Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Romans - 068 (Be Obedient to your Authorities)
This page in: -- Afrikaans -- Arabic -- Armenian -- Azeri -- Bengali -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- French -- Georgian -- Greek? -- Hausa -- Hebrew -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Malayalam -- Polish -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish? -- TAMIL -- Telugu -- Turkish -- Urdu? -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

ரோமர் - கர்த்தரே நம்முடைய நீதி
ரோமருக்கு பவுல் எழுதின நிரூபத்திலிருந்து வேதபாடங்கள்
பகுதி 3 - கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களின் வாழ்வில் வெளிப்படுகின்ற இறைவனுடைய நீதி (ரோமர் 12:1-15:13)

5. மேலான அதிகாரங்களுக்கு கீழ்ப்படிந்திருங்கள் (ரோமர் 13:1-6)


ரோமர் 13:1-6
1 எந்த மனுஷனும் மேலான அதிகாரமுள்ளவர்களுக்குக் கீழ்ப்படியக்கடவன்; ஏனென்றால், தேவனாலேயன்றி ஒரு அதிகாரமுமில்லை; உண்டாயிருக்கிற அதிகாரங்கள் தேவனாலே நியமிக்கப்பட்டிருக்கிறது. 2 ஆதலால் அதிகாரத்திற்கு எதிர்த்து நிற்கிறவன் தேவனுடைய நியமத்திற்கு எதிர்த்து நிற்கிறான்; அப்படி எதிர்த்து நிற்கிறவர்கள் தங்களுக்குத் தாங்களே ஆக்கினையை வருவித்துக்கொள்ளுகிறார்கள். 3 மேலும் அதிகாரிகள் நற்கிரியைகளுக்கல்ல, துர்க்கிரியைகளுக்கே பயங்கரமாயிருக்கிறார்கள்; ஆகையால் நீ அதிகாரத்திற்குப் பயப்படாதிருக்கவேண்டுமானால், நன்மைசெய், அதினால் உனக்குப் புகழ்ச்சி உண்டாகும். 4 உனக்கு நன்மை உண்டாகும் பொருட்டு, அவன் தேவஊழியக்காரனாயிருக்கிறான். நீ தீமைசெய்தால் பயந்திரு; பட்டயத்தை அவன் விருதாவாய்ப் பிடித்திருக்கவில்லை; தீமைசெய்கிறவன்மேல் கோபாக்கினை வரப்பண்ணும்படி, அவன் நீதியைச் செலுத்துகிற தேவஊழியக்காரனாயிருக்கிறானே. 5 ஆகையால், நீங்கள் கோபாக்கினையினிமித்தம் மாத்திரமல்ல, மனச்சாட்சியினிமித்தமும் கீழ்ப்படியவேண்டும். 6 இதற்காகவே நீங்கள் வரியையும் கொடுக்கிறீர்கள். அவர்கள் இந்த வேலையைப் பார்த்துவருகிற தேவஊழியக்காரராயிருக்கிறார்களே.

ஆளுகிறவர்களின் வஞ்சனை, அரசுகளின் அநீதி, குருட்டுத்தனமான ஒழுங்கீனம் இவைகளினால் பல்வேறு குழுக்களுக்கிடையே ஏற்படுகின்ற விவாதங்களினால் அநேகர் துன்புறுகிறார்கள். உலகில் பரிபூரணமான அரசு எதுவும் இல்லை. ஏனெனில் பாவமில்லாத ஒரு நபரும் உலகில் இல்லை. இறைவன் உன்னையும், உனது குடும்பத்தையும் பொறுத்துக் கொள்வதைப்போல உனது அரசை நீ பொறுத்துக் கொள்.

இறைவன் அனுமதிக்காத வரை எந்தவொரு அரசும் அதனுடைய மக்களை மேற்கொள்ள இயலாது என்பதை அப்போஸ்தலன் கண்டான். நித்திய நியாயாதிபதிக்கு அது கணக்கு ஒப்புவிக்க வேண்டும். கறை நிறைந்த மக்கள் கறை நிறைந்த அரசாங்கத்தை பெறுகிறார்கள்.

புறவினத்து அப்போஸ்தலனின் வார்த்தைகளை நீங்கள் ஆழமாய் சிந்தித்தால், வேறுபட்ட காரியங்களை காணமுடியும்:

அ) எல்லா அரசுகளும் இறைவனால் தீர்மானிக்கப்பட்டவை. அவருடைய அறிவு மற்றும் சித்தத்திற்கு அப்பாற்பட்டு எதுவும் நடக்காது.
ஆ) தனது அரசுக்கு கீழ்ப்படியாதவன் இறைவனுக்கு கீழ்ப்படியாதவன் ஆவான்.
இ) அதிகாரத்திற்கு எதிராக கலகம் செய்பவன் நீதியுள்ள தண்டனையைப் பெறுகிறான்.
ஈ) நீதியின் பட்டயத்தை ஞானத்தோடும், சமத்துவத்தோடும் பயன்படுத்தும்படி ஆண்டவர் அதிகாரிகளையும், அதிபதிகளையும் ஏற்படுத்தியுள்ளார்.
உ) நன்மையை செய்பவர்கள் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. அவர்களுக்கு இறைவனின் ஊழியக்காரன் என்று அழைக்கப்படுகின்ற நீதியுள்ள அரசு தேவை. நீதிமான்கள் தங்கள் செயல்களைத் தொடரும்படி அரசு அவர்களை உற்சாகப்படுத்துகின்றது.

அப்போஸ்தலனாகிய பவுல் அரசை “இறைவனின் ஊழியக்காரன்” என்று இரண்டு முறை குறிப்பிடுகிறான். அந்த அரசு சத்தியம் மற்றும் நீதியின் கோட்பாடுகளை நிறைவேற்றினால், இறைவன் அதை ஆசீர்வதிப்பார். அதன் மக்கள் பலன் அடைவார்கள். ஆனால் அது சத்தியத்தை திரித்தால் அல்லது லஞ்சம் வாங்கினால் இறைவன் தண்டிப்பார். அரசு அதிகாரிகள் அவர்களுடைய அழைப்பின் நிமித்தம் இறைவனின் ஊழியர்களாக இருக்கிறார்கள். அவர்கள் இறைவனின் பாதுகாப்பு அல்லது அவரின் நியாயத்தீர்ப்பை அனுபவிப்பார்கள்.

ஒரு மனிதனின் கடமைகள் அவன் செலுத்த வேண்டிய வரிகள் குறித்து இயேசு பேசும் போது இப்படி குறிப்பிடுகிறார். “இராயனுடையதை இராயனுக்கும், இறைவனுடையதை இறைவனுக்கும் செலுத்துங்கள்” (மத்தேயு 22:21). எந்தவித தாமதமுமின்றி ஒருவன் அரசுக்கு செய்ய வேண்டிய உண்மையான கடமைகளைக் குறித்து இயேசு இங்கு குறிப்பிடுகிறார். அதே சமயத்தில் அரசுக்கு இருக்கும் அதிகாரத்தை அவர் மட்டுப்படுத்துகிறார். ஆகவே உண்மையான இறைவனுக்கும், அவருடைய கட்டளைக்கும் எதிர்த்து நிற்கும் எந்த அதிகாரத்திற்கும் அல்லது உண்மையான இறைவனுக்கு ஆராதனை செலுத்தாமல் வேறு தெய்வங்களுக்கு ஆராதனை செய்யும் அதிகாரத்திற்கும் ஒருவன் எதிர்த்து நிற்க வேண்டும். “மனுஷருக்கு கீழ்ப்படிகிறதைப் பார்க்கிலும் இறைவனுக்கு கீழ்ப்படிவதே நலம்” (அப்போஸ்தலர் 5:29). அவன் விசுவாசத்தினால் எதிர்த்து நிற்கும் போது, துன்புறுத்தல் மற்றும் கொலையை சந்திக்க நேரிடும். மத்தியதரைக் கடலை சூழ்ந்துள்ள நிலங்களில் இரத்த சாட்சிகளின் இரத்தம் நிறைந்துள்ளது. அவர்கள் அரசிற்காக விண்ணப்பம் செய்த வீரர்கள். ஆனால் கிறிஸ்துவின் ஆவிக்கு எதிரான அதிகாரத்திற்கு எதிர்த்து நின்றவர்கள்.

கூறுகிறது. பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவரை ஆராதிக்காமல், அவனை ஆராதிக்கும்படி கட்டளை பிறப்பிக்கிறது. இறைவனிடம் வேண்டுதல் செய்யும் அனைவரும் அந்திகிறிஸ்துவின் கட்டளைகளுக்கு எதிரானவர்களாக கருதப்படுவார்கள். அப்படி எதிர்த்து நிற்பவர்கள் வேதனைமிக்க மரணத்தை அடைவார்கள். நித்தியமாய் அழிவதை விட குறுகிய காலம் பாடு அனுபவிப்பது மனிதனுக்கு சிறந்தது.

அரசாங்க தேர்தலுக்காக நாம் வேண்டுதல் செய்வது நமது ஆவிக்குரிய கடமை ஆகும். இறைவனின் உண்மையான கிருபை இல்லையென்றால் அரசு சாசனம், அதன் உரிமைக, அரசின் மேலதிகாரிகள் நன்மையான எதையும் செய்ய முடியாது.

விண்ணப்பம்: ஆண்டவராகிய இயேசுவே, நீர் மனிதனுக்கு கீழ்ப்படிவதை விட பிதாவிற்கு கீழ்ப்படிவதை தெரிந்துகொண்டீர். எனவே நீர் சிலுவையில் அறையப்பட்டீர். அரசின் நன்மைக்காக நாங்கள் வேண்டுதல் செய்யும்படி உதவும். அது அவிசுவாசத்திற்கு நேராக எங்களைத் தூண்டினால் அல்லது தீமையை செய்ய வற்புறுத்தினால், அதற்கு எதிர்த்து நிற்க தைரியம் தாரும்.

கேள்வி:

  1. ஒவ்வொரு அரசின் அதிகாரத்தின் எல்லைகள் என்ன? ஏன் மனிதனுக்கு கீழ்ப்படிவதை விட இறைவனுக்கு கீழ்ப்படிவது அவசியம்?

www.Waters-of-Life.net

Page last modified on August 11, 2021, at 06:30 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)