Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- John - 060 (The devil, murderer and liar)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Bengali -- Burmese -- Cebuano -- Chinese -- Dioula? -- English -- Farsi? -- French -- Georgian -- Greek -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Kyrgyz -- Malayalam -- Peul -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Thai -- Turkish -- Twi -- Urdu -- Uyghur? -- Uzbek -- Vietnamese -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

யோவான் - வெளிச்சம் இருளில் ஒளிர்கிறது
யோவான் எழுதின கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 2 - வெளிச்சம் இருளில் ஒளிர்கிறது (யோவான் 5:1 - 11:54)
இ - எருசலேமை நோக்கிய இயேசுவின் இறுதிப் பயணம் (யோவான் 7:1 - 11:54) கருத்து: இருளையும் ஒளியையும் பிரித்தல்
1. கூடாரப்பண்டிகையின்போது இயேசு கூறியவைகள் (யோவான் 7:1 – 8:59)

ஊ) கொலைகாரனும் பொய்யனுமாகிய பிசாசு (யோவான் 8:37-47)


யோவான் 8:44
நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்; உங்கள் பிதாவினுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள்; அவன் ஆதிமுதற்கொண்டு மனுஷகொலைபாதகனாயிருக்கிறான்; சத்தியம் அவனிடத்திலில்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை; அவன் பொய்யனும் பொய்க்குப்பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய்பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான்.

இயேசு தன்னை அன்பு செய்யாத ஒவ்வொருவரையும் பார்த்து பிசாசுதான் அவர்களுடைய பிதா என்று கூறுகிறார். இதன் மூலமாக யூதர்கள் இறைவனை அறிந்திருப்பதாக உரிமைபாராட்டினாலும் அவர்களைப் பற்றிய உண்மையை இயேசு காண்பித்தார். சட்டவாதிகள் இறைவனைவிட்டு வெகுதூரத்தில் இருக்கிறார்கள். பொல்லாங்கான் அவர்களுடைய தகப்பனாயிருக்கிறான்.

பிசாசு எங்கெல்லாம் செல்கிறானோ அங்கெல்லாம் குழப்பத்தை உண்டுபண்ணுகிறான். இறைவனுடைய படைப்பைச் சீரழிக்க வேண்டும் என்பதுதான் அவனுடைய நோக்கம். அவன் ஒவ்வொரு மனிதனுடைய பெலவீனங்களைக் கண்டுபிடித்து, அவர்களைத் தந்திரமாகச் சோதனைக்குட்படுத்தி, அவர்களை ஆளுகைசெய்து, அவர்கள் பாவம் செய்யும்படி நடத்துவான். அவர்கள் பாவம் செய்தவுடன் கடவுளுடைய சிங்காசனத்திற்கு முன்பாகச் சென்று அந்தப் பரிதாபமான நபர்களைத் தண்டிப்பது நியாயமானதே என்று அவர்களைக் குற்றப்படுத்துவான். அவனுடைய வஞ்சனை அவ்வளவு அசிங்கமானது!

சாத்தான் தீய இச்சைகள் அனைத்தின் மொத்த உருவமாக இருக்கிறான் என்றும் அதனால் அவனிடத்தில் எந்த நன்மையும் இல்லை என்றும் இயேசு அறிவித்தார். அவன் அனைவரையும் வெறுத்து சுயத்திற்கு அடிமையானான். இயேசுவின் எதிரிகள் அனைவரும் அதே ஆவியில்தான் வாழ்கிறார்கள். அவர்கள் தங்கள் சுய இச்சைகளினால் நடத்தப்படுவதுடன் மற்றவர்களையும் சீரழிக்கிறார்கள். கர்த்தருக்குள் வாழாதவர்கள் அனைவரும் சாத்தான் தங்களைத் தூண்டிவிடுகிறபடி தீமையான வாழ்க்கையே வாழ்கிறார்கள்.

சாத்தானுடைய இச்சைகள் யாவை? அவன் ஆதிமுதல் கொலைகாரன் என்று இயேசு சொல்கிறார். அதனால்தான் அவன் மனிதனிலிருக்கும் இறைவனுடைய சாயலை வெறுக்கிறான். அவர் உயிரின் தோற்றுவாயாகிய இறைவனைவிட்டுப் பிரிந்தும் இருக்கிறான். அவனிடத்தில் நித்திய மரணம் இடம்பெற்றது. அவனே மரணத்தின் அதிகாரியாயிருக்கிறான். அனைத்து உயிரினங்களையும் அழிப்பதே அவனுடைய நோக்கமாகும்.

பிசாசின் இந்த கொடூரத் தன்மைக்கு அவனுடைய வஞ்சகமே காரணம். அவன் நம்முடைய ஆதிப் பெற்றோராகிய ஆதாமுக்கும் ஏவாளுக்கும் பொய்யைச் சொல்லி அவர்களை அவிசுவாசிகளாக்கி இறைவனுடைய கட்டளையை மீறச் செய்தான். அவன் தனக்கென்று ஒரு கூட்டம் தேவதூதர்களை எடுத்துக்கொண்டபோது தான் இறைவனைவிட அழகும் பலமும் நிறைந்தவன் என்றும் பெரியவன் என்றும் தன்னைத் தானே ஏமாற்றிக்கொண்டான்.

தன்னுடைய நோக்கங்களின் ஆழத்தை அறியாத சாத்தானுடைய அடிப்படைத் தன்மையே சுய வஞ்சனைதான். அதனால் அவன் அதிபயங்கரமாக வீழ்ந்துபோகிறான். கிறிஸ்து சாந்தமும் மனத்தாழ்மையுமாயிருப்பதால் அவனுக்கு நேரெதிரானவராக இருக்கிறார். மனிதன் கிறிஸ்துவின் தாழ்மையையும் சுய வெறுப்பபையும் நாடாமல் வஞ்சகத்தையும் பெருமையையும் நாடுவது வருத்தப்பட வேண்டிய ஒன்று. ஆகவே, இந்த வஞ்சகன் பாம்பின் விஷத்தைப்போல பொய்யைக் கக்குகிற பொய்யர்களின் இராணுவத்தை உருவாக்குகிறான். அவர்களில் ஒருவர் மற்றவரை நம்புவதில்லை.

“அனைவரும் பொய்யராயிருக்கிறார்கள்; தங்கள் புன்னகையினால் ஒருவருக்கொருவர் முகத்துதி செய்கிறார்கள். ஒவ்வொருவனும் தன்னைத்தான் கனப்படுத்துகிறான், மாணவர்கள் பரீட்சைகளில் ஏமாற்றுகிறார்கள். வியாபாரிகள் ஏமாற்றுகிறார்கள். கணவன் மனைவிகள் ஒருவரையொருவர் வஞ்சிக்கிறார்கள். யாரும் யாரையும் நம்புவதில்லை. இருப்பினும் ஒவ்வொருவரும் தாங்கள்தான் உலகத்திலேயே நீதியுள்ளவர்கள் என்று எண்ணிக்கொள்கிறார்கள்” என்று பெண்மணி தனது தாயாரிடம் சொன்னாள்.

சாத்தான் பொய்யைச் சொல்லித்தான் தன்னுடைய மக்களைத் தூண்டிவிடுகிறான். அவன் ஒவ்வொரு பொய்யையும் உண்மையைப் போல காண்பிப்பதால் அவனுடைய பொய்களில் எல்லாம் பாதி உண்மையிருக்கும். அவன் ஏமாற்றுக்காரனாகவும் பொய்யின் பிதாவுமாக இருக்கிறான்.

யோவான் 8:45-47
நான் உங்களுக்குச் சத்தியத்தைச் சொல்லுகிறபடியினாலே நீங்கள் என்னை விசுவாசிக்கிறதில்லை. (46) என்னிடத்தில் பாவம் உண்டென்று உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்தக்கூடும்? நான் சத்தியத்தைச் சொல்லியிருக்க, நீங்கள் ஏன் என்னை விசுவாசிக்கிறதில்லை. (47) தேவனால் உண்டானவன் தேவனுடைய வசனங்களுக்குச் செவிகொடுக்கிறான்; நீங்கள் தேவனால் உண்டாயிராதபடியினால் செவிகொடாமலிருக்கிறீர்கள் என்றார்.

இயேசு மட்டும்தான் உண்மையைச் சொல்லி இறைவனுடைய சத்தியத்தை வெளிப்படுத்துகிறார். அவருடைய வார்த்தைகளை விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள். அவர் அனைத்து உண்மைகளையும் அறிந்திருந்தாலும் தான் சொல்லும் அனைத்திலும் அவர் தாழ்மையும் உண்மையும் உள்ளவராயிருக்கிறார்.

இயேசு பேசுகிறார் என்ற காரணத்தினாலேயே பலர் இந்த சத்தியத்திலுள்ள நன்மைகளை ஏற்பதில்லை. இயேசு சொல்லுகிற இந்தக் காரியத்தை ஒரு அரசியல் தலைவரோ அல்லது ஒரு மதத்தைத் நிறுவியவரோ சொன்னால் மனிதர்கள் விசுவாசிப்பார்கள். ஒரு சாதாரண மனிதனாக இயேசு அதைப் பேசியபோது அவர்கள் அதைப் புறக்கணித்தார்கள், காரணம் அவர்கள் சுய வெறுப்பைவிட மேன்மையையும் ஆளுகையையுமே விரும்பினார்கள். “நீங்கள் ஏன் விசுவாசிப்பதில்லை? நீங்கள் என்னில் ஏதேனும் வஞ்சகத்தையோ, பெருமையையோ அல்லது தீமையையோ காண்கிறீர்களா?” என்று இயேசு அவர்களிடம் கேட்டு, “இல்லை. நான் எப்போதும் சத்தியத்தைப் பேசி அதை நடைமுறைப்படுத்துகிறேன். நான் மாம்சத்தில் வந்த சத்தியமாகவும், பாவமில்லாதவராகவும், நீதியுள்ளவராகவும் இருக்கிறேன். என்னிடத்தில் எந்த யுக்திகளோ வஞ்சகமோ இல்லை” என்று கூறினார்.

இறுதியாக இயேசு, கலககுணமுள்ள இந்த மக்களைப் பார்த்து, “இறைவனிடமிருந்து வந்தவனே அவருடைய வார்த்தைகளைக் கேட்டு, அவருடைய சத்தத்தை அறிந்துகொள்வான். ஒரு குழந்தை மற்றவர்களுடைய சத்தத்திலிருந்து தன்னுடைய பெற்றோரின் சத்தத்தைப் பிரித்து அறிந்துகொள்கிறதோ அதேபோலதான் இதுவும். ஒரு தாயும் அப்படித்தான். குழந்தையின் அழுகுரலைக் கேட்டு அதனிடம் ஓடிச்செல்வாள். அவ்விதமாக இறைவனால் அழைக்கப்பட்டவர்களே பரலோக பிதாவின் சத்தத்தைக் கேட்பான். நற்செய்தியைப் புரிந்துகொள்ள முடியாவர்கள் இறைவனால் உண்டானவர்கள் அல்ல. நம்முடைய பக்தி அல்ல, கிறிஸ்துவின் இரத்தினால் உண்டாகும் மறுபிறப்பே நம்மை இரட்சிக்கும். அப்போது ஆவியானவர் நம்மில் வந்து வாசம்செய்வார். உங்களுடைய பிதா யார்? சாத்தானா அல்லது இறைவனா? அவசரப்பட்டு பதிலுரைக்காதீர்கள். உங்களுடைய நோக்கங்களை பொல்லாங்கானுடைய நோக்கத்தோடும் கிறிஸ்துவின் செயல்களோடும் ஒப்பிட்டுப்பார்த்து அதன்பிறகு மனந்திரும்புங்கள்.

விண்ணப்பம்: பரலோக பிதாவே, எங்கள் பாவத்தையும் உமது அன்பையும்பற்றி நீர் எங்களுக்குப் போதிப்பதால் நாங்கள் உமக்கு நன்றி கூறுகிறோம். என்னுடைய பொய்களை எனக்கு மன்னித்து, எல்லாவித வெறுப்பிலும் பெருமையிலிருமிருந்து என்னை விடுவியும். நான் என்னை வெறுக்கவும் சுய மாயையில் மாட்டிக்கொள்ளாமல் காக்கவும் என்னை சாத்தானுடைய வல்லமையிலிருந்து விடுவித்தருளும். என்னுடைய செவிகளையும் இருதயத்தையும் உம்முடைய நற்செய்திக்குத் திறந்து, என்னைத் தாழ்மையும் உண்மையுமுள்ள மனிதனாக மாற்றும்.

கேள்வி:

  1. இயேசு நமக்குத் தெளிவுபடுத்திக் காண்பிக்கும் பிசாசின் தன்மைகள் யாவை?

www.Waters-of-Life.net

Page last modified on August 02, 2012, at 08:00 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)