Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Romans - 009 (The Righteousness of God)
This page in: -- Afrikaans -- Arabic -- Armenian -- Azeri -- Bengali -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- French -- Georgian -- Greek -- Hausa -- Hebrew -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Malayalam -- Polish -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Turkish -- Urdu? -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

ரோமர் - கர்த்தரே நம்முடைய நீதி
ரோமருக்கு பவுல் எழுதின நிரூபத்திலிருந்து வேதபாடங்கள்
ஆரம்பம்: வாழ்த்துரை இறைவனுக்கு நன்றி, நிரூபத்தின் நோக்கமாக “இறைவனின் நீதி” வலியுறுத்தப்படுதல் (ரோமர் 1:1-17)

இ) இறைவனுடைய நீதி நிலைநிறுத்தப்படுதல் மற்றும் உறுதியான விசுவாசத்தின் மூலம் நாம் அதை அனுபவித்தல் (ரோமர் 1:16-17)


ரோமர் 1:17
17 விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறபடி, விசுவாசத்தினால் உண்டாகும் தேவநீதி விசுவாசத்திற்கென்று அந்தச் சுவிசேஷத்தினால் வெளிப்படுத்தப்படுகிறது.

இறை நீதி என்பது இறையியலில் மிக முக்கியமான கருத்தாக்கம் ஆகும். நம்முடைய மார்க்கம் செயற்கையான ஒன்றென்றால், இப்படிப்பட்ட கருத்து வந்திருக்காது. ஒவ்வொரு பாவியும் கொல்லப்பட வேண்டும் என்று இறை நீதி வலியுறுத்துகிறது என்பதை நாம் ஏற்கெனவே கற்றிருந்தோம். ஏனெனில் இறைவன் முன்பு ஒருவனும் நீதிமானாக இல்லை. நாம் பரிதாபத்திற்குரியவர்கள். முழு மனுக்குலமும் மரணத்திற்கு பாத்திரமாயிருக்கிறது. இருப்பினும் இறைவன் பரிசுத்தம், நீதியுள்ள நியாயதிபதி மட்டுமல்ல, அவர் இரக்கமுள்ள பிதாவாக அன்பு, நன்மை மற்றும் பொறுமையினால் நிறைந்திருக்கிறார். அவர் பாவியை அழிப்பதில்லை. அவனை இரட்சிக்கிறார்.

யாரை வேண்டுமானாலும், எப்பொழுது வேண்டுமானாலும் இறைவனால் மன்னிக்க இயலாது. ஏனெனில் அவர் பரிசுத்தமுள்ளவர். அவர் இலவசமாய் ஒருவனை மன்னிக்க விரும்பினாலும், அவருடைய மகத்துவம் அதை தடுக்கிறது.

இப் பிரச்சினைக்கு தீர்வு காணவே, அவர் சரியான பதிலாள் ஒருவரை பலியாகக் கொண்டுவந்தார். பாவிக்குப் பதிலாக அவர் மரிக்கிறார். இறைவனுடைய பரிசுத்தத்திற்கான நிபந்தனைகளை எந்தவொரு மிருகம் அல்லது மனித பலியோ நிவர்த்தி செய்வதில்லை. எனவே காலங்கள் தோன்றும் முன்பே தன்னுடைய குமாரனை அவர் தெரிந்து கொண்டார். காலம் நிறைவேறின போது அவர் மாம்சமாகி, நம்முடைய இடத்தில் மரித்தார். நம்முடைய பாவங்களை ஏற்றுக்கொண்டு, நம்மை நீதிமான்களாக்குகிறார். ரோமருக்கு எழுதின நிரூபத்தின் பொருள் நம்முடைய சொந்த நீதி அல்ல, அது இறைவனுடைய நீதி ஆகும். பாவியை நீதிமானாக்கி எவ்விதம் பரிசுத்தமுள்ள ஒருவர் நீதியுள்ளவராக தொடர்ந்து இருக்க முடியும்? கிறிஸ்துவே இந்த கேள்விக்கு ஒரே பதிலாக இருக்கிறார்.

நியாயப்பிரமாணத்தின் மக்கள் சிலுவைக்கு எதிராக. தூஷணம் பண்ணுகிறார்கள். “கிறிஸ்துவின் மீதுள்ள விசுவாசத்தினால் ஒவ்வொரு மனிதனும் நீதிமானாக்கப்பட்டால், அவன் தொடர்ந்து பாவம் செய்யலாம். அவனை சிலுவையிலறையப்பட்டவரின் கிருபை நீதிமானாக்கிவிடும்” என்று கூறுகிறார்கள். பவுல் அவர்களை கடிந்துகொள்கிறார். கிறிஸ்தவ விசுவாசம் என்பது வெறுமனே நம்பிக்கை மட்டுமல்ல, அது கிறிஸ்துவுடன் இணைந்து வாழ்வதாகும். நம்முடைய பலவீனத்தில் எங்கே அவருடைய பெலன் வெளிப்படுகிறதோ, அங்கே அவர் நமக்குள் கனிகளை உருவாக்குகிறார். இயேசுவைப் பின்பற்றுபவர்களை ஒரு காரியம் சங்கிலி போல் பிணைத்து வைத்துள்ளது. நம்மை நீதிமானாக்கி பரிசுத்தப்படுத்தி, மறுரூபமாக்குகிற கிறிஸ்துவின் அன்பு மற்றும் நன்றியினால் நிறைந்துள்ள விசுவாசத்தின் அளவுகோல் தான் அவை. நமக்கு நாமே விடுதலையைத் தரமுடியாது. நாம் இறைவனின் கிருபைக்கு நமது இருதயங்களைத் திறக்கிறோம். விசுவாசத்தினால் மட்டுமே நீதிமான் பிழைக்கிறான். அவர்கள் விசுவாசத்தில் வளர்கிறார்கள். அவர்கள் தங்களைத் தாங்களாகவே நீதியுள்ளவர்களாக கருதுவது கிடையாது. கிறிஸ்துவே அவர்களை நீதிக்குட்படுத்துகிறார். தமது ஆவியானவருடைய செயல்கள் மூலம் அவர்களை நாள்தோறும் பாதுகாக்கிறார், பரிசுத்தப்படுத்துகிறார். இறைவன் தமது நீதியில் தொடர்ந்து இருக்கின்றார். ஏனெனில் ஒவ்வொரு நாளும் அவர் நம்மை மன்னிக்கிறார், ஒவ்வொரு நிமிடந்தோறும் நம்மை பரிசுத்தப்படுத்துகிறார் நாம் அவருக்குச் சொந்தமானவர்கள், அவருக்குப் பரிசுத்தமானவர்கள்.

பழைய உடன்படிக்கையின் மக்களுக்கு இறைவனுடைய நீதியைக் குறித்து எண்ணும்போது இன்னொரு கேள்வி எழும்புகின்றது. அது யூதர்கள் கிருபையை புறந்தள்ளிய செயல் ஆகும். யூதர்கள் இறைவனின் குமாரனை சிலுவையில் அறைந்தார்கள். எனவே அவர்களுக்கான இரட்சிப்பின் வரலாறை இழந்தார்கள். அவர்களுக்கு மனந்திரும்புதலையும், விசுவாசத்தையும் கொண்டுவருவதற்காக செயல்பட்ட பரிசுத்த ஆவியின் சத்தத்திற்கு எப்போதுமே அவர்கள் எதிர்த்து நின்றார்கள். இந்த மறுக்க முடியாத உண்மையை கண்ணோக்கும் போது, பவுலும், மற்ற அப்போஸ்தலர்களும் ஆச்சரியப்பட்டார்கள். இறைவன் ஆபிரகாமின் குடும்பத்தை தெரிந்தெடுத்திருந்தால், நித்திய உடன்படிக்கையில் அவர்களுடன் இணைக்கப்பட்டிருந்தால் எவ்விதம் அவர் நீதியில் தொடர்ந்திருக்க முடியும்? நம்முடைய நாட்களில் நாம் இவ்விதமாக காண்கிறோம். இறைவன் அவர்களை கடினப்படுத்தினார், அவர்களை புறக்கணித்தார். ஏனெனில் அவர்கள் பரிசுத்த ஆவியின் சத்தத்திற்கு செவி கொடுக்கவில்லை. ஆகவே இறைவன் தோற்று விட்டாரா? “இல்லை” பவுல் தனது நிரூபத்தில் பதில் தருகிறான். யூதர்களை நியாயப்படுத்துவதற்காக அல்ல, இறைவனுடைய நீதியை வலியுறுத்த அவன் அந்த வெளிப்பாட்டின் (ரோமர் 9 முதல் 11 வரை) பதிலை தருகிறான். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவினுடைய இறைதன்மை, பரிசுத்தம், மற்றும் நீதிக்காக, தேசங்களின் அப்போஸ்தலன் மிகுந்த வைராக்கியம் பாராட்டினான்.

யாரெல்லாம் மெய் விசுவாசத்தை பெறுகிறார்களோ, அவர்கள் பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலுக்கு தங்களை ஒப்புவிக்கிறார்கள். அவர்களுடைய மனம் புதிதாக்கப்படுகிறது. புதிய ஏற்பாட்டு நீதிமான்களுடன் இணைந்து அவர்களும் பரிசுத்தத்தில் வாழ பெலனைப் பெற்றுக் கொள்கிறார்கள். மனிதனின் கல்வி அல்லது மனித சக்திகள் இவைகளுடன் கிறிஸ்தவ அறம் நின்று விடுவதில்லை. இறைவனுடைய ஈர்க்கும் அன்பிற்கு கீழ்ப்படியவும், இரட்சிப்பின் வல்லமைக்கு நேராகவும் அது நடத்துகிறது. பிதாவினுடைய நாமத்தை கிறிஸ்தவர்களின் நடத்தைகள் பரிசுத்தப்படுத்துகின்றன. அவருடைய நீதியின் வெளிப்பாடு தான் ரோமருக்கு எழுதின நிரூபத்தின் பொருள் ஆகும்.

விண்ணப்பம்: பரிசுத்த திரியேக இறைவனே, நாங்கள் உம்மை ஆராதிக்கிறோம். நீர் எங்களை மெய் விசுவாசத்திற்கு, நேராக நடத்தினீர். இலவசமாய் எங்களை நீதிக்குட்படுத்தினீர். ஒவ்வொரு நாளும் எங்களை பரிசுத்தப்படுத்துகிறீர், வழிநடத்துகிறீர், நீர் நீதியுள்ளவர். உலக வரலாற்றில் மக்களின் அநேக செயல்பாடுகளை நாங்கள் புரிந்து கொள்ள விட்டாலும், நீர் நீதியில் நிலைத்திருக்கிறீர். எங்களை முழுமையாக பரிசுத்தப்படுத்தும். எங்கள் குணாதிசயங்களில் எஞ்சியுள்ள பாவத்தை எடுத்துப் போடும். எல்லா மனிதர்கள் மத்தியிலும் நாங்கள் துதியாக, சுகந்த வாசனையாக இருக்கச் செய்யும்.

கேள்வி:

  1. நம்முடைய விசுவாசத்துடன் எவ்விதம் இறைவனுடைய நீதி தொடர்புள்ளதாக இருக்கிறது?

www.Waters-of-Life.net

Page last modified on August 07, 2021, at 04:40 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)