Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Romans - 058 (The Holy Remnant Exists)
This page in: -- Afrikaans -- Arabic -- Armenian -- Azeri -- Bengali -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- French -- Georgian -- Greek -- Hausa -- Hebrew -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Malayalam -- Polish -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Turkish -- Urdu? -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

ரோமர் - கர்த்தரே நம்முடைய நீதி
ரோமருக்கு பவுல் எழுதின நிரூபத்திலிருந்து வேதபாடங்கள்
பகுதி 2 - இறைவனால் தெரிந்துகொள்ளப்பட்ட, யாக்கோபின் புத்திரர் கடினப்பட்டுபோன பின்பும் இறைவனின் நீதி நிலையானதாக இருக்கிறது (ரோமர் 9:1-11:36)
5. யாக்கோபின் பிள்ளைகளுக்கு இருக்கும் நம்பிக்கை (ரோமர் 11:1-36)

அ) பரிசுத்த மீதமுள்ள ஜனம் நிலைத்திருக்கும் (ரோமர் 11:1-10)


ரோமர் 11:1-10
1 இப்படியிருக்க, தேவன் தம்முடைய ஜனங்களைத் தள்ளிவிட்டாரோ என்று கேட்கிறேன், தள்ளிவிடவில்லையே; நானும் ஆபிரகாமின் சந்ததியிலும் பென்யமீன் கோத்திரத்திலும் பிறந்த இஸ்ரவேலன். 2 தேவன் தாம் முன்னறிந்துகொண்ட தம்முடைய ஜனங்களைத் தள்ளிவிடவில்லை. எலியாவைக்குறித்துச் சொல்லிய இடத்தில், வேதம் சொல்லுகிறதை அறியீர்களா? அவன் தேவனை நோக்கி: 3 கர்த்தாவே, உம்முடைய தீர்க்கதரிசிகளை அவர்கள் கொலைசெய்து, உம்முடைய பலிபீடங்களை இடித்துப்போட்டார்கள்; நான் ஒருவன்மாத்திரம் மீதியாயிருக்கிறேன், என் பிராணனையும் வாங்கத்தேடுகிறார்களே என்று இஸ்ரவேலருக்கு விரோதமாய் விண்ணப்பம்பண்ணினபோது, 4 அவனுக்கு உண்டான தேவஉத்தரவு என்ன? பாகாலுக்குமுன்பாக முழங்காற்படியிடாத ஏழாயிரம்பேரை எனக்காக மீதியாக வைத்தேன் என்பதே. 5 அப்படிப்போல இக்காலத்திலேயும் கிருபையினாலே உண்டாகும் தெரிந்துகொள்ளுதலின்படி ஒரு பங்கு மீதியாயிருக்கிறது. 6 அது கிருபையினாலே உண்டாயிருந்தால் கிரியைகளினாலே உண்டாயிராது; அப்படியல்லவென்றால், கிருபையானது கிருபையல்லவே. அன்றியும் அது கிரியைகளினாலே உண்டாயிருந்தால் அது கிருபையாயிராது; அப்படியல்லவென்றால், கிரியையானது கிரியையல்லவே. 7 அப்படியானால் என்ன? இஸ்ரவேலர் தேடுகிறதை அடையாமலிருக்கிறார்கள்; தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ அதை அடைந்திருக்கிறார்கள்; மற்றவர்கள் இன்றையத்தினம்வரைக்கும் கடினப் பட்டிருக்கிறார்கள். 8 கனநித்திரையின் ஆவியையும், காணாதிருக்கிற கண்களையும், கேளாதிருக்கிற காதுகளையும், தேவன் அவர்களுக்குக் கொடுத்தார் என்று எழுதியிருக்கிறபடியாயிற்று. 9 அன்றியும், அவர்களுடைய பந்தி அவர்களுக்குச் சுருக்கும் கண்ணியும் இடறுதற்கான கல்லும் பதிலுக்குப் பதிலளித்தலுமாகக்கடவது; 10 காணாத படிக்கு அவர்களுடைய கண்கள் அந்தகாரப்படக்கடவது; அவர்களுடைய முதுகை எப்போதும் குனியப்பண்ணும் என்று தாவீதும் சொல்லியிருக்கிறான்.

அப்போஸ்தலனாகிய பவுல் ஆபிரகாமின் பிள்ளைகளுடைய இரட்சிப்பு மற்றும் அழிவைக் குறித்து விளக்க ஆயத்தமாகிறான். அவன் பயம் நிறைந்த ஒரு கேள்வியை எழுப்புகிறான். “உடன்படிக்கையின் ஆண்டவர் தன்னுடைய கடினப்பட்ட மக்களை என்றென்றும் தள்ளிவிடுவாரோ?” (சங்கீதம் 94:14).

பவுல் இந்த கேள்விக்கு “இல்லை” என்று பதிலளிக்கிறார். அது இயலாத காரியம். ஏனெனில் ஆண்டவரின் இரட்சிக்கும் கிருபைக்கு நான் ஒரு ஆதாரம். அவர் பாவம் நிறைந்த குற்றவாளியான என்னை இரட்சித்துள்ளார். மாம்சத்தின் படி நான் பென்யமீன் கோத்திரத்தான். ஆபிரகாமின் சந்ததியான். ஆண்டவர் என்னை அழைத்தார், என்னை மன்னித்தார், எனக்கு வாழ்வு கொடுத்தார். யாக்கோபின் பிள்ளைகளை இரட்சிக்கும் கிருபை நிறைந்த ஆண்டவருக்கு நான் ஒரு ஆதாரமாக இருக்கிறேன் என்றான்.

நான் கிறிஸ்துவில் வாழ்வது போல அவர் என்னிலும் வாழ்கிறார். அவர் யாக்கோபின் பிள்ளைகளில் அனைத்து கோத்திரத்தாரையும் தனிப்பட்டவிதத்தில் அழைக்கிறார். அவர்களை இரட்சிக்கிறார், ஆசீர்வதிக்கிறார், அனுப்புகிறார். உண்மையான கிறிஸ்தவத்தில் ஆண்டவர் வெளிப்படுகிறார். கிறிஸ்துவில் மறுபிறப்படைந்த யூதக்கிறிஸ்தவர்கள் இல்லையென்றால், நாம் கிறிஸ்துவின் நற்செய்தி நூல்கள் எழுதப்பட்டிருப்பதை பார்த்திருக்க முடியாது. அவர்களே இறை அரசில் தூண்களாக இருக்கிறார்கள். அவர்கள் தேசங்களின் நடுவே இறைவனின் விதைகளை விதைக்கிறார்கள். அறுவடை மிகுதியானது. இறையரசின் ஆண்டவர் வருகிறார். அது சத்தமின்றி தொடர்ந்து வளர்கின்றது.

இறைவனுக்கு தெரிந்தெடுக்கப்பட்ட மக்கள் உண்டு. அவருடைய ஆவிக்குரிய அரசிற்கு அவர் தமது சொந்த வழிகளைப் பெற்றிருக்கிறார். அவர் தமக்கு பிரியமானவர்களை புறம் தள்ளுவதில்லை. இன்றும் யாக்கோபின் பிள்ளைகளில் அநேகர் கிறிஸ்துவை வெறுக்கிறார்கள், புறம் தள்ளுகிறார்கள். அவர்கள் மற்ற தெய்வங்களை பின்பற்றுகிறார்கள். எலியா தீர்க்கதரிசியின் காலத்தின் நிலைமை எப்படி இருந்தது? இந்த தைரியமுள்ள தீர்க்கதரிசி பெருமூச்சுவிட்டான். ஏனெனில் வட ராஜ்யத்தில் விசுவாசிகளுக்கு உபத்திரவம் நேரிட்டது. அவனுக்கும் மரணம் என்று ராணியால் அறிவிக்கப்பட்டது ( 1 ராஜாக்கள் 19:10-14).

அப்போது ஆண்டவர் ஆறுதலின் வார்த்தைகளால் பதிலளித்தார். “ஆனாலும் பாகாலுக்கு முடங்காதிருக்கிற முழங்கால்களையும், அவனை முத்தஞ்செய்யாதிருக்கிற வாய்களையுமுடைய ஏழாயிரம்பேரை இஸ்ரவேலிலே மீதியாக வைத்திருக்கிறேன் என்றார். ” ( 1ராஜாக்கள் 19:18) யார் உறுதியான விசுவாசிகள் என்று எவருக்கும் தெரியாது. அவர்கள் பரிசுத்த மீதமுள்ள ஜனங்கள். அவர்கள் சமாரியா அழிக்கப்பட்ட போது, உலகின் எல்லா பகுதிகளிலும் சென்று தங்களது விசுவாசத்தை பிரகடனப் படுத்தினார்கள். இறைவன் தமது விசுவாசிகளை பாதுகாக்கிறார். அவருடைய கரத்தில் இருந்து யாரும் அவர்களை பறிக்க இயலாது. அவர்களுக்கு ஆடம்பர வாழ்வை அவர் வாக்குப்பண்ணவில்லை. அவனது சாட்சியை நிலைத்திருக்கும் ஆவிக்குரிய வாழ்விற்கு நிச்சயமாக்குகிறார் (யோவான் 10:29,30).

இந்த விவாதத்தின் போது பவுல் தனது கேள்வியை முன்வைக்கிறான். “அப்படிப்போல இக்காலத்திலேயும் கிருபையினாலே உண்டாகும் தெரிந்துகொள்ளுதலின்படி ஒரு பங்கு மீதியாயிருக்கிறது” (ரோமர் 11:5).

கிறிஸ்து பிறப்பு முதல் இந்த வாக்கியம் உண்மையாய் இருக்கிறது. உண்மையுள்ள கிறிஸ்தவர்களின் சின்னம் என்பது வல்லமை, ஐசுவரியம் மற்றும் கனம் என்பவைகள் அல்ல. அது பாடுகளின் மத்தியிலும் இயேசுவைப் பின்பற்றுவதாகும். இதை கருத்தில் கொண்டு தன்னைப் பின்பற்றும் சிறு கூட்டத்தாரிடம் இயேசு கூறினார். “பயப்படாதே சிறுமந்தையே, உங்களுக்கு ராஜ்யத்தைக் கொடுக்க உங்கள் பிதா பிரியமாயிருக்கிறார்” (லூக்கா 12:32; 22:28,29).

ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு தெரிந்தெடுப்பை எல்லாக் காலங்களிலும் தனது தெரிந்தெடுக்கப்பட்ட பரிசுத்தவான்களிடம் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் அதிகாரம் உருவாக்குகின்றது. முதல் அருட்பணியின் போது அழைக்கப்பட்ட பவுல் மற்றும் பர்னபா கூறினார்கள். “சீஷருடைய மனதைத் திடப்படுத்தி, விசுவாசத்திலே நிலைத்திருக்கும்படி அவர்களுக்குப் புத்திசொல்லி, நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய்த் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கவேண்டுமென்று சொன்னார்கள்” (அப்போஸ்தலர் 14:22).

அப்போஸ்தலனாகிய பவுல் இதை அறிந்தவனாக யாக்கோபின் பிள்ளைகளில் மீதியானோர் கிருபையின் நிமித்தம் அழிய மாட்டார்கள், நிலைத்திருப்பார்கள். (ரோமர் 11:6) சாத்தானின் சோதனைகளில் இருந்து ஆண்டவர் அதை காக்கின்றார். நல்ல மேய்ப்பனாக இருந்து வழிநடத்துகிறார். தனது சொந்தக் கிரியைகளினால் இந்த மீதியானோர் நீதியுள்ளோர் மற்றும் இரக்கமுள்ளவராக மாறவில்லை. அது பெற்றிருக்கும் அனைத்து நன்மைகளுக்கும் காரணம் கிருபை மட்டுமே. ஆகவே உலகளாவிய மற்றும் அசாதாரண கிறிஸ்துவின் கிருபை நிறை வல்லமையை நாம் விசுவாசிக்க வேண்டும். அதுவே இஸ்ரவேல் மக்களின் பரிசுத்த மீதியானோரைக் காக்கின்றது. நாம் அதற்காக ஆண்டவருக்கு நன்றி செலுத்த வேண்டும். நம்முடைய கிறிஸ்தவம் என்பதின் இரகசியம் அதனுடைய தொடர்ச்சி ஆகும்.

ரோமர் 11:7-ல் பவுல் கேட்கின்றான். யாக்கோபின் பிள்ளைகளுடைய அன்றைய ஆவிக்குரிய நிலை என்ன? இன்றைய நிலை என்ன? நியாயப்பிரமாணத்தை கடைப்பிடிப்பது குறித்து அவர்கள் என்ன கூறினார்கள். அவர்களது பக்தியின் இலக்கு என்ன? அவர்கள் அதை அடையவில்லையே. அவர்கள் தங்களது இலக்கை இழந்தார்கள். தங்களது ராஜாவை சிலுவையில் அறைந்தார்கள். பரிசுத்த ஆவிக்கு எதிராக கடினப்பட்டார்கள். பரிசுத்த திரியேகரின் ஐக்கியத்தில் இருந்து மனப்பூர்வமாக விலகிப் போனார்கள். அவர்களை நாசமாக்கிய மற்ற தேசங்களின் ராஜாக்கள் மற்றும் தலைவர்களை சேவித்தார்கள். மற்ற மக்களை ஆளும்படியாக அவர்கள் அந்திக் கிறிஸ்துவை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இந்த வலிநிறைந்த உண்மை யாக்கோபின் அனைத்து பிள்ளைகளையும் உள்ளடக்கவில்லை. ஆபிரகாமின் பிள்ளைகளில் சிறுபகுதியினர் பரிசுத்த ஆவியினால் மறுபடியும் பிறந்தவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் பாவங்களை உணர்ந்து, அவைகளை வெளிப்படையாக அறிக்கையிட்டு, இறைவனின் தாழ்மையுள்ள ஆட்டுக்குட்டியை விசுவாசிக்கிறார்கள். அவருடைய மன்னிப்பை பெறுகிறார்கள். வாக்குப்பண்ணப்பட்ட ஆவியினால் அபிஷேகம் பண்ணப்படுகிறார்கள். அவர்கள் கிறிஸ்துவின் ஜீவனில் வாழுகிறார்கள். அவருடைய ஆவிக்குரிய சரீரத்தின் இயங்கக்கூடிய அவயவங்களாக மாறுகிறார்கள்.

எப்படியிருப்பினும், அவர்களுடைய தேசத்தின் பெரும்பான்மை மக்கள் கடினப்பட்டார்கள். (உபாகமம் 29:4, ஏசாயா 29:10). நன்மை, தீமையை அறிந்து உணர முடியாத ஆவியை அவர்கள் பெற்றார்கள். அவர்களுக்கு நன்மை, தீமையைக் குறித்த எந்தவித உணர்வும் இல்லை. அவர்கள் விரும்பியதை செய்தார்கள். இறைவன் மற்றும் இறுதி நியாயத்தீர்ப்பைக் குறித்து கவலையற்றிருந்தார்கள். ஏனெனில் அவர்கள் பார்க்கும் போது காணவில்லை, அவர்கள் கேட்கும் போது செவிமடுக்கவில்லை. தாவீது அரசன் அவர்களில் பெரும்பான்மையானோரை தண்டிக்கும்படி இறைவனிடம் விண்ணப்பித்தான். அவர்களுடைய திட்டங்கள் அவர்களுக்கு கண்ணியும், வலையுமாக இருக்கக் கடவது என்றான் (சங்கீதம் 69:23,24).

இருப்பினும் இயேசு தாவீதின் கடினமான வார்த்தைகளை மாற்றினார். தன்னைப் பின்பற்றுபவர்களுக்கு இவ்விதம் கட்டளையிட்டார். “நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள். இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவுக்குப் புத்திரராயிருப்பீர்கள்; அவர் தீயோர்மேலும் நல்லோர்மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள்மேலும் அநீதியுள்ளவர்கள்மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார்” (மத்தேயு 5:44,45).

தெரிந்தெடுக்கப்பட்ட மக்களின் பரிசுத்தமுள்ள மீதியானோர் மற்றும் உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்கள் பாடுகள், அழுத்தங்கள், பொய்யான குற்றச்சாட்டுகள் மத்தியில் கிறிஸ்துவின் கட்டளைகளை நிறைவேற்றி தங்களது முக்கியத்துவத்தை நிரூபிக்கிறார்கள்.

விண்ணப்பம்: பரிசுத்த பிதாவே, நாங்கள் உம்மை ஆராதிக்கிறோம். உம்முடைய பரிசுத்த ஆவியினால் ஆபிரகாமின் பிள்ளைகளின் இருதயங்களை நீர் திறக்கிறீர். இயேசுவின் இரத்தத்தினால் அவர்களை தூய்மையாக்குகிறீர். நித்திய வாழ்வை அவர்கள் பெறுகிறார்கள். புதிய விசுவாசிகளை நீர் பெலப்படுத்தும். உமது பிரசன்னத்தை அவர்கள் கொடிய உபத்திரவங்கள் மத்தியிலும் அனுபவிக்கச் செய்யும். விசுவாசப் பங்காளர்களிடம் இருந்து உதவி கிடைக்கச் செய்யும். அவர்கள் பிரிந்திராதபடி காத்துக்கொள்ளும்.

கேள்விகள்:

  1. பாகாலுக்கு தங்கள் முழுங்கால் முடங்காத ஏழாயிரம் பேரை நான் மீதமாக வைத்திருக்கிறேன் என்று இறைவன் எலியாவிற்கு உரைத்த வார்த்தைகளின் பொருள் என்ன?
  2. தானும், கிறிஸ்துவைப் பின்பற்றும் யூதர்கள் அனைவரும் இறைவனால் தெரிந்தெடுக்கப்பட்ட பரிசுத்தமுள்ள மீதியானோரைச் சேர்ந்தவர்கள் என்று கூறும் பவுலின் வார்த்தைகளுடைய பொருள் என்ன?

www.Waters-of-Life.net

Page last modified on August 10, 2021, at 11:28 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)