Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Acts - 072 (Apostolic Council at Jerusalem)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Azeri -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- French -- Georgian -- Greek -- Hausa -- Igbo -- Indonesian -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Turkish -- Urdu? -- Uzbek -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

அப்போஸ்தலர் - கிறிஸ்துவின் வெற்றி பவனி
அப்போஸ்தலர் நடபடிகளிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 2 - புறவினத்தாருக்கு நற்செய்தி அறிவித்தலைப் பற்றிய அறிக்கையும் அந்தியோகியா முதல் ரோமாபுரிவரை திருச்சபைகள் நாட்டப்படுதலும் - பரிசுத்த ஆவியானவரினால் கட்டளையிடப்பட்டிருந்த அப்போஸ்தலனாகிய பவுலின் ஊழியத்தினால் (அப்போஸ்தலர் 13 - 28)

ஆ - எருசலேமில் அப்போஸ்தலரின் ஆலோசனைக் குழு (அப்போஸ்தலர் 15:1-35)


அப்போஸ்தலர் 15:1-5
1 சிலர் யூதேயாவிலிருந்து வந்து: நீங்கள் மோசேயினுடைய முறைமையின்படியே விருத்தசேதனமடையா விட்டால், இரட்சிக்கப்பட மாட்டீர்கள் என்று சகோதரருக்குப் போதகம் பண்ணினார்கள்.2 அதினாலே அவர்களுக்கும் பவுல் பர்னபா என்பவர்களுக்கும் மிகுந்த வாக்குவாதமும் தர்க்கமும் உண்டானபோது, அந்த விஷயத்தினிமித்தம் பவுலும் பர்னபாவும் அவர்களைச் சேர்ந்தவேறு சிலரும் எருசலேமிலிருக்கிற அப்போஸ்தலரிடத்திற்கும் மூப்பரிடத்திற்கும் போகவேண்டுமென்று தீர்மானித்தார்கள்.3 அந்தப்படி அவர்கள் சபையாரால் வழிவிட்டனுப்பப்பட்டு, பெனிக்கே சமாரியா நாடுகளின் வழியாய்ப் போய், புறஜாதியார் மனந்திரும்பின செய்தியை அறிவித்து, சகோதரர் எல்லாருக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கினார்கள்.4 அவர்கள் எருசலேமுக்கு வந்து, சபையாராலும் அப்போஸ்தலராலும் மூப்பராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டபோது, தேவன் தங்களைக்கொண்டு செய்தவைகளையெல்லாம் அறிவித்தார்கள்.5 அப்பொழுது பரிசேய சமயத்தாரில் விசுவாசிகளான சிலர் எழுந்து, அவர்களை விருத்தசேதனம் பண்ணுகிறதும் மோசேயின் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ளும்படி அவர்களுக்குக் கற்பிக்கிறதும் அவசியம் என்றார்கள்.

சில சமயங்களில் தெய்வீக தோற்றத்துடன் பிசாசு காணப்படுவான். கிறிஸ்துவின் மன்னிப்போடு கூட சேர்ந்து சிறப்பான பரிசுத்தத்தைப் பெற நியாயப்பிரமாணத்தை கடைப்பிடித்து நடக்கும்படி மனிதர்களுக்கு கற்றுக்கொடுப்பான். அதாவது இறைவனுடன் நமது வாழ்விற்கு அஸ்திபாரமாக கிறிஸ்துவின் இரத்தம் மற்றும் கிருபை மட்டுமே நீதிமானாக்கப்படுதலுக்கு போதாது என்பதாகும். தீவிரமான கிறிஸ்தவத்திற்க்கு மாறிய சில பரிசேயர்கள் எருசலேமில் இருந்து அந்தியோகியாவிற்கு வந்தார்கள். அங்கு வந்து அந்தியோகியா சபையின் சமாதானம் மற்றும் இணக்கத்திற்கு ஊறு விளைவித்தார்கள். கூட்டங்களில் கற்றுக்கொடுக்கும்படியான உரிமையை கேட்டார்கள். அதன் மூலம் இரட்சிப்பின் முழுமைக்கு விசுவாசிகளை வழி நடத்த நினைத்தார்கள். அவர்கள் விசுவாசிகள் மீட்கப்பட கிறிஸ்துவின் இரத்தம் போதுமானது அல்ல என்று கூறினார்கள். மோசேயின் நியாயப்பிரமாணத்தின் படி விருத்தசேதனம் பண்ணுவது தேவை என்று கூறினார்கள். இறைவன் தமது உடன்படிக்கையின் அடையாளமாக இதை கட்டளையிட்டிருக்கிறார். இறைவனின் அகத் தூண்டுதலால் தான் எல்லா சட்டதிட்டங்களும் கொடுக்கப்பட்டன. எனவே அவைகளை கவனமாக கைக்கொள்ளாதவன் நியாயம் தீர்க்கப்படுவான்.

பவுலும் பர்னபாவும் பரிசுத்த வைராக்கியத்தினால் நிறைந்திருந்தார்கள். பின்பு இதை ஆராயும்படியாக எருசலேம் சென்றிருந்தார்கள். சின்ன ஆசியா பட்டணங்களில் தங்களுக்கு நேரிட்ட அனுபவங்களைக் கொண்டு இரண்டு அப்போஸ்தலர்களும் எதையும் மறைக்காமல் அனைத்தையும் வலியுறுத்திப் பேசினார்கள். பரிசுத்த ஆவியானவர் விசுவாசிகளில் தங்கியிருப்பது என்பது புதியவிசுவாசிகள் நியாயப்பிரமாணத்தை கடைப்பிடிப்பது அல்லது அறிந்திருப்பதை சார்ந்தது அல்ல. இரட்சிப்பு என்பது கிருபையினால் அருளப்படுகிறது. நியாயப்பிரமாணத்தை கடைப்பிடிப்பதால் ஏற்படும் விளைவு அல்ல. எருசலேமில் கிறிஸ்தவத்திற்க்கு மாறிய பரிசேயர்கள் பழைய ஏற்பாட்டின் வெளிப்பாட்டிற்கு நிபந்தனையற்ற ஒப்புக்கொடுத்தலை வலியுறுத்தினார்கள். ஆனால் பவுல், இறைவன் கிறிஸ்துவில் அறிவித்த புதிய உடன்படிக்கையை தெளிவாக விளக்கிக் காண்பித்தான். அவர் பழைய உடன்படிக்கையின் பரிசுத்தமான நிபந்தனைகளை நமக்காக நிறைவேற்றினார். நம்மை கிருபையின் யுகத்திற்குள் அனுமதித்திருக்கிறார்.

இந்த சர்ச்சையின் விளைவாக சபைக்குள் ஒரு தீவிரமான ஆவிக்குரிய போராட்டம் ஏற்பட்டது. புதிய விசுவாசிகள் குழம்பிப் போனார்கள். ஏனெனில் இரண்டு குழுவினரும் பேசும் போது நியாயப்பிரமாணத்தை அடிப்படையாக வைத்து சத்தியத்தை முன் வைத்தார்கள். இதே விதமான காரியம் சபை வரலாற்றில் பல்வேறு காலங்களில் தொடர்ந்து நடந்திருக்கிறது. எனவே சபை அங்கத்தினர்கள் கூடிவரும்படி கேட்டுக் கொள்ளப்பட்டார்கள். இறைவனின் சித்தத்தை அப்போஸ்தலர்கள், மூப்பர்கள், விசுவாசத்தில் முதிர்ந்தவர்கள் மூலமாக பகுத்துணர தீர்மானிக்கப்பட்டது.

அந்தியோகிய சபையின் பெயரில் பவுலும், பர்னபாவும் இணைந்து கடல்வழியாக லெபனானுக்கு பயணம் செய்தார்கள். அங்கே கடற்கரை பட்டணங்களில் சகோதரர்களை சந்தித்தார்கள். இந்த நிகழ்வின் போது நாம் முதன் முறையாக லெபனானில் கிறிஸ்தவ சபைகள் ஸ்தாபிக்கப்பட்டதை முதன் முறையாக வாசிக்கிறோம். அநேக தனி நபர்கள் நித்திய வாழ்விற்குள் பிரவேசித்திருந்தார்கள். இறைவன் எவ்விதம் புறஜாதியான விக்கிரக ஆராதனைக்காரர்களை தமது உடன்படிக்கைக்கு, விருத்தசேதனமின்றி அல்லது நியாயப்பிரமாணத்தின் கிரியைகள் இன்றி அழைக்கிறார் என்பதை கேள்விப்பட்டு இந்த சகோதரர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்கள். இந்த விசுவாசிகள் மிகுந்த சந்தோஷம் அடைந்தார்கள். அவர்கள் யூத மதம் தனது சட்டதிட்டங்களுடன் இந்த உலகை மாற்ற இயலாது என்பதை அறிந்திருந்தார்கள். அவர்கள் உடனடியாக கிருபையைக் குறித்து சரியாகப் புரிந்து கொண்டார்கள். பரிசுத்த ஆவியின் மூலம் ஏற்படும் விடுதலைக்காக இயேசுவை மகிமைப்படுத்தினார்கள். புதிய தலைமுறைக்கு விடுதலையின் ஒளி இதன் மூலம் பிரகாசித்தது.

இறைவன் செயலின் அதிசயங்களைக் குறித்து சமாரியா பகுதி பயணிகளும் சாட்சியிட்டார்கள். சமீபத்திய ஆவிக்குரிய அனுபவங்களைக் குறித்த செய்திகள் விசுவாசிகளை உற்சாகப்படுத்தியது. முழு உலகிற்கும், இரட்சிப்பை நிச்சயமாகக் கொண்டு செல்லும்படி அவர்களை வழிநடத்தியது.

இரண்டு அப்போஸ்தலர்களும் எருசலேம் வந்தபோது, விசுவாசிகள் மற்ற அப்போஸ்தலர்கள், மூப்பர்களுடன் இணைந்து அவர்களை வரவேற்கும்படி விரைந்து சென்றார்கள். அவர்கள் அனைவரும் இந்த கூட்டத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்தார்கள். பாலஸ்தீனாவிற்கு வெளியே இருந்த வந்த புதிய மக்கள் அங்கு இருந்தார்கள். அவர்கள் விசுவாசத்தைக் குறித்ததான காரியங்களைக் குறித்து ஒரு தெளிûவுயம், முடிவையும் எதிர்பார்த்தார்கள். ஒரு காலத்தில் நியாயப்பிரமாண மேதையாய் இருந்த சவுல் தன்னை தாழ்த்தினான் கிருபையைக் குறித்த அவனது போதனையை உறுதிப்படுத்தும்படி அந்தியோகியா சபையின் பெயரில் கேட்டுக்கொண்டான். இந்த முறை முழு எருசலேம் சபையின் கண்கள், முன்னாள் எதிரியாய் இருந்து, தற்போது நாடுகளுக்கு இரட்சிப்பை அருளுவதற்காக இறைவனால் தெரிந்தெடுக்கப்பட்ட அப்போஸ்தலனாக இருக்கிறவன் மீது பதிந்திருந்தது

போதனையின் விதிமுறைகள் குறித்த ஆராய்ச்சியுடன் இந்த கூட்டங்கள் துவங்கவில்லை. முதலாவது பர்னபா மற்றும் பவுலின் ஊழிய அனுபவங்கள் குறித்த அறிக்கையை கேட்டார்கள். சிரியா மற்றும் சின்ன ஆசியா பகுதிகளில் அவர்களது பணியின் மூலம் கிறிஸ்து எவ்விதம் சபைகளை நிறுவினார் என்று கூறினார்கள். வசனங்களைக் கேட்ட அனைவரின் மனங்களும் கிறிஸ்துவின் வெற்றியினால் ஆட்கொள்ளப்பட்டது. ஒருவரும் புறஜாதிகள் மீது பரிசுத்த ஆவியானவர் பொழிந்தருளப்பட்ட அற்புதத்தை மறுக்க முடியவில்லை. மதிப்பிற்குரிய, விவேகமுள்ள பர்னபாவின் சாட்சி குறிப்பாக எருசலேமின் சபையில் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஏனெனில் இவனை அவர்கள் ஏற்கெனவே அறிந்திருந்தார்கள். இவர்களால் தான் பர்னபா அனுப்பப்பட்டிருந்தான்.

அந்தியோகியா சபையினர் தங்களது கருத்துகளை பேசி முடித்தவுடன், முன்பு தீவிரமான பரிசேயர்களாக இருந்த சில விசுவாசிகள் எழுந்து நின்றார்கள். அவர்கள் சுய நம்பிக்கையுடையவர்களாக இல்லை. கிறிஸ்துவின் மீது அவர்கள் விசுவாசம் வைத்திருந்தும். புறஜாதி விசுவாசிகளை விருத்தசேதனம் பண்ணும்படி கோரிக்கை வைத்தார்கள். மேலும் முழு நியாயப்பிரமாணத்திற்கும் ஒப்புக்கொடுக்கச் சொன்னார்கள். கிறிஸ்துவின் வெற்றியில் களிகூர்ந்த இந்த பக்திமிக்க பரிசேயர்கள், புறஜாதிகளுக்கு பிரசங்கிப்பதற்கு தாங்கள் எதிரானவர்கள் அல்ல என்று காண்பித்தார்கள். அவர்கள் மிகவும் வைராக்கியத்துடன் புதிய விசுவாசிகளை யூதசமயத்திற்கு மாறும்படி கோரினார்கள். இந்த புதிய உடன்படிக்கை மோசேயின் உடன்படிக்கைக்கு அருகில் இருக்கட்டும் என்று கூறினார்கள். இந்த கோரிக்கை மூலம் அவர்கள் இறைவனின் குமாரனாகிய இயேசுவின் செயல்களுக்கும், இறைவனின் தீர்க்கதரிசியாகிய மோசேயின் செயல்களுக்கும் ஒரே இடத்தில் அளித்தார்கள். இப்படிச் செய்ததின் மூலம் புதிய உடன்படிக்கையை அவர்கள் முற்றிலும் புரிந்துகொள்ளவில்லை என்பதைக் காண்பித்தார்கள். புதிய உடன்படிக்கை நியாயப்பிரமாணத்திலிருந்து விடுதலையை குறித்து பேசுகிறது. அதனுடைய நிறைவேறுதல் இறைவனின் முழுமையான அன்பில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

விண்ணப்பம்: ஆண்டவராகிய இயேசுவே, நாங்கள் உம்மைக் காணும்படி எங்கள் கண்களைத் திறந்தருளும். உமது அன்பின் சிறப்பை நாங்கள் அறியச்செய்யும். அப்போது நாங்கள் எங்களையே நம்பாமல், எங்கள் பலவீனத்தை பற்றிக்கொண்டிராமல். உமது வெற்றியை மட்டுமே சார்ந்திருப்போம். பரிசுத்த ஆவியின் ஒளியூட்டுதல் மூலமாக பரிசுத்த வேதாகமத்தை வாசிக்கவும், புரிந்துகொள்ளவும் எங்களுக்கு உதவும். உமது பரிசுத்த நற்செய்தியில் வெளிப்படுத்தப்பட்டுள்ள புதிய உடன்படிக்கைக்கு உண்மையாய் இருக்க உதவும்.

கேள்வி:

  1. ஏன் அந்தியோகியோ சபை பிரச்சினையை தானாகவே தீர்த்து கொள்ள முற்படாமல், எருசலேமின் அப்போஸ்தலர்களைக் கேட்டு இறுதி முடிவை காண நினைத்தார்கள்?

www.Waters-of-Life.net

Page last modified on October 07, 2013, at 10:42 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)