Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Romans - 077 (Paul’s Expectations in his Journeys)
This page in: -- Afrikaans -- Arabic -- Armenian -- Azeri -- Bengali -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- French -- Georgian -- Greek? -- Hausa -- Hebrew -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Malayalam -- Polish -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish? -- TAMIL -- Telugu -- Turkish -- Urdu? -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

ரோமர் - கர்த்தரே நம்முடைய நீதி
ரோமருக்கு பவுல் எழுதின நிரூபத்திலிருந்து வேதபாடங்கள்
பகுதி -3 துணைப்பகுதி - ரோம சபையில் உள்ள தலைவர்களுக்கு பவுலின் குணாதிசயங்களைக் குறித்த சிறப்பு அறிக்கைகள் (ரோமர்15:14 – 16:27)

3. பவுலின் பயணங்களில் அவனுக்கிருந்த எதிர்பார்ப்புகள் (ரோமர் 15: 22-33)


ரோமர் 15:22-33
22 உங்களிடத்தில் வருகிறதற்கு இதினாலே அநேகந்தரம் தடைபட்டேன். 23 இப்பொழுது இந்தத் திசைகளிலே எனக்கு இடமில்லாதபடியினாலும், உங்களிடத்தில் வரும்படி அநேக வருஷமாய் எனக்கு மிகுந்த விருப்பம் உண்டாயிருக்கிறபடியினாலும், 24 நான் ஸ்பானியா தேசத்திற்குப் பிரயாணம்பண்ணுகையில் உங்களிடத்தில் வந்து, உங்களைக் கண்டுகொள்ளவும், உங்களிடத்தில் சற்றுத் திருப்தியடைந்த பின்பு, அவ்விடத்திற்கு உங்களால் வழிவிட்டனுப்பப்படவும், எனக்குச் சமயங் கிடைக்குமென்று நம்பியிருக்கிறேன். 25 இப்பொழுதோ பரிசுத்தவான்களுக்கு உதவிசெய்யுங்காரியமாக நான் எருசலேமுக்குப் பிரயாணம்பண்ண எத்தனமாயிருக்கிறேன். 26 மக்கெதோனியாவிலும் அகாயாவிலுமுள்ளவர்கள் எருசலேமிலுள்ள பரிசுத்தவான்களுக்குள்ளே இருக்கிற தரித்திரருக்காகச் சில பொருள்சகாயம் செய்ய விருப்பங்கொண்டிருக்கிறார்கள்; 27 இப்படிச்செய்வது நல்லதென்று எண்ணினார்கள்; இப்படிச் செய்கிறதற்கு அவர்கள் கடனாளிகளாயும் இருக்கிறார்கள். எப்படியென்றால், புறஜாதியார் அவர்களுடைய ஞானநன்மைகளில் பங்குபெற்றிருக்க, சரீரநன்மைகளால் அவர்களுக்கு உதவிசெய்ய இவர்கள் கடனாளிகளாயிருக்கிறார்களே. 28 இந்தக் காரியத்தை நான் நிறைவேற்றி, இந்தப் பலனை அவர்கள் கையிலே பத்திரமாய் ஒப்புவித்தபின்பு, உங்கள் ஊர் வழியாய் ஸ்பானியாவுக்குப் போவேன். 29 நான் உங்களிடத்தில் வரும்போது கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தின் சம்பூரணமான ஆசீர்வாதத்தோடே வருவேனென்று அறிந்திருக்கிறேன். 30 மேலும் சகோதரரே, தேவசித்தத்தினாலே நான் சந்தோஷத்துடனே உங்களிடத்தில் வந்து உங்களோடு இளைப்பாறும்படியாக, 31 யூதேயாவிலிருக்கிற அவிசுவாசிகளுக்கு நான் தப்புவிக்கப்படும்படிக்கும், நான் எருசலேமிலுள்ள பரிசுத்தவான்களுக்குச் செய்யப்போகிற தர்மசகாயம் அவர்களால் அங்கிகரிக்கப்படும்படிக்கும், 32 நீங்கள் தேவனை நோக்கிச் செய்யும் ஜெபங்களில், நான் போராடுவதுபோல நீங்களும் என்னோடுகூடப் போராடவேண்டுமென்று நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினிமித்தமும், ஆவியானவருடைய அன்பினிமித்தமும், உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன். 33 சமாதானத்தின் தேவன் உங்களனைவரோடுங்கூட இருப்பாராக. ஆமென்.

மனிதன் சிந்திக்கிறான், இறைவன் வழிநடத்துகிறார். பவுல் தனது இருதயத்தில் இருந்த பயணத்திட்டங்கள், வாஞ்சைகள், விண்ணப்பங்களை இவ்விதமாகத் தெரிவிக்கிறான். அவன் மத்தியத்தரைக் கடலின் கிழக்கு மற்றும் வடக்கு பகுதியில் உள்ள நாடுகளுக்கு நற்செய்தியை பிரசங்கித்து, பல்வேறு உபத்திரவங்கள் மத்தியில் திருச்சபைகளை நிறுவினான். இப்போது ரோமின் மேற்குப் பகுதிக்கும், ஐரோப்பாவின் குளிர்மிக்க வடக்குப்பகுதிக்கும் நற்செய்தியை கொண்டு செல்ல விரும்பினான். இறைவனுடைய குமாரனின் பாதத்தின் கீழ் அன்று அறியப்பட்ட உலகின் அனைத்து பகுதிகளையும் கொண்டு வர விரும்பினான்.

ரோம சபை மக்களை விசுவாசம், அன்பு, நம்பிக்கையில் பெலப்படுத்த, அநேகமுறை அந்த சபையை சந்திக்க முயற்சித்ததை அறிக்கையிட்டான். ஆனால் சிறிய ஆசியா மற்றும் கிரேக்கத்தில் காணப்பட்ட பிரச்சினைகள் அவனது நம்பிக்கையை தளரப்பண்ணியிருந்ததையும், அவனது வாஞ்சையையும் கூறினான்.

சில வருடங்கள் முன்பு ரோம் சபையை சந்திக்க அவன் விரும்பியிருந்தான். அவன் ஸ்பானியா தேசத்திற்கு போகும்போது, அங்கிருந்து பல்வேறு சபைகளை சந்திக்க எண்ணியிருந்தான். ஸ்பானியாவில் உள்ள தனது புதிய பணிகளை ரோம சபை ஆதரிக்க வேண்டும் என்று எதிர்பார்த்திருந்தான். ரோம சபைமக்களின் ஆதரவுடன், விண்ணப்பம் மற்றும் பங்களிப்புடன் நற்செய்தியை பிரசங்கிக்க திட்டமிட்ருந்தான். அதற்கு முன்பு கிரேக்க சபைகளிடம் இருந்து சேகரித்திருந்த காணிக்கைகளை முதலாவது எருசலேம் சபைக்கு கொண்டு போக எண்ணினான். அவர்கள் விசுவாசத்தினால் கிறிஸ்துவின் வருகையை எதிர்பார்த்து, தங்கள் சொத்துகளை விற்றார்கள். பசியினால் துன்பப்பட்டார்கள். இந்த வேதனை நிறைந்த சூழலில், அனடோலியா மற்றும் கிரேக்கத்தில் உள்ள சபைகளின் விசுவாசிகளுக்கு சத்தியத்தை, விசுவாசத்தை கற்றுக்கொடுத்தான். அவர்கள் தங்கள் வேலைகளை கவனமாக செய்ய வேண்டும் என்று கூறினான். கிறிஸ்துவின் வருகைக்காக எதிர்பார்த்து வேலை செய்யாமல் இருக்கக் கூடாது என்று கற்பித்தான். தெசலோனிக்கே சபைக்கு “ஒருவன் வேலை செய்ய மனதில்லாதிருந்தால், சாப்பிடாதிருக்கக் கடவன்” என்று எழுதினான். (2 தெசலோனிக்கேயர் 3:10). எருசலேம் சபை விசுவாசிகளின் ஏழ்மை நிலைமை சரி செய்யப்பட , அவர்களது பொருளாதார உதவி தேவைப்பட்டது. இது புறவினத்து கிறிஸ்தவர்களின் நடைமுறை தியாகத்திற்கு ஓர் ஆதாரமாக பவுலுக்கு இருந்தது.

புறவினத்து புதிய சபைகள் யூத விசுவாசிகளுக்கு உதவி செய்வது அவசியம் என்று பவுல் கூறினான். ஏனெனில் எருசலேமின் ஆதி சபையின் மூலம் ஆவிக்குரிய ஆசீர்வாதங்களில் அவர்களும் பங்கு பெற்றிருக்கிறார்கள். ஆவிக்குரிய வரங்களும், ஞானமும் இலவசமாக எல்லோருக்கும் கிடைத்தன. ஆகவே புறவினத்து புதிய சபைகளில் மறுபடியும் பிறந்த அனைவரும் எருசலேமின் பரிசுத்தவான்களுடைய தேவைகளை சந்திப்பதற்கு கடமைப்பட்டவர்கள் என்று பவுல் எழுதினான். தேவையுள்ளோருக்கு உதவி செய்வது நமது பரிசுத்த கடமை. இது எல்லா இடங்களிலும், எல்லா நேரங்களிலும் பொருந்தும்.

எருசலேமிற்கு பண உதவிகளை பவுல் கொண்டு போகிறபோது, ஸ்பானியா தேசத்திற்கு ரோம் வழியாக பிரயாணம் பண்ண விரும்பினான். ரோமில் உள்ள விசுவாசிகளுக்கு கிறிஸ்துவின் ஆவிக்குரிய ஆசீர்வாதங்களை கொடுக்க எண்ணினான். எருசலேமை நோக்கிய பயணம் ஆபத்தானது என பவுல் உணர்ந்தான். அவன் உள்ளூர் சபைகளில் தங்கியிருந்தான். கிறிஸ்து புறவினத்தார் மத்தியில் இருந்து விசுவாசிகளை கொண்டு வருகிறதை பவுல் கண்டிருந்தான். யூதரல்லாதோர் அனுப்பிய உதவிகளை புறக்கணிப்பதற்கு யூத விசுவாசிகளுக்கு ஒருவேளை எண்ணம் இருந்திருக்கலாம். மேலும் வேதபாரகர் மற்றும் பரிசேயர் பவுல் மீது பகையுணர்வு கொண்டு, அவனைக் கொல்ல தீர்மானித்தார்கள். எனவே கிறிஸ்துவின் நாமத்தினாலே, அவனது பாதுகாப்பிற்காகவும், சத்தியத்திற்கான ஆவிக்குரிய போராட்டத்தில் அவனை ஆதரிக்கவும், பவுல் ரோம விசுவாசிகளை கேட்டுக்கொண்டான். மனிதன் நியாயப்பிரமாணத்தினாலே அல்ல, கிருபையினாலே நீதிமானாக்கப்படுகிறான். தன்னை நியாயம்தீர்த்த, தன்னை கொல்ல விரும்பிய யூதர்களை, இயேசுவுக்கு தூரமாயிருந்த அவிசுவாசிகளை அவன் அழைத்தான். எருசலேமில் அவன் எதிர்நோக்கியிருந்த பிரச்சினைகளை அறிந்திருந்தும், இயேசுவைப் போல அந்த மரண பட்டணத்திற்கு முன்னேறிச் சென்றான். அங்கு தான் இயேசு நமக்காக மரித்தார். நம்மை நீதிமான்களாக்க எழுந்தார். கிறிஸ்துவின் பலவீனம் அவரது வெற்றியாக மாறியது.

பவுல் தனது திட்டங்கள், எதிர்பார்ப்புகளை தொகுத்துக் கூறும் போது, “இறைவனுக்கு சித்தமானால் ரோமில் உள்ள விசுவாசிகளை மகிழ்ச்சியுடன் வந்து சந்திப்பேன்” என்றான். அவர்கள் மத்தியிலே உணவு, விருத்தசேதனம் மற்றும் இரண்டாம்தரமான காரியங்கள் குறித்த கருத்து வேறுபாடு இருந்தது. இருப்பினும் சமாதானத்தின் இறைவன் அனைவரோடும் இருப்பாராக என்று அவன் தனது நிரூபத்தை முடித்தான்.

விண்ணப்பம்: பரலோகப் பிதாவே, அப்போஸ்தலனாகிய பவுல் நற்செய்தியை எல்லோருக்கும் கொண்டு செல்ல தீர்மானித்ததற்கு நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். அவன் புறவினத்தாரை உம்மிடம் கொண்டு வர விரும்பினான். ரோமிற்கு கைதியாக அவமானப்படுத்தப்பட்டு கொண்டு போகப்பட்டான். உமது குமாரன் இயேசுவின் மூலம் எங்களுக்கு அருளப்பட்ட சிலாக்கியத்திற்காக நன்றி. பவுலின் நிரூபங்கள், விண்ணப்பங்கள், விசுவாசம் மற்றும் நம்பிக்கைக்காக நாங்கள் உமக்கு நன்றி கூறுகிறோம். எங்கள் அன்பு உம்மையே நோக்கியிருக்க உதவும்.

கேள்வி:

  1. தனக்கு பிரச்சினைகளும், ஆபத்துகளும் சூழ்ந்திருப்பதை அறிந்திருந்தும், ஏன் ஸ்பானியா தேசத்திற்கு பயணம் செய்யும் முன்பு பவுல் எருசலேமிற்கு போக விரும்பினான்?

www.Waters-of-Life.net

Page last modified on August 11, 2021, at 07:56 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)