Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Romans - 063 (The Sanctification of your Life)
This page in: -- Afrikaans -- Arabic -- Armenian -- Azeri -- Bengali -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- French -- Georgian -- Greek? -- Hausa -- Hebrew -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Malayalam -- Polish -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish? -- TAMIL -- Telugu -- Turkish -- Urdu? -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

ரோமர் - கர்த்தரே நம்முடைய நீதி
ரோமருக்கு பவுல் எழுதின நிரூபத்திலிருந்து வேதபாடங்கள்
பகுதி 3 - கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களின் வாழ்வில் வெளிப்படுகின்ற இறைவனுடைய நீதி (ரோமர் 12:1-15:13)

1. இறைவனுக்கு உங்களை முழுமையாக அர்ப்பணிப்பதின் மூலம் உங்கள் வாழ்வில் பரிசுத்தமாக்கப்படுதல் பெறப்படுகின்றது (ரோமர் 12:1)


ரோமர் 12:1
1 அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக் கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை.

பழைய உடன்படிக்கையின் மக்கள் தேவாலயத்தில் பல்வேறு பங்களிப்புகள் மூலம் இறைவனுடைய நன்மைக்காக தங்களுடைய நன்றியை வெளிப்படுத்தினார்கள். இறைவனுக்கு முன்பாக தங்களுடைய பாவங்களுக்காக மிருகத்தை பலியிட்டு, தங்களையே அவருடைய பிரதிநிதிகளாக அர்ப்பணித்தார்கள். எருசலேமில் தேவாலயம் அழிந்து போன பின்பு, பவுல் ரோமில் வசித்த பழைய உடன்படிக்கையின் மக்களாய் இருந்த கிறிஸ்துவின் விசுவாசிகளுக்கு ஒரு காரியத்தைக் கூறினான். அவர்கள் இறைவனுக்கு பணம் அல்லது பலிகளை செலுத்த தேவையில்லை. மாறாக ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவிற்கு தங்களையும், தங்களுடைய சரீரங்களையும் முழுமையாக அர்ப்பணிக்க வேண்டும். இப்படிப்பட்ட ஒரு கட்டளை அவர்கள் அவர்களுக்கு சொந்தமானவர்கள் அல்ல, இறைவனுக்குச் சொந்தமானவர்கள் என்பதைக் காண்பிக்கிறது.

ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும் பொருத்தமான ஒரு குறிப்பிட்ட கேள்விக்கு நேராக இக் காரியம் வழிநடத்துகிறது. “ நீ இன்னும் உனக்கு சொந்தமானவனா? அல்லது கிறிஸ்துவின் இரட்சிப்பின் நிமித்தம் நீ உன்னை இறைவனுக்குத் தந்துள்ளாயா?”

இப்படித் தந்தருள்வது என்பதின் அர்த்தம் கிறிஸ்தவர்கள் மரணத்திற்கு தங்களை ஒப்புக்கொடுக்க வேண்டும் என்பதல்ல. அவர்கள் சோம்பேறியாக இனிமேல் இருக்கக் கூடாது. தங்களுடைய ஆவி, சரீரம், பணம் மற்றும் அனைத்தையும் பயன்படுத்தி இறைவனுக்கு சேவை புரிய ஆரம்பிக்க வேண்டும். நம்முடைய சரீரத்தில் எழும்பும் எல்லா சோதனைகளுக்கும் எதிரான ஆவிக்குரிய போராட்டமும் இதில் உள்ளடங்கியுள்ளது. மாம்சம் ஆவிக்கு விரோதமாகவும், ஆவி மாம்சத்துக்கு விரோதமாகவும் இச்சிக்கிறது; நீங்கள் செய்யவேண்டுமென்றிருக்கிறவைகளைச் செய்யாதபடிக்கு, இவைகள் ஒன்றுக்கொன்று விரோதமாயிருக்கிறது.(கலாத்தியர் 5:17) பவுல் இந்த வசனத்தின் விளக்கத்திற்கு தன்னையே உதாரணமாகக் கூறுகிறான். “தேவனுக்கென்று பிழைக்கும்படி நான் நியாயப்பிரமாணத்தினாலே நியாயப்பிரமாணத்திற்கு மரித்தேனே. கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்; நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன்” (கலாத்தியர் 2:19-20) .

அப்போஸ்தலனாகிய பவுல் தன்னையே மரித்தவனாக்க கருதும் அளவிற்கு கிறிஸ்துவுக்குள் முழுமையாகவும், நித்தியமாகவும் கட்டுப்படுத்திக் கொண்டான். பரிசுத்த ஆவியினால் அவனுக்கு அருளப்பட்ட கிறிஸ்துவின் ஜீவன் மூலம் மட்டுமே அவன் வாழ்கிறான். இதே விதமாக நீயும் உனது வாழ்வை இறைவனுக்கும், அவருடைய குமாரனுக்கும் தரும்படி கேட்கிறான். அப்போது நீ நீதிமானாக மாறுகிறாய். கிறிஸ்து தனது இரத்தத்தின் மூலம் உன்னை பரிசுத்தப்படுத்துவார். உனது சரீரத்தில் தங்கியுள்ள அவருடைய ஆவியானவர் மூலம் இறைவனால் ஏற்றுக்கொள்ளப்படும் பரிசுத்த பலியாக நீ மாறும்படி செய்கிறார். இந்தக் கிருபைகள், கிறிஸ்துவின் இரத்தம் மற்றும் அவருடைய ஆவியானவரின் பிரசன்னம் உனக்கு நித்திய வாழ்வாகக் கொடுக்கப்பட்டுள்ளன. எனவே பரலோகப் பிதாவிடம், அவருடைய எல்லையற்ற இரக்கத்திடம் நீ திரும்பு. அவர் ஒவ்வொரு நாளும் தன்னுடைய பரிசுத்த வல்லமையால் உன்னை புதிதாக நிரப்புவார்.

கிறிஸ்தவனின் முழு அர்ப்பணிப்பைக் குறித்து “புத்தியுள்ள ஆராதனை” என்று அப்போஸ்தலனாகிய பவுல் ரோமர் 12:10ல் குறிப்பிடுகிறான். நீங்கள் இறைவனுக்கு செய்யும் சேவையில் மகிழ்ச்சியுடன் பாடுவது என்பது முக்கியமானதாகும். உங்கள் விண்ணப்பங்கள், வேண்டுதல்களுக்கு பெரிய வல்லமை இருக்கிறது. ஆண்டவர் முழுவதுமாகவும், என்றென்றுமாகவும் நீங்கள் உங்களை அர்ப்பணிக்க, இறுதிமுடிவு எடுக்கும்படி விரும்புகிறார். நற்செய்திக்கான அர்ப்பணிப்பு என்பது ஒரே ஒரு முறை மட்டும் நிகழ்கின்றது. உங்கள் வாழ்வில் புதிய உடன்படிக்கை வருகின்றது. உங்களுக்குள் நிலை வாழ்வு ஏற்படுகிறது.

விண்ணப்பம்: பரலோகப் பிதாவே, நாங்கள் உம்மை ஆராதித்து மகிழ்கிறோம். கிறிஸ்துவின் பரிகாரப் பலியினால் நீர் எங்களுக்கு இரக்கமுள்ள பிதாவாக இருக்கிறீர். சுயநலமாய் நாங்கள் வாழாதபடி உதவும். எங்கள் நேரம், திறமையை உமது குமாரனுக்கு கொடுக்கவும், பாவத்தையும், அசுத்தத்தையும் வெறுத்து ஒதுக்கவும் உதவிசெய்யும். உமது அன்பை எங்களில் வைத்து, உமது அளவற்ற இரக்கத்தின் பராமரிப்பினால் நாங்கள் வாழ உதவும்.

கேள்வி:

  1. உனது இரட்சகர் இயேசுவிற்கு நீ உன்னை முழுமையாக அர்ப்பணித்திருக்கிறாயா? அல்லது நீ இன்னும் உனது சுயநலத்தில் உனக்காக வாழ்கின்றாயா?

www.Waters-of-Life.net

Page last modified on August 11, 2021, at 06:01 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)