Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Romans - 026 (Abraham’s Faith was Accounted to him)
This page in: -- Afrikaans -- Arabic -- Armenian -- Azeri -- Bengali -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- French -- Georgian -- Greek -- Hausa -- Hebrew -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Malayalam -- Polish -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Turkish -- Urdu? -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

ரோமர் - கர்த்தரே நம்முடைய நீதி
ரோமருக்கு பவுல் எழுதின நிரூபத்திலிருந்து வேதபாடங்கள்
பகுதி 1 - இறைவனுடைய நீதி எல்லாப் பாவிகளையும் நியாயந்தீர்க்கிறது, கிறிஸ்துவுக்குள் எல்லா விசுவாசிகளையும் நீதிக்குட்படுத்துகிறது, பரிசுத்தப்படுத்துகிறது. (ரோமர் 1:18-8:39)
ஆ - விசுவாசத்தினால் கிடைக்கும் புதிய நீதி அனைத்து மனிதர்களுக்கும் கொடுக்கப்படுகிறது (ரோமர் 3:21-4:22)
3. விசுவாசத்தினால் நீதிமானாக்கப்படுதலைக் குறித்து ஆபிரகாம் மற்றும் தாவீதின் உதாரணங்கள் (ரோமர் 4:1-24)

அ) ஆபிரகாமுடைய விசுவாசம் அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது (ரோமர் 4:1-8)


ரோமர் 4:1-8
1 அப்படியானால், நம்முடைய தகப்பனாகிய ஆபிரகாம் மாம்சத்தின்படி என்னத்தைக் கண்டடைந்தான் என்று சொல்லுவோம்? 2 ஆபிரகாம் கிரியைகளினாலே நீதிமானாக்கப்பட்டானாகில் மேன்மைபாராட்ட அவனுக்கு ஏதுவுண்டு; ஆகிலும் தேவனுக்குமுன்பாக மேன்மைபாராட்ட ஏதுவில்லை. 3 வேதவாக்கியம் என்ன சொல்லுகிறது? ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது என்று சொல்லுகிறது. 4 கிரியை செய்கிறவனுக்கு வருகிற கூலி கிருபையென்றெண்ணப்படாமல், கடனென்றெண்ணப்படும். 5 ஒருவன் கிரியை செய்யாமல் பாவியை நீதிமானாக்குகிறவரிடத்தில் விசுவாசம் வைக்கிறவனாயிருந்தால், அவனுடைய விசுவாசமே அவனுக்கு நீதியாக எண்ணப்படும். 6 அந்தப்படி, கிரியைகளில்லாமல் தேவனாலே நீதிமானென்றெண்ணப்படுகிற மனுஷனுடைய பாக்கியத்தைக் காண்பிக்கும்பொருட்டு: 7 எவர்களுடைய அக்கிரமங்கள் மன்னிக்கப்பட்டதோ, எவர்களுடைய பாவங்கள் மூடப்பட்டதோ, அவர்கள் பாக்கியவான்கள். 8 எவனுடைய பாவத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, அவன் பாக்கியவான் என்று தாவீது சொல்லியிருக்கிறான்.

ரோமாபுரியில் இருந்த யூத விசுவாசிகளை புதிய ஏற்பாட்டின் விசுவாசத்திற்கு வழிநடத்தும்படி பவுல் முயற்சி செய்தார். அதற்கு உதாரணமாக அவர் அவர்களுடைய தகப்பனாகிய ஆபிரகாமையும் தீர்க்கதரிசியாகிய தாவீதையும் பற்றி பேசுகிறார். அதன் மூலமாக ஆபிரகாமும் தாவீதும் தங்களுடைய நற்செயல்களினால் நீதிமான்களாக்கப்படவில்லை என்றும் அவர்களுடைய விசுவாசத்தினால்தான் அவர்களும் நீதிமான்களாக்கப்பட்டார்கள் என்பதை அவர்களுக்குக் காண்பிக்கிறார்.

ஆபிரகாமும் மற்ற மனிதர்களைப் போன்ற ஒரு மனிதன்தான். அவர் எந்த வகையிலும் மற்றவர்களைவிட உயர்ந்தவரோ குறைந்தவரோ அல்ல. ஆபிரகாமிலிருந்த பல்வேறு பாவங்களையும் அவனுடைய இருதயம் கறைபட்டிருப்பதையும் ஆண்டவர் அறிந்திருந்தார். ஆனால் இறைவனுடைய வாக்குக்குக் கீழ்ப்படிவதற்கு அவருக்கிருந்த ஏக்கத்தையும் ஆண்டவர் கவனித்தார். இறைவன் ஆபிரகாமுடன் நேரடியாகப் பேசினார், அவரை அழைத்தார், பழைய பதோ(து)வியனாகிய (ர்ப்க் ஆங்க்ர்ன்ண்ய் - பதோ(து)வியன் என்ற சொல்லின் தமிழ் அர்த்தம் நாடோடி என்பதாகும்) அவர் அந்த அழைப்பை நம்பினார். இறைவன் தனக்குக் கொடுத்த வாக்குறுதிகளின் உண்மையான ஆழத்தையும் அதன் பொருளையும் ஆபிரகாம் முழுவதுமாகப் புரிந்துகொள்ளாவிட்டாலும், இறைவனுடைய வார்த்தை உண்மையுள்ளது என்றும் அவர் தம்முடைய வாக்குறுதியைக் காப்பார் என்றும் உறுதியாக அவர் இறைவனை அவர் நம்பினார். ஆபிரகாம் தன்னுடைய சொந்த பெலத்தையோ பெலவீனத்தையோ நம்பாமல், இறைவனையும் அவருடைய அளவற்ற வல்லமைகளையும் நம்பினார். அவருடைய பற்றுறுதியும் நம்பிக்கையும் அவரது இதயத்தின் தாகத்தைத் தீர்த்தது.

அவருக்குள் இருந்த இந்த உறுதியான, நிச்சயமான நம்பிக்கைதான் அவர் நீதிமானாக்கப்படுவதற்குக் காரணமே தவிர அவருடைய கொள்கை ரீதியான புரிந்துகொள்ளுதல் அல்ல. ஆபிரகாம் தன்னில்தான் நீதியுள்ளவர் அல்ல, அவருடைய நம்பிக்கையின் காரணமாக அவர் நீதிமானாக்கப்பட்டார். அவரும் நம்மைப் போல பாவியாக இருந்த போதிலும், அவர் இறைவன் தன்னைத் தெரிவு செய்தபோது அதற்கு இணங்கி, அவருடைய வார்த்தைக்குக் கவனமாகச் செவிகொடுத்து, அவருடைய வாக்குறுதியை ஏற்றுக்கொண்டு, அதைத் ஏக்கமுள்ள தன்னுடைய ஆன்மாவில் வைத்துக்கொண்டார்.

இந்த விதமான விசுவாசம்தான் “அவருக்கு நீதியாக எண்ணப்பட்டது” என்று நான்காம் அதிகாரத்தில் பலமுறை நாம் வாசிக்கிறோம். இந்தக் கூற்று சீர்திருத்தக் காலத்தின் அடையாளமாக மாறியது. எந்த நிபந்தனையும் இன்றி, சிலுவையின் நற்செய்தியை ஏற்றுக்கொண்டு, இறைவனைத் தன்னுடைய விசுவாசத்தினால் கனப்படுத்தி, கிறிஸ்துவின் மீது தன்னுடைய வாழ்க்கையைக் கட்டுகிற ஒருவர், நியாயப்பிரமாணத்தின் செயல்களுக்கும் தனிப்பட்ட முயற்சிகளுக்கும் அப்பாற்பட்டு, முழுவதுமாக நீதிமானாக்கப்படுகிறார்.

இறைவனுடைய வார்த்தை உங்களுடைய பொய்களையும், அசுத்தங்களையும், அன்பற்ற நிலைமையையும் உங்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறதா? நீங்கள் உங்கள் பாவங்களுக்கான தண்டனையை நிச்சயமாகப் பெறுவீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்களா? நீங்கள் உங்கள் பாவங்களைக் குறித்து மனம் வருந்தி, மனந்திரும்பி, இறைவனிடத்தில் மன்னிப்பு வேண்டுகிறீர்களா? உங்களுடைய கடின இருதயத்திலிருந்து உடைக்கப்படுவீர்களானால், சிலுவையில் அறையப்பட்ட இறைமகனிடத்தில் பரிசுத்த ஆவியானவர் உங்களை இழுத்துக்கொண்டு வந்து அவரை உங்கள் கண்களின் முன்பு நிறுத்தி, உங்களிடம், “நான் உங்கள் பாவங்களை மன்னித்துவிட்டேன். நீங்கள் நீதியுள்ளவர் அல்ல, ஆனால் நான் உங்களை நீதிமானாக்குகிறேன். நீங்கள் பரிசுத்தமுள்ளவர் அல்ல, ஆனால் நான் உங்களைப் பரிசுத்தமுள்ளவராக்குகிறேன்” என்று சொல்லுவார்.

இறைவனுடைய வார்த்தையை நீங்கள் கேட்டிருக்கிறீர்களா? உங்களுடைய கடினமான மனதையும் கல்லான இருதயத்தையும் அது ஊடுருவியிருக்கிறதா? உங்களுடைய அக்கறையற்ற ஆவியை அது அசைத்திருக்கிறதா? உங்களுடைய ஆண்டவரின் வார்த்தையை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள். மீட்பின் நற்செய்தியை நம்புங்கள்; இறைவன் உங்களை உண்மையிலேயே நீதிமானாகக் கருதும்படி சிலுவையைப் பற்றிக்கொள்ளுங்கள். உங்களுக்காக சிலுவையில் அறையப்பட்டவரை உங்கள் விசுவாசத்தினால் கனப்படுத்துங்கள். அப்போது அவரோடு இருக்கும் உங்கள் உறவிலே நீங்கள் பரிசுத்தமடைவீர்கள்.

சங்கீதங்களை இறைவனுடைய ஏவுதலால் எழுதிய அரசனாகிய தாவீதும் பாவமுள்ளவனாக இருந்தபோதிலும் இறைவனால் நீதிமானாக்கப்படும் இரகசியத்தைத் தன்னுடைய வாழ்வில் அனுபவித்தவராக இருந்தார். தன்னுடைய அற்புதமான பாடல்களைக் குறித்து அவர் பெருமையடையவும் இல்லை, போர்களில் அவர் பெற்ற வெற்றிகளினால் அவர் நீதிமானாக்கப்படவும் இல்லை, அவர் தன்னுடைய உள்ளபூர்வமான விண்ணப்பங்களைப் பற்றியும், தாராளமாக அவர் அருளிய கொடைகளைப் பற்றியும் மேன்மைபாராட்டவும் இல்லை. ஆனால் அவர் தன்னுடைய ஆண்டவரின் கிருபையினால் பாவ மன்னிப்பைப் பெற்றுக்கொள்ளும் மனிதனை அழகுறச் சித்தரிக்கிறார். நீங்கள் பெற்றுக்கொண்டுள்ள நீதி இறைவன் கிறிஸ்துவுக்குள் உங்களுக்குக் கொடுத்த மிகப்பெரிய கொடையாகும்.

விண்ணப்பம்: பரிசுத்தமுள்ள இறைவா, மாம்சத்தில் வந்த வார்த்தையாக உம்முடைய குமாரனை நீர் எங்களுக்குத் தந்ததற்காக உமக்கு நன்றி, எங்களை நீதிமானாக்கும் உம்முடைய கிருபை அவருடைய சிலுவையில் இருக்கிறது என்று நீர் சொன்னீர். உம்முடைய வாக்குறுதிகளைக் கேட்டு, அவற்றைப் புரிந்துகொண்டு, உம்மில் நாங்கள் விசுவாசம் வைக்கும்படி எங்கள் செவிகளைத் திறந்தருளும். உலகெங்கிலுமிருந்து உம்மை விசுவாசிக்கும் அனைத்து மக்களோடு எங்களையும் நீர் நீதிமான்களாக்கியிருக்கிறீர், அதற்காக உமக்கு நன்றி. உம்முடைய குமாரனுடைய சிலுவையின் சக்தியை அனுபவித்து உணரும்படி எங்கள் நண்பர்களுக்கும் நீர் அருள்கொடும்.

கேள்வி:

  1. ஆபிரகாமும் தாவீதும் எவ்வாறு நீதிமான்களாக்கப்பட்டார்கள்?

www.Waters-of-Life.net

Page last modified on August 09, 2021, at 08:46 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)