Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Romans - 007 (Paul’s Desire to Visit Rome)
This page in: -- Afrikaans -- Arabic -- Armenian -- Azeri -- Bengali -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- French -- Georgian -- Greek -- Hausa -- Hebrew -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Malayalam -- Polish -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Turkish -- Urdu? -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

ரோமர் - கர்த்தரே நம்முடைய நீதி
ரோமருக்கு பவுல் எழுதின நிரூபத்திலிருந்து வேதபாடங்கள்
ஆரம்பம்: வாழ்த்துரை இறைவனுக்கு நன்றி, நிரூபத்தின் நோக்கமாக “இறைவனின் நீதி” வலியுறுத்தப்படுதல் (ரோமர் 1:1-17)

ஆ) ரோமை சந்திக்க வேண்டும் என்ற பவுலின் நீண்டகால ஆசை (ரோமர் 1:8-15)


ரோமர் 1:13-15
13 சகோதரரே, புறஜாதிகளான மற்றவர்களுக்குள்ளே நான் பலனை அடைந்தது போல உங்களுக்குள்ளும் சில பலனை அடையும்படிக்கு, உங்களிடத்தில் வர பலமுறை யோசனையாயிருந்தேன், ஆயினும் இதுவரைக்கும் எனக்குத் தடையுண்டாயிற்று என்று நீங்கள் அறியாதிருக்க எனக்கு மனதில்லை. 14 கிரேக்கருக்கும், மற்ற அந்நியர்களுக்கும், ஞானிகளுக்கும், மூடருக்கும் நான் கடனாளியாயிருக்கிறேன். 15 ஆகையால் ரோமாபுரியிலிருக்கிற உங்களுக்கும் என்னால் இயன்றமட்டும் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க விரும்புகிறேன்.

இந்த நிரூபத்தில் பவுல் ரோமாபுரி சபையின் மக்களுக்கு தனது இருதயத்தை திறக்கின்றான். எத்தனை முறை அவர்களை சந்திக்க முயற்சித்து திட்டம் பண்ணினான் என்பதை அவர்களுக்கு கூறுகிறான். ஆனால் அவனுடைய எல்லா திட்டங்களிலும் இறைவன் குறுக்கீடு செய்தார். அவனுடைய எண்ணங்களை விட இறைவனுடைய எண்ணங்கள் வேறுபட்டவை என்பதை அப்போஸ்தலன் முதலாவது கற்றுக்கொள்ள வேண்டியதாக இருந்தது. பூமிக்கு வானம் எவ்வளவு உயர்ந்திருக்கிறதோ, அது போல இறைவனுடைய வழிகள் உயர்ந்தவைகளாய் இருக்கின்றன. அவனுடைய திட்டங்கள் பயனுள்ளது, நலமானது மற்றும் பரிசுத்தமானது போல தோன்றினாலும், அதை நிறைவேற்றாதபடி கிறிஸ்துவின் ஆவியானவர் தடை செய்தார். மேலும் பிரயாணம் பண்ணுவதற்கு அனுகூலமாய் தோன்றிய போதும், இறைவன் அவனை தடுத்தார்.

எப்படியிருப்பினும் உலகிற்கு பிரசங்கிக்க வேண்டும் என்ற காரியம் அவன் இருதயத்தில் ஆழமாய் பதிந்திருந்தது. அவன் வாழ்க்கை மூலம் இறைஅரசை ரோமாபுரியிலும், மற்ற நாடுகளிலும் நிறுவிட விருப்பமுள்ளவனாய் இருந்தான். அவன் தனிநபர்களை பக்திவிருத்தியடையச் செய்ய யோசிக்காமல், தேசங்கள் பக்திவிருத்தியடைய நோக்கமுள்ளவனாய் இருந்தான். அதற்குரிய விசேஷித்த கிறிஸ்துவின் ஆசீர்வாதம் அவனுக்குள் செயல்பட்டுக் கொண்டிருந்தது. அவனுடைய மகிமை நிறைந்த ஆண்டவரை அவன் கண்டிருந்தான். முழு உலகமும் ராஜாதிராஜாவினால் சொந்தமாக்கப்படும், அவருடைய வெற்றி நிச்சயமானது என்பதை அவன் உறுதியாக அறிந்திருந்தான்.

தேசங்களின் அப்போஸ்தலன் எல்லா மனிதர்களுக்கும் தான் ஓர் கடனாளி என்பதைக் கண்டான். அவர்களிடமிருந்து அவன் பணத்தைப் பெற்றிருந்தான் என்பதற்காக அல்ல, இறைவன் தன்னுடைய அதிகாரம் மற்றும் வல்லமையை அவனுக்கு தந்திருந்தபடியால் அப்படி எண்ணினான். ஆகவே கிறிஸ்துவுக்குள் தெரிந்துகொள்ளப்பட்ட அனைவருக்கும் அந்த அதிகாரம் மற்றும் வல்லமையை தந்தருளுகிற பொறுப்பை உடையவனாக, அவன் இருந்தான். உண்மையில் பவுலுக்கு அருளப்பட்ட இறைவனுடைய ஈவுகளினால் இன்று நாம் வாழ்கிறோம். அவனுடைய கடிதங்கள் அந்த வல்லமைக்கு நம்மை பங்காளிகளாக்கி செயல்படுகிறது. இந்த அர்த்தத்தின் அடிப்படையில் நாங்கள் உங்களுக்கு கடனாளிகளாகிறோம். உங்களைச் சுற்றியுள்ள அனைத்து மக்களுக்கும் நீங்கள் கடனாளிகளாக இருக்கிறீர்கள். நமக்குள் செயல்படுகிற ஆவியானவர் நமக்கு மட்டும் உரியவரல்ல. அவர் அநேக இருதயங்களில் வாழும்படியாக விரும்புகிறார்.

கல்வியில் தேர்ந்த கிரேக்க மக்கள் மத்தியில் பவுல் பணி செய்தான். பவுலின் பலவீனத்தின் மத்தியிலும் ஆண்டவர் தன்னுடைய பணியை நிலைநாட்டினார். மத்திய தரைக்கடல் பகுதிகளில் அவர் சபைகளை நிறுவினார். அது கிரேக்க தீவுகளையும் சென்றடைந்து, இந்த நிரூபத்தை பவுல் எழுதுகின்ற நேரம், பிரான்சு, ஸ்பெயின் மற்றும் ஜெர்மனியில் உள்ள மக்கள் மத்தியில் பணிசெய்ய ஆர்வம் உள்ளவனாக இருந்தான். சிலுவையின் மூலம் நம்மை மீட்கின்ற ஒரு குமாரன் இறைவனுக்கு இருக்கிறார் என்ற நற்செய்தியை அறிவிப்பதில் அவன் ஆர்வமுடன் இருந்தான். ஏவிவிடுவதற்கு தயார் நிலையில் உள்ள ராக்கெட் போல தேசங்களின் அப்போஸ்தலன் பேரார்வத்துடனும், அர்ப்பணிப்புடனும் இருந்தான். சொல்ல வேண்டிய செய்தியை அவன் பெற்றிருந்தான். மக்கள் மீதான அன்பின் நிமித்தமாக, அவன் ரோமர்களின் கவனத்தை ஈர்க்க விரும்பினான். அவனுடன் அவர்கள் இணைந்து கொள்ளவும், தேசங்களுக்கு பிரசங்கிக்கிற பணியில் அவர்களும் பங்கு பெறவும் எண்ணினான். எனவே ரோமாபுரி விசுவாசிகளும் பிரசங்கிக்கிற பணியை செய்யத்தக்கதாக, அவர்களுக்கு பிரசங்கிக்க விரும்பினான். இரட்சிப்பை பெற்றுக்கொண்டவர்கள் இரட்சிப்பின் செய்தியை மற்றவர்களுக்கும் கொண்டு செல்வார்கள். முழு உலகிற்கும் நற்செய்தியை பிரசங்கிக்கிற மையம் மற்றும் ஆரம்ப இடமாக, ரோமாபுரியை பவுல் தன் கண்களின் முன்பு வைத்திருந்தான்.

இறைவன் வேறொரு வழியில் தன்னுடைய அப்போஸ்தலனின் விண்ணப்பத்திற்கு பதில் அளித்தார். அவர் ரோமாபுரிக்கு நேரடியாக தன்னுடைய தூதுவனை அனுப்பவில்லை. மாறாக அவன் எருசலேமுக்கு முதலாவது கொண்டுவரப்பட்டு, கைது செய்யப்பட்டான், சிறையிலடைக்கப்பட்டான். நீண்ட மற்றும் வேதனை நிறைந்த ஆண்டுகள் கடந்த பின்பு பவுல் கட்டப்பட்டவனாக, சிறைக்கைதியாக, கிறிஸ்துவின் ஊழியக்காரனாக தலைநகரத்திற்கு வந்தான். அவன் சங்கிலிகளால் கட்டப்பட்டிருந்த காலத்திலும் ரோமாபுரிக்கு அவன் எழுதிய நிரூபத்தின் மூலமும் முழு உலகிற்கும் பிரசங்கித்துக் கொண்டிருந்தான். இன்றும் கூட அநேக மக்களுக்கும், நாடுகளுக்கும் அது பிரசங்கித்துக் கொண்டிருக்கிறது.

பவுல் யாருக்கு பிரசங்கிக்க விரும்பினாரோ, அவர்களுடைய பேரப்பிள்ளைகளாக இன்று நாம் இருக்கிறோம். பவுல் அவர்களுக்கு மகிழ்ச்சியுடன் இறைவனின் நற்செய்தியை கொண்டு சென்றான். அக்காலத்தில் அந்தபணி அவனுக்கு ஒப்புக் கொடுக்கப்பட்டிருந்தது. ஒருவேளை பவுல் இந்த நிரூபத்தை ரோமாபுரிக்கு எழுதுகின்றபோது, நாடுகள் அனைத்திற்கும் பிரசங்கிக்க வேண்டும் என்ற, அவனுடைய விருப்பம் இதன் மூலம் நிறைவேறும் என்பது அவனுடைய மனதிற்கு தெரிந்திருக்காது. யோவான் நற்செய்தி நூலைத் தவிர்த்து இந்த நிரூபத்தைப் போல உலகை மாற்றி அமைத்த எந்த ஒரு புத்தகமும் கிடையாது. இது அநேக வேண்டுதல்கள் மற்றும் ஆவியின் வியாகுலங்களுடன் எழுதப்பட்டது ஆகும்.

விண்ணப்பம்: ஆண்டவரே, நீர் ராஜா. உமது சித்தத்தின்படி உம்முடைய ஊழியர்களை நீர் வழிநடத்துகிறீர். உம்முடைய சித்தத்துடன் இணைந்து செல்லாத எதையும் நாங்கள் சிந்தித்திருந்தால் எங்களை மன்னியும். உமது அன்பின் திட்டத்திற்கு வெளியே நாங்கள் செல்லாதபடி உமது வழிநடத்துதலுக்கு எங்களை ஒப்புக் கொடுக்கிறோம். உம்முடைய ஆவியானவரின் கட்டளைகளுக்கு கீழ்ப்படிகிறோம். எங்கள் கற்பனைகளுக்கு எதிராக இருந்தும் உமது விருப்பங்களை மகிழ்ச்சியுடன் நிறைவேற்றுகிறோம். ஆண்டவரே உம்முடைய வழி பரிசுத்தமானது. உமது பராமரிப்பிற்கு எங்களை ஒப்புக்கொடுக்கிறோம். உம்முடைய இரக்கத்தினின்று நாங்கள் விழுந்துபோக நீர் அனுமதிப்பதில்லை. எனவே உமக்கு நன்றி கூறுகிறோம்.

கேள்வி:

  1. பவுல் தன்னுடைய திட்டங்களை நிறைவேற்றாத படி எப்படி, எத்தனைமுறை இறைவன் தடை செய்தார்?

www.Waters-of-Life.net

Page last modified on August 07, 2021, at 04:41 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)