Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Romans - 059 (Would that the Salvation in the Believers of the Gentiles incite Jealousy in the Children of Jacob)
This page in: -- Afrikaans -- Arabic -- Armenian -- Azeri -- Bengali -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- French -- Georgian -- Greek -- Hausa -- Hebrew -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Malayalam -- Polish -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Turkish -- Urdu? -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

ரோமர் - கர்த்தரே நம்முடைய நீதி
ரோமருக்கு பவுல் எழுதின நிரூபத்திலிருந்து வேதபாடங்கள்
பகுதி 2 - இறைவனால் தெரிந்துகொள்ளப்பட்ட, யாக்கோபின் புத்திரர் கடினப்பட்டுபோன பின்பும் இறைவனின் நீதி நிலையானதாக இருக்கிறது (ரோமர் 9:1-11:36)
5. யாக்கோபின் பிள்ளைகளுக்கு இருக்கும் நம்பிக்கை (ரோமர் 11:1-36)

ஆ) விசுவாசிகளில் உள்ள இரட்சிப்பு யாக்கோபின் பிள்ளைகளிடம் பொறாமையை கொண்டு வருகிறதா? (ரோமர் 11: 11-15)


ரோமர் 11:11-15
11 இப்படியிருக்க, விழுந்துபோகும்படிக்கா இடறினார்கள் என்று கேட்கிறேன், அப்படியல்லவே; அவர்களுக்குள்ளே வைராக்கியத்தை எழுப்பத்தக்கதாக அவர்களுடைய தவறுதலினாலே புறஜாதிகளுக்கு இரட்சிப்பு கிடைத்தது. 12 அவர்களுடைய தவறு உலகத்திற்கு ஐசுவரியமும், அவர்களுடைய குறைவு புறஜாதிகளுக்கு ஐசுவரியமுமாயிருக்க, அவர்களுடைய நிறைவு எவ்வளவு அதிகமாய் அப்படியிருக்கும். 13 புறஜாதியாராகிய உங்களுடனே பேசுகிறேன்; புறஜாதிகளுக்கு நான் அப்போஸ்தலனா யிருக்கிறதினாலே என் இனத்தாருக்குள்ளே நான் வைராக்கியத்தை எழுப்பி, அவர்களில் சிலரை இரட்சிக்க வேண்டுமென்று, 14 என் ஊழியத்தை மேன்மைப்படுத்துகிறேன். 15 அவர்களைத் தள்ளிவிடுதல் உலகத்தை ஒப்புரவாக்குதலாயிருக்க, அவர்களை அங்கிகரித்துக்கொள்ளுதல் என்னமாயிராது; மரித்தோரிலிருந்து ஜீவன் உண்டானது போலிருக்குமல்லவோ?

பவுல் தனது இரத்த சம்பந்தமான சகோதர, சகோதரிகளை நேசித்தது போல, தனது தேசத்தையும் நேசித்தான். அவர்களுடைய கீழ்ப்படியாமை, அவர்கள் இயேசுவை வெறுத்துத் தள்ளியது இவைகளினால் மட்டும் இறைவன் அவர்களை தண்டிப்பார் என்று அவன் எண்ணவில்லை. பழைய உடன்படிக்கையின் மக்கள் புறம்தள்ளப்பட்டாலும், சுத்தமற்ற தேசங்களில் இருந்து புதிய தெரிந்தெடுப்பு ஏற்படுவதை அவன் உணர்ந்தான். யூதர்களின் வீழ்ச்சி அவிசுவாசிகளான புறவினத்தாருக்கு இரட்சிப்பை பெறத்தக்க ஓர் ஒப்பற்ற சந்தர்ப்பத்தை வழங்கியது. முன்னதாகவே ஆயத்தம் பண்ணப்பட்ட இந்த இரட்சிப்பை கிறிஸ்துவில் தங்கள் விசுவாசத்தை வைப்பதின் மூலம் பெறுகிறார்கள்.

புறவினத்தார் மத்தியில் இரட்சிப்பின் செய்தி பரவியது யாக்கோபின் பிள்ளைகளுக்கு பொறாமையை ஏற்படுத்தியது. யூதர்களின் இருதயங்களில் எரிந்து கொண்டிருந்த இந்த வைராக்கியத்தின் மத்தியில் பவுல் ஒரு அனுகூலமான காரியத்தைக் கண்டான். அவர்கள் கிறிஸ்துவின் பிரசன்னத்தில் தங்களுடைய அசுத்தமான நிலையை உணரவேண்டும், இறைவனுடன் ஒப்புரவாகுதலைப் பெறவேண்டும், பரிசுத்த ஆவியின் மகிழ்ச்சியினால் நிறைந்திருக்க வேண்டும். தங்களை எதிரிகளை நேசிக்க வேண்டும் என்று பவுல் கூறினான். தள்ளப்பட்டவர்கள் தங்களிடம் இருந்து அல்ல, இறைவனிடம் இருந்து நேரடியாக சுதந்தரத்தை பெறுகிறார்கள் என்பதை அப்போது ஆபிரகாமின் பிள்ளைகள் உணர்ந்து கொள்வார்கள். கலகம்பண்ணுகின்ற, சுயதிருப்தியுள்ள யூதர்கள், மறுபடியும் பிறந்த மக்கள் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்பவர்களிடம் தங்கியிருந்த ஆசீர்வாதத்தை அனுபவிப்பதை உணர்ந்து கொள்வார்கள் என்று பவுல் நம்பினான். தன்னுடைய மக்கள் தங்களின் மனதை மாற்றிக் கொள்வார்கள் என்று பவுல் நம்பினான். தங்களது சொந்த சுதந்தரத்தில் அவர்களும் பங்கு கொள்வார்கள் என்று கூறினான். இதைத் தான் கிறிஸ்து தனது சீடர்களிடம் கூறினார். “நீங்கள் உலகத்துக்கு ஒளியாய் இருக்கிறீர்கள். நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்; மலையின்மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்க மாட்டாது. விளக்கைக் கொளுத்தி மரக்காலால் மூடிவைக்காமல், விளக்குத் தண்டின்மேல் வைப்பார்கள்; அப்பொழுது அது வீட்டிலுள்ள யாவருக்கும் வெளிச்சம் கொடுக்கும். இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது (மத்தேயு 5:14-16).

பவுல் யூதர்களுக்கான தனது பிரசங்கத்தை முடிக்கின்றபோது இவ்விதம் கூறினான். யூதர்களின் இருதயக்கடினம் தள்ளப்பட்டவர்களின் ஆசீர்வாதத்திற்கான ஊற்றாக இருக்குமென்றால், அவர்களது உண்மைநிலை எவ்வளவு பெரிய ஆசீர்வாதத்தைக் கொண்டு வரும் என்று கூறினான். எல்லா யூதர்களும் கிறிஸ்துவில் விசுவாசம் வைக்கும் போது விசுவாசத்தின் வல்லமை இந்த உலகில் பிரசங்கிக்கும் சக்தியை உருவாக்கும். அது வனாந்தரமான நம்முடைய உலகில் ஜீவனுள்ள ஊற்றுகளை உருவாக்கும். பாவ அலைகளின் மத்தியில் அவர்களை வாழும் பரலோகங்களாக மாற்றும்.

இப்படிக் கூறுவதன் மூலம், யாக்கோபின் பிள்ளைகளை கிறிஸ்தவர்கள் நேசிக்கவும், மன்னிக்கவும் வேண்டும் என்றான். அவர்களது பெருமை நிறைந்த இருதயங்களை தாழ்மை மற்றும் சாந்தத்தினால் மேற்கொள்ள வேண்டும் (மத்தேயு 11:28-30).

பிற்பாடு பவுல் ரோம சபையின் புறவினத்து விசுவாசிகளிடம் திரும்பி அவர்களை அசைக்கின்றான். அவன் யூதர்களை ஆவிக்குரிய உண்மையினால் எதிர்கொண்டு, முதலாவது அவர்களிடம் கூறினான். இயேசு யூதர்கள் மத்தியில் பிரசங்கிக்கும்படி என்னை அனுப்பவில்லை. அவர் புறவினத்தாருக்கு அப்போஸ்தலனாக என்னை நியமித்தார். புறவினத்தார் நூற்றுக்கணக்கான தெய்வங்கள் மற்றும் அசுத்தமான ஆவிகளால் நிறைந்திருக்கிறார்கள் நான் மகிழ்ச்சியுடன் அவர்கள் மொழியைக் கற்றுக்கொண்டு, பாரம்பரியங்களை அறிந்து, அசுத்த தெய்வங்களை ஆராதிக்கும் அவர்களுக்கு இயேசுவை பிரசங்கிக்கிறேன் என்று கூறினான்.

பவுல் தனது ஊழியத்தின் போது யூதர்களுக்கு பிரசங்கிக்கும் வாய்ப்பைக் கண்டான். கிறிஸ்தவர்களின் பரிசுத்த நடக்கை, ஆசியா மற்றும் ஐரோப்பாவில் அவர்களது பங்களிப்பு இவற்றினால் ஆபிரகாமின் பிள்ளைகளை சந்திக்க விரும்பினான். அவர்களுக்குள் ஆவிக்குரிய வைராக்கியத்தை எழுப்பினான். அவர்கள் புறவினத்தாரின் விசுவாசத்தில் இருந்து பாடம் கற்கவும், தங்கள் தவறான வழிகளில் இருந்து திரும்பவும் மரித்தோரில் இருந்து எழும்பிய கிறிஸ்துவை பின்பற்றவும் விரும்பினான். பழைய உடன்படிக்கையின் தள்ளப்பட்ட மக்கள் மீண்டும் ஒன்று சேர்க்கப்படுவார்கள். அவர்களுக்கான உடன்படிக்கை மற்றும் வாக்குத்தத்தங்கள் இப்போதும் செயல்படக் கூடியதாகவும், மதிப்புள்ளதாகவும் உள்ளது.

தங்களது ராஜா இயேசுவை புறக்கணித்தது இறைவனுக்கும் உலகத்துக்கும் ஒப்புரவாகுதல் ஏற்பட காரணமாக இருக்கும் என்றால், அவர்கள் திரும்பி வருவது எவ்வளவுக்கதிகமாய் இறைவனுக்குள் முழுமையான வாழ்வை ஆவிக்குரிய மரித்தோருக்கு கொண்டு வரும் அப்போஸ்தலன் தனது ஆவிக்குரிய மரணத்தின் மீது இறைவனுடைய வல்லமையின் வெற்றியை அனுபவித்தான். அவன் வைராக்கியத்தினால் செயல்பட்ட போதும், ஆண்டவர் அவனை இரட்சித்தார். தனது நாட்டு மக்களுக்கும் அதே காரியம் நடக்கும் என்று அவன் நம்பினான். அவர்களும் முழு உலகிற்கு கிறிஸ்துவின் கிருபை வாழ்வை கொண்டு செல்லும்படி, நித்திய வாழ்வில் தனக்குப் பங்காளிகளாக இருக்கும்படி தீர்மானித்தான்.

விண்ணப்பம்: பரலோகப் பிதாவே, யூதர்களின் கடினம் அனைத்து நாடுகளுக்கும் ஆசீர்வாதத்தைக் கொண்டு வரும்படி செய்தீர். உமக்கு நன்றி கூறுகிறோம், உம்மை ஆராதிக்கிறோம். நாங்கள் சுயநலமுள்ள ஆவியுடன் வாழாதபடி உதவும். உமது பரிசுத்த ஆவியினால் வார்த்தை, செயல் மற்றும் விண்ணப்பங்களால் சேவைபுரிய உதவும். அநேக அவிசுவாசிகள் மற்றும் ஆபிரகாமின் பிள்ளைகளை இயேசு கிறிஸ்துவின் மீதான உயிருள்ள விசுவாசத்திற்கும் நடத்தும்.

கேள்விகள்:

  1. அசுத்தமான புறவினத்தாருக்கு யூதர்களின் இருதயக் கடினம் என்ன பொருள் தருகிறது?
  2. கிறிஸ்தவர்கள் எவ்விதம் அவிசுவாசிகளை சரியான விசுவாசத்திற்குள் நடத்த முடியும்?

www.Waters-of-Life.net

Page last modified on August 10, 2021, at 11:49 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)