Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- John - 115 (Mary Magdalene at the graveside; Peter and John race to the tomb)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Bengali -- Burmese -- Cebuano -- Chinese -- Dioula? -- English -- Farsi? -- French -- Georgian -- Greek -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Kyrgyz -- Malayalam -- Peul -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Thai -- Turkish -- Twi -- Urdu -- Uyghur? -- Uzbek -- Vietnamese -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

யோவான் - வெளிச்சம் இருளில் ஒளிர்கிறது
யோவான் எழுதின கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 4 - ஒளி இருளை மேற்கொள்ளுகிறது (யோவான் 18:1 – 21:25)
ஆ - கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் மற்றும் தரிசனமாகுதல் (யோவான் 20:1 - 21:25)
1. பஸ்காவின் அதிகாலை நிகழ்ச்சிகள் (ஈஸ்டர்) (யோவான் 20:1-10)

அ) கல்லறையின் அருகே மகதலேனா மரியாள். (யோவான் 20:1-2)


யோவான் 20:1-2
1 வாரத்தின் முதல்நாள் காலையில், அதிக இருட்டோடே, மகதலேனா மரியாள் கல்லறையினிடத்திற்கு வந்து கல்லறையை அடைத்திருந்த கல் எடுத்துப்போட்டிருக்கக்கண்டாள்.2 உடனே அவள் ஓடி, சீமோன் பேதுருவினிடத்திலும் இயேசுவுக்கு அன்பாயிருந்த மற்றச் சீஷனிடத்திலும் போய்: கர்த்தரைக் கல்லறையிலிருந்து எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள், அவரை வைத்த இடம் எங்களுக்குத் தெரியவில்லை என்றாள்.

இயேசுவுக்கு வெள்ளிக்கிழமையில் நடந்த நிகழ்வுகளினால் , அவரைப் பின்பற்றிய சீடர்களும், பெண்களும் சீர்குலைந்து போயிருந்தார்கள். தூரத்திலிருந்து பெண்கள் இயேசு கல்லறையில் வைக்கப்பட்டதை கவனித்துக் கொண்டிருந்தார்கள். பெண்களும், சீடர்களும் வீட்டிற்கு விரைந்து சென்றிருந்தார்கள். ஏனெனில் ஒய்வு நாளை மீறி விட்டார்கள் என்று யாரும் குற்றம் சாட்டி விடக்கூடாது. ஒய்வு நாள் என்பது வெள்ளிக்கிழமை மாலை ஆறாம் மணியில் இருந்து ஆரம்பிக்கிறது.

அந்த ஒய்வு நாளானது பஸ்கா பண்டிகையின் நாளாகவும் இருந்தது. எவருக்கும் கல்லறையினிடத்திற்குப் போக துணிச்சல் இல்லை. இறைவன் தங்களுடைய நாட்டுடன் ஏற்படுத்திய உடன்படிக்கை, ஒப்புரவாகுதலை பிரதிபலிக்கும் வண்ணமாக ஆடுகளை பலியிட்டு, பெருந்திரளான மக்கள் மகிழ்ச்சியுடன் இருந்தார்கள். இயேசுவை விசுவாசித்தவர்கள் பயத்துடன், கண்ணீருடன் கூடியிருந்தார்கள். ஆண்டவர் அடக்கம்பண்ணப்பட்டபோது அவர்களது நம்பிக்கையும் அடக்கம் பண்ணப்பட்டது. பெண்கள் வாசனைப் பொருட்களை வாங்க நகர வாசலுக்கு வெளியே, அந்த ஒய்வு நாளின் மாலையில் செல்லவில்லை. சரீரத்தின் மீது பூசுவதற்கான பொருட்களையும் அவர்கள் வாங்க செல்லவில்லை. ஞாயிற்றுக் கிழமையின் அதிகாலைக்காக அவர்கள் காத்துக் கொண்டிருந்தார்கள். மகதலேனா கல்லறைக்கு வந்ததை நற்செய்தியாளர் விசேஷமாகக் குறிப்பிடுகிறார். “நாங்கள்” என்ற வார்த்தையின் மூலம் அங்கே வேறே பெண்களும் இருந்தார்கள் என்ற குறிப்பு காணப்படுகிறது. யோவானின் தாயாகிய சலோமே என்பவளும், மற்ற பெண்களும் இணைந்து கண்ணீருடன், தைலத்தைப் பூசுவதற்காக ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் சென்றார்கள்.

அவர்கள் அதிகாலையில் இருட்டோடே வந்தார்கள். கல்லறை முத்திரை போடப்பட்டிருக்கும் என்பதால் அவர்கள் மனச்சோர்வுற்று வேதனையுடன் இருந்தார்கள். அவர்களது நம்பிக்கை அசைக்கப்பட்டிருந்தது. முற்றிலும் நம்பிக்கை இழந்து காணப்பட்டார்கள். உயிர்த்தெழுதலின் ஒளி அவர்கள் மீது இன்னும் பிரகாசிக்கவில்லை. அவர்கள் மனங்களில் நித்திய வாழ்வின் ஒளி எழும்பவில்லை.

அவர்கள் கல்லறையை மூடியிருக்கும் பெருங்கல்ûலைக் குறித்து திகைப்புற்றார்கள். கல்லறையின் வாசலைவிட்டு, அந்தக் கல்லை யார் நமக்காக புரட்டித் தள்ளுவார்? என்று எண்ணிக் கொண்டிருந்தார்கள். திறக்கப்பட்ட கல்லறை அந்த நாளின் முதல் அற்புதமாய் காணப்பட்டது. கிறிஸ்து நமது இருதயங்களை நிறுத்துப் பார்க்கிறார். நமது கவலை மற்றும் அவநம்பிக்கையை அவர் காண்கிறார். எல்லா கற்களையும் புரட்டிப் போட கிறிஸ்து வல்லமை உள்ளவராக இருக்கிறார். இறைவனை நம்புகிறவன், அவரிடமிருந்து உதவியைப் பெறுகிறான். விசுவாசம் சிறந்த எதிர்காலத்தைக் காண்கிறது.

தேவ தூதர்கள் தோன்றியதைப் பற்றி யோவான் எதுவும் குறிப்பிடவில்லை. மகதலேனா மரியாள், மற்ற பெண்களை விட வேகமாக வந்து, கல்லறையினுள் பிரவேசித்தாள். அவள் அங்கே ஒருவரையும் காணவில்லை. பயந்து போய் அவள் சீஷர்களிடம் செல்ல விரைந்தாள். அப்போஸ்தலர் குழுவிற்கு தலைமையாய் இருப்பவர் முதலில் இதைக் குறித்து அறிய வேண்டுமென விரும்பினாள். மகதலேனா மரியாள் பேதுருவையும், மற்ற சீஷர்களையும் கண்டபோது, இவ்விதம் கூறினான், “கர்த்தருடைய சரீரத்தைக் காணவில்லை”. யாரோ எடுத்துச் சென்றிருக்கிறார்கள், அவரை வைத்த இடம் தெரியவில்லையே. இது அவர்களின் அறியாமை என்னும் தவறைக் காண்பிக்கிறது. அவளும், சீஷர்களும் ஆவிக்குரிய குருட்டு நிலையில் இருந்தார்கள். ஏனெனில் யாரோ சரீரத்தை திருடிவிட்டார்கள் என்று அவர்கள் நினைத்தார்கள். ஆனால் அப்படி நிகழவில்லை. கர்த்தர் மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்தார். அவர் ஆண்டவராய் இருக்கிறார்.


ஆ)பேதுருவும், யோவானும் கல்லறையினிடத்திற்கு தீவிரித்து ஒடுதல் (யோவான்20:3-10)


யோவான் 20:3-5
3 அப்பொழுது பேதுருவும் மற்றச் சீஷனும் கல்லறையினிடத்திற்குப் போகும்படி புறப்பட்டு, இருவரும் ஒருமித்து ஓடினார்கள்.4 பேதுருவைப்பார்க்கிலும் மற்றச் சீஷன் துரிதமாய் ஓடி, முந்திக் கல்லறையினிடத்தில் வந்து,5 அதற்குள்ளே குனிந்து பார்த்து, சீலைகள் கிடக்கிறதைக் கண்டான்; ஆனாலும் அவன் உள்ளே போகவில்லை.

இது அன்பிற்கான ஒரு பந்தய ஒட்டமாக இருந்தது. இவர்கள் எப்போதுமே இயேசுவினருகே முதன்மையாக இருக்க விரும்பினார்கள். இளமையான யோவான் பின்பு முதுமையான பேதுரு அவனை பிடிக்க முடியாமல் மூச்சிறைக்க ஒடி வந்தார். இருவருமே உளவாளிகளைக் குறித்த பயம், காவலாளிகள் எதைக் குறித்தும் எண்ணவில்லை. அவர்கள் நகர வாசலைக் கடந்து சென்றார்கள். யோவான் கல்லறையை அடைந்த போது, உள்ளே பிரவேசிக்கவில்லை. மிகுந்த பயபக்தியுடன் அங்கேயே நின்று விட்டான். கல்லறையின் குகைக்குள் அவன் பார்த்த போது, வெள்ளைத் துணிகள் சுருட்டி வைக்கப்பட்டிருந்தது. அது பட்டுப் பூச்சி வெளியேறிய கூடு போல காணப்பட்டது. அந்த கல்லறைத் துணிகள் எடுக்கப்படவில்லை. சரீரம் வைக்கப்பட்ட இடத்திலேயே அது இருந்தது. உயிர்த்தெழுதலுடன் தொடர்புடைய மூன்றாவது அற்புதமாக இது இருந்தது. கிறிஸ்து அத் துணிகளை கிழிக்கவில்லை. ஆனால் அதனுள்ளிருந்து வெளியே வந்தார். கல்லைப் புரட்டிப்போட இயேசுவுக்கு உதவி செய்யும்படி தூதர்கள் வரவில்லை. பெண்களுக்காகவும், சீஷர்களுக்காகவும் வந்தார்கள். கர்த்தர் அவருடைய வழியில் அந்தக் கல்லறையை விட்டு கடந்து சென்றிருந்தார்.

விண்ணப்பம்: கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்ததற்காக நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். நீர் எல்லா தீமைகளையும் மேற்கொண்டீர், இறைவனுக்கு வழியை திறந்து கொடுத்தீர். மரணப் பள்ளத்தாக்கில் நீர் எங்களுடன் இருக்கிறீர். எங்களை கைவிடாமல் இருக்கிறீர். உமது ஜீவன் எங்களுடையதாய் இருக்கிறது. எங்களது பலவீனத்தை உமது வல்லமை பரிபூரணமாக்கியது. நாங்கள் உமக்கு முன்பு பணிகிறோம், உம்மை நேசிக்கிறோம். ஏனெனில் நீர் எல்லா விசுவாசிகளுக்கும் வெற்றியுள்ள நம்பிக்கையை கொடுக்கிறீர்.

கேள்வி:

  1. இயேசு உயிர்த்தெழுந்ததற்கான மூன்று ஆதாரங்கள் என்ன?

www.Waters-of-Life.net

Page last modified on August 29, 2012, at 10:26 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)