Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- John - 120 (Jesus appears to the disciples)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Bengali -- Burmese -- Cebuano -- Chinese -- Dioula? -- English -- Farsi? -- French -- Georgian -- Greek -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Kyrgyz -- Malayalam -- Peul -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Thai -- Turkish -- Twi -- Urdu -- Uyghur? -- Uzbek -- Vietnamese -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

யோவான் - வெளிச்சம் இருளில் ஒளிர்கிறது
யோவான் எழுதின கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 4 - ஒளி இருளை மேற்கொள்ளுகிறது (யோவான் 18:1 – 21:25)
ஆ - கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் மற்றும் தரிசனமாகுதல் (யோவான் 20:1 - 21:25)

2. இயேசு மேலறையில் தமது சீஷர்களுக்கு காட்சியளிக்கிறார் (யோவான் 20:19-23)


யோவான் 20:20
20 அவர் இப்படிச் சொல்லித் தம்முடைய கைகளையும் விலாவையும் அவர்களுக்குக் காண்பித்தார். சீஷர்கள் கர்த்தரைக்கண்டு சந்தோஷப்பட்டார்கள்.

இறைவனுடன் ஒப்புரவாகுதல் நிறைவேறியது என்பதற்கான ஆதாரம் தான் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் ஆகும். இறைவன் தனது குமாரனைக் கல்லறையில் கைவிடவில்லை. நம்முடைய பாவங்கள் அவர் மீது சுமத்தப்பட்டது. அவர் மரித்தோரிலிருந்து எழுந்தார். இறைவன் பழுதற்ற பலியை ஏற்றுக் கொண்டார். அவர் கல்லறையை விட்டு வெற்றியாளராக வெளியே வந்தார். பிதாவுடன் சரியான இணைப்பில் அவர் வாழ்ந்து வந்தார். அவர் சிலுவையை ஏற்றுக்கொண்டார். அவர் பிதாவின் சித்தத்தை நிறைவேற்றினார். அவருடைய வருகையின் நோக்கம் சிலுவை ஆகும். உலகை மீட்கும் பலியாக அவர் வந்தார். ஆகவே எப்படி சிலர் இயேசு சிலுவையில் மரிக்கவில்லை என்று கூற முடியும்?

பொய்யுருவமோ அல்லது மறைவான ஆவியோ தான் அல்ல என்பதை இயேசு காண்பித்தார். அவருடைய உள்ளங்கைகளில் ஆணிகளால் உண்டான காயத்தை காண்பித்தார். அவர் விலாவில் ஈட்டியால் குத்தியதால் உண்டான காயத்தை காண்பித்தார். அவர்கள் அதைக் கண்டார்கள். அவர்கள் மத்தியில் நிற்பவர் வேறுபட்ட ஓர் படைப்பு அல்ல என்பதையும் சிலுவையிலறையப்பட்டவர் தான் அவர் என்பதையும் புரிந்துகொண்டார்கள். ஆட்டுக்குட்டியானவர் வெற்றி பெற்றார். அடிக்கப்பட்டவர் மரணத்தை மேற்கொண்டார்.

இயேசு வெறும் ஆவியோ அல்லது நிழலுருவமோ அல்ல என்பதை சீஷர்கள் மெதுமெதுவாக உணர்ந்து கொண்டார்கள். ஒரு உண்மையான நபராக இயேசு அவர்களுடன் இருந்தார். அவருடைய இந்த புதிய தோற்றம் அவர்களது மகிழ்ச்சியின் ஆதாரமாய் இருந்தது. இயேசு உயிருள்ள இறைவனாக இருக்கிறார். மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்துள்ளார். இதை விசுவாசித்து, புரிந்து கொண்டுள்ளதால் நாம் பாக்கியவான்களாக இருக்கிறோம். நாம் கைவிடப்பட்ட அனாதைகள் அல்ல. நம்முடைய மூத்த சகோதரர் அவருடைய பிதாவுடன் ஐக்கியம் கொண்டிருக்கிறார். பரிசுத்த ஆவியானவர் இந்தப் பிரபஞ்சத்தை என்றென்றும் ஆளுகிறார். கிறிஸ்து மரணத்தின் மீது பெற்ற வெற்றியின் பலனாக சீஷர்களது மகிழ்ச்சி அதிகரித்தது. அழிந்து கொண்டிருந்த நமக்கு அவர் உயிருள்ள நம்பிக்கையாக மாறியிருக்கிறார். திறக்கப்பட்ட கல்லறை என்பது நமது முடிவு அல்ல. அவருடைய ஜீவன் நம்முடையதாய் இருக்கிறது. “நானே உயிர்ததெழுதலும் ஜீவனுமாய் இருக்கிறேன்” என்று சொல்லுவதற்கு அவர் தகுதி உடையவராக இருக்கிறார். என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான். என்னில் வாழ்கிறவன், என்னை விசுவாசிக்கிறவன் ஒருபோதும் மரிப்பதில்லை.

தங்களுடைய பாவங்களை இயேசு மன்னித்ததை உணர்ந்து கொண்ட சீஷர்கள் மிகவும் அதிகமாக மகிழ்ச்சி அடைந்தார்கள். நம்முடைய பாவங்களை மன்னிப்பதற்கு அவரது சிலுவைப் பலி போதுமானது என்பதில் அவர் நிச்சயத்துடன் இருந்தார். நாம் அவருடைய மரணத்தின் மூலம் இறைவனுடன் இப்பொழுது சமாதானம் பெற்றிருக்கிறோம்.

ஈஸ்டர் நாளில் அவர்களது மகிழ்ச்சியில் நீயும் பங்கெடுக்கிறாயா? உயிர்த்தெழுந்தவர் முன்பு நீ பணிகிறாயா? அவர் உயிருடன் இருக்கிறார். உனக்கு நம்பிக்கை தருகிறார். உனது பாவங்களை மன்னிக்கிறார். இயேசு உயிருடன் இருக்கிறார். நாம் மகிழ்ச்சியுடன் இருக்கிறோம். ஆகவே அப்போஸ்தலனாகிய பவுல் திருச்சபைக்கு இவ்விதம் கூறுகிறார். “கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருங்கள், மறுபடியும் சொல்கிறேன் மகிழ்ச்சியாயிருங்கள். உங்கள் சாந்தகுணம் அனைவருக்கும் தெரிந்திருப்பதாக. இதோ அவர் சீக்கிரம் வருகிறார்.

விண்ணப்பம்: கர்த்தராகிய இயேசுவே, நாங்கள் உம்மை உயர்த்துகிறோம், உமக்கு நன்றி செலுத்துகிறோம். நீர் மாத்திரமே எங்கள் நம்பிக்கையாய் இருக்கிறீர். எங்களது வாழ்க்கைக்கு நீர் அர்த்தம் கொடுத்துள்ளீர். உமது காயங்கள் எங்களை நீதிமானாக்கியது. உமது பிரசன்னம் எங்களுக்கு ஜீவனைத் தருகிறது. உம்முடைய அரசாட்சி வருவதாக, உமது வெற்றி அனைவருக்கும் வெளிப்படட்டும். அப்போது அநேகர் பாவத்தில் மரித்த நிலையில் இருந்து எழும்பி உமது உயிர்த்தெழுதலின் மகிமைக்காக வாழுவார்கள்.

கேள்வி:

  1. சீஷர்கள் ஏன் மகிழ்ச்சியுடன் இருந்தார்கள்.

www.Waters-of-Life.net

Page last modified on August 29, 2012, at 10:33 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)