Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Acts - 095 (Riot of the Silversmiths in Ephesus)
This page in: -- Albanian? -- Arabic -- Armenian -- Azeri -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- French -- Georgian -- Greek -- Hausa -- Igbo -- Indonesian -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Turkish -- Urdu? -- Uzbek -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

அப்போஸ்தலர் - கிறிஸ்துவின் வெற்றி பவனி
அப்போஸ்தலர் நடபடிகளிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 2 - புறவினத்தாருக்கு நற்செய்தி அறிவித்தலைப் பற்றிய அறிக்கையும் அந்தியோகியா முதல் ரோமாபுரிவரை திருச்சபைகள் நாட்டப்படுதலும் - பரிசுத்த ஆவியானவரினால் கட்டளையிடப்பட்டிருந்த அப்போஸ்தலனாகிய பவுலின் ஊழியத்தினால் (அப்போஸ்தலர் 13 - 28)
ஈ - மூன்றாவது அருட்பணி பயணம் (அப்போஸ்தலர் 18:23 - 21:14)

4. வெள்ளித் தட்டார்களினால் எபேசுவில் ஏற்பட்ட கலகம் (அப்போஸ்தலர் 19:23-41)


அப்போஸ்தலர் 19:23-34
23 அக்காலத்திலே இந்த மார்க்கத்தைக்குறித்துப் பெரிய கலகம் உண்டாயிற்று. 24 எப்படியென்றால், தெமேத்திரியு என்னும் பேர்கொண்ட ஒரு தட்டான் தியானாளின் கோவிலைப்போல வெள்ளியினால் சிறிய கோவில்களைச் செய்து, தொழிலாளிகளுக்கு மிகுந்த ஆதாயம் வருவித்துக்கொண்டிருந்தான். 25 இவர்களையும் இப்படிப்பட்ட தொழில்செய்கிற மற்ற வேலையாட்களையும் அவன் கூடிவரச்செய்து: மனுஷர்களே, இந்தத் தொழிலினால் நமக்கு நல்ல பிழைப்பு உண்டாயிருக்கிறதென்று அறிவீர்கள். 6 இப்படியிருக்க, கைகளினால் செய்யப்பட்ட தேவர்கள் தேவர்களல்லவென்று இந்தப் பவுல் என்பவன் சொல்லி, எபேசுவிலேமாத்திரமல்ல, கொஞ்சங்குறைய ஆசியா எங்கும் அநேக ஜனங்களுக்குப் போதித்து, அவர்களை வசப்படுத்திக்கொண்டான் என்று நீங்கள் கண்டும் கேட்டும் இருக்கிறீர்கள். 27 இதனால் நம்முடைய தொழில் அற்றுப்போகும்படியான அபாயம் நேரிட்டிருக்கிறதுமல்லாமல், மகா தேவியாகிய தியானாளுடைய கோவில் எண்ணமற்றுப்போகிறதற்கும், ஆசியா முழுமையும் பூச்சக்கரமும் சேவிக்கிற அவளுடைய மகத்துவம் அழிந்துபோகிறதற்கும் ஏதுவாயிருக்கிறது என்றான். 28 அவர்கள் இதைக் கேட்டு, கோபத்தால் நிறைந்து: எபேசியருடைய தியானாளே பெரியவள் என்று சத்தமிட்டார்கள். 29 பட்டணம் முழுவதும் கலகத்தினால் நிறைந்தது. பவுலுக்கு வழித்துணையாய் வந்த மக்கெதோனியராகிய காயுவையும் அரிஸ்தர்க்குவையும் அவர்கள் இழுத்துக்கொண்டு, ஒருமனப்பட்டு அரங்கசாலைக்குப் பாய்ந்தோடினார்கள். 30 பவுல் கூட்டத்துக்குள்ளே போக மனதாயிருந்தபோது, சீஷர்கள் அவனைப் போகவிடவில்லை. 31 ஆசியாநாட்டுத் தலைவரில் அவனுக்குச் சிநேகிதராயிருந்த சிலரும் அவனிடத்திற்கு ஆள் அனுப்பி, அரங்கசாலைக்குள் போகவேண்டாம் என்று எச்சரித்தார்கள். 32 கூட்டத்தில் அமளியுண்டாகி, சிலர் இப்படியும் சிலர் அப்படியுமாகப் பேசினார்கள்; தாங்கள் கூடிவந்த காரணம் இன்னதென்று அநேகருக்குத் தெரியாதிருந்தது. 33 அப்பொழுது யூதர்கள் அலெக்சந்தர் என்பவனை முன்னிற்கத் தள்ளுகையில், கூட்டத்திலே சிலர் அவனை முன்னே இழுத்துவிட்டார்கள். அலெக்சந்தர் கையமர்த்தி, ஜனங்களுக்கு உத்தரவு சொல்ல மனதாயிருந்தான். 34 அவன் யூதனென்று அவர்கள் அறிந்தபோது, எபேசியருடைய தியானாளே பெரியவள் என்று இரண்டுமணி நேரமளவும் எல்லாரும் ஏகமாய்ச் சத்தமிட்டுக்கொண்டிருந்தார்கள்.

எருசலேமிற்குச் செல்வதற்கு தீர்மானித்திருந்த பவுலுடைய விசுவாசம் சோதிக்கப்பட்டது. அங்கு செல்வதற்குப் பதிலாக ஆசியாவிலேயே சில காலம் அவர் தங்கியிருக்க வேண்டியிருந்தது. தீய ஆவிகளுக்கு எதிரான அவருடைய போராட்டதில் சில கடுமையான பாடங்களை இறைவன் அவருக்குப் போதிக்கவிருந்தார்.

எபேசுவில் புகழ்பெற்ற ஆர்டிமிஸ் தேவதையின் ஆலயம் இருந்தது. இந்த தேவதை தியானாள் என்றும் அழைக்கப்பட்டாள். அந்த ஆலயம் 190 பளிங்குத் தூண்களால் தாங்கப்பட்டுக்கொண்டிருந்த 19 மீட்டர் நீளமுள்ள கட்டடமாக இருந்தது. அந்த தேவதையின் சிலை உறுதியான கருப்பு மரத்தினால் செய்யப்பட்டிருந்தது. பவுல் எபேசுவில் பணிசெய்த இரண்டு வருட காலத்தில், அனைத்து தெய்வங்களும் மாயை என்றும் அவற்றின் ஆலயங்களினால் எந்தப் பயனுமில்லை என்றும் எபேசியருக்குப் போதித்தார். ஆகவே, கிறிஸ்துவை விசுவாசித்தவர்கள் ஆர்டிமிஸின் கோவிலுக்குச் செல்வதை நிறுத்திக்கொண்டார்கள். கற்களினாலும் தங்கத்தினாலும் செய்யப்பட்ட சிலைகளை வணங்குபவர்களைப் பார்த்து அவர்கள் பரிதாபப்பட்டார்கள்.

கற்சிலைகள் மீது நம்பிக்கை வைப்பது மக்கள் நடுவில் குறைந்து வருவதைக் கண்டு, அந்த சிலைகளை விற்பவர்கள் நடுவில் கிளர்ச்சியை உண்டுபண்ணியது. வெள்ளியினால் ஆர்டிமிஸின் கோவிலைப் போல சிறிய அளவில் கோவில்களைச் செய்து அங்கு புனிதப் பயணமாக வரும் பக்தர்களிடத்தில் விற்பனை செய்துவந்த வெள்ளித் தட்டார்கள் பெருத்த இலாபம் ஈட்டி வந்தார்கள். இந்த ஆர்டிமிஸ் சிலையின் சிறிய வடிவங்கள் நம்முடைய காலத்தில் அகழ்வாராய்ச்சியில் நைல் பள்ளத்தாக்கிலும் இந்தியாவிலும் கிடைத்திருக்கிறது. சில சுற்றுலாப் பயணிகள் அந்த சிலைகளை ஆபத்துக்களுக்கு எதிரான பாதுகாப்புப் பொருட்களாகப் பயன்படுத்துவதற்கு தங்களுடைய நாடுகளுக்கு எடுத்துச் சென்றிருக்கிறார்கள். ஆனால் பவுல் எப்போது இயேசு கிறிஸ்துவே கர்த்தாதி கர்த்தர் என்று பிரசங்கிக்கத் தொடங்கினாரோ அப்போதிலிருந்து இந்த வெள்ளி தட்டார்களுடைய வியாபாரம் நலிவடையத் தொடங்கியது. மந்திரவாதங்களும், தாயத்துக்களும், பாசிகளும், பாதுகாப்புத் தரும் என்று கருதப்பட்ட அனைத்துப் பொருட்களும் உண்மையில் ஏமாற்று வேலைகள் என்றும் பொய்களும், வெறும் கற்பனையினால் உருவாக்கப்பட்ட சக்தியற்ற பொருட்களும்தான் என்பதை மனமாற்றமடைந்தவர்கள் அனைவரும் அறிந்துகொண்டார்கள்.

தெமேத்திரியு என்ற வெள்ளித் தட்டார் ஒருவர் அந்த கோவிலில் முக்கிய பொறுப்பு வகித்தார். அவர் அங்கிருந்த தட்டார்கள் அனைவரையும் ஒன்றாகக் கூட்டி, தங்கள் தொழிலுக்கு வந்திருக்கிற ஆபத்தைத் தெளிவுபடுத்தினார். இந்த பவுல் தங்களுடைய நகரத்திலும் ஆசியா முழுவதிலும் மக்களைத் தங்கள் பாரம்பரிய நம்பிக்கைகளிலிருந்து விலகச் செய்து, சிலைகளும் உருவங்களும் வெறும் மாயை என்று போதித்து வருவதால் தங்களுக்கு எதிர்காலத்தில் பட்டிணி கிடக்கும் நிலைதான் மிஞ்சும் என்று அவர்களை தூண்டிவிட்டார்.

பவுலைப் பொறுத்தவரை சிறிய அளவில் செய்யப்பட்ட கோவில்களின் மாதிரிகள் மட்டுமல்ல, ஆர்டிமிஸின் கோவிலே பொருளற்றதுதான் என்றும் அந்தக் கருத்தை வலுப்பெறவிட்டால், அந்த நகரத்தின் இறைநம்பிக்கைக்கும் பொருளாதாரத்திற்கும் பெருங்கேடு வரும் என்பதை தெமேத்திரியு நன்கு உணர்ந்துகொண்டார். ஆகவே, தலைநகரமாகிய எபேசுவிற்கே பெரிய எதிரி பவுல் என்று அவர் கருதினார்.

ஆகவே வெள்ளித் தட்டார்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து, தங்களுடைய கருத்துக்கு வலுச் சேர்க்கும்படி நகரம் முழுவதும் தங்கள் ஆதங்கத்தைப் பரப்பினார்கள். “எபேசுவில் இருக்கும் ஆர்டிமிஸ்” மிகப் பெரியவள் என்று அவர்கள் கோஷமிட்டார்கள். இந்த கலகக்காரர்கள் பவுலோடு பிரயாணம் செய்த அந்த இரண்டு மக்கதொனியர்களைக் கண்டபோது, அவர்களைப் பிடித்து வைத்துக்கொண்டார்கள். அந்தக் குழப்பத்திலும் அவர்கள் அந்த இருவரையும் தாக்கிவிடாதபடி ஆண்டவருடைய கரம் அவர்களைப் பாதுகாத்தது. பவுல் ஒரு கோழையாக இருக்கவில்லை. தன்னுடைய உடன் வேலையாட்களைப் பாதுகாக்கும்படி அவர்களுக்காக அவர் வாதிட்டார் எத்தனித்தார். ஆனால் காற்றாற்று வெள்ளம்போல பெருமையினாலும் அகம்பாவத்தினாலும் வெறிகொண்டிருக்கும் மக்கள் கூட்டத்திற்கு முன்பாகப் போய் பேசுவதோ சாட்சியிடுவதோ பயனற்றது என்பதை அறிந்து, விண்ணப்பம் செய்வதற்காக கூடிவந்திருந்த சீடர்கள் பவுலை அங்கு செல்வதற்கு அனுமதிக்கவில்லை. இப்படி பொதுமக்களுடைய கோபமும், கூச்சலும், பேரிரைச்சலும் உள்ள தருணங்களில் தனிமனிதர்கள் தங்கள் அடையாளத்தையும் உண்மைகளையும் இழந்துவிடுகிறார்கள். இந்த மக்கள் கூட்டம் நன்மைக்கு அல்ல தீமைக்கே ஒன்றாகக் கூடிவந்தார்கள். அவர்களில் செயல்படும் ஆவியின்படி அவர்களுக்குள் ஏற்பட்ட ஒற்றுமை ஒரு தீமையான ஒற்றுமையாக இருந்தது.

பவுலுடைய நண்பர்கள் அவரைத் தடுத்தபோதிலும் அவர் அந்த அரங்கத்திற்குள் செல்வதற்கு தைரியமாகத் தீர்மானித்திருக்க வேண்டும். அந்த அரங்கத்தில்தான் மக்கள் மகிழ்ச்சியான தருணங்களிலும் துக்கமான தருணங்களிலும் கூடிவருவார்கள். அந்த அரங்கத்திற்குள் 25,000 பேர் கூடிவர முடியும். திடீரென கோவில் பணியாளர்களிடத்திலிருந்து பவுல் அந்த அரங்கத்திற்குள் செல்வது நன்மையை அல்ல தீமையையே விளைவிக்கும், காரணம் மக்கள் கூட்டம் மிகுந்த கோபத்தில் இருக்கிறது என்ற செய்தி பவுலுக்கு அனுப்பப்பட்டது. பவுல் அவர்களை விட்டு வெகுதூரத்தில் விலகியிருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. மக்கள் பெருங்கூச்சலிட்டுக்கொண்டிருந்தார்கள், ஆனால் நடுவில் கலகத்தைத் தூண்டிய தெமேத்திரியு அங்கிருக்கவில்லை. அந்த போராட்டத்திற்கு மாகாணத்தின் அதிகாரிகளிடத்திலிருந்து அனுமதி பெற்றிருக்கவில்லை. நகர ஆளுகையைப் பொறுத்தவரை எந்தவித கலகமும் ரோம அரசாங்கத்தினால் தடைசெய்யப்பட்டிருந்தது. ஆகவே தெமேத்திரியு தண்டனைக்குப் பயந்து அங்கிருந்து தப்பிவிட்ட காரணத்தினால், ஒரு தலைமை இல்லாத மக்கள்கூட்டம் வெறிகொண்டு அந்த அரங்கத்திற்குள் கத்திக்கொண்டிருந்தது.

இதைத் தொடர்ந்து பவுலை எதிர்த்த சில யூதர்கள், இன்னொரு யூதரை முன்னுக்குத் தள்ளினார்கள். அவர் ஒருவேளை கிறிஸ்தவராக இருந்திருக்கலாம். அவர் பவுலையும் திருச்சபையையும் காப்பாற்றும் வண்ணம் செயல்படுவார் என்று கருதி முன்னுக்குத் தள்ளப்பட்டிருக்கலாம். மக்கள் கூட்டம் வாலிபனாயிருந்த அலெக்சாந்தர் என்பரைப் பிடித்து, அவர்களுக்கு நடுவில் உள்ள மேடையில் அவரை நிறுத்தினார்கள். அவர் திருச்சபைக்காகப் பேச முயற்சித்தபோது, அவர் பவுல் அல்ல என்பதையும் வேறொரு யூதர் என்பதையும் மக்கள் கூட்டம் விரைவாக அறிந்துகொண்டது. கோபமடைந்த மக்கள் கூட்டம் அந்த அலெக்சாந்தரை திட்டித் தீர்த்து. அவர்கள் இரண்டு மணிநேரமாக “எபேசுவின் ஆர்டிமிúஸ பெரியவர்” என்ற தங்கள் நம்பிக்கையை உரத்த சத்தத்தில் தெரிவித்துக்கொண்டிருந்தார்கள்.

இன்று இந்த ஆர்டிமிஸ் யார் என்பது யாருக்கும் தெரியாது. நற்செய்தி எங்கும் அறிவிக்கப்படுவதால் அந்த ஆர்டிமிஸின் புகழ் அழிந்துவிடும் என்று அந்த தெமேத்திரியு சொன்னது சரிதான். ஆனால் அந்தத் தருணத்தில் மக்கள் அந்த தேவதைக்காக அலெக்சாந்தரை துண்டு துண்டாக கிழித்தெறிவதற்கு மக்கள்கூட்டம் ஆயத்தமாயிருந்தது. பவுலும் திருச்சபையும் இந்த மனிதனுக்காவும் பாடுபடும் பவுலுடைய அந்த இரண்டு கூட்டாளிகளுக்காகவும் விண்ணப்பம் செய்துகொண்டிருந்தார்கள். அந்தக் கொடுமையான மக்கள் கூட்டம் அவர்களுடைய தலையிலிருந்த ஒரு முடியைக்கூட தொடமுடியாத அளவிற்கு ஆண்டவருடைய கரம் அந்த சாட்சிகளைக் காத்துக்கொண்டது. அந்த மக்கள் கூட்டத்தின் இரைச்சலால் காற்றில்தான் அசைவு ஏற்றபட்டது.

விண்ணப்பம்: எங்கள் கர்த்தராகிய இயேசுவே உம்முடைய அரசின் இராணுவம் பிசாசின் இராணுவத்தைக் காட்டிலும் வலிமையானது. அந்த வெறிகொண்ட மக்கள் நடுவில் உம்முடைய பிள்ளைகள் யாரும் விழவில்லை. நீர் எங்களை உம்முடைய விலையில்லாத இரத்தத்தினால் இறைவனுக்காக வாங்கியிருக்கிற காரணத்தினால் எந்தவொரு மனிதனுக்கோ, ஆவிக்கோ பயப்படாமல் உம்மைப் பற்றிக்கொள்ள எங்களுக்குப் போதித்தருளும்..

கேள்வி:

  1. தெமேத்திரியு பவுலின் மீது ஏன் கோபம்கொண்டார்?

www.Waters-of-Life.net

Page last modified on March 04, 2014, at 11:56 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)