Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Acts - 069 (Founding of the Church at Lystra)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Azeri -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- French -- Georgian -- Greek -- Hausa -- Igbo -- Indonesian -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Turkish -- Urdu? -- Uzbek -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

அப்போஸ்தலர் - கிறிஸ்துவின் வெற்றி பவனி
அப்போஸ்தலர் நடபடிகளிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 2 - புறவினத்தாருக்கு நற்செய்தி அறிவித்தலைப் பற்றிய அறிக்கையும் அந்தியோகியா முதல் ரோமாபுரிவரை திருச்சபைகள் நாட்டப்படுதலும் - பரிசுத்த ஆவியானவரினால் கட்டளையிடப்பட்டிருந்த அப்போஸ்தலனாகிய பவுலின் ஊழியத்தினால் (அப்போஸ்தலர் 13 - 28)
அ - முதலாவது மிஷனரிப் பயணம் (அப்போஸ்தலர் 13:1 - 14:28)

5. லீஸ்திராவில் சபை ஸ்தாபிக்கப்படுதல் (அப்போஸ்தலர் 14:8-20)


அப்போஸ்தலர் 14:8-18
8 லீஸ்திராவிலே ஒருவன் தன் தாயின் வயிற்றிலிருந்து பிறந்தது முதல் சப்பாணியாயிருந்து, ஒருபோதும் நடவாமல், கால்கள் வழங்காதவனாய் உட்கார்ந்து,9 பவுல் பேசுகிறதைக் கேட்டுக்கொண்டிருந்தான். அவனைப் பவுல் உற்றுப்பார்த்து, இரட்சிப்புக்கேற்ற விசுவாசம் அவனுக்கு உண்டென்று கண்டு:10 நீ எழுந்து காலூன்றி நிமிர்ந்து நில் என்று உரத்த சத்தத்தோடே சொன்னான். உடனே அவன் குதித்தெழுந்து நடந்தான்.11 பவுல் செய்ததை ஜனங்கள் கண்டு, தேவர்கள் மனுஷரூபமெடுத்து நம்மிடத்தில் இறங்கிவந்திருக்கிறார்கள் என்று லிக்கவோனியா பாஷையிலே சத்தமிட்டுச் சொல்லி,12 பர்னபாவை யூப்பித்தர் என்றும், பவுல் பிரசங்கத்தை நடத்தினவனானபடியினால் அவனை மெர்க்கூரி என்றும் சொன்னார்கள்.13 அல்லாமலும் பட்டணத்துக்கு முன்னே இருந்த யூப்பித்தருடைய கோவில் பூஜாசாரி எருதுகளையும் பூமாலைகளையும் வாசலண்டையிலே கொண்டுவந்து, ஜனங்களோடேகூட அவர்களுக்குப் பலியிட மனதாயிருந்தான்.14 அப்போஸ்தலராகிய பர்னபாவும் பவுலும் அதைக் கேட்டபொழுது, தங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, கூட்டத்துக்குள்ளே ஓடி, உரத்த சத்தமாய்:15 மனுஷரே, ஏன் இப்படிச் செய்கிறீர்கள்? நாங்களும் உங்களைப்போலப் பாடுள்ள மனுஷர்தானே; நீங்கள் இந்த வீணான தேவர்களைவிட்டு, வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின ஜீவனுள்ள தேவனிடத்திற்குத் திரும்பவேண்டுமென்று உங்களுக்குப் பிரசங்கிக்கிறோம்.16 சென்ற காலங்களில் அவர் சகல ஜனங்களையும் தங்கள்தங்கள் வழிகளிலே நடக்கவிட்டிருந்தும்,17 அவர் நன்மை செய்துவந்து, வானத்திலிருந்து மழைகளையும் செழிப்புள்ள காலங்களையும் நமக்குத் தந்து, ஆகாரத்தினாலும் சந்தோஷத்தினாலும் நம்முடைய இருதயங்களை நிரப்பி, இவ்விதமாய் அவர் தம்மைக்குறித்துச் சாட்சி விளங்கப்பண்ணாதிருந்ததில்லை என்றார்கள்.18 இப்படி அவர்கள் சொல்லியும் தங்களுக்கு ஜனங்கள் பலியிடாதபடிக்கு அவர்களை அமர்த்துகிறது அரிதாயிருந்தது.

இக்கோனியாவிற்கு தென்மேற்கே 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள லீஸ்திராவில் அற்புதமான ஓர் குணமாக்குதல் நடைபெற்றது. பவுல் அப்போஸ்தலனின் வார்த்தைகள் மூலம் இயேசு சப்பாணியை குணமாக்கினார். இந்த நிகழ்விற்க்கு சில ஆண்டுகள் முன்பு தேவாலயத்து வாசல் அருகே தாயின் வயிற்றில் பிறந்தது முதல் சப்பாணியாய் இருந்த ஒரு மனிதனை இயேசுவின் நாமத்தில் பேதுரு சுகமாக்கினான். தேவாலயத்து பிரகாரத்தில் அநேக மக்கள் கூடுவதற்க்கு இந்த குணமாக்குதல் காரணமாய் இருந்தது. அங்கே பேதுரு வல்லமையான பிரசங்கத்தைக் கொடுத்தான். அதன் விளைவாக யூதர்களின் ஆலோசனை சங்கத்திற்கு முன்பு நியாயம் விசாரிக்கப்பட பேதுரு நிறுத்தப்பட்டான்.

லீஸ்திராவில் பவுலுக்கும் இதைப் போன்ற காரியம் நிகழ்ந்தது. திரளான மக்களுக்கு அப்போஸ்தலன் பிரசங்கித்தபோது வாழ்நாள் முழுவதும் சப்பாணியாய் இருக்கிற ஒருவனை கவனித்தான். பேசுகிறதை புரிந்துகொண்டு, கிறிஸ்துவின் வல்லமையை இந்த ஏழை மனிதன் விசுவாசித்தான். அவனுடைய கண்கள் பவுல் அப்போஸ்தலனை சந்தித்த போது இறைவனின் சித்தம் உணரப்பட்டது.பவுல் அவனை உற்றுப்பார்த்தான். காலூன்றி நில் என்று கட்டளையிட்டான். உடனே அவன் நடக்க ஆரம்பித்தான். இயேசுவின் நாமத்தை உச்சரியாதிருந்தும், பேதுரு செய்தது போல கைகளைப் பிடித்தும் சுகமாக்கவில்லையெனினும், அப்போஸ்தலனாகிய பவுலின் வார்த்தைகள் மூலம் கிறிஸ்துவின் வல்லமை செயல்பட்டது. அந்த வியாதியஸ்தன் நற்செய்தியைக் கேட்டான். இரட்சிப்பின் நற்செய்தியில் விசுவாசம் வைத்தான். அவனது விசுவாசம் அவனை இரட்சித்தது.

லீஸ்திரா பட்டணம் விக்கிரகங்களால் நிறைந்து இருந்தது. அதன் மக்கள் பரிசுத்தமான இறைவனுடன் எந்த ஒரு நெருங்கிய உறவையும் பெற்றிருக்கவில்லை. அவர் முன்பு அனைத்து மக்களும் குற்றவாளிகளாக இருக்கிறார்கள். இந்த விக்கிரகாரதனைக்காரர்கள் அநேக தெய்வங்கள் மற்றும் ஆவிகளில் நம்பிக்கை வைத்திருந்தார்கள். அவர்களது தெய்வங்கள் அவதாரங்கள் எடுப்பது, அவர்கள் மத்தியில் நடமாடுவது இவைகளுக்கான சாத்தியக் கூறுகளில் அவர்கள் நம்பிக்கை கொண்டிருந்தார்கள். அவர்கள் இவர்களை தெய்வங்களாக்க ஆயத்தமாகினார்கள். ஏனெனில் நரகத்தின் ஆவிகளும், இழந்துப்போன ஆவிகளும் தனித்தனியே பிரிந்து வாழ இயலாது.

பர்னபாவும், பவுலும் பேசுவதை திரளான மக்கள் கேட்டார்கள். வியாதியஸ்தன் சுகமானதையும் கண்டார்கள். நல்ல தெய்வங்கள் தங்களது பட்டணத்தை சந்திக்க வந்திருப்பதாக அவர்கள் நினைத்தார்கள். தெய்வங்களின் பிதாவின் குணாதிசயங்களை ஒத்திருந்தால் பர்னபாவை யூப்பித்தார் என்று அழைத்தார்கள். அவர்களது கிரேக்க தெய்வங்களின் முதன்மை தெய்வமாக அது இருந்தது. அதற்குள் இரக்கம், அமைதி மற்றும் விவேகத்துடன் தகப்பனைப் போன்ற ஆவி தங்கியிருந்ததாக கருதப்பட்டது. அவர்கள் பவுலுக்கு மெர்க்குரி என்று பெயர் வைத்தார்கள். அது தெய்வங்களின் செய்தியாளராக கருதப்பட்டது. பவுல் தனது நடைபாவனை, வல்லமைமிக்க செயல், பேச்சு இவற்றிலும் தன்னை வித்தியாசப்படுத்திக் காண்பித்தான். பட்டணத்திற்கு வெளியே மெர்க்குரிக்கு பழைய கோயில் ஒன்று இருந்தது. மெர்க்குரி தெய்வத்தின் பூசாரி உடனடியாக இதைக் கவனித்து, தன்னுடைய செயலை நிறைவேற்ற இது சரியான தருணம் என்று நினைத்தான். அவன் பூக்களினால் அலங்கரிக்கப்பட்ட இரண்டு காளைகளை கொண்டுவரும்படி துரிதப்படுத்தினான். அப்போஸ்தலர்களுக்கு பலி செலுத்த அவன் விரும்பினான். தெய்வத்தை கனப்படுத்தும்படி பட்டணத்தில் நடைபெறப்போகிற இந்த மகிழ்ச்சியின் விருந்துக்கு அவன் பெரிய எண்ணிக்கையில் மக்களை அழைத்தான். இப்படிப்பட்ட விருந்துகளில் குடி, களியாட்டம் மற்றும் விபச்சாரம் போன்றவை நடைபெறும். இப்படிச் செய்வதின் மூலம் தெய்வத்தின் ஆசீர்வாதத்தின் பலனை அனுபவிப்பதாக கருதினார்கள். அவர்கள் சந்தோஷத்திற்கும் மற்றும் களியாட்டத்திற்கும் முழு பெலனையும் செலவழித்தார்கள்.

தங்கள் சொந்த இடத்தில் திரள் கூட்ட மக்களின் வட்டார மொழியை பவுலும் பர்னபாவும் உடனடியாக புரிந்துகொள்ள இயலவில்லை. அவர்களை விட்டு சற்று தொலைவில் அவர்கள் இருந்தார்கள். அவர்களை கனப்படுத்தும்படியாக, புகழும்படியாக வந்தார்கள். அப்போது இரண்டு அப்போஸ்தலர்களும் மக்கள் செய்யப்போவதை உணர்ந்து வெறுப்புற்றார்கள். அவர்கள் பயந்து நடுங்கினார்கள். அவர்கள் கூட்டத்தின் நடுவே ஓடி, தங்கள் வஸ்திரங்களைக் கிழித்து, தங்கள் கோபத்தையும், இறைவன் மீது அவர்கள் வைத்திருந்த வைராக்கியத்தையும் வெளிப்படுத்தினார்கள். உயர்ந்த பாறை ஒன்றின் மீது பவுல் ஏறி உரத்த சத்திமிட்டான்: “நிறுத்துங்கள் ! நீங்கள் செய்வது தவறு, நாங்கள் தெய்வங்கள் அல்ல, உங்களைப் போன்ற மாம்சம், இரத்தத்தினால் உண்டாக்கப்பட்டுள்ள மனிதர்கள். நீங்கள் உங்களையே வஞ்சிக்கிறீர்கள். யூப்பித்தரும், மெர்க்குரியும் உங்களிடம் வரவில்லை. ஏனெனில் இந்த தெய்வங்கள் வெறுமையானவைகள். அவைகள் கற்பனையாக உண்டாக்கப்பட்டவை. நீங்கள் ஆராதிக்கும் அனைத்து தெய்வங்களும் வெறுமையானவைகள். அவைகள் ஒன்றும் செய்யாதவை, வல்லமை அற்றவை, ஜீவன் அற்றவை. அவைகளினால் எந்த பலனும் இல்லை.

நாங்கள் உங்களுக்கு ஒரே பரிசுத்தமான, உண்மையான இறைவனை பிரசங்கிக்கிறோம். நீங்கள் காண்கின்ற வானத்தையும், பூமியையும் அவைகளில் உள்ள அனைத்தையும், உங்களையும் கூட உருவாக்கியவர் அவர். அந்த நல்ல இறைவனின் படைப்புகளாக நாம் அனைவரும் இருக்கிறோம். அவருடைய சித்தத்தை நிறைவேற்றும்படி, அவர் யாரையும் வற்புறுத்துவது கிடையாது. ஆனால் அவருக்கு எதிர்த்து நிற்பவர்களை, அவர்களது சொந்த இருதயங்களின் இச்சைகளுக்கு ஒப்புக்கொடுக்கிறார். அவர்கள் தங்களைத்தாங்களே கறைப்படுத்திக் கொள்கிறார்கள். மக்களின் சுயநலத்தின் மத்தியிலும், மனிதனுடனான தனது வரலாற்றை இறைவன் தொடருகிறார். அவர் கீழ்ப்படிபவனை மட்டுமல்ல, கீழ்ப்படியாதவனையும் நேசிக்கிறார். அவனுக்கு மழை, சூரிய வெளிச்சம், வெப்பம், குளிர், தானியப்பயிர்கள் அனைத்தையும் சரியான நேரத்தில் வழங்குகிறார். இறைவன் மட்டுமே நம்மை பராமரிக்கிறார். விருந்து மற்றும் சந்தோஷத்தை தருகிறார். யூப்பித்தர் அல்ல, மெர்க்குரி அல்ல, வேறு எந்த ஆவியும் அல்ல. அவைகள் அனைத்தும் மாயையாக உள்ளது. இரண்டு அப்போஸ்தலர்களும் தனிப்பட்ட நபர்களுடன் மற்றும் கூட்டத்தினரும் அதிக பிரயத்தனம்பண்ணி, தங்களுக்கு பலி செலுத்துவதை தடுத்தார்கள். பூசாரியும், கூட்டத்தினரும் கோபமடைந்தார்கள். இதனுடன் தொடர்புடைய சந்தோஷத்தை இழந்து போவதை நினைத்தார்கள். அவர்கள் மீது வானத்திலிருந்து இடி விழுந்ததைப் போல சீற்றத்துடன் தங்கள் வீடுகளுக்கு திரும்பினார்கள். முழுப்பட்டணமும் இரண்டு அப்போஸ்தலர்களின் ஒரே இறைவனைக் குறித்த வித்தியாசமான பிரசங்கத்தைக் குறித்து பேசிக் கொண்டிருந்தது.

கேள்வி:

  1. எல்லா தெய்வங்களும் மாயை என்று ஏன் பவுல் கூறினான்?

www.Waters-of-Life.net

Page last modified on October 07, 2013, at 10:37 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)