Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Romans - 074 (Christ Overcame all the Differences)
This page in: -- Afrikaans -- Arabic -- Armenian -- Azeri -- Bengali -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- French -- Georgian -- Greek? -- Hausa -- Hebrew -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Malayalam -- Polish -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish? -- TAMIL -- Telugu -- Turkish -- Urdu? -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

ரோமர் - கர்த்தரே நம்முடைய நீதி
ரோமருக்கு பவுல் எழுதின நிரூபத்திலிருந்து வேதபாடங்கள்
பகுதி 3 - கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களின் வாழ்வில் வெளிப்படுகின்ற இறைவனுடைய நீதி (ரோமர் 12:1-15:13)

11. யூதவிசுவாசிகள் மற்றும் புறவினத்து விசுவாசிகள் இடையேயுள்ள எல்லா வேறுபாடுகளையும் கிறிஸ்து மேற்கொண்டார் (ரோமர் 15:6-13)


ரோமர் 15:6-13
6 பொறுமையையும் ஆறுதலையும் அளிக்கும் தேவன், கிறிஸ்து இயேசுவினுடைய மாதிரியின்படியே, நீங்கள் ஏகசிந்தையுள்ளவர்களாயிருக்கும்படி உங்களுக்கு அநுக்கிரகஞ்செய்வாராக. 7 ஆதலால் தேவனுக்கு மகிமையுண்டாக, கிறிஸ்து நம்மை ஏற்றுக்கொண்டதுபோல, நீங்களும் ஒருவரையொருவர் ஏற்றுக்கொள்ளுங்கள். 8 மேலும், பிதாக்களுக்குப் பண்ணப்பட்ட வாக்குத்தத்தங்களை உறுதியாக்கும்படிக்கு, தனமுள்ளவர்களுக்கு ஊழியக்காரரானாரென்றும்; 9 புறஜாதியாரும் இரக்கம் பெற்றதினிமித்தம் தேவனை மகிமைப்படுத்துகிறார்களென்றும் சொல்லுகிறேன். அந்தப்படி: இதினிமித்தம் நான் புறஜாதிகளுக்குள்ளே உம்மை அறிதேவனுடைய சத்தியத்தினிமித்தம் இயேசு கிறிஸ்து விருத்தசேக்கைபண்ணி, உம்முடைய நாமத்தைச் சொல்லி, சங்கீதம் பாடுவேன் என்று எழுதியிருக்கிறது. 10 மேலும், புறஜாதிகளே, அவருடைய ஜனங்களோடேகூடக் களிகூருங்கள் என்கிறார். 1 மேலும், புறஜாதிகளே, எல்லாரும் கர்த்தரைத் துதியுங்கள்; ஜனங்களே, எல்லாரும் அவரைப் புகழுங்கள் என்றும் சொல்லுகிறார். 12 மேலும், ஈசாயின் வேரும் புறஜாதியாரை ஆளும்படிக்கு எழும்புகிறவருமாகிய ஒருவர் தோன்றுவார்; அவரிடத்தில் புறஜாதியார் நம்பிக்கை வைப்பார்கள் என்று ஏசாயா சொல்லுகிறான். 13 பரிசுத்த ஆவியின் பலத்தினாலே உங்களுக்கு நம்பிக்கை பெருகும்படிக்கு, நம்பிக்கையின் தேவன் விசுவாசத்தினால் உண்டாகும் எல்லாவித சந்தோஷத்தினாலும் சமாதானத்தினாலும் உங்களை நிரப்புவாராக.

ரோமர் நிரூபத்தின் அதிகாரங்கள் 9முதல் 15 வரை வாசிக்கும் ஒருவன் யூத மார்க்கத்து கிறிஸ்தவர்கள் மற்றும் புறவினத்தார்கள் இடையேயுள்ள வாழ்வின் வித்தியாசங்களை அறிய முடியும். விருத்தசேதனம் மற்றும் மோசேயின் சட்டங்களுக்கு உட்பட்ட உணவு வகைகள் இதில் அடங்கும். பவுலின் நோக்கம் யூத விசுவாசிகளை புறவினத்து விசுவாசிகளுடன் இணைப்பதாக இருந்தது. இருதிறத்தாருக்கும் இடையில் இணைப்புப் பாலத்தை கட்டினான். கிறிஸ்துவே அவர்களை இணைத்தார். எனவே நிரூபத்தின் கடைசியில் பவுல் இவ்விதம் எழுதுகிறான். “வேறுபட்ட பாரம்பரியங்கள், பின்ணணி யங்கள் இருந்தாலும் கிறிஸ்து உங்களை ஏற்றுக்கொண்டு இரட்சித்ததுபோல, நீங்களும் ஒருவரையொருவர் ஏற்றுக்கொள்ளுங்கள். இந்த இரகசியத்தை புரிந்துகொள்ளும் ஒவ்வொருவரும் பாகுபாடின்றி, வெறுப்பின்றி, வித்தியாசம் காட்டாமல் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியாகிய இறைவனை பிறருடன் இணைந்து மகிமைப்படுத்துவார்கள்.

விசுவாசிகள் மத்தியில் ஐக்கியத்தை அன்பு எதிர்பார்க்கிறது. எந்தவொரு வித்தியாசத்தையும் விட கிறிஸ்துவின் அன்பு பலம் நிறைந்தது. யூத விசுவாசிகளுக்கு பவுல் இந்தக் கொள்கையை தெளிவுபடுத்தினான். எதிர்பார்த்திருந்த மேசியா யூதர்களின் ஊழயக்காரனாக வந்து இறைவனுடைய நீதி, சத்தியத்தை வெளிப்படுத்தினார். வார்த்தையாலும், செயலாலும் அவருடைய வாக்குத்தத்தங்களை நிறைவேற்றினார். சத்தியம் திரித்துப் பேசாதபடி, விசுவாச பிதாக்கள் கிறிஸ்துவை அறிந்துகொள்ளும் பொருட்டு அவரைக் குறித்து சொல்லப்பட்ட வாக்குத்தத்தங்களை கிறிஸ்து நிறைவேற்றினார்.

அசுத்தமான புறவினத்து விசுவாசிகளும் இறைவனை மகிமைப்படுத்த தகுதியானவர்கள் என்று அப்போஸ்தலன் விளக்கிக் கூறினான். ஏனெனில் இறைவன் அவர்கள் மீது இரக்கம் பாராட்டுகிறார். அவர்களையும் ஒப்புரவாக்கினார், அவர்களை புதுப்பித்தார். யூதரல்லாதோர் பிதாவையும் குமாரனையும் துதிப்பது கிறிஸ்துவுக்குள் அவர்கள் தெரிந்து கொள்ளப்பட்டதற்கு ஓர் ஆதாரம் ஆகும். இது பழைய ஏற்பாட்டு வாக்குத்தத்தங்களின் நிறைவேறுதல் ஆகும். கிறிஸ்து புறவினத்தாருக்கும் ஒளியாக இருக்கிறார். அவர்களும் இறைவனின் மகிழ்ச்சியில் பங்குபெறுகிறார்கள். அவர்களில் தனது சந்தோஷம் நிறைவேறுவதை கிறிஸ்துவும் விரும்பினார். (யோவான் 15:11; 17:13). புறவினத்து விசுவாசிகள் ஒருபோதும் யூத விசுவாசிகளை மறக்கக் கூடாது. அவர்கள் தங்கள் முழு இருதயத்தோடும் ஒரே குரலில் பிதாவையும், குமாரனையும் மகிமைப்படுத்த வேண்டும். (உபாகமம் 32:43)

பழைய ஏற்பாட்டின் வாக்குத்தத்தங்கள் அனைத்து வாக்குப்பண்ணப்பட்ட தேசங்களுக்கு உரியவை. அவர்கள் ஆண்டவராகிய இயேசுவுக்குள் பிதாவை மகிமைப்படுத்துகிறார்கள். (சங்கீதம் 117:1). இந்த விலையேறப்பெற்ற வாக்குத்தத்தங்களில் மனிதர்களுக்கான ஆவிக்குரிய அதிகாரம் மற்றும் மாபெரும் இரட்சிப்பை நாம் காண்கிறோம். கிறிஸ்துவை விசுவாசிக்கும் ஒருவன் அவருடைய இரக்கத்தின் ஐசுவரியத்தில் பங்குகொள்கிறான்.

ஏசாயா முன்னுரைத்தான். ஈசாயின் அடிமரத்திலிருந்து ஒரு துளிர்தோன்றும். அந் நாட்களின் ஈசாயின் வேர் என்பது மக்களுக்கான ஒரு அடையாளமாக இருந்தது. தேசங்கள் அவனை நோக்கி ஓடும். அவன் மீது தங்கள் நம்பிக்கையை வைக்கும். “இந்த தீர்க்கதரிசனம் இயேசுவில் நிறைவேறியது. அவர் பிதாவின் வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார். பரலோகத்திலும், பூலோகத்திலும் சகல அதிகாரமும் அவருக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. இயேசு தமது அப்போஸ்தலர்களுக்கு உலகமெங்கும் போய், அனைவரையும் சீஷராக்கும்படி கட்டளை கொடுத்தார். அவர்கள் ஆவியினால் நிரப்பப்பட்டு வழிநடத்தப்படுகிறார்கள். அவர்களில் இறை அரசு வளர்ச்சி அடைகிறது.

புறவினத்து அப்போஸ்தலன் விசுவாசிகளின் ஒற்றுமைக்காக விண்ணப்பம் ஏறெடுத்தான் பரலோகின் மகிழ்ச்சியுடன் இருதிறத்தாரும் நிறைந்திருப்பதை அப்போஸ்தலன் கண்டான். பரிசுத்த திரியேகரின் ஐக்கியத்திற்குள் சமாதானத்தின் பிரபு சரியான விசுவாசத்தை நிலைநிறுத்துகிறார். அவர்கள் அனைவரும் நம்பிக்கையிலும், பரிசுத்த ஆவியின் வல்லமையிலும் பெருகுகிறார்கள்.

விண்ணப்பம்: பரலோகப் பிதாவே, யூத மார்க்கத்து விசுவாசிகள் புறவினத்து விசுவாசிகளை அற்பமாய் எண்ணாதபடி உமது குமாரனாகிய இயேசுவின் மூலம் நாங்கள் உம்மை வேண்டுகிறோம். எல்லா விசுவாசிகளும் இயேசு கிறிஸ்துவின் பரிகாரப்பலியின் மூலம் இணைக்கப்பட்டிருப்பதை உணர்ந்து கொள்ளச் செய்யும். அவர்கள் பரிசுத்த ஆவியின் வல்லமையினால் ஐக்கியத்தில் நிலைத்திருக்கவும், கிறிஸ்துவில் வேரூன்றவும், விசுவாசத்தில் வளரவும் உதவி செய்யும் ஆமென்.

கேள்வி:

  1. ரோம சபையில் காணப்பட்ட முக்கியமான வேறுபாடுகளை பவுல் எவ்விதம் மேற்கொள்ளும்படி செயல்பட்டான்?

www.Waters-of-Life.net

Page last modified on August 11, 2021, at 07:35 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)