Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- John - 039 (The reason for unbelief)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Bengali -- Burmese -- Cebuano -- Chinese -- Dioula -- English -- Farsi? -- French -- Georgian -- Greek -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Kyrgyz -- Malayalam -- Peul -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Thai -- Turkish -- Twi -- Urdu -- Uyghur? -- Uzbek -- Vietnamese -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

யோவான் - வெளிச்சம் இருளில் ஒளிர்கிறது
யோவான் எழுதின கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 2 - வெளிச்சம் இருளில் ஒளிர்கிறது (யோவான் 5:1 - 11:54)
அ - இரண்டாம் எருசலேம் பயணம் (யோவான் 5:1-47) -- கருப்பொருள்: இயேசுவுக்கும் யூதர்களுக்குமிடையில் பகைமை ஏற்படுதல்

5. அவிசுவாசத்திற்கான காரணம் (யோவான் 5:41-47)


யோவான் 5:41-44
41 நான் மனுஷரால் மகிமையை ஏற்றுக்கொள்ளுகிறதில்லை. 42 உங்களில் தேவ அன்பு இல்லையென்று உங்களை அறிந்திருக்கிறேன். 43 நான் என் பிதாவின் நாமத்தினாலே வந்திருந்தும் நீங்கள் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை, வேறொருவன் தன் சுய நாமத்தினாலே வந்தால் அவனை ஏற்றுக்கொள்வீர்கள். 44 தேவனாலேமாத்திரம் வருகிற மகிமையைத் தேடாமல், ஒருவராலொருவர் மகிமையை ஏற்றுக்கொள்ளுகிற நீங்கள் எப்படி விசுவாசிப்பீர்கள்?

இயேசு அவருடைய எதிரிகளின் ஆயுதங்களை அடித்து நொருக்கி, அவர்களுடைய இருதயத்தின் நிலையையும், அவர் களுடைய எதிர்கால விதியையும் அவர்களுக்குக் காண்பித்தார். அவர்களுடைய தீய நோக்கங்களையும் அவர்களுடைய தீய குணாதிசயத்தையும் அவர்களுக்குக் காண்பித்தார்.

அவருக்கு மக்களுடைய பாராட்டோ அல்லது தலைவர்களுடைய அங்கீகாரமோ தேவைப்படவில்லை, அவர் தன்னுடைய பணியைக் குறித்து உறுதியுடன் இருந்தார். அவருடைய மன உறுதி அவருடைய ஊழியத்தின் காணத்தக்க விளைவை அடிப்ப டையாகக் கொண்டிருக்கவில்லை. அவருக்கு கனம் கிடைத்தால் அதை அவர் பிதாவிற்குச் செலுத்தி விடுவார். முதலில் தன்னிடம் அல்ல, பிதாவிடமே நாம் விண்ணப்பிக்கும்படி நமக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறார். பரலோகத்திலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக, உம்முடைய இராஜ்யம் வருக, உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல பூலோகத்திலும் செய்யப்படுவதாக என்று கிறிஸ்தவர்கள் விண்ணப்பிக்க கற்றுக்கொடுத்தார். இயேசு ஒருபோதும் தன்னுடைய சுய கனத்தையும் மகிமையையும் தேடவில்லை. பிதாவின் மகிமையே அவருடைய நோக்கமாயிருந்தது, இறை வனுடைய நீதியின் மேல் அவர் கொண்ட வைராக்கியமே அவரைப் பட்சித்தது.

படைப்பிலும், மீட்பிலும், மகிமையிலும் இறைவனுடைய அன்பே செயலூக்கமளிக்கும் காரணியாக இருக்கிறது. பரிசுத்த திரித்துவத்தின் சாரமும் இதுவாகவே இருக்கிறது. நியாயப் பிரமாணத்தை நிறைவேற்றுதலும் பரிபூரணத்தின் நோக்கமும் இந்த அன்பையே நிறைவேற்றுகிறது. இந்த அன்பைப் பெற்றி ருப்பவன் தனக்காக வாழமாட்டான், தன்னைக் கனப்படுத்தவும் மாட்டான், மற்றவர்களைக் கனப்படுத்தி அவர்களுக்கு சுய வெறுப்புடன் சேவை செய்வான். தன்னிடம் உள்ளவைகளை எல்லாம் ஏழைகளுக்குக் கொடுப்பான். அன்பு ஒருபோதும் ஒழியாது.

எந்தவொரு மனிதனும் தானாக இறைவனை நேசிக்க முடியாது. ஆனால் ஒருவன் பாவத்தின் அசிங்கத்தைக் குறித்து துக்கப்பட்டு, மனந்திரும்பி, கிறிஸ்துவிலுள்ள இறைவனுடைய அன்பை விசுவாசிப்பவன், அப்போஸ்தலனாகிய பவுலைப் போல பரிசுத்த ஆவியினால் தெய்வீக அன்பு என்னுடைய உள்ளத்தில் ஊற்றப் பட்டது என்றே கூறுவான். இந்த அன்பு, தியாகத்திலும், பொறு மையிலும், தாழ்மையிலும் காணப்படும். இறைவனுடைய ஆவி யானவருக்கு யார் தன்னுடைய ஆத்துமாவைத் திறந்து கொடுக்கிறானோ அவன் பரிசுத்த திரித்ததுவத்தையும் அனைத்து மக்களையும் நேசிப்பான். தன்னைப் பற்றி பெருமையாக தான் நல்லவன் என்று நினைக்கிறவன் உண்மையாக மனந்திரும்பாத வனும் இறைவனுடைய ஆவிக்குப் பகைஞனுமாயிருக்கிறான். அவன் சுயநலமுள்ளவனும், புதுப்பித்தலை விரும்பாதவனும், தனக்கு ஒரு இரட்சகர் தேவை என்பதை உணராதவனும், தன்னுடைய இருதயத்தைக் கடினப்படுத்துகிறவனுமாயிருக்கிறான். கிறிஸ்து யாரும் அறியாத அந்நிய தெய்வத்தினுடைய பெயரில் வராமல், பிதாவினுடைய நாமத்தினாலே இறைவனுடைய அன்பையும் இரக்கத்தையும் வெளிப்படுத்துகிறவராக வந்தார். கிறிஸ்துவைப் புறக்கணிக்கிறவர்களுடைய மனம் இறைவனுடைய அன்புக்கு மூடப்பட்டது என்பதை நிரூபிக்கிறார்கள், ஏனெனில் அவர்கள் ஒளியைக் காட்டிலும் இருளை அதிகம் நேசிக்கிறார்கள், ஒளியினால் பிறந்தவர்களையும் வெறுக்கிறார்கள்.

சுயத்தைத் தேடுபவர்களையும் சுயநலவாதிகளையும் ஒருங்கி ணைத்து இறைவனுடைய அன்புக்கு எதிராக கலகத்தை நடத்தும் அந்திக் கிறிஸ்துவின் தோற்றத்தைக் குறித்து இயேசு தம்முடைய எதிரிகளுக்குத் தெரிவித்தார்.

உண்மையான மனந்திரும்புதலை விரும்பாமல் ஒருவரையொருவர் முகஸ்துதி செய்வதை விரும்புகிற மக்கள் கிறிஸ்துவை விசுவா சிக்க மாட்டார்கள். அவர்கள் தங்களை நல்லவர்கள் என்றும், பெலசாலிகள் என்றும் புத்திமான்கள் என்றும் கருதுகிறார்கள்! அவர்கள் பரிசுத்தருக்கு முன்பாக நடுங்காமலும் அவர் ஒருவரே நல்லவர் என்பதை உணராமலும் இருக்கிறார்கள். அவிசுவாசத் திற்குக் காரணம் சுயநீதி, இந்தப் போலி மனப்பான்மையின் அடையாளம் பெருமை.

உண்மையில் இறைவனையும் தன்னுடைய ஆத்துமாவையும் அறிந்தவன், மனமுடைந்து தன்னுடைய பாவங்களை அறிக்கை செய்து, எல்லாவித கனத்தையும் மகிமையையும் புறக்கணித்து, பிதாவுக்கும் குமாரனுக்குமே எல்லா மகிமையையும் எப்போதும் செலுத்துவான். இரட்சிக்கும் கிருபையை அவன் மேன்மைப் படுத்துவான். நாம் பாவங்கள் மன்னிக்கப்பட்ட பாவிகள் என்பதை விசுவாசிப்பது நம்முடைய நடத்தையிலுள்ள இறு மாப்பிலிருந்து நம்மை விடுவிக்கிறது, ஏனெனில் அப்போது நாம் யார் என்றும் இறைவன் யார் என்றும் நமக்குத் தெரியும். அன்பு ஒரு நண்பனிடத்தில் உண்மையைச் சொல்லும்; பெருமையுள்ள மனிதன் தன்னையும் மற்றவர்களையும் வஞ்சிக்கிறான், நம்மைத் தாழ்மையாக உருவாக்கும் இறைவனுடைய ஆவியிலிருந்து விலகுகிறான்.

யோவான் 5:45-47
45 பிதாவினிடத்தில் நான் உங்கள் மேல் குற்றஞ்சாட்டுவேன் என்று நினையாதிருங்கள்; நீங்கள் நம்புகிற மோசேயே உங்கள்மேல் குற்றஞ்சாட்டுவான். 46 நீங்கள் மோசேயை விசுவாசித்தீர்களானால், என்னையும் விசுவாசிப்பீர்கள்; அவன் என்னைக்குறித்து எழுதியிருக்கிறானே. 47 அவன் எழுதின வாக்கியங்களை நீங்கள் விசுவாசியாமலிருந்தால் நான் சொல்லுகிற வசனங்களை எப்படி விசுவாசிப்பீர்கள் என்றார்.

நியாயப்பிரமாணவாதிகள் பெருமையைக் குறைப்பதில் இயேசு தொடர்ந்து முன்னேறி, இறைவனுக்கு முன்பாக நான் உங்களைக் குற்றஞ்சொல்லத் தேவையில்லை. மோசேயே உங்களைக் குற்றப்படுத்துவார். அவர் கொடுத்த உடன்படிக்கை யின் சட்டமே உங்களை நியாயந்தீர்க்கும். நீங்கள் அன்பை விட்டுவிட்டு, நியாயப்பிரமாணத்தின் பேரினாலே என்னைக் கொல்ல விரும்புகிறீர்கள். இறைவனைவிட்டு விலகியிருக்கும் நீங்கள் இருளில் அலைகிறீர்கள். நான் ஒரு நோயாளியை ஓய்வுநாளில் குணமாக்கினேன், அந்த இறைவனுடைய செயல் உங்களுக்கு விருப்பமாயிருக்கவில்லை. இறைவனுடைய அன்பின் மனுவுருவான என்னை நீங்கள் வெறுக்கிறீர்கள். இவையெல்லாம் மேசியாவின் செயல் என்று நீங்கள் நம்ப மறுக்கிறீர்கள். உங்களுடைய ஆவி கலகமும் கடினமுமானது. இறைவன் வாழ்வுக்காகத்தான் நியாயப்பிரமாணத்தைக் கொடுத்தார், மரணத்திற்காக அல்ல. நீங்கள் மனந்திரும்பினால் ஒரு இரட் சகருக்காக ஏங்குவீர்கள். நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனமும் வருகிறவரைக் குறித்து முன்னறிவிக்கின்றன. நீங்கள் நியாயப் பிரமாணத்தின் நோக்கத்தை திரித்து, இறைவனுடைய கட்டளையை உங்கள் சொந்த சித்தத்தினால் நியாயந்தீர்க்க அனுமதித்தீர்கள். உங்களுடைய தீய ஆவிகள் சத்தியத்தை அறியாதபடி உங்களைத் தடுத்து, நீங்கள் பரிசுத்த ஆவியானவருக்கு எதிர்த்து நிற்கவும் அறியாமையிலும் செவிட்டுத்தனத்திலும் நிலைத்திருக்கவும் உங்களை இட்டுச் செல்லுகிறது. உங்களுடைய கடின இருதயத்தினால் வாழ்வளிக்கும் வார்த்தையை நீங்கள் நம்புவதில்லை என்று கடிந்துகொண்டார்.

கேள்வி:

  1. மற்றவர்களைப் போல ஏன் இயேசு தனக்கு மகிமையை ஏற்றுக் கொள்வதில்லை?

கேள்வித்தாள் 2

அன்பின் வாசகரே, இந்த 19 கேள்விகளில் 17க்கு சரியான பதிலனுப்புவீர்களானால், இப்பாடத் தொடரின் அடுத்த நூல் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

  1. இயேசு ஏன் தேவாலயத்திற்குச் சென்று வியாபாரிகளைத் துரத்தினார்?
  2. நிக்கோதேமுவின் பக்திக்கும் கிறிஸ்துவின் நோக்கங்களுக்குமிடையிலான வித்தியாசம் என்ன?
  3. விசுவாசிகளிலுள்ள மறுபிறப்பின் அடையாளங்கள் என்ன?
  4. வனாந்தரத்திலுள்ள வெண்கல சர்ப்பத்திற்கும் இயேசுவுக்கும் இடையிலான ஒற்றுமையென்ன?
  5. கிறிஸ்துவுக்குள்ளிருக்கும் விசுவாசிகள் ஏன் நியாயத்தீர்ப்பைச் சந்திப்பதில்லை?
  6. கிறிஸ்து மணவாளன் என்றால் என்ன பொருள்?
  7. நாம் எவ்வாறு நித்திய வாழ்வைப் பெற்றுக்கொள்கிறோம்?
  8. இயேசு நமக்குக் கொடுக்கும் கொடை எது? அதன் தன்மைகள் யாவை?
  9. மெய்யான ஆராதனையை தடுப்பது எது, அதை ஊக்குவிப்பது எது?
  10. ஜீவ தண்ணீரினால் நாம் நிரப்பப்படுவது எப்படி?
  11. இயேசுவுக்கு பயனுள்ள அறுவடையாளர்களாக நாம் மாறுவது எப்படி?
  12. அந்த அதிகாரி கடந்து சென்ற விசுவாசத்தின் படிகள் யாவை?
  13. பெதஸ்தா குளத்தருகே இருந்த சுகவீனனை இயேசு எவ்வாறு குணமாக்கினார்?
  14. யூதர்கள் ஏன் இயேசுவைத் துன்பப்படுத்தினார்கள்?
  15. எவ்வாறு, ஏன் இறைவன் தன்னுடைய குமாரனுடன் சேர்ந்து செயல்படுகிறார்?
  16. கிறிஸ்து நிறைவேற்றும்படி பிதா குமாரனிடம் கொடுத்துள்ள இரண்டு முக்கியமான பணிகள் யாவை?
  17. இயேசுவினால் நமக்கு விளக்கப்பட்டபடி பிதாவுக்கும் குமாரனுக்குமுள்ள உறவு என்ன?
  18. யார் அந்த நான்கு சாட்சிகள், அவைகள் எதைக் குறித்து சாட்சியிடுகின்றன?
  19. மற்றவர்களைப் போல இயேசு தனக்கு மகிமையை ஏற்றுக்கொள்வதில்லை?

உங்கள் பெயரையும் முகவரியையும் தெளிவாக எழுதி உங்கள் பதிலுடன் அனுப்ப வேண்டிய முகவரி:

Waters of Life
P.O.Box 600 513
70305 Stuttgart
Germany

Internet: www.waters-of-life.net
Internet: www.waters-of-life.org
e-mail: info@waters-of-life.net

www.Waters-of-Life.net

Page last modified on July 31, 2012, at 11:15 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)