Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Romans - 020 (Circumcision is Spiritually Unprofitable)
This page in: -- Afrikaans -- Arabic -- Armenian -- Azeri -- Bengali -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- French -- Georgian -- Greek -- Hausa -- Hebrew -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Malayalam -- Polish -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Turkish -- Urdu? -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

ரோமர் - கர்த்தரே நம்முடைய நீதி
ரோமருக்கு பவுல் எழுதின நிரூபத்திலிருந்து வேதபாடங்கள்
பகுதி 1 - இறைவனுடைய நீதி எல்லாப் பாவிகளையும் நியாயந்தீர்க்கிறது, கிறிஸ்துவுக்குள் எல்லா விசுவாசிகளையும் நீதிக்குட்படுத்துகிறது, பரிசுத்தப்படுத்துகிறது. (ரோமர் 1:18-8:39)
அ - முழு உலகமும் துன்மார்க்கத்தின் கீழ் இருக்கிறது. இறைவன் அனைவரையும் தமது நீதியோடு நியாயந்தீர்க்கிறார் (ரோமர் 1:18-3:20)
2. யூதர்களுக்கு விரோதமாக இறைவனுடைய கோபாக்கினை வெளிப்படுகிறது (ரோமர் 2:1 – 3:20)

ஈ) விருத்த சேதனத்தினால் ஆவிக்குரிய பயன் ஒன்றுமில்லை (ரோமர் 2:25-29)


ரோமர் 2:25-29
25 நீ நியாயப்பிரமாணத்தைக் கைக்கொண்டு நடந்தால் விருத்தசேதனம் பிரயோஜனமுள்ளதுதான்; நீ நியாயப்பிரமாணத்தை மீறி நடந்தால் உன் விருத்தசேதனம் விருத்தசேதனமில்லாமையாயிற்றே. 26 மேலும் விருத்தசேதனமில்லாதவன் நியாயப்பிரமாணத்துக்கேற்ற நீதிகளைக் கைக்கொண்டால், அவனுடைய விருத்தசேதனமில்லாமை விருத்தசேதனம் என்றெண்ணப்படுமல்லவா? 27 சுபாவத்தின்படி விருத்தசேதன மில்லாதவனாயிருந்தும் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்று கிறவனாயிருந்தால், அவன் வேத எழுத்தும் விருத்தசேதனமும் உள்ளவனாயிருந்தும், நியாயப்பிரமாணத்தை மீறுகிற உன்னைக் குற்றப்படுத்துவானல்லவா? 28 ஆதலால் புறம்பாக யூதனானவன் யூதனல்ல, புறம்பாக மாம்சத்தில் செய்யப்படும் விருத்தசேதனமும் விருத்தசேதனமல்ல. 29 உள்ளத்திலே யூதனானவனே யூதன்; எழுத்தின்படி உண்டாகாமல், ஆவியின்படி இருதயத்தில் உண்டாகும் விருத்தசேதனமே விருத்தசேதனம்; இப்படிப்பட்டவனுக்குரிய புகழ்ச்சி மனுஷராலே அல்ல, தேவனாலே உண்டாயிருக்கிறது.

நியாயப்பிரமாணத்தின் மக்கள் மற்றும் மக்களுக்கு உபதேசிப்பவர்களாகிய யூத மார்க்கத்தில் இருந்து வந்த விசுவாசிகளின் பெருமையை பவுல் உடைத்தெறிந்தான். அவர்களில் சிலர் கூறுவதை பவுல் தனது ஆவியில் உணர்ந்தான். “ஆமாம் நாங்கள் தவறுள்ளவர்கள். ஏனெனில் இறைவனைத் தவிர வேறு எவரும் பரிபூரணர் அல்ல. நாங்கள் உன்னதமானவர் தந்தருளிய விருத்தசேதன வாக்குத்தத்தத்தை பெற்றிருக்கிறோம். இது எங்கள் பிதாவாகிய ஆபிரகாமுடன் மற்றும் அவனுடைய எல்லா சந்ததியுடன் அவர் ஏற்படுத்திய நியாயப்பிரமாணத்தின் அடையாளம் ஆகும். நாங்கள் எங்கள் நீதியின் நிமித்தம் அல்ல, அவர் எங்களை தெரிந்துகொண்டதால், அவருக்குச் சொந்தமானவர்களாக இருக்கிறோம்.

(வசனம் 25) மோசேயின் நியாயாப்பிரமாண போதனைகளில் தேர்ந்தவனாக பவுல் இருந்தான். ஆபிரகாமுடனான உடன்படிக்கை நியாயப்பிரமாணத்தை ஒன்றுமில்லாமல் ஆக்காது என்று அவன் பதிலளித்தான். ஏனெனில் அந்த உடன்படிக்கை நியாயப்பிரமாணத்தை சார்ந்தது. அதைப் போல நியாயப்பிரமாணமும் உடன்படிக்கையைச் சார்ந்தது. ஆண்டவர் ஆபிரகாமுடன் தெளிவாகக் கூறினார். “……..” (ஆதியாகமம் 17:1) உடன்படிக்கைளை உறுதிப்படுத்துவதற்கான நிபந்தனை தான் இந்த வசனம். ஆபிரகாம் முதலாவது வாக்குத்தத்தத்தை நம்பாமல், இறைவனுடைய வழிநடத்துதலின்றி, இஸ்மாயில் என்ற முதல் மகனை எகிப்திய அடிமையிடம் பெற்றெடுத்தான்.

இவ்விதமாய், நியாயப்பிரமாணம் இல்லாமல் உடன்படிக்கை இல்லை என்று ரோமாபுரியில் இருந்து யூத மார்க்கத்து கிறிஸ்தவர்களுக்கு பவுல் நிரூபித்தான். நியாயப்பிரமாணத்தின் கட்டளைகளை கைக்கொள்ளாமல், விருத்தசேதனத்தினால் ஒரு பயனுமில்லை. கொள்கையளவில், விருத்தசேதனம் என்பது ஒரு நல்ல அடையாளம் என அவன் கண்டான். இறைவன் பாவியை பரிசுத்தம்பண்ணுகிறார். அப்போது விசுவாசியும், அவனுடைய சந்ததியும் இறைவனுக்கு கீழ்ப்படிகிறார்கள்.

உடன்படிக்கையின்படி வாழ முற்படும்போது, இறைவனுடைய சித்தத்திற்கு கீழ்ப்படியும் போது மட்டுமே இந்த விதி பொருந்துகிறது. ஒரு விசுவாசி கட்டளைகளை மீறும்போது, இறைவனுக்கு எதிராக அக்கிரமங்களை செய்யும்போது, விருத்தசேதனம் பெற்றிருந்தாலும், அவன் விருத்தசேதனம் இல்லாதவனாக கருதப்படுகிறான். அவன் இறைவனுக்கு தூரமானவன். அவருக்கு அந்நியன்.

(வசனம் 26) ஒரு புறவினத்தான் பரிசுத்த ஆவியின் வல்லமையினால் நியாயப்பிரமாணத்தை கற்றுக்கொண்டு, அதைக் கடைப்பிடித்தால், அவன் சரீர விருத்தசேதனம் பெறாதிருந்தும், விருத்தசேதனம் உள்ளவனாக இறைவனால் கருதப்படுவான். அவன் நியாயப்பிரமாணத்திற்கு உட்பட்டவன், நித்தியத்திலிருந்து தெரிந்தெடுக்கப்பட்டவன். தெரிந்துகொள்ளப்பட்டவர்களை கொண்டுவரவும், புதுப்பிக்கவே இறைவன் உடன்படிக்கையை ஏற்படுத்தியுள்ளார். பழைய உடன்படிக்கைக்குள் வராமலேயே, தன்னுடைய நடத்தையின் மூலம் ஒழுக்கத்தை வெளிப்படுத்துகிறவர்கள், உடன்படிக்கைக்குட்பட்டவர்கள் என்று கருதப்படுகிறார்கள்.

(வசனம் 27) ஒரு யூதனைப் பொறுத்தமட்டில் நியாயப்பிரமாணத்தை மீறுபவன் இறைவனின் பார்வையில் விருத்தசேதனமில்லாதவனாக கருதப்படுகிறான். ஒரு புறவினத்தான் உண்மையான யூதனைப் போல நியாயப்பிரமாணத்தின் கட்டளைகளை கடைப்பிடிக்கிறான். சரீர விருத்தசேதனம் இல்லாத அவன் நியாயத்தீர்ப்பின் போது யூதனுக்கு மேல் அமர்ந்திருக்கிறான். யூதனுக்கு சரீர தகுதிகள் இருந்தும், கீழ்ப்படிதலின் வழி இல்லை. விருத்தசேதனத்தின் அடையாளம் மனிதனை இரட்சிப்பது இல்லை. மனிதனுடைய பரிசுத்தமான வாழ்வு மற்றும் நடத்தை, அவன் இறைவனுடன் நெருங்கியுள்ளதை காண்பிக்கிறது. இறைவனின் வல்லமை அவனுடைய பெலவீனத்தின் மத்தியிலும் வெளிப்படுகிறது.

(வசனம் 28) யூத பாரம்பரியத்தை குறி வைத்து பவுல் தாக்கிய பிற்பாடு, “யூதன்” என்ற பெயருக்குரிய விளக்கத்துடன் வருகிறான். யூதன் என்பவன், யூத பாரம்பரியத்தில் இருந்து பிறந்தவன், எபிரெய மொழி பேசுபவன், வளைந்த மூக்கை உடையவன், அல்லது நியாயப்பிரமாணத்தை ஏற்றுக்கொண்டு, விருத்தசேதனம் செய்து இறைவனின் பார்வையில் யூதனாக இருப்பவன் அல்லது சனிக்கிழமைகளில் விண்ணப்பம் செய்கிறவன் அல்ல. இறைவனால் ஏற்றுக்கொள்ளப்படுகிற யூதன் என்பவன் அன்பு, தாழ்மை, பரிசுத்தம் மற்றும் பரிபூரணம் இவைகளினால் இறைவனை நெருங்கிச் சேர்பவன் ஆவான். இந்த ஆவிக்குரிய நியதியின்படி இயேசு மட்டுமே ஒரே பரிபூரணமான யூதன் ஆவார். ஏனென்றால் அவர் வெளித்தோற்ற யூதர்களுக்கு எதிராக இருந்தார். அவர்கள் மாய்மாலத்தினால் அவரை சிலுவையில் அறைந்தார்கள். ஆபிரகாமின் மக்கள் இன்று வரை இயேசுவின் மக்களை உபத்திரவப் படுத்துகிறார்கள். பவுல் “யூதன்” என்பதற்கு குறிப்பிடும் அர்த்தம், நம்முடைய மனங்களில் மாற்றத்தை கொண்டுவருகிறது.

(வசனம் 29) விருத்தசேதனம் என்பது இறைவன் ஒரு நாடு அல்லது விசுவாசிக்கு மட்டும் சொந்தமானவர் என்பதற்கான அடையாளம் அல்ல. பரிசுத்த வேதாகமத்தில் நூறு முறைகள் எழுதப்பட்டிருந்தாலும், இறைவன் தமது உடன்படிக்கையில் சோம்பேறி பங்காளர்களை விரும்புகிறதில்லை. ஆனால் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டு, புதுப்பிக்கப்பட்ட இருதயங்கள் உள்ளவர்களை நேசிக்கிறார். இறைவனின் பார்வையில் மறுபடியும் பிறந்தவன் மட்டுமே உடன்படிக்கையின் பங்காளியாக கருதப்படுகிறான். நிறைந்த ஆசீர்வாதங்களுடன் தமது ஆவியின் கனிகளை கொண்டு வருகிற மக்கள் அனைவரையும் ஆசீர்வதிக்கிறார். தங்களை யூதர்கள் அல்லது கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக் கொண்டு கிறிஸ்துவின் அன்பின் ஆவிக்கு எதிராக இருப்போர், உண்மையாகவே இறைவனை நம்பினாலும், அவரால் ஏற்றுக்கொள்ளப்படமாட்டார்கள். தன்னுடைய எதிரிகளாக அவர்களை கருதுவார். அவர் அவர்களுடைய நியாயாதிபதியாக இருப்பார்.

விண்ணப்பம்: பரிசுத்தமான இறைவனே, நாங்கள் உமக்கு நன்றி கூறுகிறோம். நீர் கடந்த காலத்தில் உமது நெருங்கிய சிநேகிதன் ஆபிரகாமுடன் நட்பு கொண்டிருந்தீர். விருத்தசேதனத்தின் அடையாளத்தினால் அவருடைய பிள்ளைகள் இருந்தார்கள். உமது புதிய உடன்படிக்கையில் நீர் எங்களை ஏற்றுக்கொண்டதற்காக நாங்கள் உமக்கு நன்றி கூறுகிறோம். நாங்கள் பரிசுத்தத்தில் முழுமையாக நடக்கவில்லை. எனவே எங்களை மன்னியும். எங்கள் இருதயம் விருத்தசேதனம் பண்ணப்படவும், புதுப்பிக்கப்படவும் கிருபை செய்யும். எல்லா அந்நிய ஆவிகளில் இருந்தும் எங்களை தூய்மைப்படுத்தும். எங்களுக்கு தாழ்மையையும், கிறிஸ்துவின் அன்பையும் தாரும். எல்லா நேரங்களிலும் நாங்கள் உம்மை பின்பற்றச் செய்யும்.

கேள்வி:

  1. பழைய மற்றும் புதிய ஏற்பாடுகளில் விருத்தசேதனத்தின் அர்த்தம் என்ன?

உன் மனக்கடினத்திற்கும் குணப்படாத இருதயத்திற்கும் ஏற்றபடி, தேவனுடைய
நீதியுள்ள தீர்ப்பு வெளிப்படும் கோபாக்கினைநாளிலே உனக்காகக்
கோபாக்கினையைக் குவித்துக்கொள்ளுகிறாயே. தேவன் அவனவனுடைய
கிரியைகளுக்குத்தக்கதாய் அவனவனுக்குப் பலனளிப்பார்.

(ரோமர் 2:5-6)

www.Waters-of-Life.net

Page last modified on August 07, 2021, at 06:08 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)