Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Acts - 075 (Apostolic Council at Jerusalem)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Azeri -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- French -- Georgian -- Greek -- Hausa -- Igbo -- Indonesian -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Turkish -- Urdu? -- Uzbek -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

அப்போஸ்தலர் - கிறிஸ்துவின் வெற்றி பவனி
அப்போஸ்தலர் நடபடிகளிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 2 - புறவினத்தாருக்கு நற்செய்தி அறிவித்தலைப் பற்றிய அறிக்கையும் அந்தியோகியா முதல் ரோமாபுரிவரை திருச்சபைகள் நாட்டப்படுதலும் - பரிசுத்த ஆவியானவரினால் கட்டளையிடப்பட்டிருந்த அப்போஸ்தலனாகிய பவுலின் ஊழியத்தினால் (அப்போஸ்தலர் 13 - 28)

ஆ - எருசலேமில் அப்போஸ்தலரின் ஆலோசனைக் குழு (அப்போஸ்தலர் 15:1-35)


அப்போஸ்தலர் 15:22-29
22 அப்பொழுது தங்களில் சிலரைத் தெரிந்துகொண்டு பவுலோடும் பர்னபாவோடும் அந்தியோகியாவுக்கு அனுப்புகிறது அப்போஸ்தலருக்கும் மூப்பருக்கும் சபையாரெல்லாருக்கும் நலமாகக் கண்டது. அவர்கள் யாரென்றால், சகோதரரில் விசேஷித்தவர்களாகிய பர்சபா என்று மறுபேர்கொண்ட யூதாவும் சீலாவுமே.23 இவர்கள் கையில் அவர்கள் எழுதிக்கொடுத்தனுப்பின நிருபமாவது: அப்போஸ்தலரும் மூப்பரும் சகோதரருமாகிய நாங்கள் அந்தியோகியாவிலும் சீரியாவிலும் சிலிசியாவிலும் இருக்கும் புறஜாதியாராகிய சகோதரருக்கு வாழ்த்துதல் சொல்லி எழுதிய நிருபம் என்னவென்றால்:24 எங்களால் கட்டளைபெறாத சிலர் எங்களிடத்திலிருந்து புறப்பட்டு, நீங்கள் விருத்தசேதனமடையவேண்டுமென்றும், நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ளவேண்டுமென்றும் சொல்லி, இப்படிப்பட்ட வார்த்தைகளால் உங்களைக் கலக்கி, உங்கள் ஆத்துமாக்களைப் புரட்டினார்கள் என்று நாங்கள் கேள்விப்பட்டபடியினாலே,25 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்திற்காகத் தங்கள் பிராணனையும் ஒப்புக்கொடுக்கத் துணிந்தவர்களும் எங்களுக்குப் பிரியமானவர்களுமாயிருக்கிற பர்னபா பவுல் என்பவர்களோடுங்கூட, 26 எங்களால் தெரிந்துகொள்ளப்பட்ட சில மனுஷரை உங்களிடத்திற்கு அனுப்புகிறது ஒருமனப்பட்டுக் கூடின எங்களுக்கு நலமாகக்கண்டது. 27 அந்தப்படியே யூதாவையும் சீலாவையும் அனுப்பியிருக்கிறோம். அவர்களும் இவைகளை வாய்மொழியாக உங்களுக்கு அறிவிப்பார்கள். 28 எவையெனில், விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளுக்கும், இரத்தத்திற்கும், நெருக்குண்டு செத்ததிற்கும், வேசித்தனத்திற்கும், நீங்கள் விலகியிருக்கவேண்டுமென்பதே.29 அவசியமான இவைகளையல்லாமல் பாரமான வேறொன்றையும் உங்கள்மேல் சுமத்தாமலிருப்பது பரிசுத்த ஆவிக்கும் எங்களுக்கும் நலமாகக் கண்டது; இவைகளுக்கு விலகி நீங்கள் உங்களைக் காத்துக் கொள்ளுவது

கூட்டங்களில் விவாதிக்கப்பட்ட காரியங்களின் சுருக்கத்தை எழுதி, பங்கெடுத்த அனைத்து அங்கத்தினர்களும் கையெழுத்திடுவது பொதுவான வழக்கம் ஆகும். எருசலேமில் கிறிஸ்தவ சபையின் முதல் ஆலோசனைக் கூட்டத்தில் பேசப்பட்டவைகளின் உள்ளடக்கம் என்னவாக இருந்தது?

அது அனுப்பிய சபையில் குறிப்பிடப்பட்டது. அது அப்போஸ்தலர்களால் மட்டும் உருவாக்கப்படாமல், மூப்பர்களாலும் இணைந்து உருவாக்கப்பட்டது. அவர்கள் மட்டுமே முழு சபைக்கும் பொறுப்பானவர்கள் அல்ல. கிறிஸ்துவின் சரீரமாக, பிரிக்கப்படமுடியாத ஐக்கியமாக இருக்கும் சபை முழுவதும் முதன்மையான பொறுப்பைக் கொண்டுள்ளது. அவர்களால் ஏற்றுக்கொள்ளப்படாத எந்த ஓர் முடிவும் தொடர்ச்சியான குளறுபடிகள், போராட்டங்கள் மற்றும் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

அந்த அறிக்கையை பெற்றவர்கள் அந்தியோகியாவின் தலைநகர பட்டணத்து சபையின் அங்கத்தினர்கள் மட்டும் அல்ல, அதற்கு அருகிலும், அந்தியோகியாவை சுற்றிலும் இருக்கிற சிறிய சபைகளின் அங்கத்தினர்களும் அதை பெற்றார்கள். மேலும் அது, சிரியாவின் எல்லா சபைகளையும், இஸ்கெந்துரன் மற்றும் அடனா மாவட்டங்களையும் உள்ளடக்கியதாக இருந்தது. இந்த சபைகளின் பிள்ளைகளை எருசலேம். சபையின் அங்கத்தினர்கள் “சகோதரர்கள்” என்று அழைத்தார்கள். அவர்களது பரலோகப் பிதாவின் ராஜ்யத்தில் உள்ள ஐக்கியத்தில் இருக்கும் சமமான உரிமையை இந்த தலைப்பு சொல் உணர்த்துகிறது. இந்த ஒரு வார்த்தையின் மூலம் முக்கியமான வித்தியாசம் அகற்றப்பட்டது. பிரச்சினை நீங்கியது. யூத மார்க்கத்தில் இருந்து வந்த விசுவாசிகள் புறஜாதி விசுவாசிகளை உண்மையான சகோதரர்களாக கருதினார்கள்.

கிறிஸ்துவின் இரட்சிப்பில் இருந்து புரண்டோமும் சமாதானம் மற்றும் சந்தோஷம் தான் இக் கடிதத்தின் சாராம்சமாக இருந்தது. இந்த ஒரு கிரேக்க வார்த்தையில் மூன்று முக்கியத்துவம் வாய்ந்த சிந்தனைகள் இருக்கிறது. கிறிஸ்துவுக்குள்ளான தங்களது சகோதரர்களை வாழ்த்த எருசலேமில் இருந்த சகோதரர்கள் இதைப் பயன்படுத்தினார்கள். நமது பிரசங்கத்தின் பொருள் சமாதானம், சந்தோஷம் மற்றும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அது நியாயப்பிரமாணம் அல்லது கடிந்துகொள்ளுதல் அல்ல. உமது சந்தோஷத்தின் ஊழியர்களாக நாங்கள் இருக்கிறோம். கிறிஸ்துவின் இரட்சிப்பின் முழுமையை உங்களுக்கு கொண்டுவருகிறது.

அந்தியோகியா சபைக்கு சென்ற நியாயப்பிரமாண போதகர்கள் எருசலேமில் இருந்து அனுப்பப்படவில்லை என்று அந்த அறிக்கையிலிருந்து தெரியவருகிறது. இக் காரியத்திற்கான ஒரு கட்டளையையும் அவர்கள் பெற்றிருக்கவில்லை. அவர்கள் தங்கள் சொந்த கருத்துக்களை பரப்பும்படியாக தங்கள் சொந்த பெயரில் போனார்கள். இந்த நியாயப்பிரமாணவாதிகள் மூலம் ஏற்பட்ட பிரச்சனை மற்றும் பிரிவினைக்காக திருச்சபை வருத்தம் தெரிவித்தது. நாம் இதை கூட்ட நிகழ்வு குறிப்பில் வாசிக்கவில்லை. ஆனால் இவர்களைக் குறித்து பவுல் பின்பு எழுதும்போது, அவர்கள் கள்ள சகோதரர்கள் என்று எழுதினார். (கலாத்தியர் 2:4) அவர்கள் எருசலேமின் அப்போஸ்தலர்களால் பிரசங்கிக்கப்படும்படி நியமிக்கப்பட்டவர்கள் அல்ல என்பதை மட்டும் நாம் வாசிக்கிறோம். எருசலேமின் முதல் ஆலோசனைக் கூடுகையும் இதை ஒத்துக்கொள்ளவில்லை. மேலும் அவர்களது பிரிவினை செயலை ஏற்றுக்கொள்ளவில்லை.

அந்த சினாட் அமைப்பு ஒரு போதனைக் கடிதத்தை உருவாக்கவோ அல்லது முழுவிபரங்கள் அடங்கிய அறிக்கைகள் சமர்ப்பிக்கவோ இல்லை என்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியமான காரியம் ஆகும். அவர்கள் உடனடியாக ஒரு கருத்துடன் இரண்டு விவேகமான மனிதர்களை தெரிந்துகொண்டு இந்த ஆலோசனையைக் குறித்து விளக்கும்படியாக அனுப்பினார்கள். எழுதப்பட்ட வார்த்தைகள் மட்டும் போதுமானவை அல்ல. இறைவனுடைய வார்த்தையை நிலைநிறுத்த அவரது பணியாளர்கள் தேவை. எனவே எருசலேமில் கூடிய சினாட், அறிக்கை கடிதத்துடன் இவர்களையும் அனுப்பியது. அவர்கள் நீண்ட விளக்கவுரைகளை கொடுத்து அனுப்பவில்லை. ஆனால் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்ட சகோதரர்களை அனுப்பினார்கள்.

புதியஏற்பாட்டின் நியமிக்கப்பட்ட இரண்டு தீர்க்கதரிசிகளும் தன்னிச்சையாக செல்லவில்லை. எருசலேமின் சபையிடம் இருந்து வந்த மேன்மையான அறிக்கையை பெற்றிருந்த பர்னபா மற்றும் பவுலை அனுப்பினார்கள். அந்த அறிக்கை எல்லா குற்றச்சாட்டுகளிலிருந்தும் அவர்களை விலக்கி, அன்புள்ளவர்களாக அவர்களைக் காண்பித்தது. அவர்கள் இந்த தலைப்புச் சொல்லுக்கு தகுதியானவர்களாக இருந்தார்கள். பரிசுத்த ஆவியின் மூலமாக அவர்களது இருதயங்களில் இறைவனின் அன்பு ஊற்றப்பட்டிருந்தது. அவருடைய சபைகளில் இறைவனின் மனிதர்களுக்கான விதிமுறைகள் மற்றும் வல்லமை ஆகியவற்றிற்கு ஆதாரமாக அன்பு, மகிழ்ச்சி, சமாதானம் மற்றும் இரட்சிப்பு நிலைநிறுத்தப்பட்டது. இந்த நற்குணங்களினால் இரண்டு அப்போஸ்தலர்களின் குறிப்பிடத்தக்க சாட்சி உறுதிப்படுத்தப்பட்டது. அவர்கள் கிறிஸ்துவின் நாமத்திற்காக, அவரது சபைக்காக தங்கள் வாழ்வை பணயம் வைத்தார்கள். கிறிஸ்து தன்னைக்குறித்து பேசின அதே வார்த்தையை இங்கு நாம் வாசிக்கிறோம். “நான் ஊழியம் கொள்ளும்படி வராமல், ஊழியம் செய்யவும், அநேகரை மீட்கும் பொருளாக என் ஜீவனைக் கொடுக்கவும் வந்தேன்”. இது தான் இறைவனின் அன்பின் முக்கியமான கனியாக உள்ளது. இழந்து போனவர்களுக்காக நம்மை நாமே பலியாக ஒப்புக்கொடுக்கும்படி அது நம்மைத் தூண்டுகிறது. அக்கிரமம் நிறைந்த பாவிகளுக்காக கிறிஸ்து தனது ஜீவனை பலியாக ஒப்புக்கொடுத்தார். இது தான் கிறிஸ்தவத்தின் ஆழமான, உள்ளார்ந்த அர்த்தமாகும்.

புதியஏற்பாட்டின் நியமிக்கப்பட்ட இரண்டு தீர்க்கதரிசிகளும் தன்னிச்சையாக செல்லவில்லை. எருசலேமின் சபையிடம் இருந்து வந்த மேன்மையான அறிக்கையை பெற்றிருந்த பர்னபா மற்றும் பவுலை அனுப்பினார்கள். அந்த அறிக்கை எல்லா குற்றச்சாட்டுகளிலிருந்தும் அவர்களை விலக்கி, அன்புள்ளவர்களாக அவர்களைக் காண்பித்தது. அவர்கள் இந்த தலைப்புச் சொல்லுக்கு தகுதியானவர்களாக இருந்தார்கள். பரிசுத்த ஆவியின் மூலமாக அவர்களது இருதயங்களில் இறைவனின் அன்பு ஊற்றப்பட்டிருந்தது. அவருடைய சபைகளில் இறைவனின் மனிதர்களுக்கான விதிமுறைகள் மற்றும் வல்லமை ஆகியவற்றிற்கு ஆதாரமாக அன்பு, மகிழ்ச்சி, சமாதானம் மற்றும் இரட்சிப்பு நிலைநிறுத்தப்பட்டது. இந்த நற்குணங்களினால் இரண்டு அப்போஸ்தலர்களின் குறிப்பிடத்தக்க சாட்சி உறுதிப்படுத்தப்பட்டது. அவர்கள் கிறிஸ்துவின் நாமத்திற்காக, அவரது சபைக்காக தங்கள் வாழ்வை பணயம் வைத்தார்கள். கிறிஸ்து தன்னைக்குறித்து பேசின அதே வார்த்தையை இங்கு நாம் வாசிக்கிறோம். “நான் ஊழியம் கொள்ளும்படி வராமல், ஊழியம் செய்யவும், அநேகரை மீட்கும் பொருளாக என் ஜீவனைக் கொடுக்கவும் வந்தேன்”. இது தான் இறைவனின் அன்பின் முக்கியமான கனியாக உள்ளது. இழந்து போனவர்களுக்காக நம்மை நாமே பலியாக ஒப்புக்கொடுக்கும்படி அது நம்மைத் தூண்டுகிறது. அக்கிரமம் நிறைந்த பாவிகளுக்காக கிறிஸ்து தனது ஜீவனை பலியாக ஒப்புக்கொடுத்தார். இது தான் கிறிஸ்தவத்தின் ஆழமான, உள்ளார்ந்த அர்த்தமாகும்.

இதைத் தொடர்ந்து விக்கிரகங்களுக்கு படைக்கப்பட்டவகை புசிக்கிற காரியத்தில் மற்ற மதங்களை விட்டு விலகியிருக்கும்படி அந்தியோகியா சபையில் அங்கத்தினர்களுக்கு அவர்கள் எழுதினார்கள். அசுத்தமான அனைத்து காரியத்திலும் இருந்து விலகியிருக்கும்படி அவர்கள் கூறினார்கள். மேலும் நெருக்குண்டு செத்ததிற்கும், இரத்தத்திற்கும் விலகியிருக்கும்படி கூறினார்கள். இப்படிச் செய்வதன் மூலம் யூத மதத்தில் இருந்து வந்த கிறிஸ்தவர்களுடன் உள்ள ஐக்கியத்தில் அவர்கள் தொடர்ந்து இருக்க முடியும். இது இரட்சிப்பை பெற்றுக்கொள்வதுடன் தொடர்புடைய ஒரு கட்டளை அல்ல. பரிசுத்தவான்களுடன் உள்ள ஐக்கியத்தை தொடர்வது குறித்ததான ஒரு கட்டளை ஆகும்.

கேள்வி:

  1. எருசலேமில் கூடிய அப்போஸ்தல ஆலோசனைக் குழு எடுத்த முடிவில் இருந்த முக்கியமான காரியங்கள் என்ன?

அப்போஸ்தலர் 15:30-35
30 அவர்கள் அனுப்பிவிடப்பட்டு, அந்தியோகியாவுக்கு வந்து, சபையைக் கூடிவரச்செய்து, நிருபத்தை ஒப்புவித்தார்கள்.31 அதை அவர்கள் வாசித்து, அதனாலுண்டாகிய ஆறுதலுக்காகச் சந்தோஷப்பட்டார்கள்.32 யூதா சீலா என்பவர்களும் தீர்க்கதரிசிகளாயிருந்தபடியினாலே அநேக வார்த்தைகளினால் சகோதரருக்குப் புத்தி சொல்லி, அவர்களைத் திடப்படுத்தி,33 சிலகாலம் அங்கேயிருந்து, பின்பு சகோதரரால் சமாதானத்தோடே அப்போஸ்தலரிடத்திற்கு அனுப்பிவிடப்பட்டார்கள். 34 ஆகிலும் சீலாவுக்கு அங்கே தரித்திருக்கிறது நலமாய்க் கண்டது. 35 பவுலும் பர்னபாவும் அந்தியோகியாவிலே சஞ்சரித்து, வேறே அநேகரோடுங்கூடக் கர்த்தருடைய வசனத்தை உபதேசித்துப் பிரசங்கித்துக்கொண்டிருந்தார்கள்.

பர்னபாவும், பவுலும் எருசலேமிற்கு பயணமாக சென்றதன் விளைவாக, ஆலோசனைக் குழு இரண்டு சகோதரர்களை அந்தியோகியாவிற்கு அனுப்ப தீர்மானித்தது.அவர்களால் அங்கே வாசிக்கப்படும்படி கடிதத்தையும் கொடுத்து அனுப்பினார்கள். யூதாவும், சீலாவும் பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலால் தங்களிடம் வந்து கேட்டவர்களுக்கு கற்றுக்கொடுத்த தீர்க்கதரிசிகளாக இருந்தார்கள். யூத மற்றும் புறஜாதி கிறிஸ்தவர்களிடையே முழுமையான இணக்கத்தை நிலைநிறுத்திய அதே ஆவியானவரால் அவர்கள் நிரப்பப்பட்டிருந்தார்கள்.

அந்தியோகியா சபையில் மகிழ்ச்சியும், சமாதானமும் தொடர்ந்தது. அவர்கள் சிந்தனைகள் அவர்களுடைய பரிசுத்த கடமையான உலகிற்கு நற்செய்தியை பிரசங்கிப்பதின் பக்கம் திரும்பியது. போதனைகளில் ஏற்படும் பிரிவினைகள் மூலமாக எப்போதும் பிசாசு சபைகளை அசைக்க முயலுகின்றான். மேலும் உலகிற்கு நற்செய்தியை பிரசங்கிக்கும் நோக்கத்தில் இருந்து, அவன் விசுவாசிகளை விலக்கி கொண்டு செல்ல முயற்சிக்கிறான். எப்படியிருப்பினும் பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலுக்கு தங்களை ஒப்புவிப்பவர்கள் விரைவில் ஒரே ஐக்கியத்திற்குள் வருகிறார்கள். அவர்கள் இறைவனின் வழிநடத்துதல் மற்றும் கொள்கைகளை பெற்றுக்கொள்கிறார்கள். அவை 1) நாடுகளுக்கு நற்செய்தியை பிரசங்கித்தல் 2) இழந்துபோனவர்களை இரட்சித்தல் 3) தேடுகிறவர்களை பரிசுத்த ஆவியினால் நிரப்புதல்.

ஒவ்வொரு சபைக்குமான கேள்வி: நீங்கள் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொள்கிறீர்களா? அல்லது நற்செய்தியை பிரசங்கிக்க இணைந்து செயல்படுகிறீர்களா? உங்கள் பிரச்சினைகளை விரைவில் சரி செய்யுங்கள். நீங்கள் ஒத்துப்போகாமைக்கு அழைக்கப்படவில்லை. உங்கள் பகுதிகளில் நற்செய்தியை பரப்பும்படி உங்கள் ஆண்டவர் உங்களை அழைத்துள்ளார். உங்கள் இருதயக் கடினம் மற்றும் பெருமையினால் கிறிஸ்துவின் வெற்றிப்பவனியின் வளர்ச்சியை நீங்கள் தடுக்க எண்ணுகிறீர்களா?

விண்ணப்பம்: ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே, உமது வார்த்தையை பிரசங்கிப்பதில் ஏற்படும் ஒவ்வொரு தாமதத்திற்காக எங்களை மன்னியும். எங்கள் சபைகளில் ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்க்க போதுமான விவேகம் இல்லாமைக்காக எங்களை மன்னியும். எங்கள் பெருமை மற்றும் இருதயக்கடினத்தில் தொடர்ந்திராதபடி எங்களுக்கு உதவும். எங்கள் சொந்த பெருமையை நாங்கள் தேடாதபடி உதவும். உம்முடைய ராஜ்யத்தின் நற்செய்தியை இணைந்து பரப்ப உதவும். உமது நாமத்தை மகிமைப்படுத்தும். எங்கள் பகுதி மக்கள் இரட்சிக்கப்படும்படி உமது வெற்றிப்பவனிக்கு அவர்களை அழைத்தருளும்.

www.Waters-of-Life.net

Page last modified on October 07, 2013, at 10:47 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)