Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- John - 118 (Jesus appears to Mary Magdalene)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Bengali -- Burmese -- Cebuano -- Chinese -- Dioula? -- English -- Farsi? -- French -- Georgian -- Greek -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Kyrgyz -- Malayalam -- Peul -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Thai -- Turkish -- Twi -- Urdu -- Uyghur? -- Uzbek -- Vietnamese -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

யோவான் - வெளிச்சம் இருளில் ஒளிர்கிறது
யோவான் எழுதின கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 4 - ஒளி இருளை மேற்கொள்ளுகிறது (யோவான் 18:1 – 21:25)
ஆ - கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் மற்றும் தரிசனமாகுதல் (யோவான் 20:1 - 21:25)
1. பஸ்காவின் அதிகாலை நிகழ்ச்சிகள் (ஈஸ்டர்) (யோவான் 20:1-10)

இ) இயேசு மகதலேனா மரியாளுக்கு காட்சியளிக்கிறார் (யோவான் 20:11-18)


யோவான் 20:17-18 17 இயேசு அவளை நோக்கி: என்னைத் தொடாதே, நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறிப்போகவில்லை; நீ என் சகோதரரிடத்திற்குப் போய், நான் என் பிதாவினிடத்திற்கும் உங்கள் பிதாவினிடத்திற்கும், என் தேவனிடத்திற்கும் உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப்போகிறேன் என்று அவர்களுக்குச் சொல்லு என்றார்.18 மகதலேனாமரியாள் போய், தான் கர்த்தரைக் கண்டதையும், அவர் தன்னுடனே சொன்னவைகளையும் சீஷருக்கு அறிவித்தாள்.

மரியாள் இயேசுவைப் பணிந்து அவர் முன்பாக விழுந்து, அவருடைய பாதத்தை முத்தமிட முயற்சி செய்தாள். அவரை ஒரு போதும் விடாதிருக்க, அவரைப் பற்றிக் கொள்ள முயன்றாள். தன்னை அவள் தொடுவதை இயேசு தடை செய்தார். ஏனெனில் அவருடைய அன்பு ஆவிக்குரியது. தனது சத்தம் மற்றும் பிரசன்னத்தை அவர் அவளுக்கு வழங்கினார். பரிசுத்த திரியேகத்தில் அவள் ஐக்கியம் கொண்டு விசுவாசத்தில் வளர விரும்பினார். தம்முடைய சீடர்களுடன் உரையாடி அவர்களை விட்டு பிரிந்து சென்றபோது அவர் இதை தெளிவுபடுத்தினார். அவரைத் தொடுவதோ அல்லது பற்றிக் கொள்வதோ, அவருடன் நமக்கு உறவை ஏற்படுத்தாது. அவரது ஆவிக்குரிய ஆள்த்துவத்தில் கொண்டுள்ள நமது விசுவாசமே நம்மை அவருடன் இணைக்கும்.

இயேசு மரணத்திற்குப் பின்பு இந்தப் பூமியில் தொடர்ந்திருக்க மாட்டார் என்பதை அவளுடன் கூறினார். அவரது தோற்றம் மறுரூப மடைந்ததாய் இருந்தது. அவரது பயணத்தின் முடிவு பரலோகம் ஆகும். அவருடைய நோக்கம் பரமேறுதல் ஆகும். அவருடைய பிதாவிடம் திரும்பிச் செல்ல வேண்டும். சிலுவையில் தன்னைத் தானே பலியாகக் கொடுத்த பிறகு இறைவனிடம் செல்வதற்கான வழி திறந்திருந்தது. பரிசுத்தமானவருக்கு இரத்தத்தினால் ஆகிய பலியை செலுத்தும்படி இந்த பிரதான ஆசாரியர் தீர்மானித்தார். அவர் மரியாளிடம் சொன்னார், “என்னைத் தொடாதே, நான் எல்லா நீதியையும் நிறைவேற்ற வேண்டியுள்ளது. நான் உனக்காகப் பரிந்து பேசுவேன், உன்னை ஆவியின் வல்லமையினால் நிரப்புவேன்.

அவர் அவளுக்கு மாத்திரம் சொந்தமானவரில்லை என்பதை அவருடைய வார்த்தைகள் வெளிப்படுத்தியது. அவர் எல்லா மனுக்குலத்திற்கும் சொந்தமானவர். “என்னுடைய சீஷர்களிடத்தில் திரும்பிப் போய் எனது உயிர்த்தெழுதல், நோக்கம் மற்றும் பரமேறுதல் குறித்து தெரிவிக்க வேண்டும் என்றார்.

மரியாளின் மூலமாக சீஷர்களுக்கு சொன்ன இந்த செய்தியின் மூலம், அவர் அவர்களை தேற்றினார். அவர் அவர்களை சகோதரர்கள் என்று அழைத்தார். விசுவாசத்தின் மூலம் நாம் அவருடைய சகோதர, சகோதரிகளாக மாறுகிறோம். அவருடைய சிலுவை மரணம், உயிர்த்தெழுதல், அழியாமையுள்ள ஜீவன் மூலம் இது நடைபெறுகிறது. பிரியாமானவர்களே என்று மட்டுமல்லாமல், சகோதரர்களே என்று அவர் அழைக்கிறார். இரட்சிப்பின் பணி நிறைவேறி முடிந்தது. நாம் அவரால் தத்தெடுக்கப்பட்டு, நம்முடைய உரிமைகளில் நிலைநாட்டப்பட்டுள்ளோம். இறைவனின் பிள்ளைகள் என்ற பத்திரத்தில் தம்முடைய இரத்தத்தினால் அவர் கையெழுத்திட்டார்.

மரியாள் சீஷர்களுக்குச் சொன்ன அந்தச் செய்தியின் முக்கிய கருத்து என்ன? முதலாவது அவர் உயிருடன் இருக்கிறார் என்பதாகும். அவள் அவரை சந்தித்தது ஒரு வரலாற்று உண்மை. இரண்டாவது அவருடைய பிதா நம்முடைய பிதாவாகவும் இருக்கிறார். இயேசு வாக்குத்தத்தினால் இறைவனுடன் பரிபூரணமான ஐக்கியத்திற்கு நமது சீஷர்களை அழைக்கிறார். தூரத்திலிருக்கும் வல்லமை மிக்க, நியாயதிபதியைப் போன்ற இறைவனாக அவர் பேசுகிறதில்லை. ஆனால் அருகிலிருக்கும் அன்புள்ள பிதாவாக உள்ளார்.

அவர் கிறிஸ்துவினுடைய பிதா மாத்திரமல்ல, நம்முடைய பிதாவாகவும் இருக்கிறார். அவருடைய எல்லாமுமான பிதாவை அவர் “என் இறைவனே” என்று அழைத்தார். முழு படைப்பும் பாவத்தினால் இறைவனை விட்டுப் பிரிந்தபோது, அவர் பிதாவிற்கு உண்மையுள்ளவராக தொடர்ந்து இருந்தார். நம்முடைய முந்தைய பாவத்தினால் அவர் நமக்கு எதிரியாக இருக்கவில்லை. அவர் நம்மை நேசிக்கிறார். சிலுவையின் பலியினால் அவர் நம்மை மன்னிக்கிறார். அவர் பிதாவுடன் ஐக்கியத்தில் நிலைத்திருப்பது போல நாமும் பரிசுத்த ஆவியானவர் பொழிந்தருளப்படுவதால் திரியேகத்துவ ஐக்கியத்தில் நிலைத்திருக்க வேண்டும் என்று விரும்புகிறார். நம்மிலிருந்து அன்பு பாய்ந்தோட வேண்டும்.

மரணத்தை கிறிஸ்து வென்ற பின்பு பெண்கள் முதலாவது அவரை பார்த்தார்கள். ஐக்கியத்தின் வாக்குத்தத்தத்தை அவர்களின் உதடுகளில் கிறிஸ்து வைத்தார். அவள் கீழ்ப்படிந்தாள். சந்தோஷத்தினால் தொடர்ந்து இயேசுவின் பாதத்தில் அவள் விழுந்து கிடக்கவில்லை. அவள் எழுந்து, அப்போஸ்தலர்களிடம் இந்த உண்மையை சாட்சி பகரும்படி ஒடினாள். மகிழ்ச்சியுள்ள எக்காள சத்தம் போல இச் செய்தி இருந்தது. நமது துக்கமுள்ள இருதயங்களை இன்று இது மகிழ்ச்சியால் நிரப்புகிறது. இந்த மகிழ்ச்சி உங்களிடம் உண்டா? நீங்கள் புத்துணர்வை பெற்றுள்ளீர்களா? மரியாளின் இந்த செய்தி கிறிஸ்துவின் உயிர்தெழுதலைப் பற்றிய முதலாவது வெற்றிப்பிரகடனச் செய்தி என்பதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா?.

விண்ணப்பம்: நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். கர்த்தராகிய இயேசுவே, நீர் மரணத்தை வென்று உயிர்த்தெழுந்து எங்களுடன் வாசம்பண்ணுகிறீர், எங்களை சகோதரர்கள் என்று அழைக்கிறீர். உம்முடன் நெருக்கமான ஐக்கியத்தில் வாழ நாங்கள் தகுதியானவர்கள் அல்ல. எங்கள் பாவங்களை நீர் மன்னித்ததற்காக உமக்கு நன்றி கூறுகிறோம். உம்மைத் தேடுகிற எங்கள் அனைவரையும் உமது மகிழ்ச்சியின் அப்போஸ்தலர்களாக உருவாக்கும்.

கேள்வி:

  1. மகதலேனா மரியாளின் மூலம் நமக்கு கூறப்படும் செய்தி என்ன?

www.Waters-of-Life.net

Page last modified on August 29, 2012, at 10:29 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)