Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- John - 005 (The Baptist prepares the way of Christ)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Bengali -- Burmese -- Cebuano -- Chinese -- Dioula -- English -- Farsi? -- French -- Georgian -- Greek -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Kyrgyz -- Malayalam -- Peul -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Thai -- Turkish -- Twi -- Urdu -- Uyghur -- Uzbek -- Vietnamese -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

யோவான் - வெளிச்சம் இருளில் ஒளிர்கிறது
யோவான் எழுதின கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 1 - தெய்வீக ஒளியின் பிரகாசம் (யோவான் 1:1 - 4:54)
அ - இறைவனுடைய வார்த்தை இயேசுவில் மனுவுருவாதல் (யோவான் 1:1-18)

2. யோவான் ஸ்நானகன் கிறிஸ்துவுக்கு வழியை ஆயத்தப்படுத்துகிறார் (யோவான் 1:6-13)


யோவான் 1:6-8
6 தேவனால் அனுப்பப்பட்ட ஒரு மனுஷன் இருந்தான், அவன் பேர் யோவான். 7 அவன் தன்னால் எல்லாரும் விசுவாசிக்கும்படி அந்த ஒளியைக் குறித்துச் சாட்சிகொடுக்க சாட்சியாக வந்தான். 8 அவன் அந்த ஒளியல்ல, அந்த ஒளியைக்குறித்துச் சாட்சிகொடுக்க வந்தவனாயிருந்தான்.

தெய்வீக வெளிச்சத்திற்குள் வரும்படி மக்களை அழைக்க இறைவன் யோவான் ஸ்நானகனை இருண்ட உலகத்திற்குள் அனுப்பினார். இருளில்தான் பல பாவங்கள் செய்யப்படுகின்றது என்று எல்லாருக்கும் தெரியும். ஆனால் யாரெல்லாம் தங்களுடைய குற்றத்தை, மனந்திரும்பிய, உடைந்த இதயத்தோடு அறிக்கை செய்கிறார்களோ அவர்கள் ஒளியினிடத்திற்கு வந்திருக்கிறார்கள். நீங்கள் எப்படி? நீங்கள் ஒளியினிடத்தில் வந்திருக்கிறீர்களா? அல்லது இன்னும் இருளில் ஒளித்துக்கொண்டிருக்கிறீர்களா?

அடையாளமாக யோர்தான் நீரோட்டத்தின் அந்த ஞானஸ்நானம் மக்களுடைய இருதயத்தின் நிலையை யோவான் ஸ்நானகன் மக்களுக்கு விளக்கப்படுத்தினார். கடவுளுடைய சட்டத்தைப் பொறுத்தவரை அவர்கள் அனைவரும் தீயவராயிருக்கிறார்கள். அவர்கள் கர்த்தருடைய நாளில் அழியாமல் இருக்கும்படியாக அவர்களுக்கு மனந்திரும்புதலும் ஒரு அடிப்படையான மாற்றமும் தேவையாயிருக்கிறது. யோவான் ஸ்நானகனுடைய அழைப்பு பெருந்திரளான மக்களை அசைத்தது. வனாந்தரத்தில் வந்து தங்களை மனந்திரும்பும்படி அழைத்தவரிடத்தில் அவர்கள் விரைந்தோடினார்கள். அவர்கள் தங்கள் பாவங்களை வெளிப்படையாக அறிக்கையிட்டு, யோர்தான் நதியில் ஞானஸ்நானம் எடுத்துக்கொண்டார்கள். அவர்கள் தங்கள் பாவங்களிலிருந்து சுத்திகரிக்கப்படுவதற்கும், தங்களுடைய சுயநலம் மூழ்கிப்போவதற்கும் அடையாளமாகக் காணப்பட்டது.

யோவான் ஸ்நானகனைத் தெரிந்துகொண்டார். அவர் யோவானுக்கு அறிவூட்டி, மக்கள் தங்களை உணர்ந்து, மாற்றிக்கொண்டு, கிறிஸ்துவின் வருகைக்கு ஆயத்தப்படும்படி மக்களை அசைக்கும்படியான கட்டளையைக் கொடுத்தார். கர்த்தருடைய நாமத்தினால் வருகிறவரைப் பற்றி பழைய ஏற்பாட்டு மக்களுக்கு அதிகம் தெரியும். இருளில் நடக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் தேசத்தில் குடியிருக்கிறவர்கள் மேல் வெளிச்சம் பிரகாசித்தது (ஏசாயா 9:2) என்று தீர்க்கதரிசியாகிய ஏசாயா அவரைப் பற்றிச் சொன்னார். மேலும் அவர், எழும்பிப் பிரகாசி; உன் ஒளி வந்தது, கர்த்தருடைய மகிமை உன்மேல் வந்தது (ஏசாயா 60:1) என்று கர்த்தருடைய நாமத்தில் சொன்னார். இருளிலிருந்து ஒளியினிடத்திற்கு வருவது பழைய ஏற்பாட்டு மக்களுக்கு மட்டுமுரியதல்ல, எல்லா மக்களுக்குமுரியது என்று ஸ்நானகன் சொன்னார். இவ்வாறு ஸ்நானகனுடைய செய்தி முழு உலகத்தையும் உள்ளடக்கியதாக இருந்தது. அதனால் சின்ன ஆசியாவிலும் மத்தியதரைக் கடலைச் சுற்றியுள்ள எல்லாப் பகுதிகளிலிருந்தும் பலர் அவருடைய மரணத்திற்குப் பிறகு பல வருடங்களாக அவரைப் பின்பற்றினர்.

தான் ஒளியல்ல என்றும் அந்த ஒளியைக் குறித்து முன்னறிவிப்பவர் என்றும் அவர் கூறிய போதிலும் ஆயிரக்கணக்கானவர்கள் அவரைப் பின்பற்றினர். அவர் மக்களை தன்னிடம் வழி நடத்தாமல், கிறிஸ்துவிடம் வழிநடத்தினார். இது இறைவனுடைய உண்மைத் தூதுவர்களின் தெளிவான அடையாளம் ஆகும், அவர்கள் தங்களைச் சுற்றி மக்களைக் கட்டியமைக்காமல், கிறிஸ்துவைச் சுற்றிக் கட்டியமைப்பார்கள்.

யோவானுடைய சேவையின் நோக்கம் மனிந்திரும்புதலும் ஞானஸ்நானமுமல்ல, கிறிஸ்துவின் மீது மக்கள் வைக்கும் விசுவாசம். அவர் தன்னைக் கிறிஸ்து என்று அறிவிப்பார் என்ற மக்களின் எதிர்பார்ப்பை அவர் அறிந்திருந்தார். ஆனால் அவர் அந்தச் சோதனையில் விழுந்துவிடாமல் கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்தினார். வரப்போகிற கிறிஸ்துவே மக்களுக்குப் பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானம் கொடுப்பவர் என்று அவர் அறிந்திருந்தார். பாவமன்னிப்புக்கென்று ஞானஸ்நானம் பெற்றாலும் வெறும் உளவியல் ரீதியான மனந்திரும்புதல் மனிதர்களுக்கு போதுமானதல்ல என்றும் யோவான் அறிந்திருந்தார். மாறாக நம்முடைய உள்ளான மனிதனில் ஒரு முழுமையான மாற்றம் நிகழ வேண்டும் என்றும் அவர் அறிந்திருந்தார். இவ்வாறு மனிதர்களை மாற்றும் அதிகாரம் எந்தப் பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகளுக்கும் கொடுக்கப்படாததைப் போலவே யோவான் ஸ்நானகனுக்கும் கொடுக்கப்படவில்லை. இந்த சிறப்புரிமை படைப்பின் செயலைச் செய்யும் ஆதி வெளிச்சத்திற்கே கொடுக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துவின் நாமத்தை விசுவாசித்து, அவருடைய வெளிச்சத்திற்கு திறந்துகொடுக்கும் மக்களை உயிர்ப்பிக்கும் இந்த அதிகாரம் வாழ்வழிக்கும் வார்த்தையாகிய அவருக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த வழியில், விசுவாசம் மட்டுமே புதிய காலத்திற்குள் மக்களை நடத்திச்செல்லும் என்று அறிந்து யோவான் ஸ்நானகன் பெருந்திரளான மக்களை கிறிஸ்துவிலுள்ள விசுவாசத்திற்கு வழிநடத்தினார்.

பின்பற்றிய தீவிரமான மற்றும் கருத்தாழமுள்ள தத்துவஞானியாக இருந்தான். புதிய உடன்படிக்கையின் வெளிச்சத்தை மெய்யாக அனுபவிக்காமலேயே கிறிஸ்துவுக்காக அவன் சிறப்பாகப் பிரசங்கித்தான். அவன் தன்னை கிறிஸ்துவிடம் ஒப்படைத்தபோது, வெளிச்சம் அவனுடைய மனதில் நுழைந்தது, அவன் கர்த்தருக்குள் வெளிச்சமாகி, இருளில் கலங்கரை விளக்கமானான். அவன் பலருக்கு வெளிச்சத்தைக் கொடுத்தான் (அப். 18:2428).

விண்ணப்பம்: கர்த்தராகிய கிறிஸ்துவே, நீரே உலகத்தின் வெளிச்சமாகவும், பரிதாபத்துக்குரியவர்களின் நம்பிக்கையாகவும் இருக்கிறபடியால் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். நீர் எங்கள் இருதயத்திலிருந்த இருளை அகற்றி, எங்களுடைய பாவங்களை வெளிப்படுத்தி அவற்றை மன்னித்தீர். எங்களை வெளிச்சத்தின் பிள்ளைகளாக்கி, முடிவற்ற வாழ்வுக்காக விடுவித்தபடியால் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். உம்முடைய வெளிச்சத்தின் ஒளிக்கதிர்கள் எங்களுடைய நண்பர்களையும் உறவினர்களையும் சென்றடைந்து, அவர்களும் மெய்யான விசுவாசத்தையும் மனந்திரும்புதலையும் அனுபவித்து, உம்முடைய பெரிய வெளிச்சத்தில் நுழைய வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

கேள்வி:

  1. யோவான் ஸ்நானகனுடைய சேவையின் முக்கிய நோக்கங்கள் யாவை?

www.Waters-of-Life.net

Page last modified on July 31, 2012, at 08:42 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)