Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Romans - 005 (Identification and apostolic benediction)
This page in: -- Afrikaans -- Arabic -- Armenian -- Azeri -- Bengali -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- French -- Georgian -- Greek -- Hausa -- Hebrew -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Malayalam -- Polish -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Turkish -- Urdu? -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

ரோமர் - கர்த்தரே நம்முடைய நீதி
ரோமருக்கு பவுல் எழுதின நிரூபத்திலிருந்து வேதபாடங்கள்
ஆரம்பம்: வாழ்த்துரை இறைவனுக்கு நன்றி, நிரூபத்தின் நோக்கமாக “இறைவனின் நீதி” வலியுறுத்தப்படுதல் (ரோமர் 1:1-17)

அ) அடையாளப்படுத்துதல் மற்றும் அப்போஸ்தலனின் வாழ்த்துரை (ரோமர் 1:1-7)


ரோமர் 1:7
7 நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.

பவுல் தன்னுடைய நிரூபங்களில் தொடங்கும் போது குறிப்பிடும் அவனுடைய இறையியல் தொகுப்பு, அப்போஸ்தல அதிகாரம் குறித்த விளக்கம் மற்றும் ஆசீர்வாதங்களை வாசகர்களுக்கு குறிப்பிடுகிறான். ஆகவே கிருபை பொழிந்தருளும் இவ் வார்த்தைகளுக்கு நேராக உங்கள் கவனத்தை திருப்புங்கள். நீங்கள் இறைவனுக்குள் ஐசுவரியவான்களாக இருக்கும்படி உங்கள் இருதயங்களில் இந்த வார்த்தைகளை எண்ணிப்பாருங்கள். உங்கள் இருதயத்தில் அப்போஸ்தலனின் வாழ்த்துரையை வைத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு வார்த்தைகளில் நீங்களாகவே களிகூருங்கள்.

தனது நீதியில் நிலைத்திருக்கிறார். ஆக்கினையைத் தவிர வேறொன்றையும் அப்போஸ்தலன் முதலாவது வைக்கும் காரியம் முழுமையான கிருபை என்பதாகும். நீங்கள் இழந்து போனவர்களாக, அழிவுக்குட்பட்டவர்களாக இருந்தீர்கள். இறைவன் உங்களை நேசித்தார். அவர் உங்களை அழிக்க விரும்பவில்லை. அவருடைய ஒரே பேறான குமாரனுடைய மரணத்தின் மூலம், அவர் உங்களை நியாயந்தீர்ப்பதற்கு பதிலாக, உங்களை நீதிக்குட்படுத்துகிறார். இறைவனுடைய அன்பின் சட்ட வடிவம் தான் கிருபை. நீங்கள் நீதிமானாக்கப்படுவதற்கு தகுதியற்றிருந்தும், உங்களை அவர் நீதிமானாக்குகிறார். பரிசுத்தமான அவர் இன்னமும் பெறுவதற்கு தகுதியற்ற உங்களுக்கு இறைவனுடைய ஈவுகள், உங்கள் விண்ணப்பங்களுக்கான பதில்கள் கிருபையாகக் கொடுக்கப்படுகின்றன.

கிறிஸ்துவின் மரணத்தின் மூலம் இறைவன் முன்பாக நமது நிலை மாற்றம் பெறுகின்றது. முன்பு இறைவனுக்கும் பாவிகளுக்கும் இடையில் பகைமை இருந்தது. சிலுவையில் ஒப்புரவாக்குதலின் மூலம், இப்போது சமாதானம் ஏற்பட்டுள்ளது. நித்தியமுள்ள பரிசுத்தமானவர் நம்மை முற்றிலும் அழித்துவிடுவதில்லை. கிறிஸ்து உயிர்த்தெழுந்த பிறகு கூறிய முதல் வார்த்தைகள், “உங்களுக்கு சமாதானம் உண்டாவதாக”. அவர் நியாயப்பிரமாணத்தின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றினார். இறைவன் முன்பாக நமக்கு எதிராக எந்தவித குற்றச்சாட்டுகளும் இல்லை. ஏனெனில் கிறிஸ்துவின் இரத்தம் நம்மை சுத்திகரித்துள்ளது. தூய்மையாக்கப்பட்ட இருதயங்களில் தங்கியுள்ள உண்மையான சமாதானத்தின் மூலம் ஒரு புதிய யுகம் தொடங்கியுள்ளது.

கிறிஸ்துவின் கிருபையை உணர்ந்துகொண்டு ஏற்றுக்கொள்கிற ஒவ்வொருவரும் இறைவனுடன் சமாதானமாய் வாழ்கிறார்கள். படைத்தவர் மற்றும் உன்னதமானவரின் மாபெரும் அற்புதத்தை உணர்ந்துகொள்கிறார்கள். அவரை நடுக்கத்துடன் ஆராதிக்கும்படி விரும்புகிற ஒரு கொடுங்கோலர் அல்ல அவர். மாறாக அவர் நம்முடைய பிதா. நம்மை நேசிக்கிறார். நம் மீது அக்கறை கொள்கிறார். அவர் நம்மை விட்டு விலகுவதில்லை. நம்மை அவர் முடிவுபரியந்தம் தாங்குகிறார். “இறைவன் நம்முடைய பிதா” என்ற வார்த்தையை விட அழகான வார்த்தைகள் புதிய ஏற்பாட்டில் இல்லை. இந்த இறையியல் அறிவு கிறிஸ்துவின் மூலமாக கொண்டுவரப்படுகிறது. இறைவனின் பிதா என்ற தன்மை கிறிஸ்தவத்தில் ஒரு புதிய வெளிப்பாடு ஆகும். சிலுவையின் நோக்கம் என்பது நம்மைத் தூய்மைப்படுத்துவது, அதன் மூலம் புத்திரசுவிகாரம், இரண்டாம் பிறப்பை அடைய நம்மை தகுதிப்படுத்துவது, மேலும் நமக்குள் நித்திய வாழ்வை அருளுவது ஆகும். இதன் மூலம் இறைவனே நம்முடைய மெய்யான இறைவனாக இருக்கிறார். நாம் அவருடைய பிள்ளைகளாக இருக்கிறோம்.

நீ இயேசு கிறிஸ்துவை அறிந்திருக்கிறாயா? அவருடைய மகிமை மற்றும் அவருடைய தாழ்மையை நீ அறிந்திருக்கிறாயா? அவர் மனிதனாகவும். இறைவனாகவும் இருக்கிறார். அவர் தம்முடைய மகிமையைத் துறந்து, நம்மை மீட்கும்படி தன்னையே தாழ்த்தினார். எல்லா மனுக்குலத்திற்கான பரிகாரபலியை அவர் நிறைவேற்றினபின்பு பிதாவினிடத்திற்கு எழுந்தருளி அவருடைய வலது பாரிசத்தில் உட்கார்ந்தார். அவர் உன்னத நிலைக்கு உயர்த்தப்பட்டார். ஏனெனில் அவர் மட்டுமே உலகத்தை இறைவனுடன் ஒப்புரவாக்கியுள்ளார். இயேசு இறைவனுடைய அதிகாரத்தை உடையவராக இருக்கிறார். அவரே ஆண்டவராக இருக்கிறார். அவர் உன்னுடைய ஆண்டவரா? உனது வாழ்வை அவர் ஆளுகை செய்ய விரும்புகிறார். அவர் உன்னை தூய்மைப்படுத்தி பரிசுத்தப்படுத்தி, அவர் விரும்புகிற வண்ணம் உன்னை அனுப்புகிறார்.

விண்ணப்பம்: பரலோகப் பிதாவே, இயேசு கிறிஸ்துவிற்குள் நீர் என்னுடைய பிதாவாக இருக்கிறீர். தொலைந்து போன, அசுத்தமான என்னை உம்முடைய பிள்ளையாயிருக்கும்படி நீர் தெரிந்து கொண்டீர். நான் முகங்குப்புற விழுந்து, உம்மை ஆராதிக்கிறேன். உம்மை நேசிக்கிறேன். உமக்கும், உம்முடைய குமாரனுக்கும் என்னுடைய வாழ்வு, எனது பணம், எனது பலம் மற்றும் எனது நேரத்தைக் கொடுக்கிறேன். நீர் விரும்புகிற வண்ணம் என்னை உருவாக்கும். உமது நாமத்திற்கு உகந்த நடக்கையின் மூலம் உமது பிதா என்ற தன்மையை மகிமைப்படுத்த உதவும் எல்லாப் பாவிகளையும் மீட்கும் படி நீர் உமது குமாரன் இயேசுவை அனுப்பியதற்கு நன்றி, நான் உம்மை நித்திய துதியுடன் ஆராதிக்கிறேன்.

கேள்வி:

  1. அப்போஸ்தல வாழ்த்துரையில் உள்ள எந்த கூற்று, உனது வாழ்வோடு தொடர்புடைய மிக வல்லமையுள்ளதும் முக்கியமானதும் என்று நீ கருதுகிறாய்?

www.Waters-of-Life.net

Page last modified on August 07, 2021, at 04:42 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)