Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- John - 126 (Miraculous catch of fishes)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Bengali -- Burmese -- Cebuano -- Chinese -- Dioula? -- English -- Farsi? -- French -- Georgian -- Greek -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Kyrgyz -- Malayalam -- Peul -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Thai -- Turkish -- Twi -- Urdu -- Uyghur? -- Uzbek -- Vietnamese -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

யோவான் - வெளிச்சம் இருளில் ஒளிர்கிறது
யோவான் எழுதின கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 4 - ஒளி இருளை மேற்கொள்ளுகிறது (யோவான் 18:1 – 21:25)
ஆ - கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் மற்றும் தரிசனமாகுதல் (யோவான் 20:1 - 21:25)
5. இயேசு ஏரியினருகே காட்சி தருகின்றார் (யோவான் 21:1-25)

அ) அற்புதமாய் மீன்களைப் பிடித்தல் (யோவான் 21:1-14)


யோவான் 21:1-3
1 இவைகளுக்குப்பின்பு இயேசு திபேரியா கடற்கரையிலே மறுபடியும் சீஷருக்குத் தம்மை வெளிப்படுத்தினார்; வெளிப்படுத்தின விவரமாவது: 2 சீமோன்பேதுருவும், திதிமு என்னப்பட்ட தோமாவும், கலிலேயா நாட்டிலுள்ள கானா ஊரானாகிய நாத்தான்வேலும், செபெதேயுவின் குமாரரும், அவருடைய சீஷரில் வேறு இரண்டுபேரும் கூடியிருக்கும்போது,3 சீமோன்பேதுரு மற்றவர்களை நோக்கி: மீன்பிடிக்கப்போகிறேன் என்றான். அதற்கு அவர்கள்: நாங்களும் உம்முடனேகூட வருகிறோம் என்றார்கள். அவர்கள் புறப்பட்டுப்போய், உடனே படவேறினார்கள். அந்த இராத்திரியிலே அவர்கள் ஒன்றும் பிடிக்கவில்லை.

இயேசு உயிர்த்தெழுந்த பின்பு, திபேரியா ஏரியின் அருகே இருக்கும் தனது சொந்த ஊர் இருக்கும் கலிலேயா மாவட்டத்திற்கு தமது சீஷர்கள் செல்லும் போது அவர்களுடன் இணைந்து சென்றார். நல்ல மேய்ப்பனாக அவர்கள் முன் சென்று, அங்கே அவர்களை சந்தித்தார். அவர்கள் எருசலேமில் இருந்த போது அவர்களது பயங்களை போக்கினார். அவர்கள் மீது வைத்த அன்பின் நிமித்தம் மீண்டும் அவர்களை விரைவில் சந்தித்தார். பஸ்காவிற்கு பின்பு ஞாயிறு மாலையில் அவர் தெய்வீக சமாதானத்துடன் அவர்களை வாழ்த்தினார். அவர்களை உலகத்தை நற்செய்திமயமாக்கும்படி அனுப்பினார்.(மாற்கு:16:7, மத்தேயு:28:10)

மனுஷர்களை பிடிக்கிறவர்களாக்குவேன் என்ற அவரது கட்டளைக்கு சீஷர்கள் கீழ்படிந்து நடந்தார்களா? உயிர்த்தெழுதலின் அற்புதம் அவர்களது சிந்தனையை மாற்றி அமைத்ததா? நித்திய வாழ்வின் செய்தியோடு உலகத்தை நற்செய்திமயமாக்க அவர்கள் விரைந்து செயல்பட்டார்களா? துக்ககரமான விஷயம், இல்லையென்பதே. அவர்கள் தங்கள் பழைய பணிகளுக்குத் திரும்பினார்கள், குழுக்களாக பிரிந்தார்கள், சிலர் தனித்திருந்தார்கள், சிலர் மீனவர்களுடன் இணைந்து கொண்டார்கள்.

ஒரு நாள் மாலை பேதுரு தனது நண்பர்களிடம் கூறினார். “நான் மீன்பிடிக்கப் போகிறேன்”. அவனைப் பின்பற்றி இச் செயலைச் செய்ய வேண்டுமா? வேண்டாமா? என்று தீர்மானிக்க விட்டுவிட்டார். அவர்கள் கரையில் அவனுடன் இணைந்து கொண்டார்கள். படவில் ஏறி ஏரியின் மத்தியப்பகுதிக்கு சென்றார்கள். அவர்கள் தங்கள் வலைகளை அநேக முறை வீசினார்கள். இரவு முழுவதும் பிரயாசப்பட்டு சோர்ந்து போனார்கள். ஆனால் ஒன்றும் பிடிக்கவில்லை. அவர்கள் இயேசு கூறியதை மறந்து விட்டார்கள். “என்னாலேயல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது”.

யோவான் 21:4-6
4 விடியற்காலமானபோது, இயேசு கரையிலே நின்றார்; அவரை இயேசு என்று சீஷர்கள் அறியாதிருந்தார்கள்.5 இயேசு அவர்களை நோக்கி: பிள்ளைகளே, புசிக்கிறதற்கு ஏதாகிலும் உங்களிடத்தில் உண்டா என்றார். அதற்கு அவர்கள்: ஒன்றுமில்லை என்றார்கள்.6 அப்பொழுது அவர்: நீங்கள் படவுக்கு வலதுபுறமாக வலையைப் போடுங்கள், அப்பொழுது உங்களுக்கு அகப்படும் என்றார். அப்படியே அவர்கள் போட்டு, திரளான மீன்கள் அகப்பட்டதினால், அதை இழுக்கமாட்டாதிருந்தார்கள்.

அவர்கள் இவ்விதமாய் வழிவிலகி அலைந்து கொண்டிருந்த இச் செயலுக்காக இயேசு அவர்களுடைய சீஷர்களை கடிந்து கொள்ளவில்லை. அவர்கள் திரும்பி வரும் வரை அவர் கடற்கரையில் காத்து நின்றார். அவர்களுடைய வலைகளில் அவரால் மீன்களை சிக்க வைத்திருக்க முடியும். ஆனால் அவர்களுக்கு கற்றுக்கொடுக்கும்படி அவர் விரும்பினார். இயேசுவினுடைய உயிர்ததெழுதலுக்குப் பின்பு அவர்கள் உணர்ச்சி வேகத்தில் செயல்படக் கூடாது என்றும் தங்கள் பழைய பணிகளுக்குத் திரும்பக் கூடாது என்றும் அவர்களுக்கு கற்றுக்கொடுக்க விரும்பினார். ஆனால் தங்கள் கவலைகளில், அனுதின வாழ்வின் பிரச்சினைகளில் அவர்கள் அவரை மறந்துவிட்டார்கள். அவர்கள் இல்லாததைப் போலவும் தூரத்தில் இருப்பதைப் போலவும் எண்ணி நடந்துகொண்டார்கள்.

அவர் தம்முடைய சீடர்களை அப்போஸ்தலர்கள் என்று அழைக்கவில்லை. ஆனால் பிள்ளைகளே என்று அழைத்தார். அவர் என்ன சொல்லியிருந்தார் என்பதை அவர்கள் மறந்து விட்டார்கள் மேலும் தங்கள் வாழ்வில் அதை நடைமுறைப்படுத்தவில்லை. இந்த வேதனை தரும் செயலை அவர்கள் செய்தாலும் இயேசு அவர்களை கண்டிப்பதற்குப் பதிலாக தாழ்மையுடன் அணுகினார். அவர்களிடம் சாப்பிட ஏதாகிலும் உண்டா? எனக் கேட்டார். தாங்கள் ஒன்றும் பிடிக்கவில்லை என்பதை அவர்கள் அறிக்கையிட வேண்டும். ஏனெனில் இறைவன் அவர்களுடன் இருக்கவில்லை. குறுகிய நேரத்தில் அவர்கள் தங்கள் தவறை ஒத்துக்கொண்டார்கள்.

அந்த காலை நேரத்தில் இயேசு அவர்களிடம் வந்தார். அவர்களிடம் ஒரு புதிய நம்பிக்கை உதிக்க ஆரம்பித்தது, “நீங்கள் தோற்றுப்போனதற்காக வருத்தப்பட வேண்டாம்”. அல்லது “மறுபடியும் முயற்சி செய்யுங்கள், நீங்கள் வெற்றி பெறுவீர்கள்” என்று அவர் சொல்லவில்லை. அவர் ஒரு ராஜரீக கட்டளையிட்டார். “படவின் வலது புறத்திலே உங்கள் வலைகளைப் போடுங்கள், நீங்கள் அதிக மீன்களைப் பிடிப்பீர்கள்”. என்று சொன்னார். அவர்கள் கரையை விட்டு வெகு தூரத்தில் இருக்கவில்லை. கரை அருகில் இருந்ததால் அங்கே பெரிய மீன்கள் கிடைப்பது அரிது. இருப்பினும் அவர்கள் இயேசு சொன்னதைக் கேட்டு வலையை வலதுபுறத்தில் போட்டார்கள்.

இயேசு தண்ணீரில் இருக்கும் மீனைக் கண்டார். அது போல இன்றும் அவருக்காக ஏங்குபவர்களை அவர் காண்கிறார். இன்றும் இயேசு அவ்விதமாக நம்மை அனுப்புகிறார். “உங்கள் வலைகளில் ஒவ்வொருவரையும் பிடியுங்கள்” என்று அவர் சொல்லுகிறதில்லை. “நான் சொல்லுகிற இடத்தில் உங்கள் நற்செய்தி வலையைப் போடுங்கள்” என்று அவர் சொல்கிறார். நீங்கள் என் வார்த்தைகள் நிறைவேறுவதைக் காண்பீர்கள்.

இயேசு சொன்ன இந்த வித்தியாசமான கட்டளைக்கு சீடர்கள் கீழ்ப்படிந்தார்கள். இருப்பினும் சாதாரண மனிதனாக காணப்பட்ட இயேசுவை அவர்கள் அடையாளம் கண்டு கொள்ளவில்லை. அவர் சாதாரணமாக உபயோகப்படுத்தும் வாழ்த்துதலை அவர்களுக்கு கூறினார். அவர்கள் அதில் நம்பிக்கை கொண்டார்கள். எனவே அவர்கள் சோர்ந்திருந்தாலும் தைரியம் பெற்றுக்கொண்டு தங்கள் வலைகளை வீசினார்கள். இப்போது அங்கு வலைகள் நிறைந்து விட்டது. அவர் எங்கு அனுப்புகிறாரோ அங்கு சென்று வலைகளை வீசும்போது, வலைகள் மீன்களால் நிறைகிறது. அவர்களால் அதை இழுக்க முடியவில்லை. உதவிக்காக அவர்கள் தங்கள் கூட்டாளிகளை அழைக்க வேண்டியதாய் இருந்தது.

விண்ணப்பம்: கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவே, மற்றவர்களை உமக்கென ஆதாயப்படுத்துவதைவிட எங்கள் வாழ்க்கையைப் பற்றி மட்டுமே கவலைப்படுவதற்காக எங்களை மன்னியும். நாங்கள் வழிவிலகிப் போனாலும் நீர் எங்களிடம் வருவதற்காக உமக்கு நன்றி கூறுகிறோம். எங்கள் தோல்விகளை நாங்கள் அறிக்கையிட எங்களை வழிநடத்தும்.உமது வார்த்தைக்கு கீழ்ப்படிய எங்களுக்கு கற்றுத்தாரும். உம்மைத் தேடுகிறவர்களிடம் எங்களை வழிநடத்தும். அவர்களை உமது நற்செய்தி வலைக்குள் கொண்டுவாரும். அவர்கள் எப்போதும் உமக்கு சொந்தமாயிருப்பார்கள்.

கேள்வி:

  1. அதிக மீன்களைப் பிடித்தது ஏன் சீஷர்களை வெட்கப்படவைக்க காரணமாய் இருந்தது?

www.Waters-of-Life.net

Page last modified on August 29, 2012, at 10:40 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)