Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Acts - 068 (Founding of the Church at Iconium)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Azeri -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- French -- Georgian -- Greek -- Hausa -- Igbo -- Indonesian -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Turkish -- Urdu? -- Uzbek -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

அப்போஸ்தலர் - கிறிஸ்துவின் வெற்றி பவனி
அப்போஸ்தலர் நடபடிகளிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 2 - புறவினத்தாருக்கு நற்செய்தி அறிவித்தலைப் பற்றிய அறிக்கையும் அந்தியோகியா முதல் ரோமாபுரிவரை திருச்சபைகள் நாட்டப்படுதலும் - பரிசுத்த ஆவியானவரினால் கட்டளையிடப்பட்டிருந்த அப்போஸ்தலனாகிய பவுலின் ஊழியத்தினால் (அப்போஸ்தலர் 13 - 28)
அ - முதலாவது மிஷனரிப் பயணம் (அப்போஸ்தலர் 13:1 - 14:28)

4. இக்கோனியாவில் சபை ஸ்தாபிக்கப்படுதல் (அப்போஸ்தலர் 14:1-7)


அப்போஸ்தலர் 14:1-7
1 இக்கோனியா பட்டணத்திலே அவர்கள் இருவரும் யூதருடைய ஜெப ஆலயத்தில் பிரவேசித்து, யூதரிலும் கிரேக்கரிலும் திரளான ஜனங்கள் விசுவாசிக்கத்தக்கதாகப் பிரசங்கித்தார்கள்.2 விசுவாசியாத யூதர்கள் சகோதரருக்கு விரோதமாகப் புறஜாதியாருடைய மனதை எழுப்பிவிட்டு, பகையுண்டாக்கினார்கள்.3 அவர்கள் அங்கே அநேகநாள் சஞ்சரித்துக் கர்த்தரை முன்னிட்டுத் தைரியமுள்ளவர்களாய்ப் போதகம் பண்ணினார்கள்; அவர் தமது கிருபையுள்ள வசனத்திற்குச் சாட்சியாக அடையாளங்களும் அற்புதங்களும் அவர்கள் கைகளால் செய்யப்படும்படி அநுக்கிரகம்பண்ணினார்.4 பட்டணத்து ஜனங்கள் பிரிந்து, சிலர் யூதரையும் சிலர் அப்போஸ்தலரையும் சேர்ந்துகொண்டார்கள். 5 இவர்களை அவமானப்படுத்தவும் கல்லெறியவும் வேண்டுமென்று, புறஜாதியாரும் யூதரும் அவர்கள் அதிகாரிகளும் அமளிபண்ணுகையில், 6 இவர்கள் அதை அறிந்து, லிக்கவோனியா நாட்டிலுள்ள பட்டணங்களாகிய லீஸ்திராவுக்கும் தெர்பைக்கும் அவைகளின் சுற்றுப்புறங்களுக்கும் ஓடிப்போய்; 7 அங்கே சுவிசேஷத்தைப் பிரசங்கம்பண்ணினார்கள்.

பவுலும், பர்னபாவும் அனடோலியாவின் அந்தியோகியாவை விட்டு தெரியாமல் ஒடிப் போகவில்லை. இயேசு கிறிஸ்துவின் வெற்றிப்பவனியில் இணைந்து கொண்டு எச்சரிக்கையுடன் அவர்களது வழியில் தொடர்ந்து சென்றார்கள். அவர்கள் சீக்கிரத்தில் அனடோலியாவின் மற்றொரு வணிகப்பட்டணமாகிய இக்கோனியாவிற்கு வந்தார்கள். அவர்கள் முதலாவது யூதர்களின் ஜெப ஆலயத்திற்குள் பிரவேசித்தார்கள். இரட்சிப்பின் நற்செய்தியை முதலாவது யூதர்கள் தான் கேட்டார்கள். அவர்கள் நற்செய்தியை ஏற்றுக்கொள்ளவோ அல்லது நிராகரிக்கவோ முடியும்.அவர்கள் பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசனங்களை உணர்ந்து கொண்டார்கள், ஒப்புக்கொடுத்தார்கள்.

யூத விசுவாசிகளையும், மனந்திரும்பிய புறஜாதிகளையும் உள்ளடக்கிய உறுதியான ஓர் சபை இக்கோனியாவில் உருவாகியது. அந்தியோகியாவில் யூதர்களின் ஜெப ஆலயத்தில் பவுல் அளித்த பிரசங்கத்தை ஒரு மாதிரிப் பிரசங்கமாக லூக்கா நமக்காக (அதிகாரம்13) பதிவு செய்திருக்கிறான். அதைப்போலவே அவன் இக்கோனியாவிலும் பிரசங்கித்தான். மக்கள் திரள் கூட்டமாய் கிறிஸ்துவின் விரிவான எல்லைக்குள் நுழைந்து, அவருடைய நித்திய ஜீவனை பெற்றுக் கொள்வதைப் பார்த்த ஜெபஆலயத் தலைவன் பொறாமை கொண்டான். நியாயப்பிரமாணத்திற்கு பவுல் அளித்த விளக்கத்திற்கு அவன் எதிர்ப்பு தெரிவித்தான். சிலுவையில் அறையப்பட்டு இப்போது உயிரோடிருக்கும் இயேசுவை அவன் தூஷணம் செய்தான். இறுதியாக வேதனை மிக்க ஒரு பிரிவு வந்தது. பவுல் இதை மனதில் வைத்து செயல்படவில்லை. இந்த பிரிவினை பவுலின் தவறான பிரசங்கம் அல்லது பெருமை அல்லது சுயநலத்தினால் ஏற்பட்ட விளைவு அல்ல. உண்மையான நற்செய்தியின் வெளிப்பாட்டினால் ஏற்பட்ட தவிர்க்க முடியாத ஒரு விளைவு ஆகும். இறைவனின் வார்த்தை இரட்சிக்கிறது அல்லது கடினப்படுத்துகிறது; விடுவிக்கிறது அல்லது கட்டுகிறது. நமது சபைகளில் ஆவிக்குரிய சுத்திகரிப்பின் தேவையை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். பாவத்திலிருந்து நம்மை விடுவிக்கும்படி நாம் எடுத்து வைக்கிற ஒவ்வொரு அவசியமான அடியும் நற்செய்தியின் மேன்மைக்காக தாழ்மையுடன் செய்யப்பட வேண்டும். இது மாபெரும் கிருபையாக இருக்கிறது.

சிலுவையிலறையப்பட்ட கிறிஸ்து மற்றும் பரலோகின் ஆண்டவராக இருக்கின்ற நாசரேத்தூர் இயேசுவை ஏன் அநேக யூதர்கள் விசுவாசிக்கவில்லை? அவர்களுக்கு கிடைத்த அறிவு, அங்கிகரிப்பு, இறைவனின் ஆவியானவரின் செயல்பாடு இவைகளின் மத்தியிலும் அவர்கள் விசுவாசிக்க விரும்பவில்லை என்று லூக்கா எழுதுகிறான். அவர்களது மனங்கள், அவர்களது சித்தங்கள் இறைவனுக்கு எதிராக இருந்தது. அவர்கள் கிருபையை பெற்றுக்கொள்ள ஆயத்தமாக இல்லை. அவர்கள் தங்களது விசுவாசத்தையும் நீதியையும் அவர்களது கிரியைகள் மற்றும் மனித திறமைகள் மீது கட்டியிருந்தார்கள். இதன் மூலம் அவர்கள் மனந்திரும்புதலின் அவசியத்தை புறக்கணித்து விட்டார்கள். அவர்கள் கிறிஸ்துவுக்கு ஒப்புக் கொடுக்கப் பழகவில்லை. இறைவனை அடைய ஒரே வழி என்று சொன்ன இரட்சகரை அவர்கள் வெறுத்தார்கள். இன்றும் மனிதன் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ள ஆயத்தமாக இல்லை. அவன் நியாயப்பிரமாணத்தை கேட்டு, அதுவே பரலோகிற்கு செல்ல சரியான வழி என்று எண்ணுகிறான். நியாயப்பிரமாணவாதிகள் தங்களையே ஏமாற்றிக் கொள்கிறார்கள். தங்கள் சொந்த பாவங்களில் அவர்கள் அமிழந்து கொண்டிருப்பதை உணருகிறதில்லை. அவனது சொந்த பக்தியின் மீது வைத்திருக்கும் அவனுடைய நம்பிக்கை மனந்திரும்புதலில் இருந்து அவனை தடுக்கிறது. இந்த சுயநல போலி தற்பெருமை மாய்மாலக்காரன் தனக்கு இயேசு தேவையில்லை என்று நினைக்கிறான். அவனை நோக்கி நீட்டப்படும் விடுவிக்கும் கரத்தை அவன் புறக்கணிக்கிறான். உங்களுக்கு இயேசு தேவையா? உங்களது பலவீனம் மற்றும் சுய பாவத்தை நீங்கள் அறிகிறீர்களா? உங்களது இரட்சகரை தினந்தோறும், இரவும், பகலும் நீங்கள் உறுதியாகப் பற்றிக் கொள்கிறீர்களா?

பவுலையும், பர்னபாவையும் சகோதரர்கள் என்று லூக்கா அழைக்கிறான். பரிசுத்த ஆவியின் சகோதரத்துவ தாழ்மையின் ஐக்கியத்திலும், சிறந்த அன்பிலும் அவர்கள் ஒத்து செயல்பட்டார்கள். அவர்களில் ஒருவர் கூட தங்களது சொந்த விருப்பங்களை தேடவில்லை. அல்லது எந்த ஒரு காரியத்தையும் தனியாக செய்யவும் இல்லை. அவர்கள் இணைந்து விண்ணப்பம் செய்தார்கள். கிறிஸ்துவின் வெற்றியை அறிவிப்பதில் இணைந்து செயல்பட்டார்கள்.

அவர்கள் இருவரும் வளர்ந்து வரும் பகையை உணர்ந்தார்கள். இருப்பினும் அவர்கள் ஓடிப்போகவில்லை. கிறிஸ்துவின் வல்லமையின் முழுமையோடு அவர்கள் புதிய சபைகளுக்கு சென்று சாட்சியிட்டார்கள். சபையின் வளர்ந்து வரும் விசுவாசத்தின் மூலமாக அற்புதமான சுகமாக்குதல் மற்றும் அடையாளங்கள் நிகழ்ந்தன. இதன் மூலம் உயிருள்ள கிறிஸ்து அவர்கள் மத்தியில் பிரசன்னமாய் இருப்பது உணர்த்தப்பட்டது. பிரசங்கம் பலத்தின் மேல் பலம் அடைந்தது. கிறிஸ்துவின் கிருபை அதிகமதிகமாய் வெளிப்பட்டது. இன்றும்கூட விசுவாசிகளின் சாட்சியை உறுதிப்படுத்தும்படி அவர்களுக்கு தன்னுடைய வரங்களை அனுப்ப அவர் ஆயத்தமாக இருக்கிறார். அப்போஸ்தலரின் பிரசங்கத்தின் முக்கிய காரியங்களாக கிருபையும், சத்தியமும் இருந்தது.

ஜெபஆலயத்தில் ஏற்பட்ட இந்தப் பிரிவினை முழுப்பட்டணத்திற்கும் பரவியது. இதனால் ஒவ்வொரு குடும்பமும் இரண்டு பகுதியாகப் பிரிந்தது. முதல் பகுதியினர் யூதர்கள் பக்கம் சேர்ந்து கொண்டு, தங்களது வணிகக் காரணங்களுக்காகவும், பட்டணத்தில் அமைதியை காக்கும் விருப்பத்துடனும் செயல்பட்டார்கள். அவர்கள் புதிய உபதேசத்தை வெறுத்தார்கள். இந்த கொந்தளிப்பின் ஆவியோடு பவுலை விரட்டிவிட ஆயத்தமானார்கள். இரண்டாம் பகுதியினர் கிறிஸ்துவின் வல்லமையை உணர்ந்தார்கள். ஏனெனில் இருளின் மத்தியில் அப்போஸ்தலர்களின் செயல்களும், வார்த்தைகளும் சுடர்விடும் விளக்குகளாய் பிரகாசித்தன. அவர்கள் கிறிஸ்துவினுடைய வெற்றியை ஆர்வத்துடன் சுமந்து சென்றார்கள். இறைவனுடைய ஆசீர்வாதத்தின் பிரசன்னத்திற்காக விண்ணப்பம் செய்தார்கள். அவர்களது பட்டணத்தில் ஆவிக்குரிய எழுப்புதலையும் வளர்ச்சியையும் வாஞ்சித்தார்கள்.

எப்படியிருப்பினும் பழைய பாரம்பரியத்தை புதிய உபதேசமானது கடுமையாக தாக்கியது. வளைந்துகொடுக்கும் தன்மை அற்றவர்கள் வெளிப்படுத்தப்பட்ட இறைவனின் அன்பைக் கொண்டு பாரம்பரியத்தை எவ்விதம் மேற்கொள்வது என்று அறியாதிருந்தார்கள். ஆவிக்குரிய ரீதியில் பவுலையும், பர்னபாவையும் யூதர்கள் மேற்கொள்ள இயலவில்லை. எனவே அதிகாரிகளோடும், பட்டணத்தில் முக்கிய பதவியில் உள்ளவர்களோடும் இரகசியமாக இணைந்து, இரண்டு அப்போஸ்தலர்களையும் அடிக்கவும் கல்லெறியவும் தீர்மானித்து செயல்பட்டார்கள். அவர்கள் வன்முறைக்கும், கொலைக்கும் திரும்பினார்கள். ஏனெனில் பரிசுத்த ஆவியானவர் தரும் விடுதலையை அனுபவிக்க அவர்களது நியாயப்பிரமாண ஆவி விடவில்லை.

இந்த தீய நோக்கத்தை முன்பே அறிந்துகொண்டே அப்போஸ்தலர்கள் இக்கோனியாவை விட்டு, மற்றொரு பட்டணத்திற்கு விரைந்து சென்றார்கள். கிறிஸ்துவுக்காக மரிப்பது மட்டும் ஆண்டவருடைய ஒரே கட்டளையாக இல்லை. சில சமயங்களில் அவருக்காக வாழ்வதும் முக்கியமான காரியமாக இருக்கிறது. அவருடைய நாமத்திற்காக பணி செய்வதும், அவருடைய வார்த்தையை பரவச் செய்வதும் தொடர வேண்டும். எனவே உங்களது சூழ்நிலையில் பரிசுத்த ஆவியானவர் கூறுவதை கவனமாகக் கேளுங்கள். பிரச்சனைகள், உபத்திரவங்கள், உதாசீனங்கள், வேதனை மிகுந்த வலி இவைகளை இயேசுவிற்காக சந்திக்க நேரிடும்போது ஆச்சரியப்பட வேண்டாம். புறஜாதிகளின் அப்போஸ்தலன் ஒரு பட்டணம் விட்டு மறு பட்டணத்திற்கும், ஒரு தேசம் விட்டு மறு தேசத்திற்கும் கடந்து சென்றான். ஒவ்வொரு முறையும் அவன் தைரியம் அடைந்தவனாக முன்னேறினான். அவனது எதிர்ப்பாளர்களின் பகையைக் குறித்து அவன் கவலைப்படவில்லை. மாறாக கிறிஸ்துவின் இரட்சிப்பின் மேன்மையை எல்லாக் காலங்களிலும் பிரசங்கித்தான். எனவே பிரியமான சகோதரனே, விண்ணப்பம்பண்ணு. மேலும் பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதலுக்கு செவிகொடு. அமைதியாக இராதே. கிறிஸ்துவின் அன்பின் மேன்மையை தைரியமாக பிரசங்கம்பண்ணு. இப்படிச் செய்வதின் மூலம் நீ உன்னத்தத்தில் இருந்து வல்லமையைப் பெற முடியும்.

விண்ணப்பம்: எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்துவே, நாங்கள் உமக்கு நன்றி கூறுகிறோம். நீர் பவுலையும் பர்னபாவையும் பெலப்படுத்தினீர். அவர்கள் உபத்திரவங்கள் மற்றும் போராட்டங்களைக் கண்டு கவலைப்படுபவர்களாக மாறவில்லை. நீர் அவர்களை பலப்படுத்தினீர், தைரியப்படுத்தினீர், உமது பரிசுத்த நாமத்தை மகிமைப்படுத்தினீர். நாங்கள் யாருக்கும் பயப்படாதபடி எங்களுக்கு உதவி செய்யும். தைரியத்துடனும், பரிசுத்த ஆவியின்

கேள்வி:

  1. பவுலும், பர்னபாவும் ஏன் ஒரு பட்டணத்தை விட்டு மறு பட்டணத்திற்கு ஓடிப் போனார்கள்?

www.Waters-of-Life.net

Page last modified on October 07, 2013, at 10:33 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)