Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Acts - 049 (First Meeting Between Paul and the Apostles)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Azeri -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- French -- Georgian -- Greek -- Hausa -- Igbo -- Indonesian -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Turkish -- Urdu? -- Uzbek -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

அப்போஸ்தலர் - கிறிஸ்துவின் வெற்றி பவனி
அப்போஸ்தலர் நடபடிகளிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 1 - எருசலேம், யூதேயா, சமாரியா மற்றும் சிரியா ஆகிய பகுதிகளில் இயேசு கிறிஸ்துவின் திருச்சபை அடித்தளமிடல் - பரிசுத்த ஆவியினால் வழிநடத்தப்பட்ட அப்போஸ்தலனாகிய பேதுருவின் திருப்பணி (அப்போஸ்தலர் 1 - 12)
ஆ - சமாரியா, சீரியா பகுதிகளில் இரட்சிப்பின் நற்செய்தியின் விரிவாக்கம் மற்றும் புற இனத்தவரின் மனமாற்றங்களின் ஆரம்பம் (அப்போஸ்தலர் 8 - 12)

7. பவுலும் எருசலேமிலிருந்த அப்போஸ்தலர்களும் முதல் முறையாகச் சந்தித்தல் (அப்போஸ்தலர் 9:26-30)


அப்போஸ்தலர் 9:26-30
26 சவுல் எருசலேமுக்கு வந்து, சீஷருடனே சேர்ந்துகொள்ளப்பார்த்தான்; அவர்கள் அவனைச் சீஷனென்று நம்பாமல் எல்லாரும் அவனுக்குப் பயந்திருந்தார்கள். 27 அப்பொழுது பர்னபா என்பவன் அவனைச் சேர்த்துக்கொண்டு, அப்போஸ்தலரிடத்தில் அழைத்துக்கொண்டுபோய், வழியிலே அவன் கர்த்தரைக் கண்டவிதத்தையும், அவர் அவனுடனே பேசினதையும், தமஸ்குவில் அவன் இயேசுவின் நாமத்தினாலே தைரியமாய்ப் பிரசங்கித்ததையும் அவர்களுக்கு விவரித்துச் சொன்னான். 28 அதன்பின்பு அவன் எருசலேமிலே அவர்களிடத்தில் போக்கும் வரத்துமாயிருந்து; 29 கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே தைரியமாய்ப் பிரசங்கித்து, கிரேக்கருடனே பேசித் தர்க்கித்தான்; அவர்களோ அவனைக் கொலைசெய்ய எத்தனம்பண்ணினார்கள். 30 சகோதரர் அதை அறிந்து, அவனைச் செசரியாவுக்கு அழைத்துக்கொண்டுபோய், தர்சுவுக்கு அனுப்பிவிட்டார்கள்.

லூக்கா அப்போஸ்தலருடைய வாழ்க்கை வரலாற்றை விரிவாக எழுத முற்படவில்லை. அவர் தன்னுடைய கருப்பொருளுக்கு ஏற்றவிதத்தில் தனிப்பட்ட நபர்களுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட அனுபவங்களை எழுதுகிறார். அப்போஸ்தலருடைய வாழ்க்கை வரலாற்றை எழுதுதுவது அவருடைய நோக்கமல்ல. நற்செய்தி எவ்வாறு எருசலேமிலிருந்து ரோமுக்குச் சென்றது என்பதை எழுதுவதுதான் அவருடைய நோக்கம்.

பவுல் தமஸ்குவிலிருந்து தப்பித்த பிறகு, அவர் என்ன செய்தார் என்பதை ஒரு மருத்துவராக லூக்கா சொல்லவில்லை. பவுல் கலாத்தியருக்கு எழுதிய கடிதத்தில் (1:17-24) அதற்குப் பிறகு தான் அரேபியாவில் மூன்று வருடங்கள் தங்கியிருந்ததாகக் கூறுகிறார். அவர் அங்கிருந்த நாட்களில் அரபி மொழியைக் கற்றுக்கொண்டு, ஏதேனும் ஒரு தொழில் செய்து, நற்செய்தியைப் பிரசங்கித்துக் கொண்டிருந்திருக்கலாம். அந்த வருடங்களில் அவருக்கு என்ன நடந்தது என்பது நமக்குத் தெரியாது என்பதுதான் உண்மை. அங்கு திருச்சபைகளை நிறுவினாரா? யூத ஆலோசனைச் சங்கத்தின் உளவாளிகளிடமிருந்து தப்பிப்பதற்காக மறைந்திருந்தாரா? அந்த அரபு நாடுகளில் இருந்த பழைய ஏற்பாட்டு பக்தர்களுக்கு நற்செய்திகளை அறிவித்தாரா?

மூன்று வருடங்களுக்குப் பிறகு அவர் எருசலேமிற்குச் சென்று அப்போஸ்தலர்களைத் தொடர்புகொள்ள முயற்சித்தார் என்பதை நாம் அறிவோம். ஆனால் அவர்கள் பவுலுடைய உதவியினால் கொலைசெய்யப்பட்டவர்களை இன்னும் நினைத்துக்கொண்டிருந்த காரணத்தினால், அவர்களில் யாரும் பவுலைச் சந்திக்க முன்வரவில்லை. அவர்கள் ஒருவேளை தமஸ்குவில் நடைபெற்றதாகக் கூறப்படும் பவுலுடைய மனமாற்றம் என்பது ஒரு தந்திரம் என்று கருதியிருக்கலாம். தந்திரமாக திருச்சபைக்குள் நுழைந்து, முக்கிய அப்போஸ்தலர்களைக் கைதுசெய்து இவ்வாறு இயேசுவின் இயக்கத்தை தடைசெய்யவே பவுல் தங்களிடத்தில் வந்திருக்கிறார் என்று அவர்கள் சந்தேகித்திருக்கலாம். மனந்திரும்பிய விசுவாசிகளே, ஒருவேளை திருச்சபை உங்களை ஏற்றுக்கொள்ளத் தயங்கினால், அப்போஸ்தலனாகிய பவுலை நினைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் எதிர்பார்ப்பதுபோல கிறிஸ்தவர்கள் உங்களை ஏற்றுக்கொள்ளாமல் இருக்கலாம். அவர்கள் உங்களைக் கண்டு பயப்படவும் கூடும். அதேவேளையில் நீங்கள் உங்கள் குடும்பத்தினாலும் முற்காலத்து நண்பர்களாலும் உபத்திரவப்படலாம். இந்த மாற்றத்தின் காலத்தில் கர்த்தர் மேல் இருக்கும் உங்கள் விசுவாசத்தின் சோதனையாக நீங்கள் பல துன்பங்களை அனுபவிக்க வேண்டியிருக்கும். மனிதர்களை நம்பி, மாம்சத்தை தன் புயபலமாகக் கொள்கிறவன் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிற காரணத்தினால், இந்த சூழ்நிலைகளில் நீங்கள் அவரை முழுவதுமாக நம்புவதற்குக் கற்றுக்கொள்வீர்கள்.

இயேசு தம்முடைய ஊழியனைக் கைவிட்டு விடவில்லை. சைப்பீரிய விசுவாசியாகிய பர்னபாவின் மூலமாக அவருக்கு ஆதரவு கொடுக்கிறார். திருச்சபையின் முன்னால் எதிரியாகிய பவுலை அவர் சந்தித்து, அவருடைய சாட்சியைக் கேட்டு, அதை நம்பி, அவருக்கு நண்பனாகிறார். உயிர்த்தெழுந்த கிறிஸ்து தமஸ்குவினருகில் பவுலுக்குத் தரிசனமாகி, அவரை மனமாற்றத்திற்குள் நடத்தினார் என்பதை பர்னபா நம்பினார். அதன்பிறகு, பர்னபா தைரியமாக அப்போஸ்தலர்களிடத்தில் பவுலை அறிமுகம் செய்யும் செயலைத் தொடங்கினார். பவுலுடைய பக்கத்தில் நின்று கொண்டு மற்ற விசுவாசிகளுடன் அவர் பேசுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்தார். மனந்திரும்பியவருக்கும் திருச்சபைக்கும் இடையில் பர்னபா பாலமாகச் செயல்பட்டார். கிறிஸ்துவும் இவ்விதமான நிஜ சகோதர்களை உங்களுக்குக் கொடுப்பார். அவர்களில் நீங்கள் நீண்ட காலமாக நம்பிக்கை கொண்டிருக்கலாம். ஆனால் அவர்கள் உங்கள் மீட்பர்கள் அல்ல என்பதை மறந்து விடாதீர்கள். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஒருவரே உங்களை இரட்சிப்பவரும் பாதுகாப்பவருமாக இருக்கிறார். அவரில் மட்டுமே நீங்கள் நம்பிக்கை வைக்க வேண்டும்.

பேதுருவையும் யாக்கோபுவையும் சந்தித்த பவுல், கர்த்தர் தன்னைச் சந்தித்தார் என்றும், தான் அவருடைய மகிமையைத் தமது சொந்தக் கண்களால் கண்டார் என்றும் அவர்களிடம் சாட்சி பகிர்ந்தார். தன்னை, தன் உள்ளான மனிதனை ஊடுருவிச் சென்ற அவருடைய வார்த்தையை அவர் கேட்டார் என்பதையும் அவர்களுக்கு அறிவித்தார். திரும்ப அவர் தமஸ்குவிற்குத் திரும்பிச் செல்லும் வழியில் அழைப்பையும் அதிகாரத்தையும் பெற்றவரைப் போல இயேசுவின் நாமத்தைப் பிரசங்கித்தார். இதன் காரணமாக யூதர்கள் அவரை உபத்திரவப்படுத்தி, கொலைசெய்வதாகப் பயமுறுத்தினார்கள். பவுலுடைய இந்த தைரியமான சாட்சியினாலும் அதைத்தொடர்ந்து நடைபெற்ற கலந்துரையாடலினாலும் ஆரம்ப அப்போஸ்தலருக்கும் இந்தப் புதிய அப்போஸ்தலருக்கும் இடையில் ஒரு உறவு ஏற்பட்டது.

இதற்கு முன் அவர் திருச்சபைக்குக் கொடுத்த கஷ்டங்களையும் அதனால் மக்கள் சிந்திய கண்ணீர்களையும் குறித்து அப்போஸ்தலர்கள் பவுலை மன்னித்தார்கள். கர்த்தர் அவர்களுக்கு மன்னித்தது போல அவர்களும் அவருக்கு மன்னித்தார்கள். இந்தக் காலத்தில் அவர்களுக்கிடையில் ஏற்பட்ட உறவு உறுதியானதாக இருந்தது. பின்னாட்களில் நீதியைக் குறித்தும், நியாயப்பிரமாணத்தைக் குறித்தும், கிருபையினால் உண்டாகும் இரட்சிப்பைக் குறித்தும் பெரும் சர்ச்சைகள் திருச்சபையில் கிளம்பிய போதிலும் இவர்களுடைய உறவு உறுதியாகத் தரித்திருந்தது. பவுல் அப்போஸ்தலருடன் செலவுசெய்த இந்த குறுகிய காலமாகிய பதினைந்து நாட்கள் கிறிஸ்தவத்தின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கிய காலமாக இருந்தது. இல்லையெனில் ஆதித்திருச்சபையிலேயே யூதர்களுக்கும் புறவினத்து மக்களுக்கும் நடுவில் பெரிய பிரிவினை ஏற்பட்டிருக்கும். அனைத்து அப்போஸ்தலர்களும் ஆவியிலும், வல்லமையிலும் கிறிஸ்துவில் ஒன்றாகத் தரித்திருந்தார்கள்.

அதேவேளையில் நியாயப்பிரமாணத்தைக் கற்றுத் தேர்ந்தவராகிய பவுல், ஸ்தேவானைச் சிறைப்பிடித்த கிரேக்க யூதர்களோடு கலந்துரையாடத் தொடங்கி, வாக்குத்தத்தம் செய்யப்பட்ட மேசியாவும், இறைமகனும் இயேசுவே என்று நியாயப்பிரமாணத்திலிருந்து அவர்களுக்கு நிரூபித்துக் காண்பித்தார். அதன் விளைவாகக் கோபமடைந்த அவர்கள் அவரைக் கொல்ல முயற்சித்தார்கள். பவுல் இரக்கமற்ற முறையில் கொலைசெய்யப்படவேண்டிய விசுவாச துரோகி என்று அவர்கள் கருதினார்கள்.

திருச்சபை மீண்டும் கடுமையான உபத்திரவத்திற்குள் செல்வதைத் தவிர்ப்பதற்காக பவுல் உடனடியாகத் தப்பிச்செல்ல வேண்டும் அப்போஸ்தலர்களும் திருச்சபையும் பவுலை வலியுறுத்தினார்கள். அவர் செசரியா துறைமுகத்திற்குச் சென்று அங்கிருந்து சின்ன ஆசியாவின் தென்கிழக்கு மாகாணமாகிய தனது சொந்த ஊராகிய தர்சீஸிற்குப் போனார். அங்கு அவர் ஒரு குறிப்பிட்ட காலம் வாழ்ந்தார். அவர் அங்கிருந்த காலத்தில் சீரியாவைச் சுற்றியிருந்த பகுதிகளில் நற்செய்தி அறிவித்திருக்கலாம். ஆனால் அதைப்பற்றிய விவரங்கள் நமக்குக் கொடுக்கப்படவில்லை (கலாத்தியர் 1:21).

விண்ணப்பம்: கர்த்தராகிய இயேசுவே, ஆரம்ப விசுவாசிகளுக்கு நீரே அடித்தளமாகவும், பாதுகாப்பாகவும், நம்பிக்கையாகவும் இருப்பதற்காக உமக்கு நன்றி. விசுவாசத்தைத் தொடக்குகிவரும் முடிக்கிறவருமாகிய உம்மை மட்டுமே நோக்கிப்பார்க்க அவர்களுக்குப் போதித்தருளும்.

கேள்வி:

  1. பவுல் தம்முடைய முந்தைய நண்பர்களால் உபத்திரவங்களைச் சந்தித்தபோதும் திருச்சபை அவரை ஏற்றுக்கொள்ளத் தயங்கிய போதும் கிறிஸ்து அவரை எவ்வாறு ஆதரித்தார்?

www.Waters-of-Life.net

Page last modified on August 12, 2013, at 10:35 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)