Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Romans - 072 (Do not Enrage your Neighbor for Unimportant Reasons)
This page in: -- Afrikaans -- Arabic -- Armenian -- Azeri -- Bengali -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- French -- Georgian -- Greek? -- Hausa -- Hebrew -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Malayalam -- Polish -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish? -- TAMIL -- Telugu -- Turkish -- Urdu? -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

ரோமர் - கர்த்தரே நம்முடைய நீதி
ரோமருக்கு பவுல் எழுதின நிரூபத்திலிருந்து வேதபாடங்கள்
பகுதி 3 - கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களின் வாழ்வில் வெளிப்படுகின்ற இறைவனுடைய நீதி (ரோமர் 12:1-15:13)

9. முக்கியமற்ற காரணங்களுக்காக உங்கள் அயலகத்தாரை கோபப்படுத்தாதிருங்கள் (ரோமர் 14:13-23)


ரோமர் 14:13-23
13 இப்படியிருக்க, நாம் இனிமேல் ஒருவரையொருவர் குற்றவாளிகளென்று தீர்க்காதிருப்போமாக. ஒருவனும் தன் சகோதரனுக்கு முன்பாகத் தடுக்கலையும் இடறலையும் போடலாகாதென்றே தீர்மானித்துக்கொள்ளுங்கள். 14 ஒரு பொருளும் தன்னிலே தீட்டுள்ளதல்லவென்று கர்த்தராகிய இயேசுவுக்குள் அறிந்து நிச்சயித்திருக்கிறேன்; ஒரு பொருளைத் தீட்டுள்ளதென்று எண்ணிக்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு அது தீட்டுள்ளதாயிருக்கும். 15 போஜனத்தினாலே உன் சகோதரனுக்கு விசனமுண்டாக்கினால், நீ அன்பாய் நடக்கிறவனல்ல; அவனை உன் போஜனத்தினாலே கெடுக்காதே, கிறிஸ்து அவனுக்காக மரித்தாரே. 16 உங்கள் நன்மை தூஷிக்கப்பட இடங்கொடாதிருங்கள். 17 தேவனுடைய ராஜ்யம் புசிப்பும் குடிப்புமல்ல, அது நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷமுமாயிருக்கிறது. 18 இவைகளிலே கிறிஸ்துவுக்கு ஊழியஞ்செய்கிறவன் தேவனுக்குப் பிரியனும் மனுஷரால் அங்கிகரிக்கப்பட்டவனுமாயிருக்கிறான். 19 ஆனபடியால் சமாதானத்துக்கடுத்தவைகளையும், அந்நியோந்நிய பக்திவிருத்தி உண்டாக்கத்தக்கவைகளையும் நாடக்கடவோம். 20 போஜனத்தினிமித்தம் தேவனுடைய கிரியையை அழித்துப்போடாதே. எந்தப் பதார்த்தமும் சுத்தமுள்ளதுதான்; ஆனாலும் இடறலுண்டாகப் புசிக்கிறவனுக்கு அது தீமையாயிருக்கும். 21 மாம்சம் புசிக்கிறதும், மதுபானம் பண்ணுகிறதும், மற்றெதையாகிலும் செய்கிறதும், உன் சகோதரன் இடறுகிறதற்காவது, தவறுகிறதற்காவது பலவீனப்படுகிறதற்காவது ஏதுவாயிருந்தால், அவைகளில் ஒன்றையும் செய்யாமலிருப்பதே நன்மையாயிருக்கும். 22 உனக்கு விசுவாசமிருந்தால் அது தேவனுக்கு முன்பாக உன்மட்டும் இருக்கட்டும். நல்லதென்று நிச்சயித்த காரியத்தில் தன்னைக் குற்றவாளியாக்காதவன் பாக்கியவான். 23 ஒருவன் சமுசயப்படுகிறவனாய்ப் புசித்தால், அவன் விசுவாசமில்லாமல் புசிக்கிறபடியினால், ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுகிறான். விசுவாசத்தினாலே வராத யாவும் பாவமே.

பவுல் பல்வேறு சபைகளில் ஊழியம் செய்ததின் நிமித்தம் அனுமதிக்கப்பட்ட மற்றும் தடைசெய்யப்பட்ட உணவுகளைப் பொறுத்தமட்டில் தெளிவான காரியத்தை அறிந்திருந்தான். இயேசுவின் கூற்றை மேற்கொள் காட்டினான். (மாற்கு 7:15-23; லூக்கா 6:4). எதுவும் தன்னில் தானே அசுத்தமுள்ளது அல்ல. மனிதனில் இருந்து வெளிப்படும் காரியம் தான் அவனை தீட்டுப்படுத்தும். சில உணவுகளை உட்கொள்வது விசுவாசிகளுக்கு நல்லது. சிலவற்றிற்கு விலகியிருப்பது அவர்கள் உடல் நலத்திற்கு நல்லது.

கிறிஸ்தவர்கள் மற்றவர்களுக்கு நல்ல உதாரணங்களாக இருக்க வேண்டும். பிறர் பாவம் செய்வதற்கு ஏதுவான எந்தவொரு காரியத்தையும் அவர்கள் தவிர்க்க வேண்டும். தனது சுதந்திரத்தை குறித்து பெருமை பாராட்டும் ஒருவன் அளவுகடந்து சாப்பிட்டு, குடித்துக் கொண்டிருந்தால் இன்னொரு விசுவாசியின் இருதயத்தில் சந்தேகத்தை ஏற்படுத்தும். அற்பமாக எண்ணத் தோன்றும் எனவே புதிய விசுவாசியை குழப்பும் ஒருவன் தவறு செய்கிறான். கிறிஸ்துவின் மீதான விசுவாசத்தில் இருந்து விலகச் செய்கிறான். பலவீனமான ஒருவன் முன்பு பலமுள்ள விசுவாசி தன்னை பெருமை பாராட்டாதபடி அன்பு தடை செய்கிறது. அவன் புதிய விசுவாசி முன்பு தடைக்கல்லாக இராதபடி அவனை அமைதியுடன் செயல்பட வைக்கிறது.

உணவு மற்றும் பானத்தினால் இறை அரசு நிறுவப்படுவதில்லை என்று பவுல் சாட்சியிட்டான். அது பரிசுத்த ஆவியின் கனிகள் மூலமாக வெளிப்படுகிறது. நீதி, சமாதானம், மகிழ்ச்சி சபைகளில் காணப்படுகிறது. சபையின் ஒற்றுமைக்கு நேராக பவுல் காரியங்களை வழி நடத்தினான். ஆவியின் ஒற்றுமை மிகவும் முக்கியம். உணவு, பானம், உடை, முடியலங்காரம், பணம் செலவழிக்கும் முறை இவைகளைப் பற்றி கருத்து வேறுபாடு இருக்கலாம். கிறிஸ்துவின் அன்பு, நீடிய பொறுமை மக்களை ஆட்கொள்ள வேண்டும். கிறிஸ்துவை அறிகிற அறிவிற்கு அன்பினால் ஒருவர் கட்டப்படுவது அவசியம் என்று பதில் கூறினான். இயேசு எந்த மனிதருக்காக மரித்தாரோ அந்த மனிதர் மீது கரிசனை கொள்ள வேண்டும். முக்கியமற்ற காரியங்களை தவிர்க்க வேண்டும்.

சுதந்திரத்தை விட சட்டங்களை நிறைவேற்றுவதைவிட இறை சமாதானம் சபையில் முக்கியம். ஒருவன் தனது மனச்சாட்சியின்படி மாம்சம் சாப்பிடாமல், மதுபானம் அருந்தாமல் இருக்கலாம். மற்றவர்களின் தேவையை, உணர்வுகளை புரிந்து கொண்டு, எவருடைய விசுவாசத்திற்கும் தடையாக இராதபடி நமது நடக்கைகள் காணப்பட வேண்டும்.

மனச்சாட்சிக்கு விரோதமாக மாம்சம் சாப்பிடும் ஒரு புதிய விசுவாசி, எல்லா சபை மக்களுடன் இணைந்து தவறு செய்கிறான். ஏனெனில் சமாதானத்தைவிட விசுவாசத்தின் நிச்சயம் மிகவும் முக்கியம். விசுவாசம் அன்பில் உணரப்படுகிறது. ஒருவன் நிபந்தனையற்று தனது சுதந்திரத்தை செயல்படுத்த விரும்பினால், ஐக்கியத்தின் ஆவியை சீர்குலைக்க முற்படுகிறான்.

விண்ணப்பம்: ஆண்டவராகிய இயேசுவே, நாங்கள் உம்மை ஆராதிக்கின்றோம். நீர் உமது சீஷர்களாக முரட்டு மீனவர்கள், நயவஞ்சக வரிவசூலிப்போர், நியாயப்பிரமாண மேதை போன்றோரை தெரிந்துகொண்டீர். நீர் அவர்களை அழைத்தீர், ஒருங்கிணைத்தீர். அவர்களுக்கு மன்னிப்புடன் கூடிய பூரண அன்பு, பொறுமை, சமாதானத்தை தந்தீர். ஏழு தரம் மட்டுமல்ல, ஏழெழுபது தரமும் மன்னிக்கும்படி உதவும். அவர்களும் எங்களை மன்னிக்கும்படி வழிநடத்தும்.

கேள்வி:

  1. இறை அரசு என்பது புசிப்பும், குடிப்பும் அல்ல, அது ஆவியினால் உண்டாகும் நீதியும், சமாதானமும், மகிழ்ச்சியுமாய் இருக்கிறது. (ரோமர் 14:17) என்ற வசனத்தின் அர்த்தம் என்ன?

www.Waters-of-Life.net

Page last modified on August 11, 2021, at 06:50 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)