Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Romans - 015 (He who Judges Others Condemns Himself)
This page in: -- Afrikaans -- Arabic -- Armenian -- Azeri -- Bengali -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- French -- Georgian -- Greek -- Hausa -- Hebrew -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Malayalam -- Polish -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Turkish -- Urdu? -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

ரோமர் - கர்த்தரே நம்முடைய நீதி
ரோமருக்கு பவுல் எழுதின நிரூபத்திலிருந்து வேதபாடங்கள்
பகுதி 1 - இறைவனுடைய நீதி எல்லாப் பாவிகளையும் நியாயந்தீர்க்கிறது, கிறிஸ்துவுக்குள் எல்லா விசுவாசிகளையும் நீதிக்குட்படுத்துகிறது, பரிசுத்தப்படுத்துகிறது. (ரோமர் 1:18-8:39)
அ - முழு உலகமும் துன்மார்க்கத்தின் கீழ் இருக்கிறது. இறைவன் அனைவரையும் தமது நீதியோடு நியாயந்தீர்க்கிறார் (ரோமர் 1:18-3:20)
2. யூதர்களுக்கு விரோதமாக இறைவனுடைய கோபாக்கினை வெளிப்படுகிறது (ரோமர் 2:1 – 3:20)

அ) மற்றவனை நியாயந்தீர்க்கிறவன் தன்னையே நியாயந்தீர்க்கிறான் (ரோமர் 2:1-11)


ரோமர் 2:1-2
1 ஆகையால், மற்றவர்களைக் குற்றவாளியாகத் தீர்க்கிறவனே, நீ யாரானாலும் சரி, போக்குச்சொல்ல உனக்கு இடமில்லை; நீ குற்றமாகத் தீர்க்கிறவைகள் எவைகளோ, அவைகளை நீயே செய்கிறபடியால், நீ மற்றவர்களைக்குறித்துச் சொல்லுகிற தீர்ப்பினாலே உன்னைத் தானே குற்றவாளியாகத் தீர்க்கிறாய். 2 இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்களுக்குத் தேவனுடைய நியாயத்தீர்ப்பு சத்தியத்தின்படியே இருக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.

பாவத்தின் மகுடம் என்பது மாய்மாலம் ஆகும். மக்கள் நீதி, ஞானம் மற்றும் நேர்மையுடன் இருப்பதைப் போல பாசாங்கு பண்ணுகிறார்கள். ஆனால் இறைவனுடைய பரிசுத்தத்திற்கு முன்பாக அவர்களது மனச்சாட்சியில், அவர்களைக் குறித்த சாட்சியைப் பார்க்கும் போது, அவர்கள் மிகவும் துன்மார்க்கர்களாக இருக்கிறார்கள். அவர்கள் மாய்மாலத்தினால், தங்கள் நண்பர்களை வெறுத்து நியாயந்தீர்க்கிறார்கள். அவர்களைக் குறித்து ஏளனமாய் பேசுகிறார்கள். அவர்கள் பக்தியுள்ளவர்கள் போல தங்களை காட்டிக் கொள்கிறார்கள். அவர்கள் நண்பர்களும் அப்படியே இருக்கிறார்கள்.

பவுல் உங்கள் பெருமையை உடைக்கிறான். உங்கள் பொய்யான முகமூடியைக் களைகிறான். உனக்கும் நியாயத்தீர்ப்பு உண்டு. உண்மையற்ற ஒருவனை உங்களுக்குத் தெரியுமா? நீ அவனை விட அதிகமாய் உண்மையற்றவன். நீ ஒரு கொலையாளியை பார்த்திருக்கிறாயா? உனது பகையுணர்வால் நீ அவனை விட மோசமான கொலையாளி. உன்னைக் குறித்து நீ எண்ணும் எண்ணங்கள் உண்மையானவை அல்ல. இறைவனின் ஆவியானவர் உன்னை ஆக்கினைக்குட்படுத்துகிறார். அவர் முதலாவது பக்திமார்க்கத்தில் பொய்யான ஆசான்களை கண்டிக்கிறார். இயேசு கொலைகாரர்களால் சிலுவையில் அறையப்படவில்லை. அவரை சிலுவையில் அறைந்தவர்கள் மாய்மால மதப் பெரியோர்கள். அவர்கள் பக்தியின் போர்வையில் மயிலைப்போல பெருமையுடன் தங்கள் தோகையை விரித்தவர்கள். ஆனால் உள்ளுக்குள்ளே அவர்கள் அசுத்தத்தினால் நிறைந்திருந்த கல்லறைகளாய் இருந்தார்கள்.

இறைவன் உன்னுடைய செயல்களை மட்டும் வைத்து உன்னை நியாயந்தீர்க்கவில்லை. உனது நோக்கங்கள், சிந்தனைகள், விருப்பங்கள் அனைத்தையும் நியாயந்தீர்க்கிறார். உங்கள் கனவுகள் கூட குழந்தைப் பருவத்தில் இருந்து தீயனவாய் இருக்கின்றன. உனது நோக்கம் சுயநலமாய் உள்ளது. நீ இறைவனுக்கு கீழ்ப்படியவில்லை. அவருடைய திட்டங்களை நீ எதிர்க்கிறாய், அவருடைய சட்டங்களை மீறுகிறாய், உனது சக மனிதனை நீ அவமதிக்கிறாய். உனது ஆவியில் நீ ஒரு விபசாரக்காரனாக இருக்கிறாய். உன்னை படைத்தவரை விட்டு நீ பிரிந்துள்ளாய். உனது இருதயத்தில் இருந்து தீய சிந்தனைகள் தோன்றுகின்றன. இறுதி நியாயத்தீர்ப்பு நாளில், பதிவுசெய்யப்பட்ட உனது வார்த்தைகளை நீ கேட்பாய். படம் பிடிக்கப்பட்ட உனது செயல்களை நீ காண்பாய். உனது மாசுப்பட்ட நோக்கங்களைப் காண்பாய். நீ பயத்துடன் நடுங்கிக் கொண்டிருப்பாய். அமைதியுடன் பேசமுடியாதவனாய் இருப்பாய். நீ பாவம் நிறைந்தவன். உனது இருதயத்தின் ஆழத்தில் நீ கறைபட்டிருக்கிறாய். உனது பொறாமையை நீ பகிரங்கமாக அறிக்கை செய். இன்னொரு பாவியை ஏளனமாக எண்ணாதே. உனது அயலகத்தான் மிகுந்த துன்மார்க்கனாக இருக்கலாம். அதைக் குறித்து நீ வருத்தப்படுவது முக்கியமல்ல. நீ உனது பாவங்கள் நிமித்தம் மரிக்கப்போகிறாய். இறைவன் முன்பு பதிலளிக்க வேண்டியவன் நீ. ஆகவே இறைவனின் பரிசுத்தத்தின் தூய்மையில் உன்னுடைய பாவமான சுயத்தை அறிந்துகொள்.

ஒருவேளை இந்த கடினமான வார்த்தைகளை நீ ஏற்றுக்கொள்ளாமலிருக்கலாம். ஒருவேளை நீ அதற்கான காரணம் கூறலாம். நீ ஆண்டவர் முன்பாக உனது இருதயத்தை ஊற்ற வேண்டும். உனது பெருமைகள் நொறுக்கப்படவேண்டும். உனது நிலையைக் குறித்து நீ அறியாமையில் இருப்பதினால் இறைவனின் நியாயத்தீர்ப்பிலிருந்து தப்பிலாம் என்று நினைக்காதே. நித்திய நீதியுள்ளவன் உன்னை ஆக்கினைக்குட்படுத்துவார். உலகில் உள்ள அனைத்து முக்கியமான மதங்களும் நியாயத்தீர்ப்பு நாள் குறித்து சிலவற்றை அறிந்து வைத்திருக்கின்றன. சிலர் அதை உயிர்த்தெழுதலின் நாள் என்று அழைக்கிறார்கள். அல்ஹாரியா அல்லது கல்லறை நாள் எனப்படுகிறது. உயிருள்ள இறைவன் முன்பு அவிசுவாசிகள் நிற்க மறுப்பார்கள். அந்நேரத்தில் உனது இரகசியங்கள், சிந்தனைகள், வார்த்தைகள், அருவருப்புகள் அனைத்தும் எல்லார் முன்பாக வெளியரங்கமாக்கப்படும். நீ பேசிய ஒவ்வொரு தனி வார்த்தைக்கும் கணக்கு ஒப்புவிக்க வேண்டும். நீ செலவழிக்கும் ஒவ்வொரு பணத்திற்கும், நேரத்திற்கும் கணக்கு கொடுக்க வேண்டும். நீ இறைவனுடைய ஆசீர்வாதங்களுக்கு உக்கிராணக்காரனாக இருக்கிறாய். அவர் உனக்கு ஒப்புவித்த ஒவ்வொன்றிற்காகவும் அந்நாளில் கணக்கு தீர்ப்பார். உனது இருதயத்தின் அடி ஆழங்கள் வரை இறைவனின் மகிமையின் கதிர்கள் ஊடுறுவிச் செல்லும். அவைகள் எக்ஸ்ரே கதிர்கள், மருத்துவமனைகளில் உள்ள மற்ற கருவிகளை விட துல்லியமாக செயல்படும். நீ முற்றிலும் நிர்வாணமாய் அங்கே நிற்பாய்.

விண்ணப்பம்: பரிசுத்தமுள்ள இறைவனே, நீர் நித்தியமானவர், நீதியுள்ளவர். நான் குற்றம் உள்ளவன், பாவம் நிறைந்தவன். என்னுடைய போலியான பக்திக்காக என்னை மன்னியும். உமது ஒளியின் பிரகாசத்தில் எனது இருதயத்தில் உள்ள எல்லா அசுத்தங்களும் மறைய உதவும். உமக்கு முன்பாக என்னுடைய எல்லாப் பாவங்களையும் அறிக்கையிடுகிறேன். உமது அன்பின் ஆவியை எனக்குத் தாரும். நான் யாரையும் புறக்கணியாதபடி, நியாயம் தீர்க்காதபடி, வெறுக்காதபடி இருக்க உதவும். அன்பில் வளரச் செய்யும். நான் பாவிகளில் பிரதானமானவன். என் மீது இரக்கமாயிரும். இறைவனே, உமது மிகுந்த இரக்கத்தின்படியே என்னை நடத்தும். எனது பெருமைகள் உடைக்கப்படட்டும். நான் இருதயத்தில் தாழ்மையுடன் இருக்கச் செய்யும்.

கேள்வி:

  1. மனிதன் இன்னொருவனை நியாயந்தீர்க்கும்போது, எப்படி தன்னையே நியாயம்தீர்த்துக் கொள்கிறான்?

www.Waters-of-Life.net

Page last modified on August 07, 2021, at 04:49 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)