Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Acts - 037 (The Days of Moses)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Azeri -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- French -- Georgian -- Greek -- Hausa -- Igbo -- Indonesian -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Turkish -- Urdu? -- Uzbek -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

அப்போஸ்தலர் - கிறிஸ்துவின் வெற்றி பவனி
அப்போஸ்தலர் நடபடிகளிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 1 - எருசலேம், யூதேயா, சமாரியா மற்றும் சிரியா ஆகிய பகுதிகளில் இயேசு கிறிஸ்துவின் திருச்சபை அடித்தளமிடல் - பரிசுத்த ஆவியினால் வழிநடத்தப்பட்ட அப்போஸ்தலனாகிய பேதுருவின் திருப்பணி (அப்போஸ்தலர் 1 - 12)
அ - எருசலேமில் ஆதித்திருச்சபையின் தோற்றமும் வளர்ச்சியும் (அப்போஸ்தலர் 1 - 7)
21. ஸ்தேவானின் தன்னிலை வாதம் (அப்போஸ்தலர் 7:1-53)

அ) முற்பிதாக்களின் நாட்களைக் குறித்த விபரம் (அப்போஸ்தலர் 7:1-19)


அப்போஸ்தலர் 7:30-34
30 நாற்பது வருஷம் சென்றபின்பு, சீனாய்மலையின் வனாந்தரத்திலே கர்த்தருடைய தூதனானவர் முட்செடி எரிகிற அக்கினிஜூவாலையிலே அவனுக்குத் தரிசனமானார்.31 மோசே அந்தத் தரிசனத்தைக் கண்டு, அதிசயப்பட்டு, அதை உற்றுப்பார்க்கும்படி சமீபித்துவருகையில்: 32 நான் ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாகிய உன் பிதாக்களுடைய தேவனாயிருக்கிறேன் என்று கர்த்தர் திருவுளம்பற்றின சத்தம் அவனுக்கு உண்டாயிற்று, அப்பொழுது மோசே நடுக்கமடைந்து, உற்றுப்பார்க்கத் துணியாமலிருந்தான்.33 பின்னும் கர்த்தர் அவனை நோக்கி: உன் பாதங்களிலிருக்கிற பாதரட்சைகளைக் கழற்றிப்போடு; நீ நிற்கிற இடம் பரிசுத்த பூமியாயிருக்கிறது.34 எகிப்திலிருக்கிற என் ஜனத்தின் உபத்திரவத்தை நான் பார்க்கவே பார்த்து, அவர்கள் பெருமூச்சைக்கேட்டு, அவர்களை விடுவிக்கும்படி இறங்கினேன்; ஆகையால், நீ வா, நான் உன்னை எகிப்திற்கு அனுப்புவேன் என்றார்.

மோசே தனது மாமன் எத்திரோவின் வீட்டில் வசித்தான். எத்திரோ இறைவனின் ஆசரிப்புப் பணி செய்பவனாக இருந்தான். பழைய ஏற்பாட்டிற்கு வெளியே ஆவிக்குரிய வெளிப்பாடுகள் பெற்றவன் ஆவான். உன்னதமானவருக்கு உண்மையாக அவன் வாழ்ந்து வந்தான். மோசேயினுடைய எகிப்திய கல்வி, கொலைக்காரன் என்ற அவனது குற்ற உணர்வு இவைகளினால், அவன் ஒரு அவிசுவாசியாக மாறவில்லை. அவனது இருதயம் பரலோகம் மற்றும் பூலோகத்தைப் படைத்த இறைவனுடன் இணைவதை வாஞ்சிக்கும் எண்ணங்களால் நிறைந்திருந்தது. நாற்பது ஆண்டு கால மௌனம் மற்றும் வனாந்தர வாழ்வின் தனிமை அவனை இறைவனுக்கு அருகில் கொண்டு வந்தது. காற்று, வெயில், ஆபத்துகள் மத்தியில் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான மணிநேரங்கள் தனிமையாக அவருடைய ஆடுகளுடன் இருந்ததை இது குறிப்பிட்டுக் காண்பிக்கிறது. மேலும் இறைவனுடன் ஏற்பட்ட நெருக்கமான உரையாடலைக் குறிப்பிடுகிறது.

திடீரென்று நித்தியமுள்ள பரிசுத்தமானவர் தம்முடைய மறைவிடத்திலிருந்து வெளிப்பட்டு எரிகின்ற முட்புதர்களின் அக்கினியின் மத்தியில் தோன்றினார். அவருடைய தூதர்களில் ஒருவர் அவருடைய சிங்காசனத்திலிருந்து வெளிப்பட்டு அவருடைய மகிமையின் கிரணங்கள் மூலம் அக்கினியை கொண்டு வந்தார். பயந்துபோன மேய்ப்பன் எரிகின்ற முட்புதர் அருகில் வந்தான். அது அக்கினியினால் முற்றிலும் அழியவில்லை. அந்த முட்புதர் மத்தியில் இருந்து தெளிவான சத்தத்தை அவன் கேட்டான். ஆனால் அங்கே ஒருவருமில்லை. நம்முடைய இறைவன் புரிந்துகொள்ளக் கூடிய மனித வார்த்தைகளைப் பேசுகிறார். நம்முடைய பரலோகப் பிதா ஓர் பயமுறுத்தும் ஆவி அல்ல அல்லது அலைந்து திரியும் ஆவி அல்ல. அவர் சுயமாக செயல்படும் ஓர் நபர். அவர் தன்னை வெளிப்படுத்தும் போது “நான்” என்ற பதத்தை பயன்படுத்துகிறார். அவர் நம்முடைய நிலைக்கு இறங்கி வரும்போது “நீ” என்ற பதத்தை பயன்படுத்தி நம்முடன் இடைப்படுகிறார். அவருடைய எண்ணங்களை நாம் அறிந்து கொள்ளும்படி நமக்கு உதவுகிறார். நம்முடைய இறைவன் அன்பானவர்.

இறைவன் தன்னை மோசேக்கு ஆபிரகாமின் இறைவன், ஈசாக்கின் இறைவன், யாக்கோபின் இறைவன் என்று வெளிப்படுத்தினார். அவர் எப்போதும் முற்பிதாக்களுக்கு தன்னை உட்படுத்திக் காண்பிக்கிறார். இந்த இறைவன் உண்மையுள்ளவர். அவர் ஒரு போதும் மாறாதவர்.

மோசே பயத்துடன் காணப்பட்டான். வனாந்தரத்தில் முட்புதர் மத்தியில் சத்தத்தை கேட்டதில் இருந்து அவன் நடுக்கத்துடன் காணப்பட்டான். ஆண்டவரின் பரிசுத்தக் கிரணங்களை உற்று நோக்க தைரியமற்றவனாக இருந்தான். மரியாதை மற்றும் இறை பயம் மக்களை இறைவனிடமிருந்து சற்று தூரத்தில் வைக்கிறது. இறைவன் தன்னுடைய மகிமையுள்ள பரிசுத்தத்தை மோசேக்கு வெளிப்படுத்தினார். அவனிடம் இவ்விதம் கூறினார், “உனது பாதரட்சைகளை கழற்றிப்போடு, நீ நிற்கிற இடம் பரிசுத்த பூமி” கிறிஸ்துவின் நிலத்தின் ஒவ்வொரு சாண் அளவும், மற்றும் பரிசுத்த ஆவியின் அசைவாடுதலினால் எங்கெல்லாம் மக்கள் அசைக்கப்படுகிறார்களோ அவர்களும் பரிசுத்த நிலமாக இருக்கிறார்கள். பரிசுத்தமானவர் எல்லாப் பாவத்திலிருந்தும் பிரிந்து இருக்கிறார். ஆனால் பாவிகளிடம் இருந்து அவர் பிரிந்திருப்பதில்லை. அவருடைய அன்பு அவரது பரிசுத்தத்தின் மகத்துவத்தினால் சுற்றப்பட்டுள்ளது. ஆகவே தூய்மையற்ற நாம் அவரது பட்சிக்கும் மகிமையின் அக்கினியில் எரிந்து போகாதபடி காக்கப்படுகிறோம்.

இறைவனின் நெருங்கிய சத்தத்தினால் மோசே பரிசுத்தமாக்கப்பட்டான். அவனது இருதயம் மாற்றம் அவனது ஆவி புதுப்பிக்கப்பட்டது. அவன் பரிசுத்த ஆவியானவரின் வழிகளை காண அது ஆவியானவருக்காக இல்லையென்றால் அவன் ஆண்டவருடைய பிரசன்னத்தில் உருகிப்போயிருப்பான்

இறைவன் மோசேயிடம், அடிமைகளின் வேண்டுதலை அவர் கேட்டதாக கூறினார். ஏனெனில் பரலோகம் மற்றும் பூலோகின் இறைவன் சிறியவர்களை ; ஒதுக்கப்பட்டவர்களை நேசிக்கிறார். அவர் அவர்களை காப்பாற்றவும், ஆசீர்வதிக்கவும் விரும்புகிறார். ஒவ்வொரு இருதய வேதனையும் ஒரு உண்மையான வேண்டுதல் ஆகும். அதற்கு இறைவன் பதில் அளிக்கிறார். உன்னதமானவரை நோக்கும் ஒவ்வொரு இருதயத்தின் வார்த்தையும் அவரை சந்திக்கிறது. இறைவன் உங்களுடைய சத்தத்தை அறிகிறார். உங்களது உண்மையான ஏக்கத்தைக் காண்கிறார்.

சர்வ வல்லமையுள்ளவர் அழித்தொழிக்கப்படுகிற அடிமைகளை விடுவிக்கும்படி நம்முடைய சிறிய பூமிக்கு இறங்கி வந்தார். அவர் தூதர்களின் சேனைகளை அனுப்பவில்லை. அவர் பூமியை அசைக்கவில்லை. அல்லது இடிமுழக்கங்களை ஏற்படுத்தவில்லை. தன்னுடைய ஆடுகளை சுறுசுறுப்பாய் மேய்த்துக் கொண்டிருந்த எண்பது வயதுள்ள ஒரு முதியவனை அவர் தெரிந்துக்கொண்டார். அவனது பலவீனத்தின் மத்தியில் உடன்படிக்கையின் மக்களுக்காக இவ்விதம் செய்தார். இறைவனின் இரட்சிப்பு என்பது பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல. அவருடைய ஆவியானவரின் வழிநடத்துதல் மூலம் மட்டுமே நிறைவேறும். இறைவன் மோசேயிடம் கீழ்ப்படியவும், அவரது அழைப்பை ஏற்றுக்கொள்ளவும் கேட்டுக்கொண்டார். இப்படிச் செய்வதன் மூலம் அவருடைய நாட்டிற்கு இரட்சிப்பின் நற்செய்தியை பிரசங்கிப்பவனாக அவன் மாற முடியும்.

கேள்வி:

  1. வனாந்தரத்தில் எண்பது வயதுள்ள முதியவரான மேய்ப்பனுக்கு தன்னை இறைவன் வெளிப்படுத்தியதின் முக்கியத்துவம் என்ன?

www.Waters-of-Life.net

Page last modified on July 02, 2013, at 09:39 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)