்படி முடிவெடுக்க சுதந்திரம் உள்ளவராக இருக்கிறார். மனிதன் மனந்திரும்புகிறானோ? அல்லது இல்லையா? என்பதைச் சார்ந்து இதில் பொறுப்புள்ளவனாகிறான்.

பவுல் இதைக் குறித்து தனது வாசகர்களுக்கு தெளிவுபடுத்துகிறான். அவன் புறஜாதிகளுக்கு மட்டுமல்ல, ரோமில் உள்ள யூதர்களுக்கும் தங்களது இருதயக் கடினத்தை மேற்கொள்ள இவ்விதம் கூறுகிறான். இறைவன் அவர்களை தெரிந்து கொண்டிருந்தும், கிறிஸ்துவின் நற்செய்தியின் வழிநடத்துதலுக்கு தங்களுடைய இருதயங்களை திறக்காததினால், அவர்கள் தவறாக வழிநடத்தப்பட்டார்கள். ஒவ்வொருவருக்குமான தத்துவத்தை இந்த பவுலின் நிரூபம் நமக்குத் தரவில்லை. அவர் எவ்விதம் இருதயம் கடினப்பட்ட யூதர்களை நடத்துகிறார் என்று நமக்குக் காண்பிக்கிறது.

விண்ணப்பம்: பரலோகப் பிதாவே, கிறிஸ்து இயேசுவுக்குள் பாவிகளாகிய எங்களை நீர் தெரிந்து கொண்டதினால், நாங்கள் உம்மை ஆராதிக்கிறோம். உமது பிள்ளைகள் என்ற அதிகாரத்தை நீர் எங்களுக்குத் தந்துள்ளீர். நாங்கள் எவ்விதத்திலும் தகுதியற்றவர்கள். உமது தொடர்ச்சியான இரக்கங்களினிமித்தம் நாங்கள் உம்மைத் துதிக்கிறோம், உம்மை மகிமைப்படுத்துகிறோம். எங்களது பாவங்களினால் நீர் எங்களைக் கடினப்படுத்தாமல் அல்லது புறக்கணியாமல் இருந்ததற்காக, எங்கள் முழு இருதயத்தோடும் உமக்கு நன்றி கூறுகிறோம். உமது பரிசுத்த அன்பிற்கு நேராக எங்களை இழுத்துக் கொண்டதற்காக நன்றி செலுத்துகிறோம்.

கேள்விகள்:

  1. ஒரு மனிதனும் இறைவனால் தெரிந்துகொள்ளப்பட தகுதியற்றவன் ஏன்? நம்முடைய தெரிந்துகொள்ளுதலுக்கான காரணம் என்ன?
  2. ஏன் இறைவன் பார்வோனைக் கடினப்படுத்தினார்? கடினப்பட்ட தனிநபர்கள், சமூகம் அல்லது மக்கள் எப்படித் தோன்றுகிறார்கள்?

www.Waters-of-Life.net

Page last modified on August 10, 2021, at 04:45 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)