Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- John - 116 (Peter and John race to the tomb)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Bengali -- Burmese -- Cebuano -- Chinese -- Dioula? -- English -- Farsi? -- French -- Georgian -- Greek -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Kyrgyz -- Malayalam -- Peul -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Thai -- Turkish -- Twi -- Urdu -- Uyghur? -- Uzbek -- Vietnamese -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

யோவான் - வெளிச்சம் இருளில் ஒளிர்கிறது
யோவான் எழுதின கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 4 - ஒளி இருளை மேற்கொள்ளுகிறது (யோவான் 18:1 – 21:25)
ஆ - கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் மற்றும் தரிசனமாகுதல் (யோவான் 20:1 - 21:25)
1. பஸ்காவின் அதிகாலை நிகழ்ச்சிகள் (ஈஸ்டர்) (யோவான் 20:1-10)

ஆ) பேதுருவும், யோவானும் கல்லறையினிடத்திற்கு தீவிரித்து ஒடுதல் (யோவான் 20:3-10)


யோவான் 20:6-8
6 சீமோன்பேதுரு அவனுக்குப் பின்னே வந்து, கல்லறைக்குள்ளே பிரவேசித்து,7 சீலைகள் கிடக்கிறதையும், அவருடைய தலையில் சுற்றியிருந்த சீலை மற்றச் சீலைகளுடனே வைத்திராமல் தனியே ஒரு இடத்திலே சுருட்டி வைத்திருக்கிறதையும் கண்டான்.8 முந்திக் கல்லறையினிடத்திற்கு வந்த மற்றச் சீஷனும் அப்பொழுது உள்ளே பிரவேசித்து, கண்டு விசுவாசித்தான்.

பேதுருவின் வருகைக்காக யோவான் கல்லறைக்கு வெளியே காத்திருந்து நின்றான். மூத்த அப்போஸ்தலருக்கு கொடுக்கும் கனத்தின் அடையாளமாக இப்படிச் செய்தான். காலியான கல்லறையினுள் சென்ற முதல் அப்போஸ்தலர் பேதுருவாக இருக்க வேண்டும் என எண்ணினார். புரட்டிப் போடப்பட்டிருந்த கல்லை முதலாவதாக கண்டபோது வாலிபனாகிய யோவான் அதிர்ச்சியடைந்தான். கல்லறை திறந்திருந்தது, சரீரத்தைக் காணவில்லை. துணிகள் கவனமாக சுருட்டி வைக்கப்பட்டிருந்தது. எண்ணங்கள் அவருடைய மனதில் சுழன்று ஒடியது. என்ன நடந்திருக்கிறது என்பதை அறிந்து கொள்வதற்கான ஒளியை அவன் கர்த்தரிடம் கேட்டான்.

பேதுரு அங்கே வந்தவுடன், நேராக கல்லறைக்குள் பிரவேசித்தான். இயேசுவின் தலையைச் சுற்றியிருந்த துணி தனியாக சுருட்டி வைக்கப்பட்டிருந்ததை அவன் உணர்ந்து கொண்டான். அவருடைய சரீரம் திருடப்படவில்லை என்பதை இது காண்பிக்கிறது. இயேசுவினுடைய வெளியேறுதல் ஒழுங்குடன், அமைதியாக நடந்திருக்கிறது.

பேதுரு ஓர் ஆய்வாளரைப் போல உள்ளே நுழைந்தார். ஆனால் வெளிப்படையான அடையாளங்களின் அர்த்தத்தை கிரகித்துக் கொள்ள முடியவில்லை. நம்பிக்கையுடன் காணப்பட்டார். பேதுருவின் அழைப்பைக் கேட்டு, யோவானும் கல்லறையினுள் வந்தார். அவரது ஆத்துமா ஒளியூட்டப்பட்டது. கிறிஸ்துவின் உயிர்ததெழுதலை நம்பத் துவங்கியது. உயிருடன் எழுந்த பின்பு கிறிஸ்துவிடம் ஏற்பட்ட சந்திப்பு அவருக்கு விசுவாசத்தை உருவாக்கவில்லை. ஆனால் காலியான கல்லறை, சீலைத்துணிகள், சுருட்டி வைக்கப்பட்டிருந்த துணிகள் அனைத்தும் அவனை உண்மைக்கு, விசுவாசத்திற்கு நேராக நடத்தியது.

யோவான் 20:9-10
9 அவர் மரித்தோரிலிருந்து எழுந்திருக்கவேண்டும் என்கிற வேதவாக்கியத்தை அவர்கள் இன்னும் அறியாதிருந்தார்கள்.10 பின்பு அந்தச் சீஷர்கள் தங்களுடைய இடத்திற்குத் திரும்பிப்போனார்கள்.

தத்துவ ஞானிகள், இறைவாக்கினர் மற்ற தலைவர்கள் போல அவர் கல்லறையில் தங்கியிருக்கவில்லை. துணிகள் தனியாக சுருட்டி வைக்கப்பட்டிருக்க, அவர் மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்தார். பரிசுத்தமானவர் பாவமற்றவராக இருக்கிறார். மரணம் அவர் மீது ஆளுகை செய்ய முடியவில்லை. இறைவனின் அன்பு ஒரு போதும் தோற்பதில்லை.

கல்லறையினுள் இயேசுவின் சரீரம் சிதைந்து போனது என்று கிறிஸ்துவின் எதிரிகள் உரிமை பாராட்ட முடியாது. ஏனெனில் கல்லறை வெறுமையாய் இருந்தது. கிறிஸ்து ஒடிப்போகவில்லை, அல்லது அவர் கடத்தப்படவும் இல்லை. ஏனெனில் அவர் சரீரத்தை வைத்த இடம் ஓர் ஒழுங்கு முறைக்கு படமாக இருந்தது. அது யோவானுக்கு சாட்சி பகர்ந்தது. மாட்டுத் தொழுவத்தின் முன்னனையில் கந்தைத் துணிகளில் அவரது வாழ்ககைப் பயணம் ஆரம்பித்தது. இப்போது அவர் கல்லறைத் துணிகளில் விடை பெறுகிறார். எனவே உயிர்த்தெழுதலுடன் அவருடைய புதிய தோற்றம் பரலோகத்தில் ஆரம்பித்தது. இருப்பினும் அவர் மனித சுபாவத்துடன் தொடர்ந்து இருந்தார்.

யோவான் திறக்கப்பட்ட கல்லறையில் இருந்து திரும்பி வந்த போது, இந்த சிந்தனைகள் அவரது மனதில் தொடர்ந்து ஒடிக் கொண்டிருந்தது. இந்த அனுபவத்தைக் குறித்து அவர் பெருமை பாராட்டவில்லை. இறைவனின் குமாரனுடைய வெற்றியை உயிர்த்தெழுதலின் மூலம் முதலாவது உணர்ந்தவர் இவர். ஆனாலும் அதிக நேரம் கழித்துத் தான் இந்த அற்புதத்தை அவர் விசுவாசித்தார் என்று அறிக்கையிடுகிறார். வேத வாக்கியங்களில் இவைகள் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அவனது கண்கள் ஏசாயா 53-ல் உள்ள இறைவனின் தாசனுடைய மரணம் மற்றும் வெற்றியைப் புரிந்து கொள்ள முடியாதபடி மறைக்கப்பட்டிருந்தது. இதைப் பற்றிய தாவீதின் தீர்க்கதரிசனங்களை அவர் கிரகித்துக் கொள்ளவில்லை. (லூக்கா 24:44-48; அப்போஸ்தலர் 2:25-32; சங்கீதம் 16:8-11)

பஸ்காப் பண்டிகையின் சமயத்தில் காலை நேரத்தில் இரண்டு சீஷர்கள் வீட்டிற்குத் திரும்பினார்கள். போராட்டம் இருந்தாலும் நம்பிக்கை இருந்தது. நம்பிக்கை இருந்தாலும் கேள்விகள் இருந்தது. கல்லறையை விட்டு வெளியேறிய இயேசுவிடம் விண்ணப்பம் பண்ணினார்கள். காரியங்கள் எதையும் அறியாதிருந்தார்கள்.

விண்ணப்பம்: கர்த்தராகிய இயேசுவே, நாங்கள் உமக்கு இதயப் பூர்வமான நன்றியை செலுத்துகிறோம். உம்முடைய சீஷர்களின் இருதயத்தில் நீரே வெற்றியாளராக இருக்கிறீர். உமது உயிர்த்தெழுதலில் ஒரு நம்பிக்கையை அவர்களில் உருவாக்குகிறீர். நித்திய வாழ்வைக் குறித்த பெரிய நம்பிக்கையை நீர் எங்களுக்கு தந்திருக்கிறீர். நாங்கள் உம்மை ஆராதிக்கிறோம். நீர் நித்திய இறைவனாக இருக்கிறீர். உமது கிருபையால் நாங்கள் அழியாமையை தரித்துக் கொள்கிறோம். தங்கள் பாவங்களில் மரிக்கும் எங்கள் நண்பர்களை இரட்சியும். உமது பலியின் மீது விசுவாசம் வைத்து நித்திய வாழ்வைப் பெற்றிட அருள் புரியும்.

கேள்வி:

  1. காலியான கல்லறையினுள் யோவான் இருந்த போது என்ன நம்பிக்கையை பெற்றுக் கொண்டான்?

www.Waters-of-Life.net

Page last modified on August 29, 2012, at 10:27 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)