Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- John - 125 (Conclusion of John's gospel)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Bengali -- Burmese -- Cebuano -- Chinese -- Dioula? -- English -- Farsi? -- French -- Georgian -- Greek -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Kyrgyz -- Malayalam -- Peul -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Thai -- Turkish -- Twi -- Urdu -- Uyghur? -- Uzbek -- Vietnamese -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

யோவான் - வெளிச்சம் இருளில் ஒளிர்கிறது
யோவான் எழுதின கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 4 - ஒளி இருளை மேற்கொள்ளுகிறது (யோவான் 18:1 – 21:25)
ஆ - கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் மற்றும் தரிசனமாகுதல் (யோவான் 20:1 - 21:25)

4. யோவான் நற்செய்தியின் (யோவான் 20:30-31)


யோவான் 20:30-31
30 இந்தப் புஸ்தகத்தில் எழுதியிராத வேறு அநேக அற்புதங்களையும் இயேசு தமது சீஷருக்கு முன்பாகச் செய்தார்.31 இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்தியஜீவனை அடையும்படியாகவும், இவைகள் எழுதப்பட்டிருக்கிறது.

யோவான் எழுதியவற்றின் இறுதிப் பகுதியை இந்த அதிகாரத்தின் முடிவில் நாம் அடைகிறோம். இருளால் மேற்கொள்ளப்பட முடியாத இறைவனின் ஒளி எழும்புவதை ஆன்மபலம் கொண்ட எழுத்தாளர், நற்செய்தியாளர் அறிவிக்கிறார். அவரை ஏற்றுக் கொள்கிறவர்கள் எத்தனை பேர்களோ அத்தனை பேரும் இறைவனுடைய பிள்ளைகளாகும் படி அதிகாரம் கொடுக்கிறார். இவர்கள் அவரை விசுவாசிப்பவர்கள் ஆவார்கள். இயேசுவுடன் இறைவனின் ஐக்கியத்தின் ஆழங்களுக்குள் சிறந்த நற்செய்தியாளர் யோவான் நம்மை நடத்துகிறார். அவர் நமக்காக இயேசுவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலை எழுதி கொடுத்துள்ளார். நாம் அவரை விசுவாசிக்கும்படியாகவும், அவர் நம்மில் வாழுவதை காணும்படியாகவும் எழுதியுள்ளார். இறுதியாக அப்போஸ்தலர் நான்கு கொள்கைகளை முன் வைக்கிறார். நற்செய்தியின் சாராம்சத்தை தெளிவாக புரிந்து கொள்ளவும். அவர் எழுதியதின் நோக்கத்தை அறியவும் செய்கிறார்.

இயேசு கூறிய எல்லாவற்றையும், செய்த எல்லாவற்றையும் யோவான் எழுதவில்லை. அப்படி எழுதினால் புத்தகங்கள் கொள்ளாது. இயேசுவின் ஒப்பற்ற ஆள்தத்துவத்தை பிரதிபலிக்கிற அடையாளங்கள் மற்றும் உரையாடல்களை அவர் தெரிவு செய்தார். தரிசனத்தில் ஆவியானவர் கூறியவற்றை அப்படியே கேட்டு எழுதியவை அல்ல அவருடைய வார்த்தைகள். சுய நினைவு மறந்த நிலையிலும் அவர் இதை எழுதவில்லை. அவர் பரிசுத்த ஆவியானவரால் ஏவப்பட்டு, பொறுப்புடன் ஞானமாக முக்கியமான நிகழ்வுகளை தெரிவு செய்தார். அடிக்கப்பட்ட குற்றவாளியை உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கும் இறைவனின் ஆட்டுக்குட்டியாக அன்புடன் அவர் வெளிப்படுத்துகிறார்.

நாசரேத்தூரைச் சேர்ந்த மனிதனாகிய இயேசு தான் அவமானப்படுத்தப்பட்ட இயேசு, வாக்குப்பண்ணப்பட்ட கிறிஸ்து தான் இறைவனின் குமாரன் என்பதை நாம் பகுத்துணர வேண்டும் என்பதற்காக யோவான் இதை எழுதினார். இந்த இரண்டு பெயர்கள் மூலம் அவர் ஏக்கத்துடன் இருந்த யூதர்களை அந்த பழைய ஏற்பாட்டுக் காலத்தில் சந்தித்தார். தாவீதிற்கு வாக்குப்பண்ணப்பட்ட குமாரனின் சிலுவை மரணத்தின் மூலம் அவர் தமது தேசத்தை சந்தித்தார். மனிதனாகிய இயேசு உண்மையான கிறிஸ்துவாக, இறைவனின் குமாரனாக தன்னை உறுதிப்படுத்தினார். இறைவனின் சிறந்த அன்பு, குற்றமற்ற பரிசுத்தம் எல்லை கடந்ததாக உள்ளது. யோவான் இயேசுவை சிறப்பாக மகிமைப்படுத்துகின்றார். அவர் நமக்கு இயேசுவை வெளிப்படுத்தி காண்பித்த விதம் ஒப்பற்றது. நாம் அதன் மூலம் இறைவனின் குமாரனுடைய அன்பை உணருகிறோம். நாம் இறைவனின் பிள்ளைகளாக மாறும்படி இயேசு மனிதனாக வந்தார்.

வெறுமனே கொள்கை ரீதியான ஒப்புதலை நமக்குள் உருவாக்கும்படி யோவான் விரும்பவில்லை. இறைவனின் குமாரனுடன் நெருக்கமான உறவை விரும்புகிறான். இயேசு குமாரனாக இருப்பதால், இறைவன் நம்முடைய பிதாவாக இருக்கிறார். கிருபை நிறைந்தவர் நமது பிதாவாக இருப்பதால், அவர் அநேக பிள்ளைகளை பெற முடியும். அவர்கள் அவருடைய நித்திய ஜீவனால் நிறைந்திருப்பார்கள். கிறிஸ்துவின் இரத்தத்தின் மூலம் புதிய பிறப்பு மற்றும் நமக்குள் ஆவியானவர் இவையே யோவானுடைய நற்செய்தியின் நோக்கம் ஆகும். நீங்கள் மறுபடியும் பிறந்திருக்கிறீர்களா? நீங்கள் இன்னும் பாவங்களில் மரித்துள்ளீர்களா? இறைவனின் ஜீவன் உங்களில் வாழ்கின்றதா? அவருடைய பரிசுத்த ஆவியானவரை நீங்கள் புறக்கணிக்கிறீர்களா? இறைவனின் குமாரன் மீது வைக்கும் விசுவாசத்தினால் இரண்டாம் பிறப்பு முழுமையடைகிறது. அவர் மீது விசுவாசம் வைக்கிறவன் தெய்வீக வாழ்வைப் பெறுகிறான். விசுவாசத்தினால் நாம் அவருடன் நிரந்தர உறவிற்குள்ளான இந்த வாழ்க்கையை பெறுகிறோம். இயேசுவில் நிலைத்திருப்பவன், இயேசு தன்னில் நிலைத்திருப்பதை காண்பான். அப்படிப்பட்ட விசுவாசி ஆவியிலும், சத்தியத்திலும் வளருவான். தெய்வீக வாழ்வின் கனிகள் அவனில் வெளிப்படும். அநேகர் இயேசுவின் மீது விசுவாசம் வைக்க இறைவனின் அன்பு நம்மை உந்தித்தள்ளுகிறது. அவர்கள் இயேசுவை நேசிப்பார்கள், அவரில் நிலைத்திருப்பார்கள், அவரும் அவர்களுக்குள் எப்போதும் இருப்பார். இதுவே நித்திய வாழ்வு ஆகும்.

விண்ணப்பம்: கர்த்தராகிய இயேசுவே, உம்முடைய நற்செய்தியாளர் யோவான் எங்களுக்கு பதிவு செய்துள்ள நற்செய்திக்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். இந்த தனித்துவம் மிக்க நூலின் மூலம் உமது மகத்துவம் மற்றும் உண்மையை நாங்கள் புரிந்து கொள்கிறோம். நாங்கள் மகிழ்ச்சியுடன் உம்மைப் பணிகிறோம். நீரே எங்களை உம் மீதான விசுவாசத்திற்குள் நடத்தினீர். எங்களுக்கு உமது கிருபையினால் புதிய பிறப்பைத் தந்தீர். உமது ஐக்கியத்தில் எங்களை நிலைப்படுத்தும். உமது கட்டளைகளை கைக்கொண்டு உம்மை நேசிக்க உதவும். நாங்கள் உமது நாமத்தை வெளிப்படையாக சாட்சியிட்டு, எங்கள் நண்பர்களும் உம் மீது நம்பிக்கை வைக்கவும், விசுவாசத்தினால் பரிபூரண வாழ்வை பெற்றுக்கொள்ளவும். வழிநடத்தும்.

கேள்வி:

  1. யோவான் அவருடைய நற்செய்தியின் முடிவுரையில் எதை விரிவுபடுத்தி காண்பிக்கிறார்?

www.Waters-of-Life.net

Page last modified on August 29, 2012, at 10:38 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)