Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- John - 022 (People lean towards Jesus; Need for a new birth)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Bengali -- Burmese -- Cebuano -- Chinese -- Dioula -- English -- Farsi? -- French -- Georgian -- Greek -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Kyrgyz -- Malayalam -- Peul -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Thai -- Turkish -- Twi -- Urdu -- Uyghur? -- Uzbek -- Vietnamese -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

யோவான் - வெளிச்சம் இருளில் ஒளிர்கிறது
யோவான் எழுதின கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 1 - தெய்வீக ஒளியின் பிரகாசம் (யோவான் 1:1 - 4:54)
இ - கிறிஸ்துவின் முதலாவது எருசலேம் பயணம் (யோவான் 2:13 - 4:54) -- கருப்பொருள் : எது உண்மையான தொழுகை?
2. இயேசு நிக்கோதேமுவோடு பேசுகிறார் (யோவான் 2:23 – 3:21)

அ) மக்கள் இயேசுவைச் சார்ந்துகொள்ளுதல் (யோவான் 2:23-25)


யோவான் 2:23-25
பஸ்காபண்டிகையிலே அவர் எருசலேமிலிருக்கையில், அவர் செய்த அற்புதங்களை அநேகர் கண்டு, அவருடைய நாமத்தில் விசுவாசம் வைத்தார்கள். 24 அப்படியிருந்தும், இயேசு எல்லாரையும் அறிந்திருந்தபடியால், அவர்களை நம்பி இணங்கவில்லை. 25 மனுஷருள்ளத்திலிருப்பதை அவர் அறிந்திருந்தபடியால், மனுஷரைக்குறித்து ஒருவரும் அவருக்குச் சாட்சி கொடுக்கவேண்டியதாயிருக்கவில்லை.

மக்கள் தங்களுடைய மூதாதையர்கள் எகிப்தைவிட்டு புறப்பட்டு வந்தபோது அவர் களைப் பாதுகாத்த பஸ்கா ஆட்டுக்குட்டியை நினைத்துக் கொண்டு, தாங்கள் பலியிட்ட ஆட்டுக்குட்டியைப் பகிர்ந்து உண்டார்கள்.

இறைவனால் ஏற்படுத்தப்பட்ட ஆட்டுக்குட்டியாகிய இயேசு எருசலேமுக்கு வந்து, அநேக அற்புதங்களைச் செய்து தன் னுடைய அன்பையும் வல்லமையையும் காண்பித்தார். அதனால் மக்கள் கூட்டம் அவரைக் கவனித்தது, அவரைப் பற்றி பலர் பேசத் தொடங்கினார்: அவர் ஒரு தீர்க்கதரிசியா, அல்லது முன் னோடியான எலியாவா, அல்லது ஒருவேளை மேசியாவாக இருப் பாரோ? என்றெல்லாம் முணுமுணுத்துக்கொண்டார்கள். பலர் அவரிடம் ஈர்ப்புண்டு அவர் இறைவனிடமிருந்து வந்தவர் என்று விசுவாசித்தார்கள்.

இயேசு அவர்களுடைய இருதயத்தைப் பார்த்தார், ஆனால் அவர்களில் யாரையும் தன்னுடைய சீஷனாகச் சேர்த்துக் கொள்ளவில்லை. அவர்கள் அவருடைய தெய்வீகத் தன்மையை இன்னும் புரிந்துகொள்ளவில்லை, இன்னும் உலகப்பிரகார மாகவே சிந்தித்துக்கொண்டிருந்தார்கள். அவர்களுடைய சிந்தனையில் ரோமர்களுடைய ஆட்சியிலிருந்து விடுதலை பெறுவது, சரியான வேலை கிடைப்பது, வசதியான எதிர் காலத்தைப் பெற்றுக்கொள்வது போன்ற காரியங்களே காணப் பட்டது. இயேசு எல்லா மனிதர்களையும் அறிந்திருந்தார்; எந்த இருதயமும் அவருடைய கண்களுக்கு மறைந்திருக்கவில்லை. யாருமே இறைவனை உண்மையாகத் தேடவில்லை. அவர்கள் உண்மையில் இறைவனைத் தேடியிருந்தால், அவர்கள் தங்க ளுடைய பாவங்களை அறிக்கைசெய்து மனந்திரும்பி யோர் தானில் ஞானஸ்நானம் பெற்றிருப்பார்கள்.

கிறிஸ்து உங்கள் இருதயத்தையும், சிந்தனைகளையும், விண்ணப் பங்களையும், பாவங்களையும் அறிந்திருக்கிறார். உங்களுடைய சிந்தனைகளையும் அவைகள் எங்கிருந்து வருகிறது என்பதையும் அவர் அறிந்திருக்கிறார். நீங்கள் ஒரு ஒழுக்கமான நீதியுள்ள வாழ்க்கையை வாழ விரும்புகிறீர்கள் என்று அவர் அறிவார். உங்கள் பெருமை எப்போது அசைக்கப்படும்? உங்கள் சுய மரியா தையிலிருந்து நீங்கள் எப்போது திரும்பி பரிசுத்த ஆவியினால் நிரம்புவீர்கள்?


ஆ) மறுபிறப்பின் தேவை (யோவான் 3:1-13)


யோவான் 3:1-3
1 யூதருக்குள்ளே அதிகாரியான நிக்கொதேமு என்னப்பட்ட பரிசேயன் ஒருவன் இருந்தான். 2 அவன் இராக்காலத்திலே இயேசுவினிடத்தில் வந்து: ரபீ, நீர் தேவனிடத்திலிருந்து வந்த போதகர் என்று அறிந்திருக்கிறோம், ஏனெனில் ஒருவனும் தன்னுடனே தேவன் இராவிட்டால் நீர் செய்கிற இப்படிப்பட்ட அற்புதங்களைச் செய்யமாட்டான் என்றான். 3 இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.

அந்தக் கூட்டத்திலிருந்து நிக்கோதேமு என்பவர் தோன்றினார். அவர் பக்தியுள்ளவரும், சமுதாயத்தில் முக்கியமானவரும் ஆலோசனைச் சங்கத்திலுள்ள எழுபதுபேரில் ஒருவருமாவார். இறைவனுடைய வல்லமை கிறிஸ்துவில் செயல்படுவதை அவர் அறிந்துகொண்டார். ஒருவேளை அவர் இந்தப் புதிய தீர்க்கதரிசிக்கும் யூத சபைக்குமிடையில் ஒரு பாலத்தைக் கட்ட விரும்பியிருக்கலாம். அதே வேளையில் அவர் பிரதான ஆசாரியருக்கும் பொதுமக்களுக்கும் பயந்திருந்தார். அவர் இயேசுவைக் குறித்து நிச்சயமற்றவராக இருந்த படியால் அவருடன் சேருவதற்கு முன்பாக யாருக்கும் தெரியாமல், இரகசியமாக இருட்டில் அவரைக் காண வந்தார்.

போதகரே என்ற வார்த்தையின் மூலமாக, நிக்கோதேமுவும் பொதுவாக இயேசுவைப் பற்றி மக்கள் நடுவில் நிலவிய அதே கருத்தைக் கொண்டிருந்தார் என்பதை அறியலாம். இயேசு தன்னைப் பின்பற்றும் சிலருடன் நடமாடி வேதாகமத்தைப் போதித்து வந்தபடியால் மக்கள் அவரைப் போதகர் என்றே நினைத்தார்கள். இயேசுவின் அற்புதங்கள் அவர் இறைவனிடமிருந்து வந்தவர் என்பதை உறுதிசெய்கிறது என்பதை நிக்கோதேமு ஏற்றுக்கொண்டார். இறைவன் உம்முடன் இருக்கிறார், உம்மைத் தாங்குகிறார். நீர் மேசியாவாக இருக்கலாமோ? என்று அவர் அறிக்கை யிட்டார். இது ஒரு மறைமுகமான அறிக்கை.

"இயேசு நிக்கோதேமுவின் கேள்விக்குப் பதிலளித்தார். ஆனால் அவருடைய கேள்வியின் அடிப்படையில் அல்ல. இயேசு நிக்கோ தேமுவின் இருதயத்தையும், அவருடைய பாவத்தையும், நீதியின் மேல் அவருக்கிருந்த ஏக்கத்தையும் கண்டார். அவருடைய ஆவிக்குரிய குருட்டுத்தன்மையை அவருக்குக் காட்டியபிறகுதான் இயேசு அவருக்கு எந்த உதவியும் செய்யக்கூடும். நிக்கோதேமு பக்தியுள்ளவராக இருந்தபோதிலும், அவர் கடவுளை அறியவில்லை. இயேசு அவருடன் வெளிப்படையாகப் பேசி, எந்த மனிதனும் தன்னுடைய சொந்த முயற்சியினால் நிச்சயமாக கடவுளை அறிய முடியாது; அவனுக்கு பரலோக ஆவியின் மறுபிறப்புத் தேவை என்று கூறினார்.

இது மனிதனுடைய தர்க்க முறையை மட்டும் அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்படும் இறையியல் படிப்புகளையும் பிடிவாதமான கொள்கைகளையும் பற்றி இயேசு கூறும் நியாயத்தீர்ப்பாயிருக்கிறது. ஏனென்றால் கடவுளை அறிகிற அறிவு அறிவுபூர்வமான விரிவுரைகளினால் அல்ல, மறுபிறப்பினாலேயே வருகிறது. ஒரு வானொலிப் பெட்டியில் நீங்கள் எத்தனை பொத்தான் களைத் திருப்பினாலும் எந்த படத்தையும் பார்க்க முடியாது. படம் பார்க்க வேண்டுமெனில் உங்களுக்குத் தேவையானது தொலைக் காட்சிப் பெட்டி, வானொலிப் பெட்டியல்ல. அவ்விதமாகவே சுபா வப்படியான மனிதனும் எவ்வளவு பக்தியுள்ளவனாகவும் செயல் வீரனாகவும் இருந்தாலும் அவனுடைய உணர்வுகளினாலேயோ அல்லது சிந்தனைகளினாலேயோ கடவுளை அறிந்தகொள்ள முடியாது. ஆவிக்குரிய உணர்வடைவதற்கு ஒரு புரட்சி தேவைப்படுகிறது, அதுதான் மறுபிறப்பு அல்லது புதிய படைப்பு.

யோவான் 3:4-5
4 அதற்கு நிக்கொதேமு: ஒரு மனுஷன் முதிர்வயதாயிருக்கையில் எப்படிப் பிறப்பான்? அவன் தன் தாயின் கர்ப்பத்தில் இரண்டாந்தரம் பிரவேசித்துப் பிறக்கக்கூடுமோ என்றான். 5 இயேசு பிரதியுத்தரமாக: ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான் எனறு மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்.

இயேசுவின் பதிலின் மூலம் தனக்கு கடவுளைப் பற்றித் தெரியாது என்று அறிந்தகொண்ட நிக்கோதேமு குழப்பமடைந்தார். அவர் இரண்டாவது பிறப்பைப் பற்றி இதுவரை கேள்விப்பட்டதில்லை. அதைப் பற்றி கேள்விப்பட்டபோது, ஒரு முதிய மனிதன் எப்படி தாயின் கருவில் மீண்டும் சென்று பிறக்க முடியும் என்று சிந்தித்தார். இதுவும் அவருடைய அறிவின்மையையே காட்டுகிறது. பிதாவாகிய கடவுள் பரிசுத்த ஆவியின் மூலம் தனக்குப் பிள்ளைகளைப் பெற்றெடுக்க முடியும் என்பதை அவர் அறியவில்லை.

இயேசு நிக்கோதேமுவை நேசித்தார்; இறைவனுடைய இராஜ்யத் திற்கான வழியை தான் அறியவில்லை என்று நிக்கோதேமுவை அறிக்கை செய்ய வைத்த பிறகு, நானே சத்தியம் என்ற உண்மையை இயேசு வலியுறுத்துகிறார். ஒரே நிபந்தனையாகிய இரண்டாம் பிறப்பின்றி நாம் இறைவனுடைய இராஜ்யத்திற்குள் நுழைய முடியாது என்று நாம் விசுவாசிக்க வேண்டும்.

இரண்டாம் பிறப்பு என்பது என்ன? அது பிறப்பு, ஒரு கருத்து அல்ல. அது மனிதனுடைய முயற்சியினால் கிடைப்பதுமில்லை, ஏனெனில் எந்த மனிதனும் தன்னுடைய முயற்சியினால் பிறப்ப தில்லை. கடவுளே பெற்றோராகவும் உயிரளிப்பவராகவும் இருக்கிறார். இது கிருபையினால் கிடைக்கும் ஆவிக்குரிய பிறப்பு, இது குணாதிசயத்தில் ஏற்படும் ஒரு மறுமலர்ச்சியோ அல்லது சமூக ஒழுக்கமோ அல்ல. எல்லா மனிதருமே பாவத்தில் பிறந்து, அந்நிலையிலிருந்து முன்னேற நம்பிக்கையற்றிருக்கிறார்கள். ஆவிக்குரிய பிறப்பில் கடவுளுடைய ஜீவன் மனிதகுலத்திற்குள் வருகிறது.

இது எவ்வாறு நடக்கிறது? இது ஆவியினாலும் ஜலத்தினாலும் நடைபெறுகிறது என்று இயேசு குறிப்பிடுகிறார். தண்ணீர் என்பது யோவானுடைய ஞானஸ்நானத்தையும் கல்யாணத்தில் வைக்கப்பட்டிருந்த சுத்திகரிப்பின் தொட்டிகளையும் குறிக்கிறது. பழைய உடன்படிக்கைக்குரியவர்களுக்கு தண்ணீர் பாவத்தி லிருந்து சுத்திகரிக்கப்படுவதற்கு அடையாளமாக பயன்படுத்தப் படுகிறது என்பது தெரியும். அதாவது இங்கே இயேசு, ஏன் நீ யோவான் ஸ்நானனிடம் சென்று உன்னுடைய பாவங்களை அறிக்கை செய்து ஞானஸ்நானம் பெறக்கூடாது? என்று கேட்பதைப் போல் உள்ளது. இன்னொரு இடத்தில் இயேசு, ஒருவன் என்னைப் பின்பற்றிவர விரும்பினால், அவன் தன்னைத் தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றி வரக்கடவன் என்று கூறுகிறார். சகோதரனே உம்முடைய பாவத்தை அறிக்கையிட்டு, அதற்குரிய கடவுளின் நியாயத்தீர்ப்பை ஏற்றுக்கொள்ளும். நீர் சீட்கெட்டு, அழிந்து கொண்டிருக்கிறீர்.

இயேசு மனந்திரும்புதலுக்கும் பாவமன்னிப்புக்குமுரிய தண்ணீர் ஞானஸ்நானத்தைக் குறித்து மட்டும் கருத்துள்ளவராயிராமல், மனந்திரும்புகிறவனுக்குப் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தைக் கொடுத்து, உடைந்துபோன இருதயத்தில் புதிய வாழ்வைப் படைக்கிறார். இயேசுவின் சிலுவைக்குப் பிறகு நம்முடைய மனசாட்சியைச் சுத்திகரிப்பது அவருடைய விலையேறப்பெற்ற இரத்தம் என்பது நமக்குத் தெரியும். மனந்திரும்புகிறவனைச் சுத்திகரிக்கும் இந்தச் செயல் பரிசுத்த ஆவியினால் செய்யப் படுகிறது. பரிசுத்த ஆவியானவரின் செயலுக்கு ஒரு மனிதன் கீழ்ப்படியும்போது, அவர் அவனை நித்திய ஜீவனால் நிரப்பி, அதன் கனிகளையும் குணாதிசயங்களையும் அவனுடைய வாழ்வில் வெளிப்படுத்தி, கிறிஸ்துவின் வழிநடத்துதலின்படி அவனை ஒரு நல்ல மனிதனாக்குகிறார். இந்த மாற்றங்கள் உடனடியாக நடைபெற்றுவிடுவிதில்லை, இதற்கு காலமெடுக்கும். எவ்வாறு ஒரு கரு கருவறையில் வளருவதற்குக் காலம் தேவைப் படுகிறதோ, இதுவும் அப்படியே. இவ்விதமாகத்தான் ஒரு மனிதனில் இரண்டாம் பிறப்பு நடைபெறுகிறது. அப்போது அவன் உண்மையில் தான் மறுபடியும் பிறந்தவன் என்றும் இறைவன் தன்னுடைய தகப்பன் என்றும் கிறிஸ்துவில் தனக்கு நித்திய ஜீவன் உண்டென்றும் நிச்சயமாக அறிந்துகொள்கிறான்.

இறைவனுடைய இராஜ்யம் என்ற இந்தக் கருத்தையே இயேசு தன்னுடைய பிரசங்கத்தின் நோக்கமாகக் கொண்டிருந்தார். அப்படியானால் இறைவனுடைய இராஜ்யம் என்பது எது? அது ஒரு அரசியல் இயக்கமல்ல, அல்லது ஒரு பொருளாதார கோட்பாடல்ல, இது மறுபடியும் பிறந்தவர்கள் பிதாவோடும் குமாரனோடும் பரிசுத்த ஆவியோடும் கொண்டுள்ள ஐக்கியம். இந்த ஆசீர்வதிக்கப்பட்ட ஆவியானவர் அவர்கள் மீது வரு கிறார், அவர்கள் தங்களை கிறிஸ்துவுக்குக் கொடுக்கிறார்கள், அவரையே கர்த்தராகவும் இராஜாவாகவும் ஏற்றுக்கொண்டு அவ ருக்கே கீழ்ப்படிகிறார்கள்.

விண்ணப்பம்: கர்த்தராகிய இயேசுவே, கிருபையினால் மட்டும் உண்டான என்னுடைய மறுபிறப்புக்காக உமக்கு நன்றி. நீர் என்னுடைய கண்களைத் திறந்தீர். நான் உம்முடைய அன்பில் நிலைத்திருக்கச் செய்யும். உம்மை உண்மையாகத் தேடுபவர்களின் கண்களைத் திறந்து, அவர்கள் தங்கள் பாவங்களை அறிந்து அறிக்கையிட்டு, உம்முடைய பரிசுத்த ஆவியின் வல்லமையினால் புதுப்பிக்கப்பட்டு, சிந்தப்பட்ட உம்முடைய இரத்தத்தைச் சார்ந்திருந்து, உம்மோடுள்ள நித்திய ஐக்கியத்துக்குள் நுழைய உதவிசெய்யும்.

கேள்வி:

  1. நிக்கோதேமுவின் பக்திக்கும் கிறிஸ்துவின் நோக்கங்களுக்குமிடையிலான வித்தியாசம் என்ன?

www.Waters-of-Life.net

Page last modified on July 31, 2012, at 10:12 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)