Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Romans - 062 (The Apostle’s Worship)
This page in: -- Afrikaans -- Arabic -- Armenian -- Azeri -- Bengali -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- French -- Georgian -- Greek -- Hausa -- Hebrew -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Malayalam -- Polish -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Turkish -- Urdu? -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

ரோமர் - கர்த்தரே நம்முடைய நீதி
ரோமருக்கு பவுல் எழுதின நிரூபத்திலிருந்து வேதபாடங்கள்
பகுதி 2 - இறைவனால் தெரிந்துகொள்ளப்பட்ட, யாக்கோபின் புத்திரர் கடினப்பட்டுபோன பின்பும் இறைவனின் நீதி நிலையானதாக இருக்கிறது (ரோமர் 9:1-11:36)
5. யாக்கோபின் பிள்ளைகளுக்கு இருக்கும் நம்பிக்கை (ரோமர் 11:1-36)

உ) அப்போஸ்தலனின் ஆராதனை (ரோமர் 11:33-36)


ரோமர் 11:33-36
33 ஆ! தேவனுடைய ஐசுவரியம், ஞானம், அறிவு என்பவைகளின் ஆழம் எவ்வளவாயிருக்கிறது! அவருடைய நியாயத்தீர்ப்புகள் அளவிடப்படாதவைகள், அவருடைய வழிகள் ஆராயப்படாதவைகள்! 34 கர்த்தருடைய சிந்தையை அறிந்தவன் யார்? அவருக்கு ஆலோசனைக்காரனாயிருந்தவன் யார்? 35 தனக்குப் பதில் கிடைக்கும்படிக்கு முந்தி அவருக்கு ஒன்றைக் கொடுத்தவன் யார்? 36 சகலமும் அவராலும் அவர் மூலமாயும் அவருக்காகவும் இருக்கிறது; அவருக்கே என்றென்றைக்கும் மகிமையுண்டாவதாக. ஆமென்.

பவுல் யூதர்களின் ஆவிக்குரிய நிலையைக் குறித்து பயந்தான். அதே சமயத்தில் எருசலேமில் உள்ள ஆதி விசுவாசிகளுக்காக இறைவனை துதித்து, நன்றி செலுத்தினான். மற்ற மக்களும் விசுவாசிகளாக மாறி எண்ணிக்கையில் பெருகுவதற்காக அவன் பரிசுத்தமானவரை மகிமைப்படுத்தினான். இறைவனுடைய அளவற்ற அன்பினால் அவன் அமைதியடைந்தான். அவருடைய இரக்கத்தை அறிக்கையிட்டான். அவருடைய தண்டனையை அவன் மறுதலிக்கவில்லை. சர்வவல்லமையுள்ளவரின் அன்பை பவுல் உணர்ந்தான். தனது தவறான வழிகளை புரிந்தகொண்டான். இறுதியாக இவ்விதம் சாட்சியிடுகிறான். “இறைவன் நம்முடைய சிந்தனைக்கு அப்பாற்பட்டவர். நாம் அவரை நம்ப வேண்டும். அவருடைய சித்தம் மற்றும் வெளிப்பாட்டிற்கு நம்முடைய சிந்தனைகளை ஒப்புக்கொடுக்க வேண்டும் (ஏசாயா 40:13, 45:15; 55:8-9; ரோமர் 11:33).

ஆண்டவரை உண்மையுடன் ஆராதிப்பவன், அவரை துதிப்பவன், அவருக்கு நன்றி செலுத்துபவன் ஆசீர்வதிக்கப்பட்டவன். அவன் பரிசுத்தமானவரின் அன்பை உணர்ந்துள்ளான். சத்திய ஆவியானவர் இறைத்தன்மையின் ஆழங்களுக்குள் நம்மை வழிநடத்துகிறார். தனக்கு அளிக்கப்பட்ட வரங்களில் அவருடைய ஆவியின் ஐசுவரியத்தை அவன் உணருகிறான். பவுல் தனது நிரூபத்தின் இரண்டாம் பகுதியில், இந்த பொருளைக் குறித்த திட்டம் மற்றும் முடிவை அடைகிறான். யாக்கோபின் மக்களுடைய இருதயக் கடினத்தை அவன் அறிக்கையிடுகிறான். அவர்களுடைய அவிசுவாசம் மற்றும் இறை சித்தத்திற்கு எதிர்த்து நிற்பது இவைகளுக்குப் பிறகேயுள்ள காரணத்தை அறிந்திருந்தான். பவுல் இந்த உண்மையை மறுதலிக்கவில்லை.

அதே சமயத்தில் அவன் யூத விசுவாசிகளையும் ரோமில் உள்ள சில மேன்மையுள்ள மக்களையும் இறைவனுடைய அளவற்ற கிருபையினால், அவர்கள் ஏற்றுக்கொள்ளப்படுவார்கள். புறவினத்து புதிய விசுவாசிகள் மூலமாக ஆண்டவர் யூதர்களை அழைக்கிறார். அவர்களுடைய அன்பு, தாழ்மை, பரிசுத்தம், அனடோலியாவில் அவர்களது சேவை ஆகியவற்றை காண்பிக்கிறார். அவர்களை இணைந்து செயல்படுதல் மற்றும் உண்மைக்கு நேராக நடத்துகிறார். ஆனால் பவுல் நம்பியதற்கு எதிராக வரலாற்று உண்மைகள் காணப்பட்டன. யூதர்களின் எதிர்ப்பிற்கு பவுல் முதல் பலியானார். அவர்களுடைய பொய்யான குற்றச் சாட்டினால் ரோமில் அவன் தலை துண்டிக்கப்பட்டு இறந்தான்.

அவனுக்கு எதிராகவும், அவனுடைய நற்செய்திக்கு எதிராகவும் இந்த கடினப்படுதல் ஏற்படுவதை பவுல் கவனித்தான். யூதர்களுக்கு ஏசாயா தீர்க்கன் உரைத்த ஆவிக்குரிய உண்மையை திரும்பவும் கூறினான். “நீங்கள் காதாரக்கேட்டும் உணராதிருப்பீர்கள், கண்ணாரக்கண்டும் பாராதிருப்பீர்கள். இவர்கள் கண்களினால் காணாமலும், காதுகளினால் கேளாமலும், இருதயத்தினால் உணர்ந்து குணப்படாமலும், நான் இவர்களை ஆரோக்கியமாக்காமலும் இருக்கும்படிக்கு, இந்த ஜனத்தின் இருதயம் கொழுத்திருக்கிறது; காதுகளினால் மந்தமாய்க் கேட்டுத் தங்கள் கண்களை மூடிக்கொண்டார்கள் என்று இந்த ஜனத்தினிடத்தில் போய்ச் சொல்லு என்பதைப் பரிசுத்த ஆவி ஏசாயா தீர்க்கதரிசியைக்கொண்டு நம்முடைய பிதாக்களுடனே நன்றாய்ச் சொல்லியிருக்கிறார்.ஆதலால் தேவனுடைய இரட்சிப்பு புறஜாதியாருக்கு அனுப்பப்பட்டிருக்கிறதென்றும், அவர்கள் அதற்குச் செவிகொடுப்பார்களென்றும் உங்களுக்குத் தெரிந்திருக்கக்கடவது என்றான். இப்படி அவன் சொன்னபின்பு, யூதர்கள் தங்களுக்குள்ளே மிகவும் தர்க்கம் பண்ணிக்கொண்டு, போய்விட்டார்கள்” (அப்போஸ்தலர் 28:26-29).

பவுல் ரோமச் சிறைச்சாலையில், அவனுக்கு எதிராக அளிக்கப்பட்ட யூத ஆலோசனைச் சங்கத்தின் தீர்ப்பினால் அநேக ஆண்டுகள் இருந்தான். (அப்போஸ்தலர் 23:1-28:16) அவர்களது வெறுப்பு மற்றும் எதிர்ப்பினால் பவுல் சீஷருக்கு (ரோம மன்னன்) அபயமிட்டு ரோமிற்கு சென்றான். (அப்போஸ்தலர் 27:1-28:16). அவனது சிறை அனுபவம் கடினமாக இல்லை. ஏனெனில் அவன் நற்செய்தியை பிரசங்கிக்கவும், விரும்புகிறவர்கள் அதைக் கேட்கவும் ரோமர்கள் அனுமதி தந்தார்கள்.

ரோமில் உள்ள சில யூதர்கள் மட்டும் விசுவாசித்தார்கள். பெரும்பான்மையான மூப்பர்கள், ரபிக்கள் அவனது போதனையை ஏற்றுக்கொள்ளவில்லை. யூதமதத்திற்கு எதிரானது கிறிஸ்தவம் என்று கருதினார்கள். (அப்போஸ்தலர் 28:22) அவன் தலை துண்டிக்கப்பட்டு இறந்த பிறகும், நீதிபதிகள் மீது மிகுந்த செல்வாக்குள்ளவர்களாக, அவர்கள் இருந்தார்கள்.

புறவினத்து அப்போஸ்தலன் மீது யூதர்களின் வெறுப்பு ஒரு முடிவை எட்டியது. ஆனால் அவனது நிரூபங்கள் தடையின்றி எங்கும் பரவியது. இன்றும் கூட அநேக யூதர்கள் மற்றும் புறவினத்தார் கிறிஸ்துவில் விசுவாசம் வைக்கும்படி அவைகள் மக்களை ஈர்க்கின்றன. உலகின் முடிவை நோக்கிய கிறிஸ்துவின் வெற்றிப் பவனியில் கிறிஸ்துவில் வாழும் பவுலும் இருக்கிறான் என்பது வெளிப்படையான உண்மை.

விண்ணப்பம்: பரலோகப் பிதாவே, அப்போஸ்தலனாகிய பவுலுடன் நாங்களும் உம்மை ஆராதிக்கிறோம். உம்முடைய அன்பு மற்றும் கோபத்திற்காக நாங்கள் உம்மை மகிமைப்படுத்துகிறோம். உமது இரக்கம் மற்றும் நியாயத்தீர்ப்பிற்காக உம்மை துதிக்கிறோம். உமது ஞானமுள்ள வழிகள், உண்மையுள்ள கிருபையில் மகிழ்கிறோம். நீர் எங்களை கிறிஸ்துவிற்குள் உமது நேசப் பிள்ளைகளாக கொண்டு வந்துள்ளீர். உமக்கு நன்றி செலுத்துகிறோம்.

கேள்விகள்:

  1. பரிபூரண கிருபை மற்றும் இறைவனின் ஞானம் என்பதின் அர்த்தம் என்ன?
  2. தெரிந்துகொள்ளப்பட்ட மக்களை அவர் கடினப்படுத்துகிறார். முடிவில் பரிசுத்த மீதமுள்ள ஜனத்தை ஏற்றுக்கொள்கிறார். அனைவரையும் யாக்கோபின் புத்திரராகக் கருதுகிறார். இதில் இறைவன் எப்படி நீதியில் நிலைத்திருக்கிறார்?

வினா - 3

அருமையான வாசகரே,
இந்த புத்தகத்தில் உள்ள பவுல் ரோமருக்கு எழுதின நிரூபத்தின் எங்கள் வியாக்கியானங்களை நீங்கள் வாசித்துள்ளீர்கள். இப்போது உங்களால் கீழே உள்ள கேள்விகளுக்கு விடை எழுத முடியும். நீங்கள் 90 கேள்விகளுக்கு பதில் எழுதினால் உங்கள் பக்திவிருத்திக்காக நாங்கள் இதன் அடுத்த பகுதியை அனுப்புவோம். உங்கள் முழுப்பெயர் மற்றும் முகவரியை தெளிவாக விடைத்தாளில் குறிப்பிட மறவ வேண்டாம்.

  1. பவுலின் மிகுந்த துக்கத்திற்கு என்ன காரணம்?
  2. பவுல், தன்னுடைய மக்களின் இரட்சிப்பிற்காக எதை தியாகம் பண்ண ஆயத்தமாய் இருந்தான்?
  3. பழைய உடன்படிக்கையின் மக்களுக்கு இருந்த எத்தனை சிலாக்கியங்களை பவுல் குறிப்பிடுகிறான்? அவைகளில் எது உங்களுக்கு மிக முக்கியமான ஒன்று?
  4. தெரிந்துகொள்ளப்பட்ட மக்களில் அநேகர் ஏன் இறைவனின் கிருபையால் இரட்சிக்கப்பட முடியாமல் நியாயத்தீர்ப்புக்கு உட்பட்டார்கள்?
  5. ஈசாக்கின் அவருடைய சந்ததியின் தெரிந்தெடுப்பு மற்றும் யாக்கோபின் அவருடைய குமாரர்களின் தெரிந்தெடுப்பு என்பதன் அர்த்தம் என்ன?
  6. இறைவனின் தெரிந்து கொள்ளுதலைப் பற்றிய இரகசியம் என்ன?
  7. ஒரு மனிதனும் இறைவனால் தெரிந்துகொள்ளப்பட தகுதியற்றவன் ஏன்? நம்முடைய தெரிந்துகொள்ளுதலுக்கான காரணம் என்ன?
  8. ஏன் இறைவன் பார்வோனைக் கடினப்படுத்தினார்? கடினப்பட்ட தனிநபர்கள், சமூகம் அல்லது மக்கள் எப்படித் தோன்றுகிறார்கள்?
  9. இறைவனுடைய கோபாக்கினையின் பாத்திரங்கள் யார்? அவர்களுடைய கீழ்ப்படியாமைக்கு காரணம் என்ன?
  10. இறைவனின் மகிமைக்கேதுவான பாத்திரங்களின் நோக்கம் என்ன? அவர்களுடைய ஆரம்பம் எது?
  11. வேறுபட்ட மக்களினத்தில் இருந்து வரும் மில்லியன் கணக்கான விசுவாசிகள் எவ்விதம் இறைவனுடைய நீதியைப் பெறுகிறார்கள்? ஏன் அதில் நிலைத்திருக்கிறார்கள்?
  12. மற்ற மதங்களைச் சார்ந்த பக்தியுள்ளோர் தங்களுடைய சட்டங்களைக் கடைப்பிடித்து, இறைவனுடைய நீதியைப் பெற ஏன் முயற்சிக்கிறார்கள்?
  13. பவுல் கூறுகின்ற “கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் முடிவாயிருக்கிறார்” என்பதன் அர்த்தம் என்ன?
  14. ஏன் யூதர்கள் வரப்போகிற மேசியாவிற்காக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்?
  15. விசுவாசம் மற்றும் சாட்சிக்கு இடையேயுள்ள உறவு என்ன?
  16. அப்போஸ்தலனாகிய பவுலைப் பொறுத்தமட்டில் எவ்விதம் விசுவாசம் மற்றும் சாட்சி என்ற கருத்தாக்கம் நடைமுறையில் வளர்ச்சி பெறுகின்றது?
  17. இன்று எவ்விதம் ஒவ்வொரு மனிதனும் விரும்பினால் நற்செய்தியைக் கேட்டு, புரிந்துகொண்டு, ஏற்றுக்கொள்ள முடியும்?
  18. ஏன் இறைவன் எல்லா தேசங்களிலும் தெரிந்துகொள்ளப்பட்ட தனது மக்களிடம் இருந்து புதுப்பிக்கப்பட்ட தனிநபர்களை உருவாக்குகிறார்?
  19. பாகாலுக்கு தங்கள் முழுங்கால் முடங்காத ஏழாயிரம் பேரை நான் மீதமாக வைத்திருக்கிறேன் என்று இறைவன் எலியாவிற்கு உரைத்த வார்த்தைகளின் பொருள் என்ன?
  20. தானும், கிறிஸ்துவைப் பின்பற்றும் யூதர்கள் அனைவரும் இறைவனால் தெரிந்தெடுக்கப்பட்ட பரிசுத்தமுள்ள மீதியானோரைச் சேர்ந்தவர்கள் என்று கூறும் பவுலின் வார்த்தைகளுடைய பொருள் என்ன?
  21. அசுத்தமான புறவினத்தாருக்கு யூதர்களின் இருதயக் கடினம் என்ன பொருள் தருகிறது?
  22. கிறிஸ்தவர்கள் எவ்விதம் அவிசுவாசிகளை சரியான விசுவாசத்திற்குள் நடத்த முடியும்?
  23. கிறிஸ்துவின் ஆவிக்குரிய சரீரத்தில் இணைக்கப்படுதல் என்பதன் அர்த்தம் என்ன?
  24. இணைக்கப்படுதல் பாதிக்கப்பட்டால் யாருக்கு ஆபத்து நேரிடும்?
  25. ஏன் இறைவனின் வாக்குத்தத்தங்கள் ஒருபோதும் தோற்பதில்லை, என்றென்றும் நிலைத்திருக்கிறது?
  26. ஆவிக்குரிய இஸ்ரவேலர் யார்?
  27. பரிபூரண கிருபை மற்றும் இறைவனின் ஞானம் என்பதின் அர்த்தம் என்ன?
  28. தெரிந்துகொள்ளப்பட்ட மக்களை அவர் கடினப்படுத்துகிறார். முடிவில் பரிசுத்த மீதமுள்ள ஜனத்தை ஏற்றுக்கொள்கிறார். அனைவரையும் யாக்கோபின் புத்திரராகக் கருதுகிறார். இதில் இறைவன் எப்படி நீதியில் நிலைத்திருக்கிறார்?

ரோமருக்கு எழுதின நிரூபத்தின் அனைத்து பகுதிகளையும் நீங்கள் கற்று முடிக்கும்போது கிறிஸ்துவுக்காக நீங்கள் செய்யும் பணிகளில் உங்களை உற்சாகப்படுத்தும்படி, நாங்கள் ஒரு சான்றிதழை அனுப்புவோம்.

நீங்கள் விலையேறப்பெற்ற பொக்கிஷத்தை அடையும்படி பவுல் ரோமருக்கு எழுதின நிரூபத்தின் அனைத்து வினாப்பகுதிகளுக்கும் பதில் அனுப்பும்படி உங்களை உற்சாகப்படுத்துகிறோம். உங்கள் பதிலை எதிர்பார்த்து காத்திருக்கிறோம். உங்களுக்காக விண்ணப்பம் ஏறெடுக்கிறோம். எங்களது முகவரி.

Waters of Life
P.O.Box 600 513
70305 Stuttgart
Germany

Internet: www.waters-of-life.net
Internet: www.waters-of-life.org
e-mail: info@waters-of-life.net

www.Waters-of-Life.net

Page last modified on August 10, 2021, at 12:18 PM | powered by PmWiki (pmwiki-2.3.3)