Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Romans - 080 (A Warning against the Deceivers)
This page in: -- Afrikaans -- Arabic -- Armenian -- Azeri -- Bengali -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- French -- Georgian -- Greek? -- Hausa -- Hebrew -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Malayalam -- Polish -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish? -- TAMIL -- Telugu -- Turkish -- Urdu? -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

ரோமர் - கர்த்தரே நம்முடைய நீதி
ரோமருக்கு பவுல் எழுதின நிரூபத்திலிருந்து வேதபாடங்கள்
பகுதி -3 துணைப்பகுதி - ரோம சபையில் உள்ள தலைவர்களுக்கு பவுலின் குணாதிசயங்களைக் குறித்த சிறப்பு அறிக்கைகள் (ரோமர்15:14 – 16:27)

6. ஏமாற்றுக்காரர்களுக்கு எதிரான எச்சரிக்கை (ரோமர் 16:17-20


ரோமர் 16:17-20
17 அன்றியும் சகோதரரே, நீங்கள் கற்றுக்கொண்ட உபதேசத்திற்கு விரோதமாய்ப் பிரிவினைகளையும் இடறல்களையும் உண்டாக்குகிறவர்களைக்குறித்து எச்சரிக்கையாயிருந்து, அவர்களை விட்டு விலகவேண்டுமென்று உங்களுக்குப் புத்தி சொல்லுகிறேன். 18 அப்படிப்பட்டவர்கள் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு ஊழியஞ்செய்யாமல் தங்கள் வயிற்றுக்கே ஊழியஞ்செய்து, நயவசனிப்பினாலும் இச்சகப்பேச்சினாலும், கபடில்லாதவர்களுடைய இருதயங்களை வஞ்சிக்கிறவர்களாயிருக்கிறார்கள். 19 உங்கள் கீழ்ப்படிதல் யாவருக்கும் தெரியவந்திருக்கிறது. ஆகையால் உங்களைக்குறித்துச் சந்தோஷப்படுகிறேன்; ஆனாலும் நீங்கள் நன்மைக்கு ஞானிகளும் தீமைக்குப் பேதைகளுமாயிருக்கவேண்டுமென்று விரும்புகிறேன். 20 சமாதானத்தின் தேவன் சீக்கிரமாய்ச் சாத்தானை உங்கள் கால்களின் கீழே நசுக்கிப்போடுவார். நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினுடைய கிருபை உங்களுடனேகூட இருப்பதாக. ஆமென்.

ரோமில் வீடுகளில் கூடிய சபைக்கு கிறிஸ்தவர்களை மோசேயின் நியாயப்பிரமாணத்தையும் யூத முறைமையையும் கடைப்பிடிக்கும்படி சிலர் வற்புறுத்தியதை பவுல் அறிந்துகொண்டான். சில உணவுகளை விலக்குதல், உபவாச நாட்கள் அல்லது மாதங்கள், ஞாயிற்றுக்கிழமைக்குப் பதிலாக ஓய்வுநாளை சரியாக அனுசரிப்பது போன்ற காரியங்களை உள்ளடக்கியதாக அவைகள் இருந்தன.

வீட்டு சபைகளின் மத்தியில் பிசாசு கொண்டு வர முயற்சித்த சோதனையின் உண்மையான தன்மையையும், கள்ள உபதேசம் நுழைகின்ற ஆபத்தையும் பவுல் அறிந்தான். இறைவனின் கிருபையை மட்டுப்படுத்தி, நற்செயல்கள், நியாயப்பிரமாணத்தை கடைப்பிடிப்பதை அது வலியுறுத்தியது. இந்த கள்ள உபதேசத்தின்படி, இறைவனின் கிருபை மீட்பிற்கு போதுமானது அல்ல, நமது சொந்த முயற்சிகள், மோசேயின் நியாயப்பிரமாணத்தை கண்டிப்பாக கடைப்பிடிப்பது ஆகியவையும் தேவை என்று கூறியது.

கிறிஸ்துவின் நீதிக்கு எதிரான பிசாசின் தாக்குதலை பவுல் கண்டான். “விசுவாசிக்கிறவன் எவனோ அவன் திருமுழுக்கு பெற்று இரட்சிப்பை அடைந்தான். விசுவாசியாதவனோ ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டான். பிரிவினைகள் மற்றும் தவறுகளுக்கு காரணமாக இருக்கின்ற, கிறிஸ்துவின் கிருபையை திரித்து பேசுகின்ற மக்கள் இறைவாக்கினன் தாவீதின் கொள்கைக்கு எதிரானவர்கள் என்று பவுல் கூறினான். “அவர்கள் ஏகமாய் கெட்டுப்போனார்கள், நன்மை செய்கிறவன் இல்லை, ஒருவனாகிலும் இல்லை.” (சங்கீதம் 14:3).

நமது இரட்சிப்பிற்கான ஒரே வழி கிறிஸ்துவே என்று பவுல் தாழ்மையுடன் ரோமருக்கு எழுதின நிரூபத்தில் விளக்குகிறான். (ரோமர் 3:9-24). இந்த விளக்கத்திற்கு பின்பு, யூத ஏமாற்றுக்காரர்கள் வந்தார்கள். பவுலின் கடிதம் ரோமிற்கு வருமுன்பாக, பவுல் கூறியவைகளை அழிக்கும்படி அவர்கள் செயல்பட்டார்கள். எனவே பொய்பேசும் ஏமாற்றுக்காரர்களைக் குறித்து ரோமில் உள்ள சபைக்கு பவுல் எச்சரிக்கை விடுக்கிறான்.

இதற்கு முன்பு எருசலேமில் அப்போஸ்தலர்களின் முதல் கூடுகையின் போது, விசுவாசிகள் மத்தியில் நியாயப்பிரமாணத்தை வலியுறுத்திய மதவாதிகளைக் குறித்த சூடான விவாதத்தின் போது பவுல் வெளிப்படையாகக் கூறினான்: “ இப்படியிருக்க, நம்முடைய பிதாக்களாலும் நம்மாலும் சுமக்கக்கூடாதிருந்த நுகத்தடியைச் சீஷர் கழுத்தின்மேல் சுமத்துவதினால், நீங்கள் தேவனைச் சோதிப்பானேன்? கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையினாலே அவர்கள் இரட்சிக்கப்படுகிறது எப்படியோ, அப்படியே நாமும் இரட்சிக்கப்படுவோமென்று நம்பியிருக்கிறோமே என்றான்.” (அப்போஸ்தலர் 15:10,11).

அப்போஸ்தலர்களின் தலைவன் பேதுரு, பாடுகள் மற்றும் சிலுவையைக் குறித்து இயேசு பேசிய போது, இயேசுவை திசைதிருப்ப முயற்சித்தான். அவனிடம் இயேசு கூறினார், “எனக்குப் பின்னாகப் போ சாத்தானே நீ தேவனுக்கு ஏற்றவைகளை சிந்தியாமல், மனுஷருக்கேற்றவைகளை சிந்திக்கிறாய்” (மத்தேயு 16:23).

மனிதரைப் பிரியப்படுத்தும் அனைவரும் கிறிஸ்துவின் சிலுவை அழிக்கிறார்கள். அவர்கள் தங்கள் சொந்த விருப்பத்தின்படி இரட்சிப்பை அடைய முற்பட்டு தோற்றுப் போகிறார்கள். இது அடிப்படையில் சாத்தானின் வஞ்சனையாக உள்ளது. அதைப் போலவே மனிதவளத்தை வலயுறுத்துவோர் பேசுவது அழகாகத் தெரிகின்றது. ஆனால் அது அடிப்படையில் இறைவனின் கிருபைக்கு எதிரானதாக உள்ளது. நியாயப்பிரமாணத்தை கடைப்பிடித்து பரலோகத்தை அடைய விரும்பும் ஒருவன் சிலுவையைக் குறித்த வரலாற்று உண்மையை மறுதலிக்கிறான். கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற மீட்பின் சத்தியம் சாத்தானால் திரித்து நயவஞ்சகமாக பேசப்படுகிறது.

குழப்பத்தில் இருந்த ரோம் சபை விசுவாசிகளைப் பார்த்து பவுல் தனது நிரூபத்தில் கூறுகிறான். “இந்த ஏமாற்றுக்காரர்களைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள், அவர்களுக்கு விலகியிருங்கள், உங்கள் வீடுகளில் அவர்கள் பேச இடமளிக்காதிருங்கள். இவர்களைக் குறித்து இயேசு கூறியவைகளை புரிந்துகொள்ளுங்கள் . “பூர்வத்தாருக்கு அது உரைக்கப்பட்டது. நான் உங்களுக்கு சொல்கிறேன். அவர்கள் இன்னும் முற்காலத்தில் வாழ்ந்து, புதிய யுகத்தில், கிருபையின் யுகத்தில் வராதவர்களாக இருக்கிறார்கள். எனவே நீங்கள் சிலுவையில் அறையப்பட்டு, மரித்து உயிர்த்தெழுந்தவரை பற்றிக்கொள்ளுங்கள். என்றென்றும் வாழ்வீர்கள்.

ரோமில் உள்ள விசுவாசிகளை பவுல் எச்சரிக்கும்போது நிறைவுசெய்தியில் அவர்களிடம் கூறினான். “உங்கள் உண்மையான விசுவாசம், அன்பைக் குறித்து கேள்விப்பட்டு மகிழ்ச்சியடைகிறேன். பரிசுத்த ஆவியின் நடத்துதலினால் நீங்கள் கீழ்ப்படிதலை கற்றுக்கொண்டீர்கள். நடைமுறை வாழ்விலும் அதை வெளிப்படுத்துகிறீர்கள். கிரேக்கத்தில் உள்ள எல்லா சபைகளுக்கும் இந்த உண்மை தெரிந்திருக்கிறது. எனவே தீமையில் இருந்து நன்மையை வேறுப்படுத்தி பார்க்கக் கூடிய ஞானத்தை உயிருள்ள இயேசுவிடம் கேளுங்கள். நன்மையானதை செய்யுங்கள், தீமையை விட்டொழியுங்கள். இறைவனுடன் சமாதானமாய் வாழவும், சரியான விசுவாசத்திற்குள் நடத்தப்படவும் உயிருள்ள ஆண்டவரிடம் கேளுங்கள்.”

இந்த உற்சாகமூட்டும் வார்த்தைகளுக்குப் பின்பு, பவுல் தனது பரிசுத்த கோபத்துடன் அவர்களுக்கு ஒரு ஒப்பற்ற வாக்கியத்தை வாக்குத்தத்தமாகக் கூறினான். பரிசுத்த வேதாகமத்தின் வேறு எந்தப் பகுதியிலும் நாம் இதைக் காண இயலாது. “சமாதானத்தின் இறைவன் சீக்கிரமாய் சாத்தானை உங்கள் கால்களின் கீழ் நசுக்கிப் போடுவார்” (ரோமர் 16:20). இதனுடைய அர்த்தம், சமாதானத்தின் முழுமையில் இருந்து சமாதானத்தின் இறைவன் அவர்களுடைய இருதயங்களில், அவருடைய சமாதானத்தை ஊற்றுவார். கிறிஸ்து மறுபடியும் பரலோகில் இருந்து வரும் போது இந்த சாத்தானை மேற்கொள்ளுவார் என்று பவுல் கூறவில்லை. பவுல் ரோம சபைக்கு பின்வருமாறு உறுதியளித்தான். சர்வவல்லமையுள்ளவர் எவ்விதம் சாத்தானை எதிர்த்து, தனது காலடியில் நசுக்கிப் போட்டாரோ, அவரது சரீரமாகிய சபையும் அதேவிதமாக செயல்படும். அவர்கள் கிறிஸ்துவுக்குள் இருக்கிறார்கள். கிறிஸ்து அவர்களுக்குள் இருக்கிறார். நீங்கள் சாத்தானை உங்கள் பெலத்துடன் மேற்கொள்ள முடியாது. இறைவன் தனது நேசகுமாரனின் காலடியில் அவனைப் போட்டார். அவருக்குள் நீங்களும் அந்த ஒப்பற்ற மகிமையில் பங்குகொள்கிறீர்கள். (சங்கீதம் 110:1).

பவுல் ஒர் உண்மைவாதி. ரோமில் உள்ள விசுவாசிகள் சாத்தானின் சோதனைகளில் இருந்து பாதுகாக்கும்படியும், இறைவனின் கிருபையில் நிலைத்திருக்கவும் ஆண்டவராகிய இயேசுவிடம் கேட்டான். ஏனெனில் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவருடைய மகிழ்ச்சியின் ஆதாரம் கிருபை ஆகும்.

விண்ணப்பம்: ஆண்டவராகிய இயேசுவே, நீர் எங்களுக்கு விண்ணப்பம் செய்ய கற்றுக்கொடுத்தீர். எங்களை சோதனைக்குட்படுத்தாமல், தீமையில் இருந்து எங்களை காத்துக்கொள்ளும். தீமைக்கு எதிராக நீர் வெற்றி சிறந்ததை பார்க்கும்படி எங்கள் கண்களைத் திறந்தருளும். எங்களை நாங்களே மீட்டுக்கொள்ளும் ஒவ்வொரு முயற்சியிலும் இருந்து காத்துக்கொள்ளும். உம்மைத் தவிர எங்களுக்கு வேறு இரட்சகர் இல்லை.

கேள்வி:

  1. சாத்தானின் சோதனைகளுடைய நோக்கம் என்ன?

www.Waters-of-Life.net

Page last modified on August 11, 2021, at 08:08 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)