Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- John - 027 (The Baptist testifies to Jesus)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Bengali -- Burmese -- Cebuano -- Chinese -- Dioula -- English -- Farsi? -- French -- Georgian -- Greek -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Kyrgyz -- Malayalam -- Peul -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Thai -- Turkish -- Twi -- Urdu -- Uyghur? -- Uzbek -- Vietnamese -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

யோவான் - வெளிச்சம் இருளில் ஒளிர்கிறது
யோவான் எழுதின கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 1 - தெய்வீக ஒளியின் பிரகாசம் (யோவான் 1:1 - 4:54)
இ - கிறிஸ்துவின் முதலாவது எருசலேம் பயணம் (யோவான் 2:13 - 4:54) -- கருப்பொருள் : எது உண்மையான தொழுகை?

3. மணவாளனாகிய இயேசுவுக்குச் சாட்சிகொடுக்கும் ஸ்நானகன் (யோவான் 3:22–36)


தாழ்மையாக சாட்சி கொடுத்து, கிறிஸ்தவம் வளருவதைக் குறித்த தன்னுடைய மகிழ்ச்சியைத் தெரிவித்த பிறகு, யோவான் ஸ்நானன் கிறிஸ்துவின் மேன்மையையும் அவருடைய ஒப்பற்ற செய்தி யையும் சொல்லுகிறார்.

யோவான் 3:31
31 உன்னதத்திலிருந்து வருகிறவர் எல்லாரிலும் மேலானவர்; பூமியிலிருந்துண்டானவன் பூமியின் தன்மையுள்ளவனாயிருந்து, பூமிக்கடுத்தவைகளைப் பேசுகிறான்; பரலோகத்திலிருந்து வருகிறவர் எல்லாரிலும் மேலானவர்.

மனிதர்கள் உலகத்திற்குரியவர்களாகவும் மறுபடியும் பிறக்க வேண்டியவர்களாகவும் இருக்கிறார்கள். இயேசு மட்டுமே பரலோகத்திற்குரியவராகவும் நம்மைத் தன்னிடத்தில் இழுத்துக் கொள்ளவும் நம்மை இரட்சிக்கவும் மனிதனாக வந்தவராகவும் இருக்கிறார். பூமிக்கு வானம் எவ்வளவு உயர்ந்திருக்கிறதோ அவ்வளவாக இயேசு இந்த உலகத்திலுள்ள எல்லா தீர்க்கதரிசி களையும், தத்துவ ஞானிகளையும், தலைவர்களையும்விட உயர்ந்திருக்கிறார். மனிதனுடைய கண்டுபிடிப்புகள் எல்லாம் ஆச்சரியப்படத்தக்கவைகளாக இருந்த போதிலும் அவை இறைவன் படைத்த பொருட்களிலிருந்துதான் வருகின்றன. குமாரனே வாழ்வாகவும் ஒளியாகவும் நம்முடைய வாழ்விற்கே காரணமானவராகவும் இருக்கிறார். மற்ற எந்தக் காரியத்தையும் நாம் இறைவனுடன் ஒப்பிட முடியாது. காலங்களுக்கு முன்பா கவே குமாரன் பிதாவின் ஒரே பேறானவராயிருக்கிறார். அனைத்து படைப்புகளையும் விஞ்சிய நிலையில் அவர் பரிபூரண முள்ளவராயிருக்கிறார்.

யோவான் 3:32-35
32 தாம் கண்டதையும் கேட்டதையும் சாட்சியாகச் சொல்லுகிறார்; அவருடைய சாட்சியை ஒருவனும் ஏற்றுக்கொள்ளுகிறதில்லை. 33 அவருடைய சாட்சியை ஏற்றுக்கொள்ளுகிறவன் தேவன் சத்தியமுள்ளவரென்று முத்திரைபோட்டு நிச்சயப்படுத்துகிறான். 34 தேவனால் அனுப்பப்பட்டவர் தேவனுடைய வார்த்தைகளைப் பேசுகிறார்; தேவன் அவருக்குத் தமது ஆவியை அளவில்லாமல் கொடுத்திருக்கிறார். 35 பிதாவானவர் குமாரனில் அன்பாயிருந்து எல்லாவற்றையும் அவர் கையில் ஒப்புக்கொடுத்திருக்கிறார்.
'

மனிதனாகிய இயேசு பரலோக சத்தியத்திற்கு கண்கண்ட சாட்சியாயிருக்கிறார். அவர் பிதாவைப் பார்த்து அவருடைய வார்த்தைகளைக் கேட்டவர். அவருடைய சிந்தனைகளையும் திட்டங்களையும் அறிந்தவர். அவர் பிதாவினுடைய மடியிலிருந்து பிறப்பட்டு வரும் இறைவனுடைய வார்த்தை. அவருடைய வெளிப்பாடு பரிபூரணமானது. தீர்க்கதரிசிகள் மூலமாக வந்த வெளிப்பாடு முழுமையானது அல்ல. இயேசு இறைவனுடைய சித்தத்தை இறுதியாகவும் முழுமையாகவும் வெளிப்படுத்துகிறார். அவர் பிதாவை மகிமைப்படுத்தி தன்னை அவருடைய குமாரன் என்று சாட்சிகொடுத்த காரணத்தினால், இரத்தசாட்சியாக மரித்த உண்மையுள்ள சாட்சியாக இருக்கிறார். அவருடைய சாட்சியை இன்றும் பலர் புறக்கணிப்பது கவலைக்குரியது. தங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை விரும்பாதவர்கள் தங்களுக்கு அருகில் இருக்கும் கடவுளையும் விரும்புவதில்லை. அவர்கள் குமாரத்துவத்தையும் இறைவனுடைய தகப்பன் தன்மையையும் மறுதலிக்கிறார்கள்.

இவ்வாறு எல்லாருமே இறைவனையும் அவருடைய ஆவியையும் வெறுப்பதில்லை. அதற்காக அவருக்கு துதியுண்டாவதாக. பிதாவில் குமாரனைப் பார்ப்பவர்களும் அவருடைய பரிபூரண பலியை ஏற்றுக்கொள்பவர்களுமாகிய ஒரு கூட்டம் இருக்கிறது. அவருடைய வெளிப்பாட்டையும் மீட்பையும் நம்புகிறவர்கள் இறைவனைக் கனப்படுத்துகிறார்கள். இறைவன் பொய் சொல்ல முடியாது; குமாரன் சத்தியமாக இருக்கிறார். பிதா தன்னுடைய சிந்தனையின் வடிவங்களை ஒரு கொள்கை வடிவிலோ புத்தகத்திலோ வெளிப்படுத்தாமல், இயேசு என்னும் நபரில் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அவருடைய வார்த்தையின் ஆவிக்கு யார் திறந்துகொடுக்கிறார்களோ அவர்கள் புதுப் பிக்கப்படுகிறார்கள். நீங்கள் சத்தியத்தைப் பேசும்படியாக மட்டுமல்ல, அதன்படி வாழவும் அவ்வாறு செய்யவும் கிறிஸ்து நம்மை அழைக்கிறார். அப்படியானால் அவருடைய நற்செய்தி உங்களில் உள்ளடங்கியுள்ளது.

இயேசு கற்பனையாக அல்லது உறுதியற்ற அல்லது அவருடைய மனம்போன போக்கில் பேசவில்லை. அவருடைய வார்த்தைகள் படைப்பாற்றல் உள்ளவைகளும், வல்லமையுள்ளவைகளும் அதேவேளையில் தெளிவானவைகளுமாயிருக்கின்றன. இறைவனே தன்னுடைய குமாரனில் பேசியுள்ளார். அவரில் இருக்கும் பரிசுத்த ஆவியானவர் அவளவற்றவர். முழுமையான ஞானத்தை யும் அதிகாரத்தையும் பிதா குமாரனக்குக் கொடுத்துள்ளார்.

"பிதா குமாரனை நேசித்து எல்லாவற்றையும் அவரிடத்தில் ஒப்படைத்துள்ளார். இறைவனுடைய அன்பு ஒரு கொடையாகும், குமாரன் தன்னுடைய பிதாவைக் கனம்பண்ணுகிறார். பிதாவா அல்லது குமாரனா யார் பெரியவர் என்பதல்ல கேள்வி. அப்படிப்பட்ட கேள்விகள் சாத்தானிடமிருந்து வருகிறது. பரிசுத்த திரித்துவத்தின் ஒவ்வொரு நபரும் ஒருவரையொருவர் கனப்படுத்துகிறார்கள். இந்தக் கொள்கையை மறுதலிக்கிறவன் கர்த்தரை மறுதலிக்கிறான். குமாரனுடைய தாழ்மையையும், கீழ்ப்படிதலையும், முழுவதுமான ஒப்புக்கொடுத்தலையும் இறைவன் அறிந்திருப்பதால் குமாரனுடைய சர்வாதிகாரத்தைக் குறித்து பிதா பயப்படுவதில்லை. இயேசு சொன்னதுபோல, பரலோகத்திலும் பூலோகத்திலும் எனக்கு எல்லா அதிகாரமும் கொடுக்கப்பட்டுள்ளபடியால் அவர் எல்லாவற்றையும் ஆளுகிறார்.

யோவான் 3:36
”36 குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நித்திய ஜீவனை உடையவனாயிருக்கிறான்; குமாரனை விசுவாசியாதவனோ ஜீவனைக் காண்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும் என்றான்.

நற்செய்தியாளனாகிய யோவான் இரட்சிக்கப்படுவதற்கான சூத்திரத்தை நமக்குக் கற்பிக்கிறார்: குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நித்திய ஜீவனை உடையவ னாயிருக்கிறான். இந்தச் சிறிய வாக்கியத்தில் நற்செய்தியின் முழுமையும் அடங்கியுள்ளது. பிதாவிலும் குமாரனிலும் உதா ரத்துவமாக வெளிப்படுத்தப்பட்டுள்ள இந்த அன்பின் ஐக்கியத்திற்கு யாரெல்லாம் நெருங்கி வருகிறார்களோ அவர்கள் சிலுவை யில் வெளிப்பட்ட இறைவனுடைய அன்பை நெருங்கி வருகி றார்கள். நம்முடைய பாவங்களை ஆட்டுக்குட்டியானவர் நீக்கி விட்டார் என்பதை அறிந்து அவரைச் சார்ந்திருக்கிறார்கள். கிறிஸ்துவோடு இருக்கும் இந்த உறவில் நித்திய அன்பின் இரக்கத்தை நாம் அனுபவிக்கின்றோம். சிலுவையில் அறையப் பட்ட குமாரனில் வைக்கும் இந்த விசுவாசம் நம்மை அவருடைய மெய்யான வாழ்வுக்கு மாற்றுகிறது. நித்திய வாழ்வு என்பது மரணத்திற்குப் பிறகு ஆரம்பிக்கிற ஒன்றல்ல, அது இப்போதே ஆரம்பிக்கிறது. குமாரனை விசுவாசிப்பவர்கள் மீது பரிசுத்த ஆவியானவர் வருகிறார். கிறிஸ்துவின் வார்த்தைகளைப் புறக்கணித்து, அவருடைய குமாரத்துவத்தையும் சிலுவையையும் மறுதலிப்பவர்கள் பரிசுத்தஆவியைத் துக்கப்படுத்துகிறார்கள். அப்படிப்பட்டவனுக்கு மன அமைதி எங்கும் கிடைக்காது. இயேசுவுக்கு ஒப்புக்கொடுக்காதவன் இறைவனையே எதிர்க்கிறான், அதனால் ஆவிக்குரிய மரணத்தில் நிலைத்திருக்கிறான். குமாரனையும் அவருடைய சிலுவையின் உபதேசத்தையும் மறுதலிக்கும் எந்த மதமும் இறைவனுடைய சத்தியத்தை தாக்குகிறது. அவருடைய அன்பைப் புறக்கணிப்பவர்கள், அவருடைய கோபத்தைத் தெரிவு செய்கிறார்கள்.

பவுலும் யோவானுடைய நிலைப்பாட்டை உறுதிசெய்கிறார்: எல்லாவிதமான அநியாயத்திற்கும் அவபக்திக்கும் விரோதமாக இறைவனுடைய கோபம் வெளிப்பட்டிருக்கிறது. எல்லாரும் தங்களுடைய அக்கிரமங்களினாலே பாவம் செய்து சத்தியத்தை எதிர்த்திருக்கிறார்கள். பேரழிவை ஏற்படுத்துகிற இறைவனுடைய கோபம் மனிதனுடைய தலையின் மேல் ஊற்றப்படுகிறது என்பதை நினைத்துக்கொள்ளுங்கள்.

வனாந்தரத்தில் உயர்த்தப்பட்ட சர்ப்பத்தைப்போல சிலுவையில் உயர்த்தப்பட்டவர் இறைவனுடைய கோபத்திலிருந்து நம்மைத் தப்புவிக்கும் அடையாளமானார். குமாரன் கிருபையின் காலத் தைத் திறந்து வைத்தார். சிலுவையிலிருந்து வரும் அவருடைய கிருபையைப் போக்கடிக்கிறவர்கள் தங்களுடைய நியாயத் தீர்ப்பில் நிலைத்திருக்கிறார்கள். சாத்தான் அவர்களில் ஆளுகை செய்கிறான். கிறிஸ்துவில்லாத மக்கள் பரிதாபத்திற்குரியவர்கள். மற்ற மக்களும் குமாரனை விசுவாசித்து இரட்சிக்கப்பட வேண்டும் என்ற நீங்கள் எப்போது விண்ணப்பம் செய்ய தொடங்குவீர்கள்? உங்களுடைய சாட்சியின் மூலமாக இறைவ னுடைய வாழ்வைப் பெறும்படி நீங்கள் எப்போது அவர்களுடன் பொறுமையாகப் பேசத் தொடங்குவீர்கள்?

விண்ணப்பம்: கர்த்தராகிய இயேசுவே, உம்முடைய அன்புக்காகவும் சத்தியத்திற்காகவும் நாங்கள் உம்மைத் துதிக்கிறோம். நாங்கள் உம்மை ஆராதிக்கிறோம். விசுவாசத்தில் உறுதியானதும், பிதாவைக் கனப்படுத்துவதுமான, கீழ்ப்படிதலுள்ள இருதயத்தை எங்களுக்குத் தாரும். நீரும் பிதாவும் ஒன்றாயிருக்கிறீர்கள் என்று நாங்கள் நம்பிக்கையோடு சொல்லுகிறோம். அறியாமல் உம்மைப் புறக்கணிப்பவர்கள் மீது இரக்கம் காட்டும். உம்முடைய வார்த்தையின் சாட்சியை அவர்களுக்குக் கொடும். நீர் யாரிடம் எங்களை அனுப்புகிறீர் என்பதை நாங்கள் கண்டுபிடிக்கவும், உம்மையும் நீர் எங்களுக்காகச் செய்தவற்றையும் நாங்கள் அவர்களிடம் சொல்லவும் எங்களுக்கு உதவிசெய்யும்.

கேள்வி:

  1. நாம் எவ்வாறு நித்திய வாழ்வைப் பெற்றுக்கொள்கிறோம்?

www.Waters-of-Life.net

Page last modified on July 31, 2012, at 10:19 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)