Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Romans - 056 (The Absolute Necessity of the Testimony of the Gospel)
This page in: -- Afrikaans -- Arabic -- Armenian -- Azeri -- Bengali -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- French -- Georgian -- Greek -- Hausa -- Hebrew -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Malayalam -- Polish -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Turkish -- Urdu? -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

ரோமர் - கர்த்தரே நம்முடைய நீதி
ரோமருக்கு பவுல் எழுதின நிரூபத்திலிருந்து வேதபாடங்கள்
பகுதி 2 - இறைவனால் தெரிந்துகொள்ளப்பட்ட, யாக்கோபின் புத்திரர் கடினப்பட்டுபோன பின்பும் இறைவனின் நீதி நிலையானதாக இருக்கிறது (ரோமர் 9:1-11:36)
4. நியாயப்பிரமாணத்தைக் கடைப்பிடிப்பதினால் அல்ல, விசுவாசத்தினால் மட்டுமே இறைநீதி பெறப்படுகிறது (ரோமர் 9:30-10:21)

இ) யாக்கோபின் புத்திரர் மத்தியில் நற்செய்தியைக் குறித்த சாட்சியின் முக்கியத்துவம் (ரோமர் 10:9-15)


ரோமர் 10:9-15
9 என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய். 10 நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும். 11 அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லையென்று வேதம் சொல்லுகிறது. 12 யூதனென்றும் கிரேக்கனென்றும் வித்தியாசமே இல்லை; எல்லாருக்குங் கர்த்தரானவர் தம்மைத் தொழுதுகொள்ளுகிற யாவருக்கும் ஐசுவரியசம்பன்னராயிருக்கிறார். 13 ஆதலால் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான். 14 அவரை விசுவாசியாதவர்கள் எப்படி அவரைத் தொழுதுகொள்ளுவார்கள்? அவரைக் குறித்துக் கேள்விப்படாதவர்கள் எப்படி விசுவாசிப்பார்கள்? பிரசங்கிக்கிறவன் இல்லாவிட்டால் எப்படிக் கேள்விப்படுவார்கள்? 15 அனுப்பப்படாவிட்டால் எப்படிப் பிரசங்கிப்பார்கள்? சமாதானத்தைக்கூறி, நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவிக்கிறவர்களுடைய பாதங்கள் எவ்வளவு அழகானவைகள் என்று எழுதியிருக்கிறதே.

ரோமில் உள்ள யூத கிறிஸ்தவ சபையுடன் ஆவிக்குரிய யுத்தத்தை அப்போஸ்தலனாகிய பவுல் தொடர்ந்து நடத்த ஆரம்பித்தான். பிரசங்கத்தில் படிகள் மற்றும் வேறுபட்ட காரியங்கள் இருப்பதை பவுல் அவர்களுக்கு விளக்கினான். உண்மையான விசுவாசம் இருதயத்தில் துவங்குகிறது. மனிதன் அவனது இருதயத்தில் விசுவாசிக்கிறான். விசுவாசி முழுவதும் தான் விசுவாசிக்கிறவருடன் இணைந்தும், நெருங்கியும் இருப்பதை இந்த விசுவாசம் உணர்த்துகிறது.

விசுவாசத்துடன் சேர்ந்து பேசுகின்ற சாட்சியும் காணப்படுகிறது. சத்தியம் எப்போதும் இருளை அகற்றும். விசுவாசமும், சாட்சியும் ஒன்றோடொன்று இணைந்துள்ளவை. சாட்சி என்பது ஒருபுறம் விசுவாசத்தைக் குறித்து பேசுகின்றது. கேட்பவர்கள் அதைப் புரிந்து கொள்கிறார்கள். இன்னொரு புறம் அந்த சாட்சியும் தனது சொந்த விசுவாசத்தின் நிச்சயத்தை அதிகமாய் பெறுகிறான்.

பவுலும், மற்ற கிறிஸ்துவின் சாட்சிகளும் முன்வைத்த விசுவாசத்தின் உறுதியானது விதிமுறைகளையும், கொள்கைகளையும் கொண்டுள்ளது:

1. இயேசுவே ஆண்டவராக இருக்கிறார். அவர் பிரபஞ்சத்தை உடையவர். எல்லா அதிகாரமும் அவருக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. தாவீது தெளிவாகக் கூறினான். … (சங்கீதம் 110:1) இறை ஆட்டுக்குட்டியானவர் சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கிறார் என்பதை அப்போஸ்தலனாகிய யோவான் தெளிவுப்படுத்தினான். சிலுவையில் அறையப்பட்டு மரித்தோரிலிருந்து எழும்பியவரின் மகிமையைக் குறித்து பவுலும் சாட்சியிட்டான். பிதாவாகிய இறைவனுக்கு மகிமையாக இயேசுவுக்கு முன்பாக முழங்கால்கள் யாவும் முடங்கும். வானோர், பூதலத்தோர், பூமியின் கீழானோருடைய நாவுகள் யாவும் இயேசு கிறிஸ்துவே கர்த்தர் என்று அறிக்கைப்பண்ணும் (பிலிப்பிர் 2:5-11).

“இயேசுவே கர்த்தர்” என்ற குறுகிய வாக்கியம் தான் கிறிஸ்தவ விசுவாசத்தின் முதுகெலும்பாக இருக்கிறது. பரிசுத்த திரியேகத்தின் ஒற்றுமையில் இயேசுகிறிஸ்து மெய்யான இறைவனாக இருக்கிறார். என்பதை இது காண்பிக்கிறது. இயேசு அவருடைய பரலோகப் பிதாவுடன் முழுவதுமாக இணைந்து வாழுகின்றார், ஆளுகின்றார்.

2. பரிசுத்த இறைவன் கிறிஸ்துவை எழுப்பினார். சிலுவையிலறையப்பட்டு, மரித்த அவர் உயிருடன் எழுந்தார். இந்த உண்மையில் தான் கிறிஸ்துவின் மகிமை காணப்படுகிறது. கிறிஸ்தவ விசுவாசத்தின் இரண்டாவது தூண் என்பது கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் ஆகும். அவர் மனுஷகுமாரன் உண்மையாகவே உயிர்த்தெழவில்லையெனில், அவரது சரீரம் முழுவதும் அழிந்திருக்கும். ஆனால் அவர் கல்லறையில் இருந்து எழுந்தார். பாறைகள் மற்றும் சுவர்களின் ஊடே தன்னுடைய ஆவிக்குரிய சரீரத்தினால் அவர் நடந்து, கடந்து சென்றார். இயேசு உயிரோடிருக்கிறார். மற்ற மதங்களின் நிறுவனர்கள் அனைவரும் மரித்தார்கள், அவர்கள் சரீரங்கள் அழிந்து போனது. கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் அவரது பரிசுத்தம், வெற்றி, வல்லமை மற்றும் முழுமையான இரட்சிப்பிற்கு ஆதாரமாக உள்ளது.

3. இந்த உண்மைகளை தனது இருதயத்தில் விசுவாசிக்கின்ற எவரும் நிச்சயமாக இரட்சிக்கப்படுவார்கள். இயேசுவே வெற்றியாளர் என்பதை ஒரு விசுவாசி தைரியமாக, மகிழ்ச்சியுடன் சாட்சியிட இந்த உறுதியான விசுவாசம் வழிநடத்துகின்றது. அவன் தனது சாட்சி மூலம், கிறிஸ்துவின் ஜீவன், ஆவி மற்றும் சமாதானத்தில் பங்கு பெறுகிறான். கிறிஸ்துவின் மீது அஸ்திபாரம் போட்ட ஒருவன், அவரை சார்ந்து வாழும் ஒருவன் ஒருபோதும் தோற்பதில்லை.

4. இந்த உறுதியின் நிமித்தம் பவுல் இவ்விதம் கூறுகிறான். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிறவன் பரிசுத்த இறைவனால் நீதிமானாக்கப்படுகிறான். எல்லாப் பாவங்களில் இருந்தும் விடுவிக்கப்படுகிறான். இறுதி நியாயத்தீர்ப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறான். இறைவனின் ஆவிக்குரிய குடும்பத்தில் ஒரு அங்கமாக இணைக்கப்படுகிறான். சுருங்கச் சொன்னால் விசுவாசி இயேசுவுடன் என்றென்றுமாக உறுதியுடன் இணைக்கப்படுகிறான். அவனது விசுவாசத்தின் மூலமாக முழுமையான இரட்சிப்பு கிடைக்கிறது. அவன் நீதிமானாக்கப்படுகிறான். அவன் இறைவனால் ஏற்றுக்கொள்ளப்படக் கூடியவனாக இருக்கிறான். அவனுடைய இரட்சிப்பிற்கு அவனது சாட்சி காரணம் அல்ல. ஏனெனில் விசுவாசத்தினால் மட்டுமே நீதி பெறப்படுகின்றது. மேலும் அவன் நடைமுறை ரீதியாக அவனது இரட்சிப்பை உணரவும், முதிர்ச்சியடையவும் இது வழி நடத்துகின்றது. மேலும் அந்த நீதி பெறப்படுவதை ஆழமான அனுபவமாக்குகிறது. நீதியும் இரட்சிப்பும் கிறிஸ்துவிடம் இருந்து பெறப்படுகிறது. ஒருவன் தனது இரட்சிக்கும் ஆண்டவரை அறிக்கையிடும் சாட்சியின் மூலம் இவைகள் பெறப்படுகின்றன.

5. புதிய ஏற்பாட்டில் விசுவாசத்தைக் குறித்து இப்படி நாம் பார்க்கிறோம். கிருபையினால் மட்டுமே ஒருவன் நீதிமானாக்கப்படுகிறான். பவுல் இவ்விதம் கூறுகிறான். யூதருக்கும் கிறிஸ்தவருக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை. இருவருமே கிறிஸ்துவை விசுவாசித்து, அவருடைய கிருபையினால் புதுப்பிக்கப்படுகிறார்கள். ஒரே ஒரு ஆண்டவர், ஒரே இரட்சகர், ஒரே மீட்பர் தான் இவர்களுக்காக இருக்கிறார். யூதர்கள் ஆபிரகாம் அல்லது மோசேயினால் இரட்சிக்கப்படவில்லை, மாறாக இயேசுவினால் மட்டுமே இரட்சிக்கப்படுகிறார்கள். கிறிஸ்துவின் இரட்சிப்பு, வல்லமை, ஜீவன் மற்றும் அன்பு யூதர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் ஒரே விதத்தில் தான் உள்ளது. ஒவ்வொருவருக்காகவும் பலியாக தன்னை வேறு எவரும் சிலுவையில் ஒப்புக்கொடுக்கவில்லை. உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கிற இறைவனின் ஆட்டுக்குட்டியானவர் இயேசு மட்டுமே.

6. இயேசு ஐசுவரியமிக்கவர் என்பதை பவுல் தெளிவாக எடுத்துரைக்கிறான். அவருடைய ஆவிக்குரிய செல்வங்களில் நாமும் பங்காளர்களாகும்படி செய்கிறார். (ரோமர் 10:12,13). அவர் அவருடைய பரிசுத்த ஆவியை, அவருடைய இறை வல்லமையை, அவருடைய நித்திய அன்பை, அவரிடம் விண்ணப்பம் பண்ணும் அனைவருக்கும் கொடுக்கிறார். பரிசுத்தவான்களிடம் அல்லது கன்னிமரியாளிடம் அல்ல, அவர்கள் உயிருள்ள இயேசு கிறிஸ்துவின் முன்பு தங்கள் இருதயத்தை ஊற்றுகிறார்கள். உங்களது இரட்சிப்பு, பரிசுத்தமாக்குதல் மற்றும் மீட்பு இவைகளை உங்களது விண்ணப்பம் இன்றி பெற இயலாது. கிருபை அனைவருக்கும் உள்ளது. ஆனால் நாம் அதைத் தேட வேண்டும். (யோவேல் 2:32) விண்ணப்பத்தின் மூலமாக, நாம் பரிசுத்த ஆவியானவரின் “அப்பா பிதாவே” என்ற சத்தத்தை கேட்கிறோம் (ரோமர் 8:15,16).

ரோமர் 10:15
15 அனுப்பப்படாவிட்டால் எப்படிப் பிரசங்கிப்பார்கள்? சமாதானத்தைக்கூறி, நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவிக்கிறவர்களுடைய பாதங்கள் எவ்வளவு அழகானவைகள் என்று எழுதியிருக்கிறதே. 16 ஆனாலும் சுவிசேஷத்துக்கு எல்லாரும் கீழ்ப்படியவில்லை. அதைக்குறித்து ஏசாயா: கர்த்தாவே, எங்கள் மூலமாய்க் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார் என்று சொல்லுகிறான்.

இறைவனின் ஆட்டுக்குட்டியிடம் நமது பாவங்களை அறிக்கையிடும்படி ஆவியானவர் நமக்குப் போதிக்கிறார். இறைவனின் கோபாக்கினையில் இருந்து நம்மை காப்பாற்றும்படியாக அவரது மரணம், உயிர்த்தெழுதல் மற்றும் ஆயத்தம் இவைகளுக்காக நாம் நன்றி செலுத்துவோம்.

நமக்குள் இருக்கும் விண்ணப்ப ஆவி சுயநலமாக இருக்கக்கூடாது. கிறிஸ்துவை விசுவாசிப்பவன் தனக்காக மட்டுமல்ல, ஆறுதலின் ஆவியானவர் அவனுக்கு முன் காண்பிக்கும் அனைவருக்காகவும் விண்ணப்பம் ஏறெடுப்பான். கிறிஸ்தவத்தின் ஆரம்பத்தில் யாக்கோபின் பிள்ளைகள் இவ்விதமாக விண்ணப்பித்தார்கள். அதே போல் நாமும் யூதர்கள் மற்றும் முஸ்லீம்களுக்காக விண்ணப்பிக்க வேண்டும். இறைவனின் ஆட்டுக்குட்டியிடம் இருந்து தோன்றிய ஒரு பிரசங்கிக்கும் கூட்டம் தான் ஆவியானவரின் இலக்கு ஆகும். (அப்போஸ்தலர் 1:8, வெளி 5:6).

7. ரோமில் உள்ள யாக்கோபின் பிள்ளைகளில் கிறிஸ்துவை விசுவாசித்தவர்களுக்கு அப்போஸ்தலனாகிய பவுல் எவ்விதம் நடைமுறையில் நற்செய்தியை வெளிப்படுத்துவது என்று விளக்கிக் கூறினான். தெரிந்துகொள்ளப்பட்ட மக்கள் என்ற அவர்களது உணர்வை எவ்விதம் மேற்கொள்வது என்றும்; பரிசுத்த ஆவியானவர் எவ்விதம் அவர்கள் ஞானத்துடன் நடக்க வேண்டும் என்று வழிநடத்துவதையும் விளக்கிக் கூறினான்.

அவர்கள் அவரை விசுவாசிக்கவில்லையென்றால் எப்படி ஆண்டவர் அவர்களை அவிசுவாசிகள் என்று அழைக்கிறார்? அவரைக் குறித்து கேள்விப்படவில்லையென்றால், எப்படி அவன் விசுவாசிப்பான்? உண்மையாக பிரசங்கிக்கிறவன் இல்லையெனில் எவ்விதம் கேள்விப்படுவான்? கிறிஸ்துவினால் அனுப்பப்படாவிட்டால் எப்படி பிரசங்கிப்பான்? அவிசுவாசிகள் மட்டும் குற்றவாளிகள் அல்ல. இரட்சிப்பின் சத்தியத்தை அனுபவித்தும், அதைக் கூறாமல் இருப்பவர்களும் குற்றவாளிகள். பவுல் ஏசாயா குறிப்பிடும் ஆண்டவருடைய வார்த்தையை மேற்கோள் காட்டுகிறான். சமாதானத்தைக் கூறி, நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவித்து, இரட்சிப்பைப் பிரசித்தப்படுத்தி: உன் தேவன் ராஜரிகம் பண்ணுகிறாரென்று சீயோனுக்குச் சொல்லுகிற சுவிசேஷகனுடைய பாதங்கள் மலைகளின்மேல் எவ்வளவு அழகாயிருக்கின்றன (ஏசாயா 52:7).

இயேசு உயிருடன் இருக்கிறார், ஆளுகை செய்கின்றார் என்ற அறிக்கை தான் பவுல் குறிப்பிட்ட நற்செய்தியில் அடங்கியிருந்தது. அவருடைய இரட்சிப்பு அநேகரை சென்றடைகிறது. இயேசு கிறிஸ்துவில் உள்ள இறை அரசு தான் விசுவாசியின் மகிழ்ச்சிக்கு காரணம் ஆகும். கிறிஸ்து ஆளுகிறார், வெற்றிசிறக்கிறார் என்று விசுவாசித்து யார் இன்று மகிழ்கின்றார்கள்? நாம் அனைவரும் விசுவாசித்து சோர்ந்து, களைத்து விட்டோமா? “உம்முடைய அரசு வருவதாக” என்ற கோரிக்கைக்கு விசுவாசிப்பவன் தான் இன்று பொறுப்பாளி. அவன் கூறுகிறான், “ஆம் ஆண்டவரே, என்னுடைய நாட்டில் உம் அரசு வருவதாக”.

விண்ணப்பம்: பரலோகப் பிதாவே, நாங்கள் உம்மை ஆராதிக்கிறோம். நீர் இயேசுவை பரலோகில் உயர்த்தினீர். அவரை கர்த்தாதி கர்த்தாவாக, இராஜாதி இராஜாவாக உயர்த்தினீர். நாங்கள் வெளிப்படையாக, ஞானமாக உமது உயிர்த்தெழுதலை அறிக்கையிட உதவும். நிலையான வாழ்வு வசனத்தைக் கேட்பவர்களின் இருதயங்களில் பற்றிக் கொள்ளட்டும்.

கேள்விகள்:

  1. விசுவாசம் மற்றும் சாட்சிக்கு இடையேயுள்ள உறவு என்ன?
  2. அப்போஸ்தலனாகிய பவுலைப் பொறுத்தமட்டில் எவ்விதம் விசுவாசம் மற்றும் சாட்சி என்ற கருத்தாக்கம் நடைமுறையில் வளர்ச்சி பெறுகின்றது?

www.Waters-of-Life.net

Page last modified on December 14, 2023, at 01:24 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)