Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Romans - 081 (Greetings from Paul’s fellow Workers)
This page in: -- Afrikaans -- Arabic -- Armenian -- Azeri -- Bengali -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- French -- Georgian -- Greek? -- Hausa -- Hebrew -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Malayalam -- Polish -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish? -- TAMIL -- Telugu -- Turkish -- Urdu? -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

ரோமர் - கர்த்தரே நம்முடைய நீதி
ரோமருக்கு பவுல் எழுதின நிரூபத்திலிருந்து வேதபாடங்கள்
பகுதி -3 துணைப்பகுதி - ரோம சபையில் உள்ள தலைவர்களுக்கு பவுலின் குணாதிசயங்களைக் குறித்த சிறப்பு அறிக்கைகள் (ரோமர்15:14 – 16:27)

7. பவுலின் உடன் ஊழியர்களின் வாழ்த்துகள் (ரோமர் 16:21-24)


ரோமர் 16:21-24
21 என் உடன்வேலையாளாகிய தீமோத்தேயும், என் இனத்தாராகிய லூகியும், யாசோனும், சொசிபத்தரும் உங்களை வாழ்த்துகிறார்கள். 22 இந்த நிருபத்தை எழுதின தெர்தியுவாகிய நான் கர்த்தருக்குள் உங்களை வாழ்த்துகிறேன். 23 என்னையும் சபையனைத்தையும் உபசரித்துவருகிற காயு உங்களை வாழ்த்துகிறான். பட்டணத்து உக்கிராணக்காரனாகிய ஏரஸ்தும், சகோதரனாகிய குவர்த்தும் உங்களை வாழ்த்துகிறார்கள். 24 நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினுடைய கிருபை உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.

பவுல் தனிமையாய் இருப்பதை பார்ப்பது அபூர்வம். அவன் எப்போதும் உடன் ஊழியர்களுடன் இணைந்து ஆண்டவரின் கட்டளையை நிறைவேற்றினான். பர்னபா, சீலா போன்றோர் அவனை பரபூரணப்படுத்தினார்கள், ஆலோசனைகள் வழங்கினார்கள். சில சமயங்களில் பல்வேறு பட்டணங்களில் உள்ள மற்ற விசுவாசிகளும் கிறிஸ்துவின் வெற்றிப் பவனியில் இணைந்து கொண்டு செயல்பட்டார்கள். பவுல் தன்னை ஒரு அடிமையாகக் கண்டான். அந்த வெற்றிப் பவனியில், கிறிஸ்துவின் மகிமையின் சுகந்த வாசனையை கொண்டு சென்றான். அதை ஏற்றுக் கொண்டவர்கள் இரட்சிக்கப்பட்டார்கள். புறக்கணித்தவர்கள் அழிந்து போனார்கள். (ரோமர் 2:14-16).

அநேக விசுவாசிகள் அவனை சூழ்ந்திருந்தபோது, கொரிந்துவில் கி.பி 59-ல் பவுல் இந்த நிரூபத்தை ரோமருக்கு எழுதினான். அவர்களுடைய வாழ்த்துகளையும், நிரூபத்தில் கடைசியில் சேர்க்கிறான். பவுல் ஒரு தத்துவஞானியைப் போல இதை தனியாக எழுதவில்லை என்பதை இதன் மூலம் அறியமுடியகிறது. ரோமில் உள்ள விசுவாசிகளைக் குறித்த எல்லா காரியங்களையும் குறித்து கேள்விப்பட்டு, எப்போதும் ஒரு கூட்டத்தினரால் சூழப்பட்டவனாக பவுல் காணப்பட்டான்.

கிறிஸ்துவுக்கு தன்னை அர்ப்பணித்த யூத கிறிஸ்தவ தாய் மற்றும் விசுவாசம், இறைபக்தி நிறைந்த பாட்டியினால் தீமோத்தேயு வளர்க்கப்பட்டிருந்தான். அவனுடைய தகப்பன் கிரேக்கன். பவுல் கிறிஸ்துவை நேசித்த இந்த தீமோத்தேயுவை பயனுள்ள உடன் ஊழியனாகக் கண்டான். அவன் யூத மற்றும் கிரேக்க கலாச்சாரத்தில் வளர்க்கப்பட்டிருந்தான். பவுல் அவனை விருத்தசேதனம் பண்ணினான். ஏனெனில் அவனுடைய தாய் ஒரு யூதப் பெண். மேலும் அவன் யூதனுக்கு யூதனாகவும், கிரேக்கனுக்கு கிரேக்கனாகவும் காணப்பட இப்படிச் செய்தான். அவர்கள் இருவரும் ஒருமனப்பட்டு செயல்பட்டார்கள். தீமோத்தேயு பவுலிற்கு ஒரு மகனைப் போல் இருந்தான்.

தீமோத்தேயு தனக்காக வாழவில்லை, ஆண்டவர் இயேசுவை மகிமைப்படுத்தி வாழ்ந்தான். முதலாவது இறை அரசையும், அவருடைய நீதியையும் தேடினான். பவுல் அநேக முறை பட்டணங்களுக்கு தீமோத்தேயுவை அனுப்பி ஆயத்தப்பணிகளை செய்ய வைத்தான். சிலசமயம் பவுல் தீமோத்தேயுவை தனியாக இருக்க விட்டிருக்கிறான். ஏனெனில் உபத்திரவத்தின் நிமித்தம் பவுல் வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம் இருந்திருக்கும். புதிய விசுவாசிகளின் பக்திவிருத்திக்கு பொறுப்புள்ளவனாக தீமோத்தேயு இருந்தான். (அப்போஸ்தலர் 16:1-3; 19:22; பிலிப்பியர் 2:19-22).

தீமோத்தேயுவை வாழ்த்திய பிறகு, பவுலின் கோத்திரத்தைச் சேர்ந்த மூன்று பெயர்கள் குறிப்பிடப்படுகிறது. அவர்கள் பெயர் லூகி, யாசோன், சொசிபத்தர். யூதர்கள் மிகுந்த எதிர்ப்பு தெரிவித்த போது, தெசலோனிக்கேயில் பவுல் தங்கும்படியாக தனது வீட்டைத் திறந்து கொடுத்தவன் தான் இந்த யாசோன். பவுல் மூன்று ஒய்வுநாட்கள் அங்கு இருந்து பணி செய்தான். சிலர் விசுவாசித்தார்கள். கிறிஸ்துவுக்காக புதிய சபை உருவானது. அந்த கூட்டத்தார் யாசோனின் வீட்டைத் தாக்கினார்கள். பவுலும், சீலாவும் அங்கு இல்லை. யாசோனை வெளியே இழுத்து வந்து அதிகாரியின் முன்பு நிறுத்தி, குற்றம் சாட்டினார்கள். இயேசுவை ராஜா என்று கூறி, மக்கள் சீஷருக்கு வரி செலுத்துவதை தடை செய்கிறான் என்று கூறினார்கள். ஆனால் அந்த அதிகாரி கோபம் நிறைந்த யூதர்களை அனுப்பிவிட்டு, யாசோனை விடுதலை செய்தான். (அப்போஸ்தலர் 17:6).

சொசிபத்தர் என்பவன் பெரேயாவைச் சேர்ந்த விசுவாசி. இங்கு யூதர்கள் பவுலின் வார்த்தையை ஏற்றுக்கொண்டார்கள். சிலுவையில், அறையப்பட்டு, மரித்து உயிர்த்தெழுந்த இயேசு தான் மேசியா என்பதை அறியும்படி பழைய ஏற்பாட்டின் புத்தகங்களைத் தேடி வாசித்தார்கள். இதைக் கண்ட பொல்லாத யூதர்கள் பவுலுக்கு விரோதமாக மக்களைத் தூண்டினார்கள். ஏதென்சு வரை பவுலுக்கு வழித்துணையாக பெரேயா மக்கள் வந்தார்கள். சீலாவும், தீமோத்தேயுவும் பெரேயாவில் தங்கியிருந்து விசுவாசிகளை சத்தியத்திலும், விசுவாசத்திலும் உறுதிப்படுத்தினார்கள். அப்போது சொசிபத்தர் பவுலுடன் இணைந்து, சேகரித்த காணிக்கையை தேவையுள்ளோருக்கு கொடுக்கும்படி எருசலேமிற்கு சென்றான்.

சிரேனே ஊரைச் சேர்ந்த லூசியு பவுலின் மூன்றாவது உறவினன். (அப்போஸ்தலர் 13:1) இவன் அந்தியோகியா சபையில் ஒரு மூப்பர். பவுலுடன் இணைந்து அவன் விண்ணப்பங்களை ஏறெடுத்தவன்.

கிரேக்க மொழி சரளமாகப் பேசக்கூடிய ரோமன் தான் தெர்தியு. இவன் நிரூபத்தின் கடைசியில் குறிப்பிடப்படுகிறான். இவன் தான் பவுலுக்கு உறுதுணையாக இருந்து ரோமருக்கு இந்த நிரூபத்தை எழுதியவன். பவுல் வார்த்தைகளைச் சொல்ல, தெர்தியு இந்த பெரிய எழுத்துப்பணியை நிறைவேற்றி முடித்தான். எழுதுபவர்கள் பப்பைரஸ் என்ற தாளை அப்போது உபயோகித்தார்கள். அவர்கள் ஒருமனப்பட்டு இதை நிறைவேற்றினார்கள். பவுல் கூறியவைகளின் பொருளை உணர்ந்து, ரோமில் உள்ள சபைக்கு உண்மையுடன் இதை எழுதினான். ஆண்டவராகிய இயேசுவுக்குள் நிலைத்திருந்து, ரோமில் உள்ள சபையை ஆயத்தப்படுத்திய, தெரிந்துகொள்ளப்பட்ட ஒருவனாக தெர்தியுவை பவுல் கருதினான். பவுல் அவனை அறிந்திருந்தான். அவனை நம்பினான்.

தெசலோனிக்கேயில் உள்ள ஒரு விசுவாசி தான் காயு. உபத்திரவத்தின் போது தனது சொந்த வீட்டை சபைக் கூடுகைகளுக்காக திறந்து கொடுத்தான். பிரச்சினைகளுடன் வரும் தனி நபர்கள் மீது காயு அக்கறை செலுத்தினான். கொரிந்துவில் பவுல் திருமுழுக்கு கொடுத்திருந்த சிலரில் இவனும் ஒருவன். நான் கிறிஸ்பு, காயுவைத் தவிர வேறு எவருக்கும் திருமுழுக்கு கொடுக்கவில்லை. எனவே இறைவனை துதிக்கிறேன். கிறிஸ்து என்னை திருமுழுக்கு கொடுக்கும்படி அனுப்பவில்லை; நற்செய்தியை பிரசங்கிக்கவே அனுப்பினார். (1 கொரிந்தியர் 1:14-17).

எரஸ்து என்பவன் பட்டணத்து கரூவூலக்காரன். தனது வேலையை உண்மையுடனும், நேர்மையுடனும் செய்தான். இதன் மூலம் அந்த சபையில் ஏழை, எளிய மக்கள் மட்டுமில்லாமல், உயர் வகுப்பார் மற்றும் சமூகத்தில் உயர்பதவியில் உள்ளோரும் இருந்தார்கள் என்பதை அறிய முடிகிறது. கிறிஸ்துவுக்குள்ளான இன்னொரு சகோதரன் குவர்த்து. இவன் கிரேக்கன் அல்ல. சபையில் அறியப்பட்டிருந்த ஒரு ரோமனாக இருந்தான்.

விண்ணப்பம்: நாங்கள் உமக்கு நன்றி கூறுகிறோம். ஆண்டவராகிய இயேசுவே, உமது சபையில் உமக்காக முழு இருதயத்தோடும், வித்தியாசமான பணிகளை செய்யும்படி ஊழியக்காரர்களை நீர் வைத்திருக்கிறீர். உமது பரிசுத்த நாமத்திற்கு மகிமையை கொண்டுவரும், எங்கள் சபைகளில் மூப்பர்கள் உண்மையுடன் செயல்பட உதவும்.

கேள்வி:

  1. பவுல் யாரிடம் இந்த நிரூபத்தை எழுதும்படி கேட்டுக்கொண்டான்?

www.Waters-of-Life.net

Page last modified on August 11, 2021, at 08:11 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)