Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Romans - 022 (All Men are Corrupt)
This page in: -- Afrikaans -- Arabic -- Armenian -- Azeri -- Bengali -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- French -- Georgian -- Greek -- Hausa -- Hebrew -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Malayalam -- Polish -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Turkish -- Urdu? -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

ரோமர் - கர்த்தரே நம்முடைய நீதி
ரோமருக்கு பவுல் எழுதின நிரூபத்திலிருந்து வேதபாடங்கள்
பகுதி 1 - இறைவனுடைய நீதி எல்லாப் பாவிகளையும் நியாயந்தீர்க்கிறது, கிறிஸ்துவுக்குள் எல்லா விசுவாசிகளையும் நீதிக்குட்படுத்துகிறது, பரிசுத்தப்படுத்துகிறது. (ரோமர் 1:18-8:39)
அ - முழு உலகமும் துன்மார்க்கத்தின் கீழ் இருக்கிறது. இறைவன் அனைவரையும் தமது நீதியோடு நியாயந்தீர்க்கிறார் (ரோமர் 1:18-3:20)

3. எல்லாரும் பாவம் செய்து, கெட்டுப்போனார்கள் (ரோமர் 3:9-20)


ரோமர் 3:9-10
9 ஆனாலும் என்ன? அவர்களைப்பார்க்கிலும் நாங்கள் விசேஷித்தவர்களா? எவ்வளவேனும் விசேஷித்தவர்களல்ல. யூதர் கிரேக்கர் யாவரும் பாவத்திற்குட்பட்டவர்களென்பதை முன்பு திருஷ்டாந்தப்படுத்தினோமே. 10 அந்தப்படியே: நீதிமான் ஒருவனாகிலும் இல்லை;

இறைவனுடைய நாமத்தில் யூதர்கள் மற்றும் புறவினத்தாருக்கு பவுல் தனது வாதங்களை தொகுத்து அளித்தான். ஒருவரும் இன்னொருவரை விட சிறந்த சிலாக்கியம் எதையும் பெற்றிருக்கவில்லை என்பதை அவர்களுக்கு நிரூபித்தான். எல்லாரும் பாவம் செய்தவர்கள். அவர்களுடைய பாவங்கள் அவர்களை சிக்க வைக்கிறது. அவர்கள் இறைவனை விட்டு விலகி, பாவத்திற்கு அடிமையானார்கள். அவர்களுடைய இச்சைகள் மற்றும் சுயத்தினால் கட்டப்பட்டிருக்கிறார்கள். பவுல் அந்த குற்றச்சாட்டில் தன்னையும் இணைத்துக்கொண்டு, அவனும் ஒரு பாவி என்பதை அறிக்கையிட்டான்.

நீ எப்போதாவது உனக்கு அருவருப்பை ஏற்படுத்துகின்ற, வெறுப்பை தூண்டுகின்ற ஒன்றை பார்த்திருக்கிறாயா? உனது பாவம் வஞ்சனையுள்ளது. அது உன் ஆவி, ஆத்துமாவை கெடுக்கும். பவுலின் குற்றச்சாட்டுடன் உன்னை ஒப்பிட்டுப்பார். நீ யார் என்பதை அப்போது உணரமுடியும்.

ரோமர் 3:11-12
11 உணர்வுள்ளவன் இல்லை; தேவனைத் தேடுகிறவன் இல்லை; 12 எல்லாரும் வழிதப்பி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள்; நன்மைசெய்கிறவன் இல்லை, ஒருவனாகிலும் இல்லை.

இறைவனின் பிரகாசிக்கின்ற பரிசுத்தத்தின் முன்பு, நாம் அனைவரும் அசுத்தமானவர்களாக இருக்கிறோம். கிறிஸ்துவைத் தவிர நீதிமான் ஒருவரும் இல்லை. நம்முடைய மனங்கள் கடினமான மூடுபனியால் சூழப்பட்டுள்ளது. நாம் இறைவனை காண இயலாதவர்களாக இருக்கிறோம். நம்முடைய பாவத்தின் கோரத் தன்மையை நாம் அறியவில்லை. மனிதன் இறைவனுடைய மகிமையைத் தேடினால் மட்டுமே ஞானம் பெறமுடியும். ஆனால் அவன் தனது சொந்த வழியில் போகிறான். தனது சொந்த மகிமையை நாடுகிறான். அவனுடைய இச்சையினால் கட்டப்பட்டிருக்கிறான். எல்லா மனிதர்களும் அவர்களுடைய ஆண்டவரின் வழியை விட்டு விலகிப்போகிறார்கள். ஒருவரும் சரியான பாதையில் நடப்பதில்லை. நீங்கள் உங்களுடைய செயல்கள் அனைத்திலும் நல்லவர்கள் அல்ல. அவர்கள் அனைவரும் வழிவிலகி, ஏகமாய் கெட்டுப்போனார்கள். நமது சுபாவத்தின் படி நாம் அனைவரும் துன்மார்க்கர்களாக இருக்கிறோம். நம்முடைய மனச்சாட்சி நம்மை சரியாய் அறிந்துவைத்திருக்கிறது.

ரோமர் 3:13
13 அவர்கள் தொண்டை திறக்கப்பட்ட பிரேதக்குழி, தங்கள் நாவுகளால் வஞ்சனைசெய்கிறார்கள்; அவர்களுடைய உதடுகளின் கீழே பாம்பின் விஷம் இருக்கிறது;

மனிதர்களுடைய நாவுகளில் அவர்கள் தீமை வெளிப்படுகிறது. நாம் கொலைக்காரர்கள். ஏனெனில் நம்முடைய கூர்மையான நாவுகள் மூலம் மற்றவர்களின் புகழ், மகிழ்ச்சி மற்றும் சமாதானத்தை அழிக்கின்றோம். பொய்கள், குற்றச்சாட்டுகள், அவமதிப்புகள் மற்றும் வெட்கக்கேடான நகைச்சுவைகள் இவைகளினால் நம்மைச் சுற்றியுள்ள சூழலை நாம் நச்சுப்படுத்துகிறோம். கடவுளின் வழிநடத்துதலுக்கு எதிராக நாம் குற்றம்சாட்டுகிறோம். நம்முடைய எதிர்ப்பை நம்முடைய வாய்களில் வெளிப்படும் கசப்பான தூஷணங்கள் மூலம் காண்பிக்கிறோம். இறைவனின் ஒழுங்கிற்கு நாம் கீழ்ப்படியாதவர்களாக உள்ளோம். பலத்த அடிகள் மற்றும் தவிர்க்க முடியாத நியாயத்தீர்ப்பைத் தவிர வேறு எதையும்பெற நாம் தகுதியுள்ளவர்கள் அல்ல என்பதை அறியாமல் இருக்கிறோம்.

ரோமர் 3:14-17
14 அவர்கள் வாய் சபிப்பினாலும் கசப்பினாலும் நிறைந்திருக்கிறது; 15 அவர்கள் கால்கள் இரத்தஞ்சிந்துகிறதற்குத் தீவிரிக்கிறது; 16 நாசமும் நிர்ப்பந்தமும் அவர்கள் வழிகளிலிருக்கிறது; 17 சமாதான வழியை அவர்கள் அறியாதிருக்கிறார்கள்;

நம்முடைய பகை என்பது உடனடியாக மாறுகின்ற ஒன்றல்ல. நாம் நம்முடைய எதிரிகளை விரும்புகிறதில்லை. கடினமான மனிதர்களை அழிக்கும்படி நாம் விரும்புகிறோம். எதிரிகளை வெறுக்கின்ற மக்கள் இரத்த ஆறுகளை ஓட விடுகிறார்கள். ஏனெனில் மனிதன் தன்னுடைய உக்கிர கோபத்தில் மிருகமாக மாறிவிடுகிறான். சமாதானத்தைக் கூறி அநேக சுற்று பேச்சுவார்த்தைகள் நடந்தாலும், நமக்குள் சமாதானம் இல்லை. எல்லா மனிதர்களும் கொலைகாரர்கள். அவர்களின் இருதயம் வெறுப்பு மற்றும் அகங்காரத்தினால் நிறைந்துள்ளது. இறைவன் அன்புள்ளவர், சத்தியமுள்ளவர், பரிசுத்தமுள்ளவர் என்பதை அவர்கள் அறியவில்லை. அவர்கள் உண்மையின் தன்மையை இழந்துவிட்டார்கள். அவர்கள் ஒரு நிலையில் இல்லை. தங்களை இக்கட்டான சூழ்நிலைக்குள் அகப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

ரோமர் 3:18
18 அவர்கள் கண்களுக்கு முன்பாகத் தெய்வபயமில்லை, என்று எழுதியிருக்கிறதே.

இறைவனை அறியாத அனைவரும் முட்டாள்களாக இருக்கிறார்கள். அவருக்கு பயப்படாதவர்கள் வெறுமையான ஞானத்தை உடையவர்கள். ஏனெனில் கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம். பரிசுத்தமானவரை அறிகிற அறிவே புத்தியைத்தரும். அவிசுவாசம் இன்றைய நாட்களில் பெருகிவருகிறது. இறைவன் இல்லை என்பதைப் போல மக்கள் நடந்துகொள்கிறார்கள். பாவம் பெருகுவதில் அதிசயம் ஒன்றுமில்லை. அது தெருக்களில், பத்திரிக்கைகளில், மனித இருதயங்களில் தனது தலையை அகங்கரமாய் தூக்கி நடக்கின்றது.

ரோமர் 3:19-20
19 மேலும், வாய்கள் யாவும் அடைக்கப்படும்படிக்கும், உலகத்தார் யாவரும் தேவனுடைய ஆக்கினைத்தீர்ப்புக்கு ஏதுவானவர்களாகும்படிக்கும், நியாயப்பிரமாணம் சொல்லுகிறதெல்லாம் நியாயப்பிரமாணத்துக்கு உட்பட்டிருக்கிறவர்களுக்கே சொல்லுகிறதென்று அறிந்திருக்கிறோம். 20 இப்படியிருக்க, பாவத்தை அறிகிற அறிவு நியாயப்பிரமாணத்தினால் வருகிறபடியால், எந்த மனுஷனும் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே தேவனுக்கு முன்பாக நீதிமானாக்கப்படுவதில்லை.

பழைய ஏற்பாட்டு பக்தியுள்ளவர்கள் பாவிகளாக இருக்கின்றார்கள். பாவத்தை அறிகிற அறிவை நியாயப்பிரமாணம் கொண்டுவந்துள்ளது. நாம் கட்டளைகளைக் கைக்கொண்டால் பரலோகத்தின் அனைத்து ஆசீர்வாதங்களும் நமக்கு உண்டு என்பதை நியாயப்பிரமாணம் வாக்குப்பண்ணுகிறது என்பது உண்மைதான். ஆனால் ஒரு மனிதனும் அதை நிறைவேற்றும் நிலையில் இல்லை. ஒவ்வொரு முறையும் நம்முடைய சுய முயற்சிகளால் நாம் கட்ட முற்படும் போது, நம்முடைய இரத்தத்தில் தீமை தான் தோன்றுகிறது. நாம் அனைவரும் இறைவனின் தண்டனையை பெற வேண்டியவர்கள். நம்முடைய அனைத்து நன்மைகளும், தர்மங்களும் நமது சுயநலத்தால் கறைப்பட்டுள்ளது. இறைவனிடம் நாம் சேர அருகதையற்றவர்கள். பவுலின் இந்த கொள்கை விளக்கங்களை நீ ஒத்துக்கொள்கிறாயா? நீ விவேகமுள்ளவனாகவும், நொறுக்கப்பட்டவனாகவும் மாற மீண்டும் ஒருமுறை பவுல் எழுதியவைகளை வாசி.

விண்ணப்பம்: பரலோகப்பிதாவே, நாங்கள் அழிந்துபோகாமால் இருக்கும்படி கிறிஸ்துவுக்குள் நீர் எங்களுக்குத் தந்திருக்கிற நம்பிக்கைக்காக நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். எங்களது இருதயங்கள், நாவுகள், கரங்கள், கால்கள் மற்றும் கண்கள் அனைத்தும் தீமை நிறைந்தவையாக உள்ளன. எங்களுடைய இருதயம் வஞ்சகம், பகை, இச்சை மற்றும் பொய்களினால் நிறைந்துள்ளது. எவ்வளவு அழுக்கான மனிதன் நான்? என்னுடைய பாவங்களை மன்னியும். எனது கண்களுக்கு முன்பாக உமது பரிசுத்தத்தை கொண்டுவரும். அப்போது என்னுடைய பெருமைகள் உடைக்கப்படும். நான் உம்மை மட்டுமே ஆராதிப்பேன். என் ஆண்டவரே, என்னுடைய பாவங்களிலிருந்து என்னை முழுமையாய் விடுவியும்.

கேள்வி:

  1. மனுக்குலத்தின் முழுமையான சீரழிவை விளக்கப்படுத்துவதற்கு பவுல் எவ்விதம் நம்முடைய பாவங்கûள் குறித்து விளக்குகிறான்?

கேள்வி - 1

அருமையான வாசகரே,
பவுல் ரோமருக்கு எழுதின நிரூபத்தின் விளக்கங்களை நீங்கள் வாசித்துள்ளீர்கள். பின்வரும் கேள்விகளுக்கு நீங்கள் இப்போது பதில் அளியுங்கள். 90 கேள்விகளுக்கு சரியான பதிலை நீங்கள் அனுப்பும்போது, இதனுடைய அடுத்த பகுதியை அனுப்புவோம். உங்கள் முழுப்பெயர், முகவரியை விடைத்தாளில் குறிப்பிட மறக்க வேண்டாம்.

  1. ரோமர்களுக்கு எழுதின நிரூபத்திற்கான காரணம் என்ன?
  2. ரோமில் சபையை நிறுவியது யார்?
  3. யார் இந்த நிரூபத்தை எழுதியது? எங்கே? எப்பொழுது?
  4. பவுல் தன்னுடைய நிரூபத்தில் என்ன நடையை பயன்படுத்துகிறார்?
  5. இந்த நிரூபத்தின் உருவரை என்ன?
  6. பவுல் தன்னுடைய நிரூபத்தின் முதல் வாக்கியத்தில் தன்னைக் குறிப்பிடப் பயன்படுத்தும் தலைப்புகள் என்ன?
  7. கிறிஸ்து இறைவனின் குமாரன் என்ற கூற்றின் பொருள் என்ன?
  8. கிருபை என்றால் என்ன? அதற்கு மனிதனின் பிரதியுத்தரம் என்ன?
  9. அப்போஸ்தல வாழ்த்துரையில் உள்ள எந்த கூற்று, உனது வாழ்வோடு தொடர்புடைய மிக வல்லமையுள்ளதும் முக்கியமானதும் என்று நீ கருதுகிறாய்?
  10. பவுல் ஏன் எல்லா நேரங்களிலும் இறைவனுக்கு நன்றி செலுத்தினான்?
  11. பவுல் தன்னுடைய திட்டங்களை நிறைவேற்றாத படி எப்படி, எத்தனைமுறை இறைவன் தடை செய்தார்?
  12. வசனம் 16-ல் உள்ள எந்த வாக்கியம் மிகவும் முக்கியமானது என்று நீ கருதுகிறாய்? ஏன்?
  13. நம்முடைய விசுவாசத்துடன் எவ்விதம் இறைவனுடைய நீதி தொடர்புள்ளதாக இருக்கிறது?
  14. ஏன் இறைவனின் கோபாக்கினை வெளிப்படுத்தப்பட்டுள்ளது?
  15. இறைவன் இல்லாமல் வாழுகின்ற ஒரு மனிதன் ஏன் தனக்காக உலக கடவுள் ஒன்றை உண்டாக்கிக் கொள்கிறான்?
  16. ஒழுங்கற்ற இறை ஆராதனைகளின் விளைவுகள் என்ன?
  17. இறைவனுடைய கோபாக்கினையின் வெளிப்பாட்டை பவுல் எவ்விதம் தெரிவிக்கிறான்?
  18. நம்முடைய உலகில் இன்று பெரும்பாலும் பொதுவாக காணப்படக்கூடிய பாவப்பட்டியலில் உள்ள ஐந்து பாவங்கள் என்ன?
  19. மனிதன் இன்னொருவனை நியாயந்தீர்க்கும்போது, எப்படி தன்னையே நியாயம்தீர்த்துக் கொள்கிறான்?
  20. இறைவனுடைய நியாயத்தீர்ப்பைப் பற்றி பவுல் வெளிப்படுத்தும் இரகசியங்கள் என்ன?
  21. இறுதி நியாயத்தீர்ப்பில் உள்ள இறை நியதிகள் என்ன?
  22. நியாயத்தீர்ப்பு நாளில் எவ்விதம் இறைவன் புறவினத்தாருடன் இடைபடுவார்?
  23. நியாயப்பிரமாணத்தின் ஆசீர்வாதங்கள் மற்றும் யூதர்கள் மீதான அதனுடைய சுமைகள் என்ன?
  24. பழைய மற்றும் புதிய ஏற்பாடுகளில் விருத்தசேதனத்தின் அர்த்தம் என்ன?
  25. ரோமருக்கு எழுதின நிரூபத்தில் உள்ள உண்மையான முரண்பாட்டுக் கேள்விகள் என்ன? அவைகளுக்கான பதில்கள் என்ன?
  26. மனுக்குலத்தின் முழுமையான சீரழிவை விளக்கப்படுத்துவதற்கு பவுல் எவ்விதம் நம்முடைய பாவங்கள் குறித்து விளக்குகிறான்?

ரோமருக்கு எழுதின நிரூபத்தின் அனைத்து பகுதிகளையும் நீங்கள் கற்று முடிக்கும்போது கிறிஸ்துவுக்காக நீங்கள் செய்யும் பணிகளில் உங்களை உற்சாகப்படுத்தும்படி, நாங்கள் ஒரு சான்றிதழை அனுப்புவோம்.

நீங்கள் விலையேறப்பெற்ற பொக்கிஷத்தை அடையும்படி பவுல் ரோமருக்கு எழுதின நிரூபத்தின் அனைத்து வினாப்பகுதிகளுக்கும் பதில் அனுப்பும்படி உங்களை உற்சாகப்படுத்துகிறோம். உங்கள் பதிலை எதிர்பார்த்து காத்திருக்கிறோம். உங்களுக்காக விண்ணப்பம் ஏறெடுக்கிறோம். எங்களது முகவரி.

Waters of Life
P.O.Box 600 513
70305 Stuttgart
Germany

Internet: www.waters-of-life.net
Internet: www.waters-of-life.org
e-mail: info@waters-of-life.net

www.Waters-of-Life.net

Page last modified on August 07, 2021, at 06:27 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)