Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Acts - 035 (Description of the Days of the Patriarchs)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Azeri -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- French -- Georgian -- Greek -- Hausa -- Igbo -- Indonesian -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Turkish -- Urdu? -- Uzbek -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

அப்போஸ்தலர் - கிறிஸ்துவின் வெற்றி பவனி
அப்போஸ்தலர் நடபடிகளிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 1 - எருசலேம், யூதேயா, சமாரியா மற்றும் சிரியா ஆகிய பகுதிகளில் இயேசு கிறிஸ்துவின் திருச்சபை அடித்தளமிடல் - பரிசுத்த ஆவியினால் வழிநடத்தப்பட்ட அப்போஸ்தலனாகிய பேதுருவின் திருப்பணி (அப்போஸ்தலர் 1 - 12)
அ - எருசலேமில் ஆதித்திருச்சபையின் தோற்றமும் வளர்ச்சியும் (அப்போஸ்தலர் 1 - 7)
21. ஸ்தேவானின் தன்னிலை வாதம் (அப்போஸ்தலர் 7:1-53)

அ) முற்பிதாக்களின் நாட்களைக் குறித்த விபரம் (அப்போஸ்தலர் 7:1-19)


அப்போஸ்தலர் 7:9-16
9 அந்தக் கோத்திரப்பிதாக்கள் பொறாமைகொண்டு யோசேப்பை எகிப்துக்குக் கொண்டுபோகும்படியாக விற்றுப்போட்டார்கள்.10 தேவனோ அவனுடனேகூட இருந்து, எல்லா உபத்திரவங்களினின்றும் அவனை விடுவித்து, எகிப்தின் ராஜாவாகிய பார்வோன் சமுகத்திலே அவனுக்குக் கிருபையையும் ஞானத்தையும் அருளினார்; அந்த ராஜா அவனை எகிப்துதேசத்திற்கும் தன் வீடனைத்திற்கும் அதிகாரியாக ஏற்படுத்தினான்.11 பின்பு எகிப்து கானான் என்னும் தேசங்களிலெங்கும் பஞ்சமும் மிகுந்த வருத்தமும் உண்டாகி, நம்முடைய பிதாக்களுக்கு ஆகாரம் கிடையாமற்போயிற்று.12 அப்பொழுது எகிப்திலே தானியம் உண்டென்று யாக்கோபு கேள்விப்பட்டு, நம்முடைய பிதாக்களை முதலாந்தரம் அனுப்பினான்.13 இரண்டாந்தரம் யோசேப்பு தன்னுடைய சகோதரருக்குத் தன்னைத் தெரியப்படுத்தினான். யோசேப்புடைய வம்சமும் பார்வோனுக்குத் தெரியவந்தது.14 பின்பு யோசேப்பு, தன்னுடைய தகப்பன் யாக்கோபும் தன்னுடைய இனத்தார் யாவருமாகிய, எழுபத்தைந்துபேரை அழைக்க அனுப்பினான்.15 அந்தப்படி யாக்கோபு எகிப்துக்குப் போனான். அவனும் நம்முடைய பிதாக்களும் மரித்து, 16 அங்கேயிருந்து சீகேமுக்குக் கொண்டுவரப்பட்டு, ஆபிரகாம் சீகேமின் தகப்பனாகிய ஏமோருடைய சந்ததியாரிடத்தில் ரொக்கக்கிரயத்துக்கு வாங்கியிருந்த கல்லறையில் வைக்கப்பட்டார்கள்.

ஸ்தேவான் இறையியல் சொற்பொழிவினால் தனது இறைபக்தியை தற்காத்துக்கொள்ள முயலவில்லை அவன் நா வன்மையுடன் பேசவும் இல்லை. மாறாக அவன் ஆலோசனைச் சங்கத்து அதிகாரிகள் முன்பு வேதாகம விசுவாசத்தை நிரூபித்தான். அந்த நாட்டு மக்கள் அனைவரும் இருதயத்தில் நன்கு அறிந்து வைத்திருந்த வசனங்களை கொண்டு பேசினான். அவருடைய மக்களின் வரலாற்று நிகழ்ச்சிகள் அனைத்தையும் அவன் கூற முற்படவில்லை. புதிய உடன்படிக்கையின் அர்ததத்தை உறுதிப்படுத்தக்கூடிய முக்கியமாய் தோன்றிய காரியங்களை தேர்ந்தெடுத்து பேசினான். அதன் மூலம் இயேசு கிறிஸ்து என்னும் நபரைக் குறித்து தெளிவுப்படுத்தினான்.

இறைவனின் கிருபை மற்றும் விருத்தசேதன உடன்படிக்கை மூலம், இறைவனால் தெரிந்தெடுக்கப்பட்ட ஆபிரகாம் மீது ஸ்தேவான் கவனம் செலுத்தினான். கிறிஸ்துவில் நிறைவேறியதும், செயல்களினால் அல்ல, கிருபையினால் அஸ்திபாரம் போடப்பட்டதுமான புதிய உடன்படிக்கையை விளக்கும் பொருட்டு அப்படிச் செய்தான். மேலும் யோசேப்பின் வாழ்க்கையின் மூலம் அவன் இதை தெளிவுப்படுத்தினான். கிறிஸ்துவிற்கு ஓர் அடையாளமாக அவனைக் காண்பித்தான்.

அவனுடைய சகோதரர்கள் அவன் மீது பொறாமை கொண்டார்கள். அவன் இளைஞனாய் இருந்தான். மற்ற அனைவரும் அனுபவமிக்கவர்களாயிருந்தார். யோசேப்பின் தகப்பன் அவனை பட்சமாய் நடத்தினான். மற்றவர்கள் மீது பாரபட்சம் காட்டினான். இதைப்போலவே கிறிஸ்து விரும்பப்படத்தக்கவராக இல்லை. அவருடைய மக்கள் மத்தியில், மூத்த சகோதரர்கள் அவன் மீது பொறாமை கொண்டார்கள். பரலோகத்தில் இருக்கும் அவருடைய பிதாவானவர் அவருக்கு வியாதிகள், பிசாசுகள் மற்றம் மரணத்தின் மீது இயற்கைக்கு அப்பாற்பட்ட வல்லமையைக் கொடுத்திருந்தார். எனவே நாசரேத்தூரின் இந்த தேசிய வேதபாரகரைத் தேடி மக்கள் கூட்டம் விரைந்தது. தலைநகரமாகிய எருசலேமின் பிரதான ஆசாரியர்கள், வேதபாரகர்களைவிட இந்த மக்கள் அதிகமாக அவரைக் கனப்படுத்தினார்கள்.

யோசேப்பின் பத்து சகோதரர்கள் அவனைக் கட்டி, குழியில் போட்டு, பின்பு மிகக் குறைந்த விலைக்கு அரேபிய நாடோடி வியாபாரிகளிடம் அவனை விற்றுப்போட்டார்கள். தேசத்தின் தலைவர்களும் கிறிஸ்துவைக் கொல்லும்படி ரோமர்களின் கையில் ஒப்புக்கொடுத்தார்கள். அவரைக் கல்லறைக் குழிக்குள் போட்டார்கள். முற்றிலும் அழிக்க முற்பட்டார்கள். சகோதரர்களின் வெறுப்பு யோசேப்பின் மீது உச்சக்கட்டத்தை அடைந்தது போல, யூதர்களின் வெறுப்பும் இயேசுவின் மீது உச்சக்கட்டம் அடைந்து, அவரை சிலுவையில் அறையும்படி செய்தது.

இருப்பினும் அந்த அந்நிய தேசத்தில் இறைவன் யோசேப்புடன் இருந்தார். அவர் மரணத்தின் போது கிறிஸ்துவுடன் இருந்தார். இறைவன் அவரை மரணத்தில் இருந்து எழுப்பினார். அவருக்கு மறுபடியும் ஜீவனைக் கொடுத்தார். சோதனைக்காலம் முடிந்த பின்பு பார்வோன் யோசேப்பை உயர்த்தினான். அவனுடைய ராஜ்யத்தில் தனக்கு அடுத்த படியான இரண்டாம் நிலைக்கு அவனை கொண்டு வந்தான். தன்னுடைய ராஜ்யம் அனைத்திற்கும் அவனை அதிபதியாக மாற்றினான். இறைவன் இயேசுவையும் உயர்த்தினார். தன்னுடைய வலது பாரிசத்தில் அவரை உட்காரும்படி செய்தார். பரலோகத்திலும், பூலோகத்திலும் அவருக்கு அனைத்து அதிகாரத்தையும் கொடுத்தார். நம்முடைய அனுதின ஆகாரம் அவருடைய கரத்தில் இருந்து நமக்கு கிடைக்கிறது. சகல மகிமைக்கும் பாத்திரராகிய அவர் கூறுகிறார். “என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக் கூடாது”. (யோவான் 15:5)

வாக்குத்தத்தத்தின் பிள்ளைகள் தங்களது கனத்திற்குரிய சகோதரரை விட்டு தூரம் போனவர்களாக இருந்தார்கள். அவர்கள் யோசேப்பை அறியவில்லை. ஆனால் யோசேப்பு அவர்களை அறிந்தான். அவர்களது முதல் சந்திப்பில் அவர்களுக்கு உதவினான். தான் யார் என்பதை அவர்களுக்கு வெளிப்படுத்தவில்லை. இரண்டாவது சந்திப்பில் அவர்களுக்கு தனது மகிமையுடன் தன்னை வெளிப்படுத்தினான். சகோதரர்கள் மிகவும் பயத்துடன் அவனை அணுகினார்கள். தொலைத்து ஒழிக்கப்பட, தாங்கள் விற்றுப்போட்ட தங்களது சகோதரர் தானியத்தை வழங்குபவராகவும். எகிப்தின் ஆளுநராகவும் இருப்பதைக் கண்டார்கள். இதைப் போல கடின இருதயம் கொண்ட தனது நாட்டு மூப்பர்களுக்கு மீண்டும் ஒருமுறை இயேசு தன்னை வெளிப்படுத்திக் காண்பிக்க வேண்டும் என்று ஸ்தேவான் விரும்பினார். அவர்கள் புறக்கணித்து, பாடுகளுக்குட்படுத்தியவருக்கு முன்பாக பயத்துடன் விழுந்து அவரை நடுக்கத்துடன் ஆராதிப்பார்கள் என்று ஸ்தேவான் எதிர்பார்த்தான்.

பயத்துடன் சகோதரர்கள் தவறை உணர்ந்து, தங்களுடைய தகப்பனிடத்திற்கு திரும்பிப் போனார்கள். அதுபோல ஆலோசனைச்சங்கத்து எழுபது மூப்பர்களும் திரும்பிச்சென்று தங்கள் நாட்டு மக்களுக்கு இறைவனின் குமாரன் உயிரோடிருப்பதையும் அவர்களுடைய சகோதரர் மகிமையில் உயர்த்தப்பட்டிருப்பதையும் கூறுவார்கள் என்று ஸ்தேவான் எதிர்பார்த்தான். “நாங்கள் அவரைக் கொன்றோம், ஆனால் இறைவன் அவரை எழுப்பினார். அவரை உன்னதத்திற்கு உயர்த்தினார். நாம் அனைவரும் பாதகர்கள் , எல்லோரும் வாருங்கள். நாம் அனைவரும் முழுமையாகவும், மனப்பூர்வமாகவும் மனந்திரும்புவோம்”. யாக்கோபும் அவருடைய குடும்பத்தின் எழுபத்தைந்து நபர்களும் இணைந்து யோசேப்பிடம் வந்தததைப்போல, யூதமக்களும் இயேசுவிடம் திரும்பி வருவார்கள், அவரை பணிந்துகொள்வார்கள், அவரை ஆராதிப்பார்கள் என்று ஸ்தேவான் நம்பினான். மகிமை நிறைந்த ஆளுநர் யோசேப்பு, தன்னுடைய தகப்பனின் முன்பு பணிந்து அவரை முத்தஞ்செய்து, பார்வோனுக்கு அவரை அறிமுகம் செய்ததைப் போல தீமை நிறைந்த தனது நாட்டு மக்கள் தூய்மைப்படுத்தப்படவும், பரிசுத்தமாக்கப்படவும், தன்னுடைய பரலோகப் பிதாவிடம் அறிமுகம் செய்ய, கிறிஸ்து பிதா முன்பாக தன்னை தாழ்த்தினார்.

எப்படியிருப்பினும் ஸ்தேவான் கேளாத காதுகள் உடையதோருக்கு பிரசங்கம் பண்ணினான். நீதிபதிகளின் இருதயங்கள் கடினப்பட்டது. அவர்கள் பரிசுத்த ஆவியானவரின் இரக்கம் நிறைந்த சத்தத்தை கேட்கவில்லை. ஆனால் நகைப்புடன் பேசுபவரின் வார்த்தைகளில் தவறு இருப்பதை கண்டுபிடித்தார்கள். யாக்கோபு ஆபிரகாமின் கல்லறையில் அடக்கம்பண்ணப்பட்டார் என்று ஸ்தேவான் கூறினான். ஆபிரகாம் தான் வாங்கிய நிலத்தில் எபிரோனில் அடக்கம்பண்ணப்பட்டார். ஆனால் யாக்கோபு நப்லஸ் அருகில் உள்ள சீகேமில் அடக்கம்பண்ணப்பட்டார். ஸ்தேவானின் காலத்தில் வேறுபட்ட விபரங்களும், இந்த வசனங்களைக் குறித்து வேறுபட்ட வியாக்கியானங்களும் இருந்தது. நீதிபதிகள் ஸ்தேவானின் சாட்சியின் போது இடையில் குறுக்கிடவில்லை. அவனுடைய தவறு முக்கியமானது என்றோ அல்லது ஆராயப்பட வேண்டிய ஒன்று என்றோ அவர்கள் கருதவில்லை. (ஆதியாகமம் 23:16-17; 23:18; 50:13; யோசுவா 24:32)

விண்ணப்பம்: பரலோகப்பிதாவே, நாங்கள் உமக்கு நன்றி கூறுகிறோம். நீர் உமது ஒரேபேறான குமாரனை எங்களுக்காக அனுப்பினீர். உமது மகிமையை அவரில் வெளிப்படுத்தினீர். எங்கள் இருதயக் கடினத்திற்காக எங்களை மன்னியும். உமது பரிசுத்த ஆவியினால் எங்களை நிரப்பும் நீர் எங்களில் தங்கி இருப்பதை நாங்கள் அப்போது அனுபவிப்போம். நாங்கள் அந்நிய நிலத்தில் இருந்தாலும் எங்கள் மூலமாக கிரியை செய்யும்.

கேள்வி:

  1. இயேசு கிறிஸ்துவின் மாதிரியாக யோசேப்பு எப்படி இருந்தார்?

www.Waters-of-Life.net

Page last modified on July 02, 2013, at 09:36 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)