Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- John - 084 (The new commandment)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Bengali -- Burmese -- Cebuano -- Chinese -- Dioula? -- English -- Farsi? -- French -- Georgian -- Greek -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Kyrgyz -- Malayalam -- Peul -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Thai -- Turkish -- Twi -- Urdu -- Uyghur? -- Uzbek -- Vietnamese -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

யோவான் - வெளிச்சம் இருளில் ஒளிர்கிறது
யோவான் எழுதின கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 3 - அப்போஸ்தலர்கள் நடுவில் வெளிச்சம் ஒளிர்கிறது (யோவான் 11:55 - 17:26)
ஆ - கர்த்தருடைய பந்தியைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சிகள் (யோவான் 13:1-38)

3. திருச்சபைக்குக் கொடுக்கப்படும் புதிய கட்டளை (யோவான் 13:33-35)


யோவான் 13:33
33 பிள்ளைகளே, இன்னும் கொஞ்சக்காலம் நான் உங்களுடனேகூட இருப்பேன்; நீங்கள் என்னைத் தேடுவீர்கள்; ஆனாலும் நான் போகிற இடத்துக்கு நீங்கள் வரக்கூடாதென்று நான் யூதரோடே சொன்னதுபோல இப்பொழுது உங்களோடும் சொல்லுகிறேன்.

பிதா ஆவியில் மகிமைப்பட்ட பிறகு, இயேசு நம்முடைய விசுவாசத்தின் அம்சங்களையும் அடிப்படைகளையும் எடுத்துக்கூறுகிறார். அவர் இப்போது நம்முடன் சரீரத்தில் மட்டும் இல்லை, பரலோகத்திலும் இருக்கிறார். இந்த உலகத்தில் உயிர்த்தெழுந்த இயேசு முக்கியமானவராக நம்நடுவில் இருக்கிறார். உயிரோடிருக்கும் அவரை அறியாத அல்லது விசுவாசியாத எவரும் குருடராகவும் வழி தவறியவராகவும் இருக்கிறார்கள். அவரைக் காண்பவர்கள் ஜீவனையும் நித்தய வாழ்வையும் பெற்றுக்கொள்கிறார்கள்.

தம்மைச் சீடர்கள் பின்பற்றி வர முடியாத இடத்திற்குத் தான் போகப்போவதாக அவர் அவர்களிடம் சொன்னார். அவர் தாம் நியாயம் விசாரிக்கப்படப்போவதையோ, கல்லறையையோ குறிப்பிடாமல், தம்முடைய பரமேறுதலைக் குறிப்பிட்டார். “நான் உம்முடைய எதிரிகளை உம்முடைய பாதபடியாக்கிப் போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும்” என்று பிதா அவரிடம் சொல்லியிருக்கிறார். இயேசு தம்மைப் பின்பற்றியவர்கள் நடுவிலிருந்து திடீரென மறைந்து போகாமல், முன்கூட்டியே தன்னுடைய மரணத்தையும், உயிர்ததெழுதலையும் யாரும் தங்கள் முயற்சியினால் செல்ல முடியாத பரலோகத்திற்கு அவர் ஏறிச் செல்வதையும் அறிவித்தார். இதை அவர் யூதர்களிடம் சொன்னபோது அவர்கள் அதைப் புரிந்துகொள்ளவில்லை. அவர் காட்டிக்கொடுக்கப்படும் தருணத்தில் அவருடைய சீடர்களாவது இதைப் புரிந்துகொள்வார்களா? அவர்கள் எதிர்காலத்தில் துக்கத்திலும் சோகத்திலும் ஆழ்ந்துபோய்விடாதபடி பிதாவையும் குமாரனையும் ஆராதிக்கும் ஆராதனையில் அவர்களை அவர் ஈடுபடுத்தினார். அவர் அவர்களைக் கைவிட மாட்டார் என்று அவருடைய உண்மையை அவர்கள் நம்புவார்களா? அவர்களுடைய பொதுவான நோக்கம் தோல்வியுறாது என்று அவர்கள் விசுவாசிப்பார்களா?

யோவான் 13:34-35
34 நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன். 35 நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள் என்றார்.

பரிசுத்த ஆவியானவர் தன் சீஷர்கள் மீது ஊற்றப்படாத காரணத்தினால் அவர்கள் முழுவதுமாகத் தன்னைப் புரிந்துகொள்ள மாட்டார்கள் என்று இயேசுவுக்குத் தெரியும். அவர்கள் பற்றிக்கொள்ள இயலாத குருடராயிருந்தார்கள். அன்பு செய்வதற்கான தூண்டுதலும் அவர்களிடத்தில் இல்லை. “இறைவன் அன்பாக இருக்கிறார். அன்பில் நிலைத்திருக்கிறவன் இறைவனில் நிலைத்திருக்கிறான். இறைவனும் அவரில் நிலைத்திருக்கிறார்.” பரிசுத்த திருத்துவம் அன்பாகவே இருக்கிறது. பரிசுத்த திரித்துவத்திலுள்ள நபர்களிடையில் அன்பே ஐக்கியத்தை ஏற்படுத்துகிறது. இந்த அன்பு மனுக்குலத்தில் உருவாக வேண்டும் என்று இயேசு விரும்புகிறார். பரிசுத்தத்தின் தோற்றுவாய் அவருடைய சிடர்களில் மெய்யாக வேண்டும் என்ற அவர் வாஞ்சிக்கிறார்.

ஆகவே இயேசு திருச்சபை அங்கத்தவர்கள் ஒருவரையொருவர் நேசிக்க வேண்டும் என்று கற்பிக்கிறார். பழைய ஏற்பாட்டில் கொடுக்கப்பட்டதுபோல பத்து தடையுத்தரவுகளை அவர் கொடுக்கவில்லை. மாறாக அனைத்து தெய்வீக கட்டளைகளையும் உள்ளடக்கும் ஒரே கட்டளையை அவர் கொடுத்தார். மோசே எதிர்மறையான விதிமுறைகளைக் கொடுத்தார். இயேசுவோ தம்முடைய உதாரணத்தினால் நேரடியான காரியங்களைப் போதித்தார். திருச்சபை வாழ்க்கையின் அடிப்படையே அன்புதான். அன்பைக் காண்பிக்காத திருச்சபை திருச்சபையாக இருக்காது.

கிறிஸ்துவின் ஆள்த்துவத்தின் அடிப்படையும் அன்புதான். வழிதவறிப்போன ஆடுகள் மீது அவர் இரக்கம் காண்பிக்கிறார். அவர் தம்முடைய சீடர்களுடன் பொறுமையாகவும் மென்மையாகவும் நடந்துகொள்கிறார். அன்பையே தன்னுடைய அரசின் முக்கிய கோட்பாடாக்கியிருக்கிறார். அன்பு செய்கிறவன் அவருடைய கிருபையில் நிலைத்திருக்கிறான், வெறுப்பைக் காண்பிப்பவன் சாத்தானுக்கு உரியவனாயிருக்கிறான். அன்பு இரக்கமுள்ளது, அது இறுமாப்பாயிராது. அப்போஸ்தலர் தங்கள் கடிதங்களில் அடிக்கடி வலியுறுத்துவதைப் போல அன்பு பொறுமையுள்ளது; எதிரிகளுக்குக் கூட நன்மை செய்யக்கூடியது. அது பூரண சற்குணத்தின் கட்டு.

அன்பினிமித்தமான தியாகத்தைத் தவிர வேறு அடையாளம் திருச்சபைக்கு இல்லை. நாம் நம்மை சேவைசெய்யும்படி பயிற்றுவித்தால் அவருடைய சீடராகலாம். இயேசுவினால் வழிநடத்தப்பட்டு நடைமுறையில் அன்பின் பொருள நாம் புரிந்துகொள்ளலாம். நாம் மன்னிப்பில் நிலைத்திருந்து மற்றவர்களையும் மகிழ்ச்சியாக மன்னிக்கலாம். திருச்சபையிலுள்ள ஒருவரும் தான் பெரியவராக வேண்டும் என்று முயற்சி செய்யாமலும், கிறிஸ்துவின் ஆவி அவர்களை இணைத்திருப்பதற்காக மகிழ்கொண்டாடுகிறவர்களாகவும் இருந்தால் அதுவே பூமியில் காணப்படும் பரலோகம் ஆகும். பரிசுத்த ஆவியானவரினால் நிறைந்த அப்படிப்பட்ட திருச்சபைகளை கர்த்தராகிய இயேசு நாட்டுகிறார்.

கேள்வி:

  1. அன்பே கிறிஸ்தவர்களை வேறுபடுத்திக்காட்டும் ஒரே அடையாளமாக இருப்பது ஏன்?

www.Waters-of-Life.net

Page last modified on August 17, 2012, at 10:50 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)