Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- John - 117 (Jesus appears to Mary Magdalene)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Bengali -- Burmese -- Cebuano -- Chinese -- Dioula? -- English -- Farsi? -- French -- Georgian -- Greek -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Kyrgyz -- Malayalam -- Peul -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Thai -- Turkish -- Twi -- Urdu -- Uyghur? -- Uzbek -- Vietnamese -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

யோவான் - வெளிச்சம் இருளில் ஒளிர்கிறது
யோவான் எழுதின கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 4 - ஒளி இருளை மேற்கொள்ளுகிறது (யோவான் 18:1 – 21:25)
ஆ - கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் மற்றும் தரிசனமாகுதல் (யோவான் 20:1 - 21:25)
1. பஸ்காவின் அதிகாலை நிகழ்ச்சிகள் (ஈஸ்டர்) (யோவான் 20:1-10)

இ) இயேசு மகதலேனா மரியாளுக்கு காட்சியளிக்கிறார் (யோவான் 20:11-18)


யோவான் 20:11-13.
11 மரியாள் கல்லறையினருகே வெளியே நின்று அழுதுகொண்டிருந்தாள்; அப்படி அழுதுகொண்டிருக்கையில் அவள் குனிந்து கல்லறைக்குள்ளே பார்த்து,12 இயேசுவின் சரீரம் வைக்கப்பட்டிருந்த இடத்திலே வெள்ளுடை தரித்தவர்களாய் இரண்டு தூதர்கள், தலைமாட்டில் ஒருவனும் கால்மாட்டில் ஒருவனுமாக, உட்கார்ந்திருக்கிறதைக் கண்டாள்.13 அவர்கள் அவளை நோக்கி: ஸ்திரீயே, ஏன் அழுகிறாய் என்றார்கள். அதற்கு அவள்: என் ஆண்டவரை எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள், அவரை வைத்த இடம் எனக்குத் தெரியவில்லை என்றாள்.

கல்லறை காலியாக இருப்பதை அறிந்து கொண்ட, அந்த இரண்டு சீஷர்களும் திரும்பிப் போனார்கள். அங்கேயே தங்கியிருப்பதில் எந்தப் பயனும் இல்லை.

இருப்பினும் மகதலேனா மரியாள் கல்லறை காலியாக இருப்பதை சீஷர்களிடம் சொன்ன பின்பு மறுபடியும் கல்லறைக்குத் திரும்பினாள் அந்த இருவரும் வீட்டிற்குச் சென்றாலும், அவள் அங்கேயே இருந்தாள். சரீரம் காணவில்லை என்ற உண்மையில் அவள் திருப்தியாயிருக்க முடியவில்லை. அவள் அவரைப் பற்றிக் கொண்டாள். ஏனெனில் அவரே நம்பிக்கையும், அவளுக்குப் பெலனுமாய் இருந்தார். சரீரத்தைக் காணவில்லை என்றவுடன் அவளது நம்பிக்கை உருகிப் போயிற்று. ஆகவே அவள் மனங்கசந்து அழுதாள்.

அவளது ஆழ்ந்த துயரத்தின் மத்தியில் இயேசு இரண்டு தேவதூதர்களை அனுப்பினார். மற்ற பெண்களும் தேவ தூதர்களைக் கண்டார்கள். தேவ தூதர்கள் வெண் வஸ்திரம் தரித்து காலியான கல்லறையின் கல்லின் மீது உட்கார்ந்திருந்தார்கள். ஆனால் அவர்கள் அவளுக்கு ஆறுதல் தர முடியவில்லை. ஏனெனில் இயேசுவை பார்ப்பது மட்டுமே அவளை ஆறுதல்படுத்தும். அவளது இருதயம் கூப்பிட்டது. “என் கர்த்தாவே நீர் எங்கேயிருக்கிறீர்?”.

இந்த அமைதியான அழைப்பு நம்மை நோக்கி வருகிறது. நாம் எதை விரும்புகிறோம்? நாம் விரும்புவதை அடைய ஏன் நாம் வாஞ்சிக்கிறோம்? நமது குறிக்கோள்கள் என்ன? இயேசுவைப் பார்ப்பதைத் தவிர வேறொன்றும் தேவையில்லை என்று மகதலேனாவைப் போல சொல்லுவோமா? அவருடைய வருகைக்காக உங்கள் இருதயம் கதறுகிறதா?

யோவான் 20:14-16
14 இவைகளைச் சொல்லிப் பின்னாகத் திரும்பி, இயேசு நிற்கிறதைக் கண்டாள்; ஆனாலும் அவரை இயேசு என்று அறியாதிருந்தாள்.15 இயேசு அவளைப் பார்த்து: ஸ்திரீயே, ஏன் அழுகிறாய், யாரைத் தேடுகிறாய் என்றார். அவள், அவரைத் தோட்டக்காரனென்று எண்ணி: ஐயா, நீர் அவரை எடுத்துக்கொண்டு போனதுண்டானால், அவரை வைத்த இடத்தை எனக்குச் சொல்லும், நான் போய் அவரை எடுத்துக்கொள்ளுவேன் என்றாள்.16 இயேசு அவளை நோக்கி: மரியாளே என்றார். அவள் திரும்பிப் பார்த்து: ரபூனி என்றாள்; அதற்குப் போதகரே என்று அர்த்தமாம்.

இயேசு அவளது கூப்பிடுதலுக்கு பதிலளித்தார். மற்றவர்கள் காலியான கல்லறையைக் கண்டு சென்றுவிட்டார்கள். தேவதூதர்களின் சத்தத்தைக் கேட்டார்கள். மகதலேனா மரியாளோ ஒரு தரிசனத்திற்காக ஏங்கினாள். அவள் தனியாக இருந்தாள். இயேசு அவள் முன்னே தோன்றினார். ஒரு ஹலோ கூட சொல்லாமல் சாதாரண மனிதனைப் போல அவள் முன்பு நின்றார்.

அவள் மிகுந்த வேதனையுடன் இருந்தாள். இயேசுவின் சத்தத்தையோ அல்லது தேவ தூதர்களின் சத்தத்தையோ அவள் புரிந்து கொள்ள முடியவில்லை. இயேசுவின் வார்த்தைகளைக் கேட்பதைவிட, அவரைப் பார்ப்பதையே அவள் விரும்பினாள். அவருடைய பிரசன்னத்தை உணரத் தவறுகிறது. அவரது நல் வார்த்தைகளை கேட்கத் தவறுகிறது. படைத்தவராகிய இறைவனை அநேகர் தேடுகிறார்கள். இருப்பினும் அவரை கண்டடைய முடியவில்லை. அவர்கள் தேடுகிற மேய்ப்பனை விட தாங்கள் தேடுவதையே நேசிக்கிறார்கள்.

ஆனால் மரியாளின் அன்பை இயேசு அறிந்திருந்தார். தனது இரக்கமுள்ள வார்த்தைகள் மூலம் அவளது துக்கத்தினால் ஏற்பட்ட தடைகளை உடைத்தார். அவளை அவர் பெயர் சொல்லி அழைத்தார். மனிதனை விட தான் மேலானவர் என்பதை வெளிப்படுத்தினார். அவர் தோட்டக்காரன் அல்ல. அவர் அனைத்தையும் அறிந்தவர், ஞானமுள்ளவர், அவரே கர்த்தர். தனது ஆடுகளை பெயர் சொல்லி அழைக்கிற, நித்திய வாழ்வைத் தருகிற நல்ல மேய்ப்பனைப் போல அவர் மரியாளை அழைத்தார். இயேசுவை நேசிப்பவன் அவரது அன்பை அனுபவிக்கிறான். கர்த்தர் அவனை பெயர் சொல்லி அழைக்கும் போது பாவ மன்னிப்பை பெற்றுக் கொள்கிறான். பரிசுத்த ஆவியானவரின் ஆறுதலைப் பெறுகிறான்.

இயேசு இப்போது உன்னையும் பெயர் சொல்லி அழைக்கிறார். நீ அவருடைய சத்தத்தைக் கேட்கிறாயா? உனது எல்லா சந்தேகங்கள், பாவங்களை விட்டு விட்டு அவரிடம் வருவாயா?

மரியாள் ஒரு வார்த்தையில் பதில் பேசினாள். “எஜமானே” மரியாள் பயன்படுத்திய ரபூனி என்ற வார்த்தையின் அர்த்தம், எல்லாம் அறிந்தவர் மற்றும் சர்வவல்லமையுள்ளவர் என்பதாகும். அவரது பள்ளியில் கற்றுக்கொள்ளும் பாக்கியம் அவளுக்கு கிடைத்தது.அவளுடைய அறிவை அவர் அவளுக்குத் தருகிறார். பெலம், பாதுகாப்பு, நித்திய வாழ்வைத் தருகிறார். அவளது பதில் காத்திருக்கும் திருச்சபை எடுத்துக் கொள்ளப்படும் போது இருக்கும் நிலையை பிரதிபலிக்கிறது. மிக நீண்ட எதிர்ப்பார்ப்பிற்குப் பின் மேகங்கள் மீது வரும் கர்த்தரை திருச்சபை காணும். தன்னைத் தாழ்த்தி அவரை ஆராதிக்கும். அல்லேலூயா என்று சொல்லி அவரைத் துதிக்கும்.

விண்ணப்பம்: கர்த்தராகிய இயேசுவே மரியாளுடைய வேண்டுதலுக்கு பதிலளித்தீர், அவளுக்கு காட்சியளித்தீர். நாங்கள் உம்மை வணங்குகிறோம். உமது பிரசன்னத்தினால் நீர் அவளை ஆறுதல்படுத்தினீர். உமது வார்த்தை உயிருள்ளதாய் இருக்கிறது. உமது வார்த்தைகளைப் பெற்றுக் கொள்ளும்படி எங்கள் காதுகள் மற்றும் இருதயங்களைத் திறந்தருளும். உம் மீது மகிழ்ச்சியுடன் நம்பிக்கை கொள்ள எங்களுக்கு கீழ்ப்படிதலைத் தாரும்.

கேள்வி:

  1. இயேசு மரியாளை பெயர் சொல்லி அழைத்து, தன்னை அவளுக்கு வெளிப்படுத்தும் வரை ஏன் அவள் கர்த்தர் இயேசுவின் சரீரத்தை தேடுவதை நிறுத்தவில்லை?

www.Waters-of-Life.net

Page last modified on August 29, 2012, at 10:29 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)