Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Romans - 037 (Deliverance to the Service of Christ)
This page in: -- Afrikaans -- Arabic -- Armenian -- Azeri -- Bengali -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- French -- Georgian -- Greek -- Hausa -- Hebrew -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Malayalam -- Polish -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Turkish -- Urdu? -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

ரோமர் - கர்த்தரே நம்முடைய நீதி
ரோமருக்கு பவுல் எழுதின நிரூபத்திலிருந்து வேதபாடங்கள்
பகுதி 1 - இறைவனுடைய நீதி எல்லாப் பாவிகளையும் நியாயந்தீர்க்கிறது, கிறிஸ்துவுக்குள் எல்லா விசுவாசிகளையும் நீதிக்குட்படுத்துகிறது, பரிசுத்தப்படுத்துகிறது. (ரோமர் 1:18-8:39)
ஈ - இறைவனுடைய வல்லமை பாவத்தின் வல்லமையில் இருந்து நம்மை விடுவிக்கிறது (ரோமர் 6:1-8:27)

3. நியாயப்பிரமாணத்திலிருந்து விடுவிக்கப்படும்போது நாம் கிறிஸ்துவுக்குச் சேவை செய்யும்படியாக விடுவிக்கப்படுகிறோம் (ரோமர் 7:1-6)


ரோமர் 7:1-6
1 நியாயப்பிரமாணத்தை அறிந்திருக்கிறவர்களுடனே பேசுகிறேன். சகோதரரே, ஒரு மனுஷன் உயிரோடிருக்குமளவும் நியாயப்பிரமாணம் அவனை ஆளுகிறதென்று அறியாமலிருக்கிறீர்களா? 2 அதெப்படியென்றால், புருஷனையுடைய ஸ்திரீ தன் புருஷன் உயிரோடிருக்குமளவும் நியாயப்பிரமாணத்தின்படியே அவனுடைய நிபந்தனைக்கு உட்பட்டிருக்கிறாள்; புருஷன் மரித்த பின்பு புருஷனைப்பற்றிய பிரமாணத்தினின்று விடுதலையாயிருக்கிறாள். 3 ஆகையால், புருஷன் உயிரோடிருக்கையில் அவள் வேறொரு புருஷனை விவாகம்பண்ணினால் விபசாரியென்னப்படுவாள்; புருஷன் மரித்தபின்பு அவள் அந்தப் பிரமாணத்தினின்று விடுதலையானபடியால், வேறொரு புருஷனை விவாகம்பண்ணினாலும் விபசாரியல்ல. 4 அப்படிப்போல, என் சகோதரரே, நீங்கள் மரித்தோரிலிருந்து எழுந்த கிறிஸ்து என்னும் வேறொருவருடையவர்களாகி, தேவனுக்கென்று கனிகொடுக்கும்படி கிறிஸ்துவின் சரீரத்தினாலே நியாயப்பிரமாணத்துக்கு மரித்தவர்களானீர்கள். 5 நாம் மாம்சத்திற்கு உட்பட்டிருந்த காலத்தில் நியாயப்பிரமாணத்தினாலே தோன்றிய பாவ இச்சைகள் மரணத்திற்கு ஏதுவான கனிகளைக் கொடுக்கத்தக்கதாக நம்முடைய அவயவங்களிலே பெலன்செய்தது. 6 இப்பொழுதோ நாம் பழமையான எழுத்தின்படியல்ல, புதுமையான ஆவியின்படி ஊழியஞ்செய்யத்தக்கதாக, நம்மைக் கட்டியிருந்த நியாயப்பிரமாணத்துக்கு நாம் மரித்தவர்களாகி, அதினின்று விடுதலையாக்கப்பட்டிருக்கிறோம்.

ரோமாபுரியில் இருந்த யூத விசுவாசிகள் ஒழுக்க ரீதியான தங்களுடைய மரணத்தையும் கிறிஸ்துவுடனான தங்கள் உயிர்த்தெழுதலையும் குறித்த தன்னுடைய போதனையைப் புரிந்துகொள்ள வேண்டும் என்று பவுல் விரும்பினார். ஆயினும், நியாயப்பிரமாணத்தின் நிலையைக் குறித்த ஒரு தெளிவான பதிலை பவுல் அவர்களுக்குக் கொடுக்க வேண்டியிருந்தது. ஏனெனில், அவர்கள் நியாயப்பிரமாணம்தான் இறைவனால் கொடுக்கப்பட்ட வெளிப்பாடுகளில் மோசேக்குக் கொடுக்கப்பட்ட வெளிப்பாடுதான் முதன்மையானது என்றும் முழுமையானது என்றும் அவர்கள் நம்பினார்கள்.

அவர்கள் நியாயப்பிரமாணத்தை அறிந்தவர்களாகவும் அதை நேசிக்கிறவர்களாகவும் இருப்பதால் அவர்களுக்கும் நியாயப்பிரமாணத்திற்கும் இடையில் இருக்கும் உறவு ஒரு திருமண உறவைப் போன்றது என்று பவுல் குறிப்பிடுகிறார். மணமானவர்களில் ஒருவர் மரணமடையும்போது எவ்வாறு அந்த திருமண உறவு முடிவுக்கு வருகிறதோ, அவ்வாறே அவர்களும் கிறிஸ்துவின் மரணத்தில் பங்கடைந்தபோது நியாயப்பிரமாணத்தில் இருந்து அவர்கள் விடுவிக்கப்பட்டார்கள். அடக்கம் செய்யப்பட்ட கிறிஸ்துவின் உடல் உங்களுடைய உடலாகக் கருதப்படுகிறது, அதனால் மரணத்திற்கு உங்கள் மீது வல்லமையில்லை.

ஆயினும், கிறிஸ்து மீண்டும் உயிர்த்தெழுந்ததுபோல, நாமும் நமக்கு வாழ்வளிக்கும் அதிகாரியைத் தெரிந்துகொள்ளவும், இறைமகனோடு புதிய உடன்படிக்கை செய்துகொள்ளவும் கூடிய சுதந்திரத்தைப் பெற்றிருக்கிறோம். பழைய உடன்படிக்கை நியாயப்பிரமாணத்தின் தீர்ப்பின்படி மரணத்தின் உடன்படிக்கையாக இருக்கிறது. இப்போது நீங்கள் வாழ்வின் அதிகாரியாகிய கிறிஸ்துவோடு ஐக்கியப்பட்டிருக்கிற காரணத்தினால், அவருடைய ஆவியின் கனிகள் உங்களிடத்தில் சிறப்பாக வெளிப்படுகிறது. அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, தயவு, நற்குணம், உண்மை, பெருந்தன்மை, இச்சையடக்கம் ஆகியவற்றுடன் கிறிஸ்துவின் மற்ற குணாதிசயங்களாகிய மனநிறைவு, நன்றியறிதல், உண்மை, தூய்மை ஆகியவையும் உங்களில் வெளிப்படுகிறது.

கிறிஸ்துவின் கனிகளை இறைவன் உங்களுடைய வாழ்வில் எதிர்பார்க்கிறார். ஏனெனில் கிறிஸ்து நமக்காக மரணமடைந்து, உயிரோடு எழுந்து, நாம் கனிகொடுக்கும்படி அவருடைய ஆவியை நமக்குக் கொடுத்திருக்கிறார். ஒரு தோட்டக்காரன் தோட்டத்தில் பலனை எதிர்பார்க்கிறதுபோல அவர் நம்மில் கனிகளை எதிர்பார்க்கிறார்.

ஒருவன் கிறிஸ்துவில் இணைக்கப்படுவதற்கு முன்பாக நியாயப்பிரமாணத்தின் அடிமையாகக் கருதப்படுகிறான். நியாயப்பிரமாணம் தீமையைத் தடை செய்கிறபோது மனிதன் தீமை செய்யும்படி தூண்டப்படுகிறபடியால், அனைத்துத் தீமைகளும் அவனுடைய உடலில் கிளர்ந்தெழுகிறது. அதனால் நியாயப்பிரமாணம் அதிக மரணத்தின் கனிகளைக் கொடுக்கும்படி நம்மை வழிநடத்துகிறது. நியாயப்பிரமாணம் நம்மை மீறுதலுக்குள் வழிநடத்துவதோடு மட்டுமன்றி இரக்கமற்ற முறையில் அது நம்மை குற்றவாளிகளாகத் தீர்க்கிறது.

ஆயினும் கிறிஸ்து தம்முடைய மரணத்தினால் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றி முடித்த காரணத்தினால் நாமும் நியாயப்பிரமாணத்தின் கோரிக்கைகளுக்கு மரணமடைந்திருக்கிறோம். சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவின் மீது வைக்கும் நம்பிக்கையினால் கிறிஸ்துவோடு நாம் மரணமடைந்திருப்பதால், நாம் பழைய வெளிப்பாட்டின் எழுத்துக்களுக்கு அடிமைப்படாதவர்கள் என்றும் அதற்கு மரணமடைந்தவர்கள் என்றும் கருதிக்கொள்கிறோம்.

அதே வேளையில் கிறிஸ்து நம்மை புதிய உடன்படிக்கைக்குள் அழைத்திருக்கிறார். நாம் நியாயப்பிரமாணத்தின் எழுத்துக்களில் இடறி விழாமல், இறைவனுடைய ஆவியின் வல்லமையினால், இறைவனுக்கு சேவை செய்யும்படி அது மேலான வெளிப்பாட்டின் மீது நிறுவப்பட்டுள்ளது. நம்முடைய வாழ்வு தடைச் சட்டங்களின் அச்சுறுதல்களினால் சூழப்பட்ட ஒன்றல்ல. தெய்வீக சமாதானத்தின் வல்லமையினால் வாழும் ஒரு மகிழ்ச்சியின் வாழ்வுக்கு நாம் அன்பினால் அழைக்கப்பட்டிருக்கிறோம். இறைவன் முடிவற்றவராக இருக்கிறபடியால், இளைப்படைவதும் இல்லை, முதிர்வடைவதும் இல்லை. அவருடைய ஞானத்திற்கும், நற்குணத்திற்கும், இரக்கத்திற்கும், நம்பிக்கைக்கும் அளவில்லை. ஆகவே, நீங்கள் கிறிஸ்துவில் மரணமடைந்து அவர் உங்களில் வாழ்கிற காரணத்தினால், இறைவனுடைய ஆவியானவரால் நற்செய்தியின் வழிநடத்துதலுக்கு உங்களை முழுமையாக ஒப்புக்கொடுங்கள். அப்போது நீங்கள் தெய்வீக வல்லமையையும் ஆவிக்குரிய வரங்களையும் பெற்றுக்கொள்வீர்கள். கிறிஸ்துவினுடைய சாந்தத்திலும் தாழ்மையிலும் வளர்ச்சியடைவீர்கள்.

விண்ணப்பம்: கிறிஸ்து தம்முடைய வாழ்வின் மூலமாகவும் தம்முடைய சிலுவையின் மூலமாகவும் இறைவனுடைய அன்பை நிறைவேற்றிய காரணத்தினால், அவருடைய மரணத்தின் மூலமாக தூய இறைவா நீர் எங்களை நியாயப்பிரமாணத்திலிருந்து விடுவித்தபடியால் உமக்கு நன்றி. உம்முடைய கிருபையின் வல்லமையினால் உம்முடைய ஆவியின் கனிகளை எங்கள் வாழ்வில் கொடுக்கும்படி, புதிய உடன்படிக்கைக்குள் எங்களை இழுத்துக்கொண்டு, உம்முடைய ஆறுதலின் ஆவியுடன் நீர் எங்களில் வாழ்கிறபடியால் நாங்கள் உம்மை மகிமைப்படுத்துகிறோம்.

கேள்வி:

  1. பழைய உடன்படிக்கையின் கோரிக்கைகளில் இருந்து எவ்வாறு அனைத்து விசுவாசிகளும் விடுவிக்கப்படுகிறார்கள்?

கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையினாலே அவர்கள்
இரட்சிக்கப்படுகிறது எப்படியோ, அப்படியே நாமும்
இரட்சிக்கப்படுவோமென்று நம்பியிருக்கிறோமே என்றான்.

(அப்போஸ்தலர் 15:11)

www.Waters-of-Life.net

Page last modified on August 09, 2021, at 12:17 PM | powered by PmWiki (pmwiki-2.3.3)