Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- John - 030 (Jesus leads his disciples to see the ready harvest)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Bengali -- Burmese -- Cebuano -- Chinese -- Dioula -- English -- Farsi? -- French -- Georgian -- Greek -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Kyrgyz -- Malayalam -- Peul -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Thai -- Turkish -- Twi -- Urdu -- Uyghur? -- Uzbek -- Vietnamese -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

யோவான் - வெளிச்சம் இருளில் ஒளிர்கிறது
யோவான் எழுதின கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 1 - தெய்வீக ஒளியின் பிரகாசம் (யோவான் 1:1 - 4:54)
இ - கிறிஸ்துவின் முதலாவது எருசலேம் பயணம் (யோவான் 2:13 - 4:54) -- கருப்பொருள் : எது உண்மையான தொழுகை?
4. சமாரியவில் இயேசு (யோவான் 4:1–42)

ஆ) ஆயத்தமாயிருக்கும் அறுவடையைக் காண இயேசு தம்முடைய சீஷர்களை வழிநடத்துகிறார் (யோவான் 4:27-38)


யோவான் 4:27-30
27 அத்தருணத்தில் அவருடைய சீஷர்கள் வந்து, அவர் ஸ்திரீயுடனே பேசுகிறதைப் பற்றி ஆச்சரியப்பட்டார்கள். ஆகிலும் என்ன தேடுகிறீரென்றாவது, ஏன் அவளுடனே பேசுகிறீரென்றாவது, ஒருவனும் கேட்கவில்லை. 28 அப்பொழுது அந்த ஸ்திரீ, தன் குடத்தை வைத்துவிட்டு, ஊருக்குள்ளே போய், ஜனங்களை நோக்கி: 29 நான் செய்த எல்லாவற்றையும் ஒரு மனுஷன் எனக்குச் சொன்னார்; அவரை வந்து பாருங்கள்; அவர் கிறிஸ்துதானோ என்றாள். 30 அப்பொழுது அவர்கள் ஊரிலிருந்து புறப்பட்டு அவரிடத்தில் வந்தார்கள்.

அந்த உரையாடல் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே தாங்கள் வாங்கிய உணவுடன் சீஷர்கள் கிராமத்திலிருந்து திரும்பி வந்தார்கள். ஒரு பாவமுள்ள, அதுவும் புறம்பாக்கப்பட்ட சமாரிய இனத்துப் பெண்ணுடன் இயேசு உரையாடுவதைக் கண்டு அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். அவர்கள் பரிசுத்த ஆவியா னவரின் பிரசன்னத்தை உணர்ந்த காரணத்தினால் யாரும் பேசத் துணியவில்லை. கிறிஸ்துவினால் நிகழ்த்தப்பட்ட தெய்வீக அற் புதத்தை அவர்கள் கண்டார்கள், ஏனெனில் கிறிஸ்துவைப் பார்ப்பதாலும் அவருடைய வார்த்தைகளைக் கேட்பதாலும் அந்தப் பெண்ணின் முகம் மறுரூபமடைந்திருந்தது. இரட்சகரை அறியும் அறிவு அவளை ஆட்சி செய்தது.

அந்தப் பெண் வெறும் குடத்தை கிணற்றருகில் விட்டுவிட்டு சென்றாள். இயேசு அவளிடம் கேட்ட தண்ணீரை அவள் அவருக்குக் கொடுக்கவில்லை. ஆனால் அவர் அவளுடைய பாவ மன்னிப்பின் தாகத்தைத் தீர்த்தார். அவள் பலருக்கு ஜீவ தண்ணீரைத் தரும் ஊற்றாக மாறினாள். அவள் கிராமத்திற்குள் ஓடி, மக்களோடு பேசி, கிறிஸ்துவை அவர்களுக்குக் காட்டினாள். ஒரு காலத்தில் கீழ்த்தரமான பேச்சின் ஊற்றாயிருந்த அவளு டைய வாய் இப்போது கிறிஸ்துவுக்குச் சாட்சி பகரும் தெளிந்த நீரூற்றாக மாறியது. அவர் எப்படி தன்னுடைய பாவங்களை வெளிப்படுத்தினார் என்பதைச் சொல்லி மக்களை அவள் இரட்சகரிடம் இழுத்தாள். இந்த அறிக்கையைக் கேட்ட கிராமத்து மக்கள் ஏதோ ஒரு வழக்கத்துக்கு மாறான நிகழ்ச்சி நடைபெற்றிருக்க வேண்டும் என்று யூகித்தார்கள். இறைவ னுடைய செயல் அந்தப் பெண்ணுடைய வாழ்வில் நடை பெற்றிருந்தது. அவளுடைய இரகசியத்தை அறிய ஏக்கமுடைய வர்களாக இயேசுவும் அவருடைய சீஷர்களும் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த கிணற்றை நோக்கி மக்கள் ஓடினார்கள்.

தன்னைப் பின்பற்றுகிறவர்களுடைய வாழ்க்கையில் கிறிஸ்து செயல்படும்போது என்ன நடக்கும் என்பதற்கு இது ஒரு மாதிரிப் படமாகக் காணப்படுகிறது. நாமும் நம்முடைய நண்பர்களிடமும் அயலகத்தாரிடமும் கிறிஸ்து நம்மை இரட்சிக்க வந்திருக்கிறார் என்று கூறுவோம். அப்போது பரிசுத்த ஆவியினால் உண்டு பண்ணப்படும் ஜீவ தண்ணீரைக் குறித்த விருப்பம் அவர்களிலும் உருவாகும். நீங்கள் பலருக்கு ஜீவ தண்ணீரின் ஊற்றாக மாறி யிருக்கிறீர்களா? அப்படியில்லையென்றால் நீங்கள் உங்கள் பாவங்களை இயேசுவிடம் அறிக்கை செய்யுங்கள், உங்கள் வாழ்க் கையை அவரிடம் ஒப்புக்கொடுங்கள், அப்பொழுது அவர் உங்களைச் சுத்திகரித்துப் பரிசுத்தப்படுத்தி, அநேகருக்கு ஆசீர் வாதமாக மாற்றுவார். இப்போது தன்னுடைய அயலகத் தாருக்குப் பிரசங்கம் செய்யும் இந்த முன்னாள் விபச்சாரியையும் அவர் அப்படித்தானே மாற்றினார்?

விண்ணப்பம்: கர்த்தராகிய இயேசுவே, நீர் என்னை ஆராய்ந்து அறிந்திருக்கிறதினால் நான் உமக்கு நன்றி செலுத்துகிறேன். நான் இந்த பாவமுள்ள சமாரியப் பெண்ணைக் காட்டிலும் நல்லவன்(ள்) அல்ல. என்னுடைய பாவங்களை மன்னியும். சத்தியத்தின் மீதான என்னுடைய தாகத்தைத் தீர்க்கும் உம்முடைய வரத்தை எனக்குத் தந்து, என்னை தூய்மைப்படுத்தும். பரலோக பிதாவைக் காணும்படி என்னுடைய கண்களைத் திறந்தருளும். நான் ஒரு பயனுள்ள நபராக மாறவும், உம்முடைய கிருபையின் பதிற்செயலாக என்னுடைய வாழக்கை ஆராதனையின் வெளிப்பாடாக இருக்கவும் உம்முடைய பரிசுத்த ஆவியினால் என் இருதயத்தை நிரப்பும். பலரை இரட்சித்து உம்மிடம் இழுத்துக்கொள்ளும். உம்மிடம் வருபவர்களை நீர் புறம்பே தள்ளுவதில்லையே.

கேள்வி:

  1. ஜீவ தண்ணீரினால் நாம் நிரப்பப்படுவது எப்படி?

www.Waters-of-Life.net

Page last modified on July 31, 2012, at 10:30 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)