Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Acts - 078 (The Holy Spirit Prevents the Apostles from Entering Bithynia)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Azeri -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- French -- Georgian -- Greek -- Hausa -- Igbo -- Indonesian -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Turkish -- Urdu? -- Uzbek -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

அப்போஸ்தலர் - கிறிஸ்துவின் வெற்றி பவனி
அப்போஸ்தலர் நடபடிகளிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 2 - புறவினத்தாருக்கு நற்செய்தி அறிவித்தலைப் பற்றிய அறிக்கையும் அந்தியோகியா முதல் ரோமாபுரிவரை திருச்சபைகள் நாட்டப்படுதலும் - பரிசுத்த ஆவியானவரினால் கட்டளையிடப்பட்டிருந்த அப்போஸ்தலனாகிய பவுலின் ஊழியத்தினால் (அப்போஸ்தலர் 13 - 28)
இ - இரண்டாவது மிஷெனரி பயணம் (அப்போஸ்தலர் 15:36 - 18:22)

3. ஆசிய பிராந்தியத்தில் இருந்த பித்தினியாவிற்குள் அப்போஸ்தலர்கள் நுழைவதை பரிசுத்த ஆவியானவர் தடுத்தல் (அப்போஸ்தலர் 16:6-10)


அப்போஸ்தலர் 16:6-10
6 அவர்கள் பிரிகியா கலாத்தியா நாடுகளைக் கடந்துபோனபோது, ஆசியாவிலே வசனத்தைச் சொல்லாதபடிக்குப் பரிசுத்த ஆவியினாலே தடைபண்ணப்பட்டு,7 மீசியா தேசமட்டும் வந்து, பித்தினியா நாட்டுக்குப் போகப் பிரயத்தனம்பண்ணினார்கள்; ஆவியானவரோ அவர்களைப் போகவொட்டாதிருந்தார்.8 அப்பொழுது அவர்கள் மீசியா பக்கமாய்ப் போய், துரோவாவுக்கு வந்தார்கள்.9 அங்கே இராத்திரியிலே பவுலுக்கு ஒரு தரிசனம் உண்டாயிற்று; அதென்னவெனில், மக்கெதோனியா தேசத்தான் ஒருவன் வந்துநின்று: நீர் மக்கெதோனியாவுக்கு வந்து எங்களுக்கு உதவிசெய்யவேண்டுமென்று தன்னை வேண்டிக்கொண்டதாக இருந்தது.10 அந்தத் தரிசனத்தை அவன் கண்டபோது, அவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்கும்படி கர்த்தர் எங்களை அழைத்தாரென்று நாங்கள் நிச்சயித்துக்கொண்டு, உடனே மக்கெதோனியாவுக்குப் புறப்பட்டுப்போகப் பிரயத்தனம்பண்ணி,

சில சமயங்களில் கடினமான போராட்டங்கள் வழியாக அவரது அப்போஸ்தலர்களை கிறிஸ்து சோதிக்கிறார். அந்தப் போராட்டத்தின் ஒருபகுதியாக, அவர்களது விண்ணப்பங்களுக்கு அவர் அமைதி காக்கிறார் அல்லது அவர்களது வலியுறுத்தல் மிக்க கோரிக்கைகள் மத்தியிலும், அவர்களது திட்டத்தை நிராகரிக்கிறார். பவுலும், சீலாவும் இணைந்து தெர்பை, லீஸ்திரா, இக்கோனியா மற்றும் அனடோலியாவின் அந்தியோகியா பகுதிகளில் இருந்து சபைகளுக்கு பிரசங்கித்துக் கொண்டு வந்தார்கள். இறுதியாக அவர்களது முந்தைய மிஷெனரி பயணத்தின் எல்லைப் பகுதிக்கு அவர்கள் வந்தார்கள். இந்த தருணத்தில் குழந்தை சபைகளை பலப்படுத்துவது பவுலின் திட்டமாக இருந்தது. (15:36) இப்போது அவர்கள் என்ன செய்ய வேண்டும்? அவர்கள் முன்னோக்கி செல்ல வேண்டுமா? அல்லது பின்னோக்கிச் செல்ல வேண்டுமா?

ஆசியாவின் ரோம மாகாணத்தின் முக்கியமான தலைநகரமாக இருந்த எபேசுவிற்கு அவர்கள் செல்வதை ஆண்டவர் விரும்புகிறாரா? என்பதைக் காண்பிக்கும்படி அந்த இரண்டு பிரசங்கிமார்களும் விண்ணப்பம் செய்தார்கள். அவர்களது வேண்டுதலை பரிசுத்த ஆவியானவர் நிராகரித்தார். அவர் “ வேண்டாம்” என்று கூறினார். அவர்கள் மீண்டும் திரும்பிச் செல்ல வேண்டுமா? அவர்கள் இக்கோனியாவில் தங்கியிருக்க வேண்டுமா? அப்போதும் ஆவியானவர் கூறினார். “வேண்டாம்” இறைவனின் மனிதர்கள் எந்த குறிப்பான திட்டங்களையும் பெற்றிருக்கவில்லை. ரோம மாகாணத்தின் மையப்பகுதியாக இருந்த எபேசுவிற்கு செல்லும்படி ஒருவேளை பவுல் விரும்பியிருக்கலாம். இருப்பினும் அங்கே பயணம் செய்ய அவர் துணியவில்லை. ஏனெனில் அவருடைய ஆண்டவரின் சித்தத்திற்கு எதிரானதாக அது காணப்பட்டது. அவன் தொடர்ந்து ஆண்டவருடைய வழிநடத்துதலைக் கேட்டான். இறைவனுடைய ராஜ்யத்தில் ஆண்டவருடைய கட்டளை இல்லாமல் எடுத்து வைக்கின்ற ஒவ்வொரு அடியும் பாவம் என்பதை அறிந்திருந்தான். அது நிச்சயம் விரைவில் தோல்வியைக் கொண்டுவரும்.

பரிசுத்த ஆவியானவர் நேரடியாக பேசக்கூடிய ஒரு தீர்க்கதரிசியாக சீலா இருந்தான். (15:32). அந்த ஆவியானவர் நியாயப்பிரமாணத்தின் அடிமைத்தனத்தில் இருந்து விடுதலையை புறஜாதி விசுவாசிகளுக்கு ஏற்கெனவே உறுதிப்படுத்தியிருந்தார். ஆனால் சீலா கூட இறைவனிடம் இருந்து எந்த பதிலையும் பெறவில்லை. அவர்கள் அடுத்து எங்கே செல்ல வேண்டும்? என்ன செய்ய வேண்டும்? இறைவனின் ஆவியானவர் அவர்களுடைய எல்லா திட்டங்களையும் முறித்துப் போட்டார். இறுதியில் அவர்கள் இறைவனை நம்பி வடக்கு பகுதிக்கு போனார்கள். பிறகு காலத்தியா பகுதியை நோக்கி கிழக்காகவும், பின்பு மேற்காகவும் பரிசுத்த ஆவியானவர் அவர்களை வழிநடத்தினார். அங்கிருந்து அவர்கள் மீண்டும் ஒருமுறை வடக்கு பக்கம் சென்றார்கள். அந்த களைப்பு மிக்க பயணத்தில், மத்திய தரைக்கடல் கரையோரம் உள்ள துரோவா பகுதிக்கு அவர்கள் வரும்வரை சென்றார்கள்.

ஏன் இறைவன் அவர்களுடன் பேசவில்லை? ஒருவேளை அவர்கள் பர்னபாவுடனான சந்தோஷமற்ற மனநிலையை எண்ணிப் பார்த்திருப்பார்கள். மாற்குவின் நிமித்தமாக அவர்கள் பிரிந்து வந்ததை நினைத்திருப்பார்கள். அவர்கள் உதாவது தவறு செய்தார்களா? பரிசுத்த ஆவியை துக்கப்படுத்தினார்களா? அவர்களை விட்டு அவர் போய் விரும்படியாக நடந்து கொண்டார்களா? தீமோத்தேயுவின் விருத்தசேதனத்தைக் குறித்து ஒருவேளை அவர்கள் எண்ணியிருக்கக் கூடும். நியாயப்பிரமாணத்திலிருந்து விடுதலை என்பதற்கு மாறான ஒரு விரும்பத்தகுந்த எதிர் செயலா இது? இதன் நிமித்தம் அவர்களது ஆவிக்குரிய வல்லமை மட்டுப்படுத்தப்பட்டு விட்டதா? இறைவனுடைய திருப்தியை அவர்களது மிஷெனரி குழு எட்டாமல் இருப்பது என்பது சாத்தியம் தானா? அவர்களில் யாரேனும் ஒருவர் ஒரு குறிப்பிட்ட பாவத்தை செய்துவிட்டாரா? அவர்களது பிரசங்கத்தில் விதிமுறைகள் எதையாவது அவர்கள் மீறிவிட்டார்களா? இந்த கேள்விகள் அனைத்தும் மனந்திரும்புதலுக்கு நேராக அவர்களை நடத்தியது. நொறுக்கப்பட்டு, பாரத்துடன் விண்ணப்பம் செய்து, கிருபை மீது மட்டுமே விசுவாசம் கொண்டு அதை உறுதியாகப் பற்றிக் கொண்டார்கள். கிறிஸ்துவிற்கு அவர்கள் கீழ்ப்படிதல் அல்லது அவர்களது உண்மையான பிரசங்கம் ஆசீர்வாதம் மற்றும் பலனுக்கான காரணம் அல்ல என்பதை அவர்கள் உணர்ந்தார்கள். அவர்களுக்குள்ளும் அவர்கள் மூலமாகவும் பாய்ந்தோடிய இறைவனின் வல்லமை தான் காரணம் என்பதை உணர்ந்திருந்தார்கள். கிறிஸ்துவின் கிருபை மட்டுமே அவர்களை தெரிந்தெடுத்தது, அழைத்தது, நியமித்தது, பரிசுத்தப்படுத்தியது மற்றும் அவர்களைப் பாதுகாத்தது ஆகும். அந்த பிரசங்கிகள் தங்கள் சுயமாக எந்த ஒரு மதிப்பையும் பெற்றிருக்கவில்லை. அவர்களது நடத்தை அல்லது வெற்றி அவர்களது பணிக்கான அங்கிகாரத்தின் ஒரு முத்திரையாக இருக்கவில்லை. கனி, நன்றியறிதல் மற்றும் சமாதானத்தை வழங்குகின்ற சிலுவையிலறையப்பட்டவரின் இலவசமான கிருபையின் மீது விசுவாசம் மட்டுமே காரணம் ஆகும். எல்லாப் பாவங்களில் இருந்தும் கிறிஸ்துவின் இரத்தம் நம்மை சுத்திகரிக்கிறது. இறைவனுடனான நமது ஐக்கியத்தை பாதுகாக்கிறது. சிலுவையில் ஏற்படுத்தப்பட்ட ஒப்புரவாகுதல் தான் ஆண்டவருடைய ஊழியக்காரர்களுக்கான அதிகாரம் மற்றும் வல்லமையின் பிறப்பிடமாக இருக்கிறது.

நீண்ட விசுவாசம் போராட்டங்களுக்குப் பின்பு அநேக இரவுகள் தற்பரிசோதனை நொறுங்குண்ட இருதயம் மற்றும் முழுமையான மனந்திரும்புதலைத் தொடர்ந்து இறைவன் திடீரென்று ஒரு தரிசனம் மூலமாக பவுலிடம் பேசினார். எதிர்கரையில் நின்று சத்திமிடுகிற ஒரு மக்கெதோனியாவைப் போல ஆடை அணிந்த ஒரு மனிதனை பவுல் பார்த்தார். “மக்கெதோனியாவிற்கு வந்து எங்களுக்கு உதவிசெய் !” புறஜாதிகளின் அப்போஸ்தலனிடத்தில் தோன்றியது கிறிஸ்து அல்ல, மாறாக இரட்சிப்பைத் தேடுகிற தனது தேவையை வெளிப்படுத்துகிற ஒரு சாதாரண மனிதன் இரட்சிப்பிற்கான இந்த அழைப்பு ஒளியாய்த் திகழப்போகின்ற முழு ஐரோப்பாவின் தேவையை வெளிப்படுத்துகிற ஓர் அழைப்பு.

இந்த தரிசனத்தைத் தொடர்ந்து, மூன்று மனிதர்கள் இதைக் குறித்த அர்த்தத்தைக் கூற ஆரம்பித்தார்கள். அவர்கள் ஆசியாவிற்கு போவதை இயேசு விரும்பவில்லை என்பதை பரிசுத்த ஆவியானவர் உறுதிப்படுத்துவதை அவர்கள் உணர்ந்தார்கள். அவர்களை மேற்கு பக்கமாக ரோமை நோக்கி அனுப்ப அவர் விரும்பினார். இறைவனின் அழைப்பை அந்த தரிசனத்தின் மூலம் அவர்கள் புரிந்துகொண்டார்கள். மகா அலெக்சாண்டரின் நாட்டிற்கு நற்செய்தியை பிரசங்கிக்கும்படியான கட்டளை கொடுக்கப்பட்டது.

உடனடியாக அந்த அழைப்புக்கு பிரசங்கிமார்கள் கீழ்ப்படிந்தார்கள். கப்பலை எதிர்நோக்கிப் பார்த்தார்கள். மக்கெதோனியாவின் மொழியை அவர்கள் கற்கவில்லை. அங்கே தங்களுக்கு மத்தியஸ்தலர்களை அல்லது நெருக்கமானவர்களை குறித்து கேட்கவில்லை. அவர்கள் ஆயத்தமா உடனே, நீண்ட அமைதிக்குப் பின்பு பரிசுத்த ஆவியானவர் அவர்களுடன் பேசினார். ஒரு புதிய பகுதிக்கு வழிநடத்துதல் மற்றும் வெளிச்சம். அவர்களுக்கு கொடுக்கப்பட்ட கிருபை உறுதிப்படுத்தப்பட்டது. இப்போது அவர்களை அழுத்திக் கொண்டிருந்த சுமை நீங்கியது. மிகப்பெரும் மகிழ்ச்சி அவர்களில் காணப்பட்டது. அவர்கள் உற்சாகமாக ஆவிக்குரிய பாடல்கள் மற்றும் கீதங்களை பாடிக்கொண்டு கப்பற்பயணம் செய்தார்கள். அவர்களது பயணத்தில் மீண்டும் ஒருமுறை இறைவனின் அன்பு எனும் புயல் வீசியது.

இந்த புத்தகத்தின் ஆசிரியர் லூக்கா 10-ம் வசனத்தில் இருந்து தனது இலக்கண நடையை படர்கை நிலையிலிருந்து, தன்னிலைக்கு மாற்றி, “நாங்கள்” என்று குறிப்பிடுகிறார். இந்த இலக்கண நடை மாற்றத்திற்கு காரணம் இறைவன் நியமித்த நேரத்தில் துரோவாவில் பவுலின் குழுவினருடன் இந்த மருத்துவனும் இணைந்து கொண்டான். இங்கிருந்து அவர்கள் தங்களுடைய இரண்டாவது மிஷெனரி பயணத்தை, புதிய நாடுகளில் உள்ள அறுவடையை நோக்கி தொடர்ந்தார்கள். இப்போது இருந்து நாம் உயிருள்ள கிறிஸ்துவின் அற்புதங்களை குறித்ததான கண்கண்ட சாட்சிகளின் செய்திகளை கேட்கமுடியும். தமது ஊழயக்காரர்கள் மூலமாக கிறிஸ்து தன்னுடைய வெற்றிப்பவனியை தொடர்ந்தார்.

இந்த மூன்று மனிதர்களுடன் தன்னை ஆண்டவர் இணைத்திருப்பதை லூக்கா உறுதியாக அறிந்தார். அவர்கள் இணைந்து ஆண்டவருடைய நாமத்தை மகிமைப்படுத்தினார்கள். அந்தியோகியாவின் சிரியாவில் இருந்த போது பவுலை இதற்கு முன்பு லூக்கா சந்தித்திருக்க வாய்ப்புண்டு. இப்போது அவர்கள் இணைந்து கிறிஸ்துவிற்காக திறக்கப்பட்ட ஐரோப்பாவில் பணி செய்ய போகிறார்கள்.

விண்ணப்பம்: ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே, இந்த நான்கு மனிதர்களோடு எங்களையும் நீர் அழைத்ததற்காக நாங்கள் உமக்கு நன்றி கூறுகிறோம். எங்கள் பகுதிகளில் உம்முடைய நாமத்தை மகிமைப்படுத்துவதற்கு நாங்கள் தகுதியற்றவர்களாகவும், கனி அற்றவர்களுமாகவும் இருக்கிறோம். விவேகமற்ற செயல்களில் இருந்து எங்களை பாதுகாத்தருளும். எங்கள் திட்டங்களை பரிசுத்தப்படுத்தும். அப்போது நாங்கள் உமது சித்தத்தை நிறைவேற்றுவோம். சரியான நேரத்தில் சரியான இடத்தில் நாங்கள் உம்மை மகிமைப்படுத்த உதவும்.

கேள்வி:

  1. தாங்கள் விரும்பியபடி ஊழியத்தில் விசுவாசிகள் முன்னேறிச் செல்வதை பரிசுத்த ஆவியானவர் தடுப்பதின் பொருள் என்ன? புதிய ஊழியத்திற்கான அவரது அழைப்பின் பொருள் என்ன?

www.Waters-of-Life.net

Page last modified on October 07, 2013, at 10:51 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)