Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- John - 122 (Jesus appears to the disciples)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Bengali -- Burmese -- Cebuano -- Chinese -- Dioula? -- English -- Farsi? -- French -- Georgian -- Greek -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Kyrgyz -- Malayalam -- Peul -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Thai -- Turkish -- Twi -- Urdu -- Uyghur? -- Uzbek -- Vietnamese -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

யோவான் - வெளிச்சம் இருளில் ஒளிர்கிறது
யோவான் எழுதின கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 4 - ஒளி இருளை மேற்கொள்ளுகிறது (யோவான் 18:1 – 21:25)
ஆ - கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் மற்றும் தரிசனமாகுதல் (யோவான் 20:1 - 21:25)

2. இயேசு மேலறையில் தமது சீஷர்களுக்கு காட்சியளிக்கிறார் (யோவான் 20:19-23)


யோவான் 20:22-23
22 அவர்கள்மேல் ஊதி: பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்;23 எவர்களுடைய பாவங்களை மன்னிக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படும், எவர்களுடைய பாவங்களை மன்னியாதிருக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதிருக்கும் என்றார்.

“பிதா என்னை அனுப்பினது போல நான் உங்களை அனுப்புகிறேன்” என்று இயேசு சொன்னபோது சீஷர்கள் எச்சரிக்கையடைந்தார்கள். அவர்கள் யூதர்களுக்குப் பயந்ததினால், ஒரு பூட்டிய அறையினுள் இருந்தார்கள். அவர்கள் தங்களில் பெலனற்றவர்களாக இருந்தார்கள். அவர்கள் முற்றிலும் தோற்றுப் போனவர்களாக இருந்தார்கள். ஆகவே இயேசு அவருடைய சீஷர்கள் மீது ஊதினார். ஆதாம் ஜீவாத்துமாவாக மாறும்படி இறைவன் ஜீவன் தரும் ஆவியை ஊதினது போல இயேசு ஊதினார். இச் செயலின் மூலம் இயேசு தமது படைப்பாளர் என்ற நிலையை காண்பித்தார். அவருடைய சீஷர்களில் ஒரு புதிய படைப்பை அவர் துவக்கினார். அவரது ஆவியானவரும், அதிகாரத்துடன் கூடிய வல்லமையும் அவர்களுடன் இருப்பதை அவர் உறுதிப்படுத்தினார். பிதாவின் தன்மையை தங்களது வாழ்வில் வெளிப்படுத்தும்படி அவர்களை பெலப்படுத்தினார்.

சீஷர்கள் பரிசுத்த ஆவியானவரை பெற்றுக் கொண்டார்கள். மக்கள் பாவமன்னிப்பை பெற்றுக் கொள்ளும்படி அவர்களை வழிநடத்த கிறிஸ்து அவர்களை தூதுவர்களாக நியமித்தார். பாவ மன்னிப்பிற்கான நிபந்தனைகளை ஏற்றுக் கொள்வோர். மன்னிக்கப்படுவார்கள் என்றும், புறக்கணிப்போர் தண்டனையை பெறுவார்கள் என்றும் அறிவிக்க வேண்டியிருந்தது.

பாவ மன்னிப்பை அவர்கள் அறிவித்தார்கள். ஆண்டவராகிய கிறிஸ்துவை அவர்கள் வெளிப்படுத்தினார்கள். அவர்களது விசுவாச அறிக்கையின் அடிப்படையில் அவர்கள் கிறிஸ்துவின் சபையில் ஏற்றுக் கொள்ளப்படுவார்கள்.

பாவ மன்னிப்பை அறிவிப்பதற்கான அதிகாரத்தை இயேசு தமது சீஷர்களுக்கு வழங்கினார். அவர்கள் பாவ மன்னிப்பை வழங்க முடியாது. இறைவன் மாத்திரமே பாவங்களை மன்னிக்க முடியும். (ஏசாயா 43:25) தீமையான இந்த உலகில் அவருடைய தூதுவர்களாக இருக்கும்படி இயேசு கட்டளையிடுகிறார். அவரது இரட்சிக்கும் வல்லமையை உங்கள் மூலம் வெளிப்படுத்த விரும்புகிறார். உங்களது குறைவுபட்ட திறமைகளுடன் வெறும் ஆர்வத்துடன் பேசும்படி முயற்சிக்க வேண்டாம். உங்கள் ஆண்டவருடன் உள்ள உறவில் நிலைத்திருங்கள். பொது வாழ்வில் ஒவ்வொரு தூதுவரும் தன்னுடைய இராஜாவை அல்லது அதிபரை வெளிப்படுத்துகிறார். தினமும் நடக்க வேண்டிய வழிமுறைகள் மற்றும் வழிநடத்துதலை பெற்று அதன்படி நடக்கிறார்கள். நீங்கள் சுதந்திரமாக இயங்கக் கூடியவர்கள் அல்ல. நீங்கள் கர்த்தரின் பணியாளர்கள். அவர் உங்கள் மூலமாக மற்றவர்களை விடுவிக்க ஏங்குகிறார். இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில் உங்கள் இருதயத்தைக் கடினப்படுத்தாதிருங்கள். பரிசுத்த ஆவியானவர் உங்களை தைரியமுள்ளவர்களாக, அதே சமயத்தில் தாழ்மை மற்றும் ஞானம் உள்ளவர்களாக மாற்றும் படி உங்கள் உள்ளங்களை மனங்களை திறந்து கொடுங்கள்.

விண்ணப்பம்: கர்த்தராகிய இயேசுவே, நீர் என் இல்லத்திற்குள் பிரவேசிக்க நான் பாத்திரன் அல்ல, நீர் உமது பரிசுத்த ஆவியானவரை எனக்கு தந்துள்ளீர். அவர் ஒளியூட்டுகிறார்; உயிர்ப்பிக்கிறார். மனுக்குலத்திற்கு சாட்சியாக நீர் என்னை அனுப்பியிருக்கிறீர். எனது பலவீனத்தில் உமது பலம் வெளிப்படுவதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். மாய்மாலம் இல்லாத தாழ்மையுடன் நானிருக்க உதவும். எல்லா சுய நல எண்ணங்களில் இருந்து என்னை சுத்திகரியும், நாங்கள் எப்போதும் உமது சித்தத்தின் மையத்தில் இருக்க உதவும். அப்போது உமது சமாதானம் அநேகரை சென்றடையும்.

கேள்வி:

  1. பரிசுத்த ஆவியானவர் யார்? கிறிஸ்துவின் சாட்சியாய் நீங்கள் இருப்பதன் மூலம் அவர் என்ன செய்கிறார்?

www.Waters-of-Life.net

Page last modified on August 29, 2012, at 10:34 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)