Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Romans - 078 (Paul’s List of the Names of the Saints in the Church of Rome)
This page in: -- Afrikaans -- Arabic -- Armenian -- Azeri -- Bengali -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- French -- Georgian -- Greek? -- Hausa -- Hebrew -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Malayalam -- Polish -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish? -- TAMIL -- Telugu -- Turkish -- Urdu? -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

ரோமர் - கர்த்தரே நம்முடைய நீதி
ரோமருக்கு பவுல் எழுதின நிரூபத்திலிருந்து வேதபாடங்கள்
பகுதி -3 துணைப்பகுதி - ரோம சபையில் உள்ள தலைவர்களுக்கு பவுலின் குணாதிசயங்களைக் குறித்த சிறப்பு அறிக்கைகள் (ரோமர்15:14 – 16:27)

4. ரோம் சபையில் பவுல் அறிந்திருந்த பரிசுத்தவான்களின் பெயர்பட்டியல் (ரோமர் 16:1-9)


ரோமர் 16:1-9
1 கெங்கிரேயா ஊர் சபைக்கு ஊழியக்காரியாகிய நம்முடைய சகோதரி பெபேயாளை நீங்கள் கர்த்தருக்குள் பரிசுத்தவான்களுக்கேற்றபடி ஏற்றுக்கொண்டு, 2 எந்தக் காரியத்தில் உங்கள் உதவி அவளுக்குத் தேவையாயிருக்கிறதோ அதிலே நீங்கள் அவளுக்கு உதவிசெய்யவேண்டுமென்று அவளை உங்களிடத்தில் ஒப்புவிக்கிறேன்; அவள் அநேகருக்கும் எனக்குங்கூட ஆதரவாயிருந்தவள். 3 கிறிஸ்து இயேசுவுக்குள் என் உடன் வேலையாட்களாகிய பிரிஸ்கில்லாளையும் ஆக்கில்லாவையும் வாழ்த்துங்கள். 4 அவர்கள் என் பிராணனுக்காகத் தங்கள் கழுத்தைக் கொடுத்தவர்கள்; அவர்களைப்பற்றி நான் மாத்திரமல்ல, புறஜாதியாரில் உண்டான சபையாரெல்லாரும் நன்றியறிதலுள்ளவர்களாயிருக்கிறார்கள். 5 அவர்களுடைய வீட்டிலே கூடிவருகிற சபையையும் வாழ்த்துங்கள். அகாயாவிலே கிறிஸ்துவுக்கு முதற்பலனாகிய என் பிரியமான எப்பனெத்தை வாழ்த்துங்கள். 6 எங்களுக்காக மரியாளை மிகவும் பிரயாசப்பட்ட வாழ்த்துங்கள். 7 அப்போஸ்தலருக்குள் பெயர்பெற்றவர்களும் எனக்கு முந்திக் கிறிஸ்துவுக்குள்ளானவர்களும் என் இனத்தாரும் என்னுடனேகூடக் காவலில் கட்டுண்டவர்களுமாயிருக்கிற அன்றோனீக்கையும் யூனியாவையும் வாழ்த்துங்கள். 8 கர்த்தருக்குள் எனக்குப் பிரியமான அம்பிலியாவை வாழ்த்துங்கள். 9 கிறிஸ்துவுக்குள் நம்மோடே உடன்வேலையாளாகிய உர்பானையும், என் பிரியமான ஸ்தாக்கியையும் வாழ்த்துங்கள்.

தனது நிரூபத்தில் பவுல் பின்வரும் காரியங்களை விளக்குகிறான்.

முதலாவது: கிறிஸ்துவின் மீதான விசுவாசத்தின் அடிப்படை கொள்கைகள்.
இரண்டாவது: இறைவனின் தெரிந்துகொள்ளுதல்.
மூன்றாவது: விசுவாசிகளின் நடத்தை.

கொள்கைகளை மட்டும் பவுல் பேசாமல், தனது நிரூபத்தின் முடிவில் சபையில் தான் அறிந்திருந்தவர்களின் பெயர்களை குறிப்பிடுகிறான். சத்தியத்தைக் குறித்த அவனது போதனைக்கு அவர்கள் தான் நடைமுறை ஆதாரம் என்று அறிவித்தான். அவனுடைய வருக்காக அவர்களை ஆயத்தப்படுத்தினான். புறவினத்து அப்போஸ்தலன் ரோமில் ஓர் அந்நியனாக இல்லை. அவர்கள் அனைவரும் கிறிஸ்துவில் நிலைத்திருந்தார்கள். ரோம அரசின் தலைநகரில் பரிசுத்த ஆவியின் ஆலயத்தில் உயிருள்ள கற்களாக இருந்தார்கள்.

சிறப்பான ஒன்றாக இருக்கிறது. கிறிஸ்துவுக்குள் நமது சகோதரி என்று அழைத்தான். சபையின் பணிக்கென்று தன்னை அர்ப்பணித்த வெற்றியுள்ள கிறிஸ்தவளாக பெபேயாள் இருந்தாள். கெங்கிரேயா சபையில் அவள் ஊழியக்காரியாக இருந்தாள். இது கிரேக்கத்தின் கிழக்கு துறைமுகமாகிய கொரிந்துவைச் சேர்ந்த பகுதி ஆகும். அவள் நீதித்துறையில் தேர்ந்தவளாக காணப்பட்டாள். சட்டம் சார்ந்த காரியங்களில் குடியுரிமை பெறுவதில் மக்களுக்கு உதவி செய்பவளாக, இருந்தாள். பவுலுக்கும், அவனுடைய கூட்டாளிகளுக்கும், அவர்களது பயணங்களில் உதவி செய்தாள். ரோமிலும் அவர்களுக்கு உதவ ஆயத்தமாகினாள். பவுல் ரோமக் கிறிஸ்தவர்களிடம், எல்லாவிதத்திலும் அவளுடைய தேவைகளை சந்தித்து, அவளை வரவேற்கச் சொன்னான். ரோமிற்கு பவுலின் நிரூபத்தை கொண்டுபோனவள் இந்த பெபேயாள் தான் என்று பொதுவாக நம்பப்படுகிறது. மத்திய கிழக்குப்பகுதி கிறிஸ்தவர்களுக்கு நன்கு அறியப்பட்டவளாக பெபேயாள் இருந்தாள்.

பவுல் இந்தப் பெயரைக் குறிப்பிட்டபின்பு, பிரிசில்லாள் மற்றும் அவளது கணவன் ஆக்கில்லா பெயரைக் குறிப்பிடுகிறான். எபேசுவில் அவர்கள் பவுலுக்கு தங்குமிடம் ஏற்பாடு செய்து, அவனது தேவைகள் சந்திக்கப்பட வேலையும் கொடுத்தவர்கள். (அப்போஸ்தலர் 18:2-26). சிறந்த பிரசங்கியான அப்பொல்லோவிற்கு பவுல் இங்கு தான் நற்செய்தியை தெளிவாகக் கற்றுக்கொடுத்தான். பவுல் முதலாவது பெண்ணின் பெயரைக் குறிப்பிட்டு, பின்பு அவளது கணவனைக் குறிப்பிடுகிறான். சிறிய ஆசியா விசுவாசிகள் தங்களை தியாகம் செய்து அன்புடன் பணிசெய்த இந்த தம்பதியருக்கு நன்றி செலுத்த வேண்டும். பின்பு இந்த தம்பதி ரோமிற்கு பயணம் செய்திருக்க வேண்டும். இவர்களின் விருந்தோம்பலில் அங்கு உள்ள சபை வளர்ந்தது. அவர்கள் வீட்டில் கூடிய சபைக்கும் பவுல் வாழ்த்து கூறினான். இறைவனுடைய கிருபையைக் குறித்த அவனது போதனைக்கு இவர்களை சாட்சியாகக் கருதினான்.

பவுலால் நேசிக்கப்பட்டவனாக எப்பனெத்து வாழ்த்தப்படுகிறான். ஆசியாவில் அவன் தான் முதல் விசுவாசி. விசுவாசிகள் அவனை உயர்வாக எண்ணினார்கள். பிற்பாடு அவன் ரோமிற்கு பயணம் செய்து, அங்கும் இயேசுவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றினான்.

பிற்பாடு உண்மை மற்றும் பொறுமை மிக்க மரியாளை பவுல் குறிப்பிடுகிறான். இவள் கிரேக்கம் மற்றும் அனடோலியாவில் பவுலுக்கும், அவனது உடன் வேலையாட்களுக்கும் உதவிசெய்தவளாக இருந்திருக்க வேண்டும். பவுல் அவளது கிறிஸ்துவைப் பின்பற்றுவோருக்கான தூய்மையான, தொடர்ச்சியான பணியை பவுல் பாராட்டுகிறான்.

பின்பு பவுல் பென்யமீன் கோத்திரத்து யூத மார்க்கத்து விசுவாசிகளான அன்றோனீக்கு மற்றும் யூலியாவை குறிப்பிடுகிறார். பவுலும் பென்யமீன் கோத்திரத்தை சேர்ந்தவன். இவர்கள் ரோமில் சத்தியத்திற்காக சாட்சி பகர்ந்த யாக்கோபின் புத்திரர் ஆவார்கள். இவர்கள் பவுலுடன் சிறைக் கைதிகளாக இருந்து கிறிஸ்துவுக்காக பாடுப்பட்டவர்கள், பவுலுக்கு முன்பு விசுவாசிகளாகி, எருசலேமின் சபையில் ஆரம்ப கிறிஸ்தவர்கள் மத்தியில் சிறப்பானவர்களாக இருந்தார்கள். மற்ற அப்போஸ்தலர்களுடனும் நட்புடன் இருந்தார்கள்.

இப்போது பவுல் பரிசுத்தவான்கள் பட்டியலில் மூன்று வேறுபட்ட பெயர்களைக் குறிப்பிடுகிறான். அம்பிலியா, உர்பான், ஸ்தாக்கி. இவர்கள் அடிமைகளாக இருந்தவர்கள். கர்த்தருக்குள் பிரியமானவன் என்று அம்பிலியாவைக் குறிப்பிடுகிறான். அவமதிக்கப்பட்ட ஒருவன், துன்புறுத்தப்பட்ட ஒருவன் கிறிஸ்துவின் ஆவிக்குரிய சரீரத்தில் மகிமையுடன் இணைக்கப்பட்டிருந்தான். பவுல் குறிப்பிடும் இன்னொருவன் சபையில் நேசிக்கப்பட்ட ஒரு வேலைக்காரனாக இருந்தவன் ஆவான். உர்பான் என்பவன் ரோமாபுரியைச் சேர்ந்த மதிப்புமிக்க ஒருவனாக இருந்தான். பவுலின் ஊழியத்தின் உடன் ஊழியனாக நீண்டகாலம் பணி செய்தவன் ஆவான். ரோமில் உள்ள அனைத்து சபைகளுக்கும் உர்பான் நன்கு அறியப்பட்டவனாக இருந்தான்.

ரோமில் உள்ள சபையில் ஆரம்பத்திலிருந்தே சுதந்திரவாளிகளும், அடிமைகளும் கிறிஸ்துவுக்குள் ஆவிக்குரிய ஐக்கியத்தில் இருந்ததை நாம் அறிவது அவசியம். பரிசுத்த ஆவியானவர் இன மற்றும் சமூக வேறுபாடுகளுக்கு முக்கியத்துவம் தருபவர் அல்ல. ஆண், பெண், சுதந்திரவாளி, அடிமை, பணக்காரன், ஏழை, யூதன், புறவினத்தான் என்று எந்த வித்தியாசமும் காட்டுவது கிடையாது. கிறிஸ்துவுக்குள்ளான ஆவிக்குரிய ஐக்கியத்தில் அவர்கள் அனைவரும் சமம்.

விண்ணப்பம்: பரலோகில் உள்ள எங்கள் பிதாவே, நீர் கிறிஸ்து இயேசுவுக்குள், பரிசுத்த ஆவியின் நடத்துதலினால் ரோமில் வீட்டு சபைகளை உருவாக்கினீர். நாங்கள் உம்மை துதிக்கிறோம். ஆண், பெண், சுதந்திரவாளி, அடிமை, பணக்காரன், ஏழை, யூதன் மற்றும் புறவினத்தான் என்று அனைவரையும் உள்ளடக்கிய சபைகளாக இருந்ததற்காக நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டு, ஆவிக்குரிய ஐக்கியத்தில் இருந்தார்கள்.

கேள்வி:

  1. ரோமில் உள்ள சபை அங்கத்தினர்களின் பெயர்களில் இருந்து நாம் கற்றுக்கொள்வது என்ன?

www.Waters-of-Life.net

Page last modified on August 11, 2021, at 08:01 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)