Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Mark - 109 (Preach The Gospel to Every Creature)
This page in: -- Arabic -- English -- Indonesian -- TAMIL -- Turkish

Previous Lesson -- Next Lesson

மாற்கு - கிறிஸ்து யார்?
மாற்கு எழுதிய கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 9 - இயேசு மரணத்திலிருந்து உயிர்த்தெழுதல் (மாற்கு 16:1-20)

6. ஒவ்வொரு சிருஷ்டிக்கும் நற்செய்தியை அறிவிக்க இயேசு சீஷர்களுக்கு கட்டளையிடுதல் (மாற்கு 16:15)


மாற்கு 16:15
15 பின்பு, அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்.

குறைச்சொல்லுகின்ற, தகுதியற்ற சீஷர்களை உலகிற்கு நற்செய்தியை பிரசங்கிக்க கட்டளையிடுவது எவ்வளவு பெரிய ஆச்சரியம்!

இந்த அழைப்பிற்கு சற்று முன்பு, இயேசு அவர்களுடைய அவிசுவாசம் மற்றும் கடின இருதயத்தைக் கடிந்துகொண்ட பிறகு, உடனடியாக அவர்களுக்கு அழைப்பு கொடுத்தார். அவர்கள் தோள்மீதும், அவர்களுடைய இருதயத்திலும் உலகத்திற்கு நற்செய்தியை அறிவிக்கும் பொறுப்பை வைத்தார்.

நல்லவர்களையும், உறுதியான பரிசுத்தவான்களையும் உயிர்த்தெழுந்தவர் உலகிற்கு நற்செய்தியை பிரசங்கிக்கும்படி அனுப்பவில்லை என்பது எவ்வளவு பெரிய ஆறுதல். அவர் இழந்துபோனோர், பயந்தோர் மற்றும் எளிய விசுவாசம் உடையோரை ஏற்றுக்கொண்டார்.

அப்போஸ்தலர்கள் இந்த ஒப்பற்ற அழைப்பின் மூலம் இறைவனுக்கு தங்களால் எந்த நன்மையான காரியத்தையும் செய்ய முடியாது என்பதைப் புரிந்துக்கொண்டார்கள். நீதி செத்தது என்பதையும், அவர்கள் பெருமை மிகுந்தவர்கள் என்பதையும் புரிந்துக்கொண்டார்கள். கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலையும், அவருடைய வெற்றியையும் புரிந்துக்கொள்ளவில்லை. கண்கண்ட சாட்சிகளின் அறிக்கையை புறக்கணித்தார்கள்.

ஆனாலும் ஜீவனுள்ளவர் அவர்களுக்கு இரக்கம் பாராட்டினார்கள். அவர்கள் நடுவே தோன்றினார். அவருடைய உண்மையான பிரசன்னத்தினால் உறுதிப்படுத்தினார். அவர்களுக்கு காரியங்களை விளங்கப்பண்ணினார். அவருடைய அன்பு அவர்களை பெலப்படுத்தியது. அவர்களை தைரியப்படுத்தி, ஆசீர்வதித்தார். தனது நற்செய்தியினால் அவர்களை நிரப்பினார். அவரே நற்செய்தியாக இருக்கிறார். அவர்களுடைய பிரசங்கத்தின் மையமும் அவரே.

அவர்களிடம் பின்வருமாறு பேசினார்: “பயந்து அமர்ந்திருக்க வேண்டாம். என் நாமத்தினால் எழுந்து ஓடுங்கள். திரும்பிப் பார்க்க வேண்டாம். மக்களைத் தேடி முன்னேறிச் செல்லுங்கள். மற்ற விசுவாசிகளுடன் இணைந்து கூட்டம் சேர்க்க வேண்டாம். பாவிகளையும், தேவையுள்ளோரையும் தேடிச் செல்லுங்கள். அனைவருக்கும் உடனடி தேவை இறைவனுடைய ஆட்டுக்குட்டியின் மன்னிப்பு ஆகும். எந்தவொரு சிருஷ்டியும் சாகாமல் இருக்க முடியாது. எல்லா மனுஷரும் மரிக்க வேண்டும் என்பது நியமிக்கப்பட்ட ஒன்று. இறைவனுடைய குமாரனை விசுவாசிக்கிறவன் நித்தியவாழ்வைப் பெறுவான். இறைவனின் குமாரன் கூறுகிறார். “நானே உயிர்த்தெழுதலும், ஜீவனுமாக இருக்கிறேன். என்னில் விசுவாசமாயிருக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான். என்னில் நிலைத்திருந்து விசுவாசமாயிருக்கிறவன் ஒருபோதும் மரிப்பதில்லை. இதை நீ விசுவாசிக்கிறாயா?”

உயிர்த்தெழுந்த கிறிஸ்து தோன்றி சீஷர்களை சத்தியத்திற்கு கண்கண்ட சாட்சிகளாக மாற்றினார். அந்நேரத்தில் அவர்கள் அவருடைய மரணம், ஒப்புரவாக்குதலின் அர்த்தத்தை புரிந்துக்கொள்ளவில்லை. ஆனாலும் இயேசு உயிருடன் இருக்கிறார் என்பதை அறிந்துகொண்டார்கள். சிலுவை என்பது முடிவு அல்ல. அவர் கல்லறையில் இருந்து எழுந்தார். அவர் வெற்றியாளர். அவர் மீது மரணத்திற்கு எந்த அதிகாரமும் இல்லை.

பாவம் நிறைந்த, அழிவுக்கு நேராகச் செல்லும் உலகில் இந்த விசுவாசத்துடன் அவர்கள் கிறிஸ்துவுக்குள் இறைவன் தரும் வாழ்வை வெளிப்படுத்தினார்கள். அவர்களுடைய நற்செய்தி உலக காரியங்களை மையப்படுத்தவில்லை. ரோமப் பேரரசனையே, அவனுடைய படைகளின் வெற்றியைக் குறித்து இல்லை. அது இறைநற்செய்தி ஆகும். ஒவ்வொரு சிருஷ்டிக்கும் தேவையான செய்தி அதில் இருந்தது. இறைவன் கிறிஸ்துவின் மூலம் வாழ்வு தருகிறார். மரணம் என்பது ஓர் இறுதி முடிவல்ல. கிறிஸ்துவை விசுவாசிக்கும் ஒவ்வொரு இருதயத்திலும் புதிய நம்பிக்கை தோன்றுகிறது.

அப்போஸ்தலர்கள் இறைவனுடைய ராஜ்யத்தின் நீளம், அகலம், உயரத்தை உணர்ந்தார்கள். அவர்கள் புதிய சிருஷ்டிப்பின் ஆரம்பத்தை அறிந்தார்கள். மிருகங்கள், தாவரங்கள், நடசத்திரங்களை அது உள்ளடக்கியுள்ளது. புதிய சிருஷ்டிப்பின் தன்மை அவருக்குள் தோன்றியது. அவர் மரணத்திலிருந்து எழுந்தார். எனவே ஒவ்வொரு அழிவுக்கேதுவானதும் இறைவனுடைய ஜீவனின் வல்லமையால் புதுப்பிக்கப்படுகிறது. குமாரன் தீய உலகை தமது பிதாவுடன் ஒப்புரவாக்குகிறார். அவருக்கு புதிய சிருஷ்டிப்பை உருவாக்க அதிகாரம் உண்டு. அவர் பிரபஞ்சத்தை புதுப்பிக்கிறார். மரணம், பாவம், சாத்தானை அழிக்கிறார். பணம், உடைமை, உலக வல்லமை என்பவைகள் நற்செய்தியின் நோக்கம் அல்ல. ஜீவனுள்ள கிறிஸ்துவை விசுவாசியுங்கள். இறைவார்த்தையை கற்றுக்கொள்ளுங்கள். அதனுடைய சாராம்சத்தை புரிந்துக்கொள்ளுங்கள். நற்செய்திப் பணியின் இறுதி முடிவையும், அதன் அர்த்தத்தையும் அறிந்துகொள்ளுங்கள்.

நீ இன்னும் பாவத்தில் மூழ்கியுள்ளாயா? மரணத்திற்கு நேராக செல்கிறாயா? கிறிஸ்து மரணத்தை ஜெயித்து உயிர்த்தெழுந்தார். அவர் உன்னை அழைக்கிறார். அழிவிலிருந்து தப்பிக்க அவரிடம் வா, நீ என்றென்றும் அவரிடம் வாழ முடியும். உனக்கு மரணம், நியாயத்தீர்ப்பைக் குறித்த பயம் உண்டா?

கிறிஸ்து உயிருடன் இருக்கிறார். நீ உண்மையாய் அவருக்கு ஒப்புக்கொடுக்கும்போது, நீயும் மரணத்தில் இருந்து எழுந்து, வெற்றிபெற்று, அவருடன் என்றென்றும் வாழமுடியும். உன்னை அவருடைய சீஷனாக மாற்றுவார். இறைவனின் ஜீவன் உனக்குள் வரும்போது, நீ சுயநலமுடன் வாழமாட்டாய். நீ எழுந்து உயிருள்ள இறைவனின் செய்தியை மற்றவர்களுக்கு துரிதமாகக் கொண்டு போவாய்.

நமது மார்க்கம் என்பது நியாயப்பிரமாணம், நியாயத்தீர்ப்பு மற்றும் மரணம் அல்ல. அது வேறுப்படுத்தப்பட்ட நல்வாழ்வின் வல்லமை ஆகும்.

விண்ணப்பம்: எங்கள் பரிசுத்தமான இறைவனே, பரலோகில் உள்ள எங்கள் பிதாவே, நாங்கள் உமது குமாரன் மூலம் பெற்ற வாழ்விற்காக உம்மை துதித்து, உம்மைக் கனப்படுத்துகிறோம். பாவிகளான இழந்துபோன நம்மை மறு உலகிற்கு வாழ்வு தரும்படி அழைக்கிறார். நீர் எங்களை மன்னித்ததற்காக நன்றி செலுத்துகிறோம். இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் எல்லா தேசத்திற்கும் செல்ல எங்களைப் பெலப்படுத்தும். அவர்களும் ஜீவனின் வல்லமையால் நிரப்பப்பட உதவும். எங்கள் ஆண்டவராகிய இயேசுவே, நீர் உயிர்த்தெழுந்தீர். உம்மை ஆராதிக்கிறோம். உமது செய்தியாளர்களாக எங்களை மாற்றும். ஆமென்.

கேள்வி:

  1. உலகிற்கு நற்செய்தியை அறிவிக்க அப்போஸ்தலர்களுக்கு இடப்பட்ட கிறிஸ்துவின் கட்டளையின் அற்புதமான காரியங்கள் என்ன?

www.Waters-of-Life.net

Page last modified on August 20, 2021, at 02:58 PM | powered by PmWiki (pmwiki-2.3.3)