Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- John - 015 (Testimonies of the Baptist to Christ)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Bengali -- Burmese -- Cebuano -- Chinese -- Dioula -- English -- Farsi? -- French -- Georgian -- Greek -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Kyrgyz -- Malayalam -- Peul -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Thai -- Turkish -- Twi -- Urdu -- Uyghur? -- Uzbek -- Vietnamese -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

யோவான் - வெளிச்சம் இருளில் ஒளிர்கிறது
யோவான் எழுதின கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 1 - தெய்வீக ஒளியின் பிரகாசம் (யோவான் 1:1 - 4:54)
ஆ - கிறிஸ்து சீடர்களை மனந்திரும்புதல் என்ற நிலையிலிருந்து திருமண மகிழ்ச்சி என்ற நிலைக்குக் கொண்டு செல்லுகிறார் (யோவான் 1:19 - 2:12)

2. கிறிஸ்துவைக் குறித்து மேலும் ஊக்கமளிக்கும் ஸ்நானகனுடைய சாட்சிகள் (யோவான் 1:29-34)


யோவான் 1:31-34
31 நானும் இவரை அறியாதிருந்தேன்; இவர் இஸ்ரவேலுக்கு வெளிப்படும் பொருட்டாக, நான் ஜலத்தினாலே ஞானஸ்நானங் கொடுக்க வந்தேன் என்றான். 32 பின்னும் யோவான் சாட்சியாகச் சொன்னது: ஆவியானவர் புறாவைப்போல வானத்திலிருந்திறங்கி, இவர்மேல் தங்கினதைக் கண்டேன். 33 நானும் இவரை அறியாதிருந்தேன்; ஆனாலும் ஜலத்தினால் ஞானஸ்நானங்கொடுக்கும்படி என்னை அனுப்பினவர்: ஆவியானவர் இறங்கி யார்மேல் தங்குவதை நீ காண்பாயோ, அவரே பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானங்கொடுக்கிறவர் என்று எனக்குச் சொல்லியிருந்தார். 34 அந்தப்படியே நான் கண்டு, இவரே தேவனுடைய குமாரன் என்று சாட்சி கொடுத்துவருகிறேன் என்றான்.

யோவான் ஸ்நானகனுடைய முப்பதாவது வயதில் இறைவன் அவரை அழைத்து, கிறிஸ்துவுக்கு வழியை ஆயத்தப்படுத்தவும் மக்களுக்கு அவரைத் தெரியப்படுத்தவும் அனுப்பினார். இது அவருடைய ஞானஸ்நான சமயத்தில் நடைபெற்றது, அப்போது மனந்திரும்பிய மக்கள் கிறிஸ்துவின் வருகைக்கு ஆயத்தமாக அவரை வரவேற்கத் தயாராக இருந்தனர். இதுவரை யாரும் கண்டிராத காட்சியை யோவான் பார்ப்பார் என்று இறைவன் அவருடன் பேசி வாக்குப்பண்ணியிருந்தார். பரிசுத்த ஆவியானவர் கிறிஸ்துவின் மீது இறங்கும் காட்சியே அது. பரிசுத்த ஆவியானவர் இயேசுவின் மேல் தங்கினார் என்பதுதான் கவனிக்கத்தக்கது. பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் ஒரு குறிப்பிட்ட காலம் பரிசுத்த ஆவியினால் ஏவப்பட்டுப் பேசினார்கள், ஆனால் கிறிஸ்துவோ நிரந்தரமாக பரிசுத்த ஆவியினால் நிறைந்திருந்தார். அடிக்கடிவரும் வசந்த காலம் போல ஆவியானவர் விசுவாசிகளைப் தெய்வீக வல்லமையினால் நிரப்புவார்.

இரண்டு வாலிபர்களும் யோர்தானுடைய நதிக்கரையில் அருகருகே நின்றுகொண்டிருந்தார்கள்; வானம் அமைதியாகத் திறந்துகொண்டது; திடீரென பரிசுத்த ஆவியானவர் புறாவடிவில் வருவதை யோவான் கண்டார். நீல வானத்தில் வெள்ளைப் புறா சமாதானத்திற்கும் தாழ்மைக்கும் அடையாளமாக இறங்கி வந்தது.

இறங்கிவந்த பரிசுத்த ஆவியானவர், யோவான் ஸ்நானகன் மீதோ, மனந்திரும்பிய பாவிகள் மீதோ வந்து அமரவில்லை. நேரடியாக இயேசுவின் மீது வந்தமர்ந்தது. நசரேயனாகிய இயேசு எல்லா தீர்க்கதரிசிகளையும்விட, அனைத்துப் படைப்புகளையும்விட பெரியவர் என்பதற்கு இது ஒரு நேரிடையான அடையாளம். அப்போது தனக்கு முன்பாக நிற்பவர் எதிர்பார்க்கப்பட்ட நித்தியமான இறைவன் என்பதை யோவான் அறிந்துகொண்டார்.

மரியாள் யோவான் ஸ்நானகனுடைய தாயாகிய எலிசபெத்தைச் சந்தித்து வாழ்த்துச் சொல்லியபோது, அவளுடைய வயிற்றிலிருந்து மகிழ்ச்சியில் துள்ளிய யோவான் இப்போதும் துதியினாலும் மகிழ்ச்சியினாலும் நிரம்பியிருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை (லூக்கா 1:36-45).

கிறிஸ்துவே ஆவியைக் கொடுப்பவர் என்று ஸ்நானகன் அறிந்துகொண்டார். ஆனால் அவர் அந்த காட்சியை மறைக்கவில்லை. வெளிப்படையாக அறிவித்தார்: கர்த்தர் வந்திருக்கிறார்; அவர் நம் நடுவில் இருக்கிறார்; அவர் நம்மை நியாயம் தீர்க்க வரவில்லை. அன்பையும் நல்லெண்ணத்தையும் காண்பிக்க வந்திருக்கிறார். அவர் சாதாரண மனிதன் அல்ல, பரிசுத்த ஆவியினால் நிரம்பிய இறைமைந்தன். யாரெல்லாம் இயேசு இறைவனிடத்திலிருந்து வரும் ஆவி என்று அறிக்கையிடுகிறார்களோ அவர்கள் அவர் இறைமைந்தன் என்றும் அதேவேளையில் அறிக்கையிடுகிறார்கள். இவ்வாறு கிறிஸ்துவின் வருகையின் நோக்கத்தை யோவான் தெளிவுபடுத்தினார்: மனந்திரும்புகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பதற்காகவே அவர் வந்திருக்கிறார். இறைவன் ஆவியாயிருக்கிறார், அவருடைய மைந்தனாகிய கிறிஸ்து மாம்சத்தில் வந்த தேவஆவியானவர். இறைவனுடைய அன்பு என்னும் தெய்வீக மெய்மையினால் அவரைப் பின்பற்றுபவர்களை நிரப்புவது அவருடைய திருச்சித்தம்.

அன்புள்ள சகோதரனே, பரிசுத்த ஆவியினால் நீங்கள் நிரம்பியிருக்கிறீர்களா? கிறிஸ்துவின் வல்லமையை உங்கள் வாழ்வில் நீங்கள் அனுபவித்திருக்கிறீர்களா? கிறிஸ்துவின் சிலுவைப் பலியை நீங்கள் விசுவாசிப்பதன் மூலமாக, உங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டு இந்த தெய்வீக குணாதிசயம் உங்களுடையதாகும். யாரெல்லாம் இந்தப் பாவ மன்னிப்பை தேவ ஆட்டுக்குட்டியிடம் பெற்றுக்கொள்கிறார்களோ அவர்கள் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படுகிறார்கள். எல்லா விசுவாசிகளுக்கும் இந்த ஆவிக்குரிய ஆசீர்வாதத்தைக் கொடுக்க இறைமகன் ஆயத்தமாயிருக்கிறார்.

விண்ணப்பம்: பரிசுத்த இறைமைந்தனே நாங்கள் உம்மை ஆராதிக்கிறோம், துதிக்கிறோம். எங்களுக்காக நீர் உம்மைத் தாழ்த்தி எங்களுடைய பாவங்களைச் சுமந்தீர். சிலுவையில் நீர் சிந்திய இரத்தத்தின் மூலமாக எங்களுடைய பாவங்களை நீர் மன்னித்தபடியால் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். எங்கள் மீதும் உம்மை நேசிக்கிறவர்கள் மீதும் நீர் பொழிந்தருளும் பரிசுத்த ஆவியானவருடைய வல்லமைக்காக நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். தங்கள் அக்கிரமத்திலும் பாவத்திலும் உறங்கிக்கொண்டிருப்பவர்களை எழப்பும். அவர்களை உம்முடைய மென்மையான சத்தியத்தினால் நிரப்பும்.

கேள்வி:

  1. பரிசுத்த ஆவியானவரைக் கொடுப்பவராக இயேசு ஏன் வந்தார்?

www.Waters-of-Life.net

Page last modified on July 31, 2012, at 09:22 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)