Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- John - 026 (The Baptist testifies to Jesus)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Bengali -- Burmese -- Cebuano -- Chinese -- Dioula -- English -- Farsi? -- French -- Georgian -- Greek -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Kyrgyz -- Malayalam -- Peul -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Thai -- Turkish -- Twi -- Urdu -- Uyghur? -- Uzbek -- Vietnamese -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

யோவான் - வெளிச்சம் இருளில் ஒளிர்கிறது
யோவான் எழுதின கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 1 - தெய்வீக ஒளியின் பிரகாசம் (யோவான் 1:1 - 4:54)
இ - கிறிஸ்துவின் முதலாவது எருசலேம் பயணம் (யோவான் 2:13 - 4:54) -- கருப்பொருள் : எது உண்மையான தொழுகை?

3. மணவாளனாகிய இயேசுவுக்குச் சாட்சிகொடுக்கும் ஸ்நானகன் (யோவான் 3:22–36)


யோவான் 3:22-36
22 இவைகளுக்குப்பின்பு, இயேசுவும் அவருடைய சீஷரும் யூதேயா தேசத்திற்கு வந்தார்கள்; அங்கே அவர் அவர்களோடே சஞ்சரித்து, ஞானஸ்நானங் கொடுத்துவந்தார். 23 சாலிம் ஊருக்குச் சமீபமான அயினோன் என்னும் இடத்திலே தண்ணீர் மிகுதியாயிருந்தபடியினால், யோவானும் அங்கே ஞானஸ்நானங்கொடுத்துவந்தான்; ஜனங்கள் அவனிடத்தில் வந்து ஞானஸ்நானம் பெற்றார்கள். 24 அக்காலத்தில் யோவான் காவலில் வைக்கப்பட்டிருக்கவில்லை. 25 அப்பொழுது யோவானுடைய சீஷரில் சிலருக்கும் யூதருக்கும் சுத்திகரிப்பைக்குறித்து வாக்குவாதமுண்டாயிற்று. 26 அவர்கள் யோவானிடத்தில் வந்து: ரபீ, உம்முடனேகூட யோர்தானுக்கு அக்கரையில் ஒருவர் இருந்தாரே; அவரைக் குறித்து நீரும் சாட்சிகொடுத்தீரே, இதோ, அவர் ஞானஸ்நானங்கொடுக்கிறார், எல்லாரும் அவரிடத்தில் போகிறார்கள் என்றார்கள். 27 யோவான் பிரதியுத்தரமாக: பரலோகத்திலிருந்து ஒருவனுக்குக் கொடுக்கப்பட்டாலொழிய, அவன் ஒன்றையும் பெற்றுக்கொள்ளமாட்டான். 28 நான் கிறிஸ்துவல்ல, அவருக்கு முன்னாக அனுப்பப்பட்டவன் என்று நான் சொன்னதற்கு நீங்களே சாட்சிகள். 29 மணவாட்டியை உடையவனே மணவாளன்; மணவாளனுடைய தோழனோ, அருகே நின்று, அவருடைய சொல்லைக் கேட்கிறவனாய் மணவாளனுடைய சத்தத்தைக்குறித்து மிகவும் சந்தோஷப்படுகிறான்; இந்தச் சந்தோஷம் இப்பொழுது எனக்குச் சம்பூரணமாயிற்று. 30 அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டும். 31 உன்னதத்திலிருந்து வருகிறவர் எல்லாரிலும் மேலானவர்; பூமியிலிருந்துண்டானவன் பூமியின் தன்மையுள்ளவனாயிருந்து, பூமிக்கடுத்தவைகளைப் பேசுகிறான்; பரலோகத்திலிருந்து வருகிறவர் எல்லாரிலும் மேலானவர். 32 தாம் கண்டதையும் கேட்டதையும் சாட்சியாகச் சொல்லுகிறார்; அவருடைய சாட்சியை ஒருவனும் ஏற்றுக்கொள்ளுகிறதில்லை. 33 அவருடைய சாட்சியை ஏற்றுக்கொள்ளுகிறவன் தேவன் சத்தியமுள்ளவரென்று முத்திரைபோட்டு நிச்சயப்படுத்துகிறான். 34 தேவனால் அனுப்பப்பட்டவர் தேவனுடைய வார்த்தைகளைப் பேசுகிறார்; தேவன் அவருக்குத் தமது ஆவியை அளவில்லாமல் கொடுத்திருக்கிறார். 35 பிதாவானவர் குமாரனில் அன்பாயிருந்து எல்லாவற்றையும் அவர் கையில் ஒப்புக்கொடுத்திருக்கிறார். 36 குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நித்திய ஜீவனை உடையவனாயிருக்கிறான்; குமாரனை விசுவாசியாதவனோ ஜீவனைக் காண்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும் என்றான்.

பஸ்காப் பண்டிகைக்குப் பிறகு இயேசு எருசலேமைவிட்டுச் சென்று ஞானஸ்நானம் கொடுக்க ஆரம்பித்தார். மறுபிறப்புக்கு முன்பிருக்க வேண்டிய உடைந்த இருதயத்தைப் பற்றி சீஷர்கள் இப்போது அறிந்திருந்தார்கள். பாவ அறிக்கையில்லாமல் இரட்சிப்பு நடைபெறாது. ஞானஸ்நானத்தின் மூலமாக மனமுடைந்த பாவி இறைவனுடனான புதிய உடன்படிக்கைக்குள் நுழைவதற்கான தன்னுடைய ஏக்கத்தைத் தெரிவிக்கிறான் அதனால் பாவமன்னிப்புக்கென்ற ஞானஸ்நானம் உடைந்த இருதயத்தை அடையாளப்படுத்துகிறது.

யோவான் ஸ்நானகன் தன்னுடைய ஊழிய இடத்தை யோர்தான் பள்ளத்தாக்கின் வடக்கு முனையிலிருந்த ஆயினோனுக்கு மாற்றி யிருந்தார். அவர்கள் யோவான் ஸ்நானகனிடம் வந்து தங்களு டைய இருதயத்தை ஊற்றினார்கள்; அவரும் அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்து, இயேசுவைச் சந்திப்பதற்கு அவர்களை ஆயத்தப்படுத்தினார்.

பஸ்காப் பண்டிகைக்குப் பிறகு இயேசு நேரடியாக கலிலேயாவுக்குப் போகாமல், வேறு இடங்களில் மனந்திரும்பியவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்க ஆரம்பித்தார். அவருடைய ஊழியம் அதிக அதிகாரபூர்வமாயிருந்தபடியால் யோவானிடம் சென்றவர்களைக் காட்டிலும் பலர் இயேசுவிடம் வந்தார்கள். இதன் விளைவாக இரண்டு சாராருக்கும் இடையில் சர்ச்சை ஏற்பட்டது. இந்த இரண்டு தலைவர்களில் நம்முடைய பாவங்களைச் சுத்திகரிப்பதற்கு ஏற்றவர் யார் என்பதே பிரச்சனையாக இருந்தது. இவர்கள் இருவரில் இறைவனுக்கு மிகவும் நெருக்க மானவர் யார்? அவர்கள் தங்களுடைய வாழ்க்கையை முழுவதும் பரிசுத்தப்படுத்த நினைத்தபடியால் இது முக்கியமான கேள்வியாக இருந்தது. சகோதரனே உங்களுடைய முழு குணாதிசயமும் மாற்றப்படக்கூடிய வழியைக் குறித்து நீங்கள் எப்போதாவது சிந்தித்திருக்கிறீர்களா? உங்களை முழுவதும் சுத்திகரிக்க நீங்கள் போராடுகிறீர்களா அல்லது உங்களுடைய பாவத்தை முழுவதும் உங்களைவிட்டுத் தொலைத்துவிட தொடர்ந்து முயற்சிக்கிறீர்களா?

யோவான் ஸ்நானகன் மிகப்பெரிய சோதனையை வெற்றி கொண்டார். இயேசுவின் ஆச்சரியமான வெற்றியைப் பார்த்து அவர் பொறாமைகொள்ளவில்லை, தன்னுடைய ஊழியத்திற்குரிய எல்லையைப் புரிந்தகொண்டார். சாதாரண மனிதன் அப்படிப் பட்ட நற்கிரியையை தானாகச் செய்ய முடியாது. இறைவன் அவருக்கு வல்லமையையும், ஆசீர்வாதத்தையும், பலனையும் கொடுத்திருந்தால் மட்டுமே அவர் அதைச் செய்யக்கூடும் என்று தாழ்மையுடன் ஏற்றுக்கொண்டார். ஆனால் நாமோ நம்முடைய ஆவிக்குரிய அறிவு, பிரார்த்தனைகள் மற்றும் அழகிய சொற் பொழிவுகள் இவற்றைப் பற்றி பெருமையடித்துக் கொள்கிறோம். நீங்கள் ஒரு ஆவிக்குரிய வரத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டு மாயின், அது இறைவனிடமிருந்துதான் வர வேண்டும். இறைவன் விரும்புகிற எல்லாவற்றையும் செய்தால்கூட, நீங்கள் இன்னும் அடிமையாகவும் தகுதியற்றவராகவுமே இருக்கிறீர்கள். யோவான் ஸ்நானகன் தாழ்மையுள்ளவனாக இருந்தார், தன்னைப் பற்றி எண்ணவேண்டியதற்கு மிஞ்சி எண்ணவில்லை, இறைவனை மட்டுமே மகிமைப்படுத்தினார்.

தான் மேசியா அல்ல என்பதை ஸ்நானகன் மீண்டும் தன்னுடைய சீஷர்களுக்குச் சாட்சியாக அறிவித்தார். கிறிஸ்து எருசலேமுக்குள் வெற்றிவீரராக நுழைவார் என்று அவர் ஒருவேளை எதிர் பார்த்திருந்திருக்கலாம். ஆனால் அப்படி நடக்கவில்லை. அதற்குப் பதிலாக இயேசுவும் யோவானைப் போல ஞானஸ்நானம் கொடுக்க ஆரம்பித்தார். இதனால் ஸ்நானகன் குழப்பம டைந்தாலும், கீழ்ப்படிதலோடும் தாழ்மையோடும் நிலைத் திருந்தார். கிறிஸ்துவுக்கு முன்னோடியாக அவருக்கு வழியை ஆயத்தம் செய்யவேண்டும் என்று இறைவனால் தனக்குக் கொடுக் கப்பட்ட பணியில் தன்னை அடக்கிக்கொண்டார்.

யோவான் தனக்குக் கொடுக்கப்பட்ட வெளிப்படுத்தலுக்கு உண்மையுள்ளவராக நிலைத்திருந்தார். அவர் இயேசுவே மண வாளன் என்று சாட்சியிடுகிறார். மனந்திரும்புகிறவர்கள் மண வாட்டியாக இருக்கிறார்கள். இன்று ஆவியானவர் இந்த ஆவிக்குரிய ஐக்கியத்தை உருவாக்குகிறார். அதனால்தான் பவுல், நாம் கிறிஸ்துவினுடைய சரீரத்தின் அவயவங்களாயிருக்கிறோம். அவர் நமக்குத் தலையாயிருக்கிறார்; நாம் அவருடன் ஒன்றாயிருக் கிறோம் என்று கூறுகிறார். கிறிஸ்து இனி நமக்கு நியாயாதிபதி யல்ல, அவர் நம்முடைய இரட்சகரும் மணவாளனுமா யிருக்கிறார். திருமணத்தைக் குறித்த மகிழ்ச்சியான இந்த உருவகம் கிறிஸ்துவில் நமக்கு நம்பிக்கையிருப்பதைக் காட்டுகிறது.

ஸ்நானகன் தூரத்தில் நின்று, விசுவாசிகளின் வளர்ச்சியைப் பார்த்து மகிழ்ச்சியடைகிறார். ஆனால் அவர் இயேசுவின் சபையோடு நிற்காமல் அவருக்கு அருகில் நிற்கிறார். அவர் இயேசுவுக்கு உண்மையுள்ள நண்பன் என்று அறிக்கையிடுகிறார். அவர் வனாந்தரத்தில் இருந்தபோது, இயேசு நேரடியாக தலைநகரத்திற்குள் சென்று அற்புதங்களைச் செய்து நற்செய்தியைப் பிரசங்கித்தார். ஸ்நானகன் இராஜ்யத்தின் முன் னேற்றத்தைப் பார்த்து மகிழ்ச்சியடைந்தார். மணவாளனின் பேச்சும் மேன்மையும் அவருக்குப் பிரியமாயிருந்தது. கிறிஸ்துவின் வெற்றிச் செய்திகள் அவருக்கு பரலோக இசையாக ஒலித்தது. யோவானுடைய ஊழியத்தின் இறுதி நாட்களின் கரடுமுரடான தன்மையை கிறிஸ்துவின் மென்மை சரிப்படுத்தியது. அவர் ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்காளியைப் போல மகிழ்ச்சியடைந்தார்.

தன்னுடைய சீஷர்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்று கவலைப்படாத யோவான் மரணத்தைச் சந்திக்கவும் ஆயத்தமாயிருந்தார். விசுவாசிகள் வளரும்படியாக தான் குறை யவும் மறையவும் விரும்பினார்.

வாசகரே, யார் உங்களுடைய கூட்டங்களை நடத்துகிறார்? தலைமைத்துவத்துக்காக ஒருவரோடொருவர் போட்டியிடுகிறீர்களா அல்லது மற்றவர்களுக்கு விட்டுக் கொடுக்கிறீர்களா? கிறிஸ்து உங்களில் வளரும்படி நீங்கள் சிறுக ஆயத்தமாயிருக்கிறீர்களா? அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டும் என்று யோவான் ஸ்நாகனுடன் சேர்ந்து சொல்லுங்கள்.

கேள்வி:

  1. கிறிஸ்து மணவாளன் என்றால் என்ன பொருள்?

www.Waters-of-Life.net

Page last modified on July 31, 2012, at 10:16 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)