Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Romans - 069 (Summary of the Commandments Concerning Men)
This page in: -- Afrikaans -- Arabic -- Armenian -- Azeri -- Bengali -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- French -- Georgian -- Greek? -- Hausa -- Hebrew -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Malayalam -- Polish -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish? -- TAMIL -- Telugu -- Turkish -- Urdu? -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

ரோமர் - கர்த்தரே நம்முடைய நீதி
ரோமருக்கு பவுல் எழுதின நிரூபத்திலிருந்து வேதபாடங்கள்
பகுதி 3 - கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களின் வாழ்வில் வெளிப்படுகின்ற இறைவனுடைய நீதி (ரோமர் 12:1-15:13)

6. மனிதர்களைக் குறித்த கட்டளைகளின் சுருக்கம் (ரோமர் 13:7-10)


ரோமர் 13:7-10
7 ஆகையால் யாவருக்கும் செலுத்தவேண்டிய கடமைகளைச் செலுத்துங்கள்; எவனுக்கு வரியைச் செலுத்தவேண்டியதோ அவனுக்கு வரியையும், எவனுக்குத் தீர்வையைச் செலுத்தவேண்டியதோ அவனுக்குத் தீர்வையையும் செலுத்துங்கள்; எவனுக்குப் பயப்படவேண்டியதோ அவனுக்குப் பயப்படுங்கள்; எவனைக் கனம்பண்ணவேண்டியதோ அவனைக் கனம்பண்ணுங்கள். 8 ஒருவரிடத்திலொருவர் அன்புகூருகிற கடனேயல்லாமல், மற்றொன்றிலும் ஒருவனுக்கும் கடன்படாதிருங்கள்; பிறனிடத்தில் அன்புகூருகிறவன் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுகிறான். 9 எப்படியென்றால், விபசாரம் செய்யாதிருப்பாயாக, கொலை செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக, இச்சியாதிருப்பாயாக என்கிற இந்தக் கற்பனைகளும், வேறே எந்தக் கற்பனையும், உன்னிடத்தில் நீ அன்புகூருகிறதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்கிற ஒரே வார்த்தையிலே தொகையாய் அடங்கியிருக்கிறது. 10 அன்பானது பிறனுக்குப் பொல்லாங்கு செய்யாது; ஆதலால் அன்பு நியாயப்பிரமாணத்தின் நிறைவேறுதலாயிருக்கிறது.

அப்போஸ்தலனாகிய பவுலின் காலத்தில் ரோம அரசாங்கத்தின் எல்லை மற்றும் நிதி நிலை குறித்த விசுவாசிகளுக்கு முக்கியமானதாக இல்லை. கிறிஸ்தவர்கள் சிறுபான்மையினராக இருந்தார்கள். அரசின் சட்ட நிலையின் மீது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. ஏமாற்றாமல் வரிகளை செலுத்தவும், அதிகாரங்கள் சட்டங்களுக்கு கீழ்ப்படிந்திருக்கவும், அரசு துறைகளை மதிக்கவும் கிறிஸ்தவர்களுக்கு அப்போஸ்தலன் கட்டளையிட்டான். பாவிகளுக்காகவும், அதிகாரத்தில் உள்ளவர்களுக்காகவும், அவர்கள் விவேகத்தோடும், நேர்மையோடும் நடக்கும்படி விண்ணப்பம் செய்யும்படி கூறினான். ஆனால் ரோம அரசின் நிலைமை வேறுவிதமாக மாறியது. அவர்கள் கிறிஸ்துவை எதிர்த்தார்கள். சீஷரை (ரோம பேரரசன்) வழிபடாத கிறிஸ்தவர்களை கொல்லும்படி கட்டளையிட்டார்கள். பொது அரங்குகளில் மிருகங்களுக்கு இரையாகும்படி அவர்களை தூக்கி எறிந்தார்கள்.

பவுல் ரோமக் குடிமகனாக பிறந்தவர் ஆவார். அவன் தனது வலிமைமிக்க அரசிற்கு பொறுப் புள்ளவனாக தன்னைக் கண்டு, கிறிஸ்துவின் வார்த்தைகளை வழங்கிட விரும்பினான். “இராயனுடையதை இராயனுக்கும், இறைவனுடையதை இறைவனுக்கும் செலுத்துங்கள்”. சபையை பொறுத்தமட்டில் உலகத்தின் அனைத்து அரசியல் சாசனங்களுக்கும் மேலாக கிறிஸ்துவின் கட்டளை இருப்பதை அவன் அறிந்திருந்தான். இயேசு கூறினார். “நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன். நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள் என்றார்” (யோவான் 13:34,35).

இயேசு தமது சீஷர்களை நேசித்து, அவர்களுக்கு பணிபுரிந்தது போல செயல்படும் ஒவ்வொரு கிறிஸ்தனும் இயேசுவின் கட்டளையை நிறைவேற்றுகிறான். இந்த இறை அன்புதான் திருச்சபையின் சாசனம் மற்றும் திருநியமம் ஆகும். இதை நிறைவேற்றும் வல்லமை மற்றும் ஆதாரமாக பரிசுத்த ஆவியானவர் உள்ளார். அதே சமயத்தில் கிறிஸ்து மோசேயின் கட்டளைகளை அழிக்கவும் இல்லை. “ பழிக்குப்பழி வாங்காமலும், உன் ஜனப்புத்திரர் மேல் பொறாமைகொள்ளாமலும், உன்னில் நீ அன்புகூருவதுபோல் பிறனிலும் அன்புகூருவாயாக; நான் கர்த்தர்” (லேவியராகமம் 19:18).

பத்துக் கட்டளைகளின் இரண்டாம் பகுதி மூலம் பவுல் இந்தக் கட்டளையை விளக்குகிறான். பிறரை பகைக்காதே, யாரையும் கொல்லாதே, விபசாரம் செய்யாதே, அசுத்தமாய் வாழாதே, திருடாதே, கடினமாக வேலைசெய், பொறாமை கொள்ளாதே, இறைவன் உனக்கு அருளியுள்ள வரங்களில் திருப்தியாயிரு. உங்கள் அயலாரை நேசிக்கும் போது இந்தக் கட்டளைகள் கைக்கொள்ளப்படுகின்றன.

அப்போஸ்தலன் உணர்ச்சிவசப்பட்டோ, நயமாகவோ பேசவில்லை. உண்மையான அன்பை பயிற்சி செய்வதற்கான முதன்மையானதும் முக்கியமானதுமான படி என்னவென்றால் விபசாரத்துக்கு விலகியிருப்பது ஆகும். அகாபே என்ற இறை அன்பு எரோஸ் என்ற பாலியல் அன்பை மேற்கொள்ளும் என்று கூறினான்.

சுயநலத்தில் மெய் அன்பு காணப்படாது. தேவையுள்ளோரைக் கண்டு முதலில் அவர்களுக்கு சேவை செய்ய வேண்டும். துன்பங்கள், பாடுகள் மற்றும் மற்றவர்களின் உபத்திரவங்களில் நாம் பங்கெடுக்கும்போது, கடினமான நேரங்களில் தேவையுள்ளோருக்கு உதவுகிறோம், ஆறுதல் தருகிறோம்.

யார் உனது அயலான்? என்பது தான் கேள்வி. இயேசு இக்கேள்விக்கு பதிலளித்துவிட்டார். அது உனது இரத்த உறவு அல்ல, நீ சந்திக்கும், பார்க்கும் உன்னிடம் நன்மையை எதிர்பார்க்கும் ஒவ்வொரு நபரும் உனது அயலான். மற்றவர்களுக்கான நற்செய்தியில் இது உள்ளடங்கியுள்ளது. “அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்றான்” (அப்போஸ்தலர் 4:12).

விண்ணப்பம்: ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே, நீர் சபைக்கு ஒரு புதிய கட்டளையை கொடுத்துள்ளீர். நாங்கள் உம்மை ஆராதிக்கிறோம். அதை நிறைவேற்ற பரிசுத்த ஆவியின் வல்லமையைத் தந்துள்ளீர். எங்கள் கடின இருதயங்களின் நடக்கைககளுக்காக எங்களை மன்னியும். எங்கள் நண்பர்களை புரிந்துகொள்ள உதவும். நாங்கள் எங்கிருந்தாலும் அனைவருக்கும் பணி செய்ய எங்களுக்கு கற்றுத்தாரும்.

கேள்வி:

  1. “நீ உன்னை நேசிப்பது போல பிறரை நேசிப்பாயாக” என்ற கட்டளையை பவுல் எவ்விதம் நடைமுறையில் விளக்குகிறான்?

www.Waters-of-Life.net

Page last modified on August 11, 2021, at 06:34 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)