Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- John - 061 (Christ exists before Abraham)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Bengali -- Burmese -- Cebuano -- Chinese -- Dioula? -- English -- Farsi? -- French -- Georgian -- Greek -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Kyrgyz -- Malayalam -- Peul -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Thai -- Turkish -- Twi -- Urdu -- Uyghur? -- Uzbek -- Vietnamese -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

யோவான் - வெளிச்சம் இருளில் ஒளிர்கிறது
யோவான் எழுதின கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 2 - வெளிச்சம் இருளில் ஒளிர்கிறது (யோவான் 5:1 - 11:54)
இ - எருசலேமை நோக்கிய இயேசுவின் இறுதிப் பயணம் (யோவான் 7:1 - 11:54) கருத்து: இருளையும் ஒளியையும் பிரித்தல்
1. கூடாரப்பண்டிகையின்போது இயேசு கூறியவைகள் (யோவான் 7:1 – 8:59)

எ) ஆபிரகாமுக்கு முன்பாகவே இருக்கும் கிறிஸ்து (யோவான் 8:48-59)


யோவான் 8:48-50
48 அப்பொழுது யூதர்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: உன்னைச் சமாரியனென்றும், பிசாசு பிடித்தவனென்றும் நாங்கள் சொல்லுகிறது சரிதானே என்றார்கள். (49) அதற்கு இயேசு: நான் பிசாசு பிடித்தவனல்ல, நான் என் பிதாவைக் கனம்பண்ணுகிறேன், நீங்கள் என்னைக் கனவீனம்பண்ணுகிறீர்கள். (50) நான் எனக்கு மகிமையைத் தேடுகிறதில்லை; அதைத் தேடி, நியாயந்தீர்க்கிறவர் ஒருவர் இருக்கிறார்.

யூதர்கள் சாத்தானுடைய ஆவியுடன் இணங்கிப்போய் சத்தியத்தை அசட்டை செய்ததை அவர்களுக்குக் காண்பித்ததன் மூலம் இயேசு அவர்களுடைய முகத்திரையைக் கிழித்தார்.

இயேசுவின் இந்தத் தாக்குதலுக்குப் பிறகு அவர்களுக்குள் மறைந்திருந்த தீய ஆவி வெளிப்படையாகத் தெரிய ஆரம்பித்தது. அவர்கள் தங்கள் பாவத்திற்காக அழுது மனந்திரும்பாமல், தங்களுக்குப் பிசாசுடன் இருந்த கூட்டணியை அவர்கள் காண்பித்தார்கள். இயேசு பரிசுத்த ஆவியினால் பிறந்தவர் என்பதை அவர்கள் மறுதலித்ததன் மூலமாக தாங்கள் இறைநிந்தனை செய்ததாக அவர்கள் ஒத்துக்கொண்டார்கள். அவர்கள் அவரை சமாரியன் என்று அழைத்தார்கள். சமாரியர்கள் ஒரு கலப்பினமாக இருந்தார்கள். சமாரியர்களிடையே இயேசவைக் குறித்த ஆர்வம் ஏற்பட்டிருந்தது என்ற செய்தி எருசலேமை எட்டியிருந்தபடியால் அது இனவாதிகளாகிய யூதர்களைக் கோபப்படுத்தியிருந்தது.

அவர்களில் ஒரு கூட்டத்தார் அவர் யூதர்தான் என்பதை அறிந்திருந்த காரணத்தினால் அதை வலியுறுத்தினார்கள். மற்றவர்கள் அவர் பிசாசின் உதவியுடன் அற்புதங்களைச் செய்வதாகக் கூறினார்கள். பிசாசு பிடித்தவர்கள் தங்கள் உண்மையான நிலையை அறியாதவர்களாக இறைவனுடைய பரிசுத்தரைப் பிசாசு பிடித்தவன் என்று கூறினார்கள். இவ்வாறு பொய்களின் பிதாவினால் வஞ்சிக்கப்பட்டவர்கள் ஒளியை இருள் என்றும் இருளை ஒளியென்றும் கூறினார்கள்.

ஆவிக்குரிய குருடர்களாகிய இந்த மக்களுக்கு பொறுமையாக இயேசு பதிலுரைத்தார். “நான் பிசாசு பிடித்தவன் அல்ல; நான் பரிசுத்த ஆவியினால் நிறைந்திருக்கிறேன். உலக ஆசைகளை நோக்கி என்னை நடத்துகிற எந்த விருப்பமும் என்னிடத்தில் இல்லை. நான் சத்தியத்தினாலும் அன்பினாலும் நிறைந்திருக்கிறேன். நான் என்னை நேசிக்கவில்லை. நான் என்னை வெறுத்து என்னுடைய பிதாவைக் கனப்படுத்துகிறேன். இது என்னுடைய புத்தியுள்ள ஆராதனை. நான் இறைவனுடைய பெயரை உங்களுக்கு அறிவித்து, என்னுடைய நடத்தையினால் பிதாவைப் பரிசுத்தப்படுத்துகிறேன். நான் இறைவனுடைய சத்தியத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன். ஆனால் நீங்களோ நான் இறைவனுடைய மகன் என்று சொன்னதால் என்னை வெறுக்கிறீர்கள். பரிசுத்த ஆவியை நீங்கள் பெற்றுக்கொள்ளும்படி உங்களை விட்டுப்போக உங்களில் இருக்கும் தீய ஆவிக்குப் பிரியம் இல்லை. பரிசுத்தரின் பிள்ளைகளாவதற்கு உங்களுக்கு விருப்பம் இல்லை. ஆகவே நீங்கள் என்னை நிந்தித்துக் கொலைசெய்யத் தேடுகிறீர்கள். நான் எப்போதும் என்னுடைய பிதாவில் நிலைத்திருக்கிறபடியால் என்னுடைய மகிமையை நான் தேடுவதில்லை. அவர் என்னைப் பாதுகாத்து, பராமரித்து, கனப்படுத்தி மகிமைப்படுத்துகிறார். நீங்கள் என்னைப் புறக்கணித்தபடியால் அவர் உங்களை நியாயம் தீர்க்கப்போகிறார். ஆவியினால் பிறந்தவரைப் புறக்கணிக்கிறவன் இறைவனுடைய நியாயத்தீர்ப்பிற்கு உட்படுகிறான். அதனால்தான் தீய ஆவி அவர்கள்மேல் இருந்து, இரட்சகரைப் பெற்றுக்கொள்ளாதபடி அவர்களைத் தடைசெய்கிறது.

யோவான் 8:51-53
51 ஒருவன் என் வார்த்தையைக் கைக்கொண்டால், அவன் என்றென்றைக்கும் மரணத்தைக் காண்பதில்லை என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். 52 அப்பொழுது யூதர்கள் அவரை நோக்கி: நீ பிசாசுபிடித்தவனென்று இப்பொழுது அறிந்திருக்கிறோம்; ஆபிரகாமும் தீர்க்கதரிசிகளும் மரித்தார்கள். நீயோ: ஒருவன் என் வார்த்தையைக் கைக்கொண்டால் என்றென்றைக்கும் மரணத்தை ருசிபார்ப்பதில்லை என்கிறாய். 53 எங்கள் பிதாவாகிய ஆபிரகாமிலும் நீ பெரியவனோ? அவர் மரித்தார், தீர்க்கதரிசிகளும் மரித்தார்கள்; உன்னை நீ எப்படிப்பட்டவனாக்குகிறாய் என்றார்கள்.

இயேசு தன்னுடைய நற்செய்தியின் சுருக்கத்தை இங்கே கொடுக்கிறார். “அவருடைய வார்த்தைகளைக் கேட்டு, அவற்றை ஏற்றுக்கொண்டு, அவற்றைத் தங்கள் இருதயத்தில் கைக்கொள்பவர்கள், அந்த வார்த்தைகள் தங்கள் வாழ்க்கையில் மிகவும் சக்திவாய்ந்தவைகள் என்பதைக் கண்டுகொள்வார்கள். அவர் அழிவற்ற வாழ்வைப் பெற்றுக்கொள்வார்கள், ஒருபோதும் கெட்டுப்போக மாட்டார்கள். மரணம் தங்கள் தகப்பனாகிய இறைவனிடம் அவர்கள் செல்லும் வாசலாக இருக்கும். அவர்களுடைய நற்குணத்தினால் அவர்கள் இதைப் பெற்றுக்கொள்ளாமல், கிறிஸ்துவின் வார்த்தை அவர்களில் நிலைத்திருப்பதால் பெற்றுக்கொள்கிறார்கள்” இறைவனுடைய அரசின் இந்த தத்துவத்தை நீங்கள் புரிந்துகொண்டிருக்கிறீர்களா? யாரெல்லாம் இயேசுவின் வார்த்தைகளை தங்கள் இருதயத்தில் கொள்ளவில்லையோ அவர்கள் பாவத்தில் விழுந்து சாத்தானுடைய ஆளுகைக்கு உட்படுவார்கள். அவருடைய நற்செய்தியையும் வார்த்தையையும் கைக்கொள்பவர்கள் என்றென்றும் வாழ்வார்கள்.

யூதர்கள் கோபத்தில் கத்தினார்கள், “நீ சாத்தான், பொய் சொல்லுகிறாய். விசுவாசமுள்ள முற்பிதாக்கள் எல்லாம் இறந்துபோனார்கள். அப்படியிருக்கும்போது உன்னுடைய வார்த்தையை விசுவாசிக்கிறவர்கள் என்றும் வாழ்வார்கள் என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்? முடியவற்ற வாழ்வைக் கொடுப்பதற்கு நீ சிருஷ்டி கர்த்தரைவிடப் பெரியவனா? நீ ஆபிரகாம், மோசே, தாவீது போன்றவர்களைவிடப் பெரியவனா? உன்னை நீயே கடவுளாக்குகிறாய்” என்று முறையிட்டார்கள்.

யோவான் 8:54-55
54 இயேசு பிரதியுத்தரமாக: என்னை நானே மகிமைப்படுத்தினால் அந்த மகிமை வீணாயிருக்கும், என் பிதா என்னை மகிமைப்படுத்துகிறவர், அவரை உங்கள் தேவனென்று நீங்கள் சொல்லுகிறீர்கள். 55 ஆயினும் நீங்கள் அவரை அறியவில்லை, நான் அவரை அறிந்திருக்கிறேன்; அவரை அறியேன் என்று சொல்வேனாகில் உங்களைப்போல நானும் பொய்யனாயிருப்பேன்; அவரை நான் அறிந்து, அவருடைய வார்த்தையைக் கைக்கொண்டிருக்கிறேன்.

இயேசு அமைதியாக பதிலுரைத்து, தன்னுடைய அடிப்படைத் தன்மையை வெகு விவரமாக வெளிப்படுத்தினார். அவர் சுபாவப்படி எப்போதுமே மகிமையானவர். பிதா குமாரனில் இருப்பதால், இறைவன் தகப்பனாக இருக்கிறார் என்பது தெளிவாக்கப்படுகிறது. இதனால் குமாரனுடைய மகிமைக்கு பிதா உத்தரவாதமளிக்கிறார். ஆம், யூதர்கள் சர்வ வல்லவர் தங்கள் இறைவன் என்று உரிமைகோரினர். ஆனால் அவர்கள் உண்மையில் அவரை அறியவில்லை. அவர்களுடைய பிதாவாகிய சாத்தான் இறைவன் என்ற பெயரைப் போலியாகப் பயன்படுத்தி அதற்குள் ஒளிந்துகொள்கிறான். அவர்கள் தங்களை பக்திமான்களாகக் காட்டிக்கொண்டாலும், அவர்களிடத்தில் மெய்யான அன்பில்லை. இறைவனை அறிந்தவன் எவனும் இறைவன் தன்னை நேசிப்பதைப் போல தானும் நேசிக்கிறவனாயிருப்பான். ஆகவேதான், எந்தவொரு சமயமும் “இறைவன்” என்ற பெயரைப் பற்றிக்கொண்டிருந்தால் மட்டும்போதும் என்று சொல்லும்போது அது தன்னை வாழ்க்கைக்கான மெய்யான வழி என்று நிரூபிக்கத் தவறுகின்றது. அந்த நம்பிக்கை முழுவதும் பொய்யானதாகவே இருக்கும். இறைவன் பிதாவாகவும் குமாரனாகவும் பரிசுத்த ஆவியானவராகவும் இருக்கிறார். மற்ற சமயங்கள் பயன்படுத்தும் தெய்வீகத்தின் தன்மைகள் மற்றும் பெயர்கள் அனைத்தும் மிகவும் சாதாரணமாக கருத்துக்களேயாகும். இறைவனைக் குறித்த உண்மை திரித்துவத்திலுள்ள ஒருமையில்தான் காணப்படுகிறது. அதனால்தான் இயேசு யூதர்களை இவ்வாறு கடிந்துகொண்டார். “நீங்கள் அவரை அறியமாட்டீர்கள். உங்கள் வாழ்வும் சிந்தனைகளும் பொய்யை அடிப்படையாகக் கொண்டவைகள். நீங்கள் சத்தியத்தைக் காணமுடியாத குருடராயிருக்கிறீர்கள்.” அதே வேளையில் இயேசு தான் நித்தியமான இறைவனை அறிந்திருப்பதாக வலியுறுத்தினார். அப்படியில்லையெனில், பிதாவாகிய இறைவனைக் குறித்த அவருடைய சாட்சி ஒரு பொய்யாகவே இருக்கும். ஆனால் இயேசு இறைவனுடைய மெய்யான சாயலை யூதர்களுக்கு அறிவித்தார்.

யோவான் 8:56-59
56 உங்கள் பிதாவாகிய ஆபிரகாம் என்னுடைய நாளைக் காண ஆசையாயிருந்தான்; கண்டு களிகூர்ந்தான் என்றார். 57 அப்பொழுது யூதர்கள் அவரை நோக்கி: உனக்கு இன்னும் ஐம்பது வயதாகவில்லையே, நீ ஆபிரகாமைக் கண்டாயோ என்றார்கள். 58 அதற்கு இயேசு: ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். 59 அப்பொழுது அவர்மேல் எறியும்படி கல்லுகளை எடுத்துக்கொண்டார்கள். இயேசு மறைந்து, அவர்கள் நடுவே கடந்து, தேவாலயத்தை விட்டுப்போனார்.

யூதர்கள் உண்மையான இறைவனை அறியவில்லை என்றும், அவர்கள் வாழ்வின் உண்மையான உந்துசக்தி சாத்தானே என்றும் சொன்ன பிறகு, அவர்கள் தன்னை ஏற்றுக்கொண்டாலும் சரி, புறக்கணித்தாலும் சரி என்று தன்னுடைய நித்தியத்தை வெளிப்படுத்தி தனது உரையாடலை இயேசு முடித்தார். விசுவாசத்தின் தகப்பனாகிய ஆபிரகாமுடைய ஒரு உதாரணத்தின் மூலமாகவும் அவர் தன்னுடைய நித்திய தன்மையை வெளிப்படுத்தினார். ஆபிரகாம் இறைவனுடன் வாழ்ந்து, கிறிஸ்துவின் மனுவுருவாதலைக் கண்டு மகிழ்ச்சியடைந்தார் என்று இயேசு குறிப்பிட்டார். ஆபிரகாமுடைய சந்தததியின் மூலமாக அனைத்து இனங்களும் ஆசீர்வதிக்கப்படும் என்ற வாக்குறுதி இதன் மூலமாகத்தான் நிறைவேறியது.

இதைக் கேட்ட யூதர்கள் வியப்படைந்து, “நீ ஒரு வாலிபனாயிருந்துகொண்டு இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பாக வாழ்ந்த ஆபிரகாமைப் பார்த்தேன் என்கிறாயே, உனக்கு புத்தி கெட்டுவிட்டதா?” என்று கேட்டார்கள்.

இயேசு அவர்களுக்கு அளித்த பதில் மகத்துவமானதாயிருந்தது: “ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்பாகவே நான் இருக்கிறேன். “மெய்யாகவே, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்று சொன்னதன் மூலமாக, தன்னுடைய பிதா நித்திய இறைவனாயிருப்பதைப் போல தானும் நித்திய இறைவனாயிருக்கிறேன் என்பதை அவர்களுக்குக் காண்பித்தார். இதற்கு முன்பாக ஸ்நானகன் கிறிஸ்துவின் நித்தியத்தை அறிவித்தார். மக்கள் கூட்டம் அதை அறிந்துகொள்ளவில்லை. ஒரு மனிதன் எவ்வாறு இறைவனாக முடியும் என்பதும் அவர்களுக்குப் புரியவில்லை.

அவர்கள் கிறிஸ்துவின் சாட்சியை தெய்வ நிந்தனையாகவும், இறைவனைப் பழித்துரைப்பதாகவும், சாத்தியமே இல்லாத ஒன்றாகவும் பார்த்தார்கள். அதனால் அவர்கள் சட்டபூர்வமான தீர்ப்புக் கிடைப்பதற்கு முன்பாகவே அவருக்கு எறியும்படி கற்களை எடுத்துக்கொண்டார்கள். அவர்கள் அந்த கற்களை எறிந்தபோது, அவர் மக்கள் கூட்டத்திலிருந்து மறைந்துபோனார். அவர் எப்படி மறைந்தார் என்று நமக்குத் தெரியவில்லை. ஆனால் அவருடைய நேரம் இன்னும் வராதிருந்த காரணத்தினால் அவர் தேவாலய வாசல்களுக்கு வெளியே சென்றுவிட்டார்.

விண்ணப்பம்: கர்த்தராகிய இயேசுவே, நாங்கள் உம்மை ஆராதிக்கிறோம். நீர் நித்தியமான இறைவன். உண்மையும் சத்தியமும் அன்பும் நிறைந்தவர். நீர் உம்முடைய மகிமையைத் தேடாமல் உமது பிதாவை மட்டும் கனப்படுத்துகிறீர். நாங்கள் பெருமையடைந்து சாத்தானுடைய பாவத்திற்குள் விழுந்து விடாதபடி எங்களைக் காப்பாற்றும். பரலோகத்திலிருக்கிற எங்கள் பிதாவின் நாமத்தை மகிமைப்படுத்தவும், விசுவாசத்தினால் உம்மில் உள்ள நித்திய வாழ்வைப் பெற்றுக்கொள்ளவும் எங்களுக்கு உதவி செய்யும்.

கேள்வி:

  1. ஏன் யூதர்கள் இயேசுவைக் கல்லெறிய நினைத்தார்கள்?

www.Waters-of-Life.net

Page last modified on August 02, 2012, at 08:03 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)